சோழர்களும் அவர்களின் வரலாறும்-02

சோழர்களின் கொடியும் , தலை நகர்களும்  

(இதன் முதல்பதிவைப் பார்ப்பதற்கு சோழர்களும் அவர்களின் வரலாறும்-01 )
புலிக்கொடியே சோழர்களின் கொடியாக அறியப்பட்டது என்பதைக் கூறும் சங்ககால நூல்களும் இலக்கியங்களும் அதின் தோற்றம் பற்றி குறிப்பிடவில்லை.சோழர்கள் சூடும் பூவாக அத்தியே காணப்பட்டது.
கரிகாலன்  காலத்திலும் அதற்க்கு முன்னைய காலப் பகுதிகளிலும் அதாவது கி பி 2  ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலப் பகுதிகளில் சோழர்களின் தலை நகராகத் விளங்கியது உறையூராகும் அகழிகளாலும் ,கோட்டை மதில்களாலும் சூழப்பட்ட அழகிய நகரான இது காவிரிப் பூம்பட்டினதிற்க்கும்  காவிரி கழி முகத்திட்க்கும் அருகாமையில் அமைந்திருந்த துறைமுக நகர் என அறியப்படுகின்றது.தொலமியின் காலப் பகுதிகளிலேயே சோழநாட்டின் முக்கியத்துவம் மிக்க இரு  பெரும் துறைமுக நகரங்களாக  காவிரிப் பூம்பட்டினமும்   , நாகப் பட்டினமும் காணப்பட்டன. இவ்விரு நகர்களும்     வணிக மையங்களாக திகழ்ந்ததுடன் ரோமர்களின் கப்பட் போக்குவரத்தும் நடை பெற்றது என்பது கிறிஸ்துவின் தொடக்கக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட ரோம நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் உறுதிப் படுத்தப்படுகின்றது.
            தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற ரோம நாணயங்கள் சில

மேலும் பொன்னியாறு  எனப்படும் காவிரியாற்றையும் அதன் கிளையாருகளையும் சார்ந்து சோழர்கள் வசித்த போது சோழநாடு பொன்னி நாடு என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறு. காவிரி நீர் பெருக்கெடுக்கும் போது எடுக்கப் படும் விழாக்கள் சோழர்களிடம் முக்கியத்துவம் பெற்றும் காணப்பட்டது.
                            சோழர்களின் தலைநகரங்களில் சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது தஞ்சையாகும். விஜயாலய சோழன் தஞ்சையை தன் தலைநகரமாய் தேர்ந்தெடுத்து பல வெற்றிகள் பெற்றான் என்பது வரலாறு.   கி பி 9 -கி பி 11 ஆம் நூற்றாண்டுவரை சிறந்த தலைநகராய் விளங்கியது. தஞ்சைக் காலத்திலேயே உலகப் புகழ்பெற்றதும் , யுனெஸ்கோவால் உலகப்பாரம்பரிய கலாசாரம் சார்பான சின்னமாக அறிவிக்கப்பட்டதும்  ஆன  தஞ்சைப் பெரும் கோவில்  இராஜராஜ  சோழனால் கட்டப்பட்டது.
                                  தஞ்சைப் பெரும் கோவில்

 தஞ்சையை தலைநகராய் கொண்ட சோழர்கள் பல்லவ நாட்டை கைப்பற்றிய பிற்பாடு   இரண்டாம் தலைநகராக காஞ்சியையும் தம்பால் கொண்டு அவ்வப்போது அங்கிருந்தபடியும்ஆட்சி பொறுப்புக்களை நிர்மாணித்து வந்தனர். காலப் போக்கில் தஞ்சையிலிருந்து தம் தலைநகரை கங்காபுரி எனப்படும்  கங்கைகொண்ட சோழபுறத்திற்கு  இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரனால் மாற்றிக் கொண்டார்கள்.   கி பி 11 - கி பி 13 ஆம் நூற்றாண்டுவரை சோழகங்கம் எனும் அழகிய ஏரியை  கொண்ட இந்த நகரம் தலைநகரமாக சிறந்து விளங்கியது.மேலும் சாளுக்கிய சோழர்களின் காலத்தில் சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியதையும் சோழ மண்டலங்களாக  கொண்டு ஆட்சி புரிந்தனர் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியப் படுகிறது.  
                                     கங்கை கொண்ட சோழபுரம்
    
சோழர்கள் பற்றிய மேலும் சுவாரசியமான தகவல்களுடனும் ஒவ்வொரு   சோழர் பற்றியும் விரிவாயும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றியும் விரிவாகக் காண்போம் அடுத்து வரும் பதிப்புக்களில்.............
[இதன் அடுத்த பதிவிற்கு சோழர்களும் அவர்களின் வரலாறும்-03]                                               
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}