திருகேதீஸ்வரம் ஒரு பார்வை-02

மாதோட்டத் துறைமுகமும்   மாந்தையும் 
இங்கு காணபட்ட துறை முகம் காரணமாக மாதோட்ட நன்னகர் மாபெரும் சந்தையை குறிக்கும் நோக்கில் மா சந்தை என கூறப்படாலும் காலப்போக்கில் திரள்புற்று மாந்தை என்று விளங்கிற்று என்பர் ஆராய்வோர்.  
"நன்னகர்  மாந்தை முற்றத்து ஒன்னார் பனி திறை கொணர்ந்த பாடுயர் நன்னகர்"என்னும் அகநானூற்று கருத்தில் இருந்தும் சங்க கால இலக்கியங்களில் இருந்தும் பல்லவ கால நூல்களும் மாந்தை என்னும் சொல்லை பாவிப்பதில் இருந்து மாதோட்டத் துறைமுகத்தின்  தொன்மையை அறியலாம். மேலும் தித்தா என்னும் பாளி மொழிச்சொல் துறைமுகம் எனும் தமிழ் பெறுகின்றது. மகா தித்தா என்பதால் மாபெரும் துறைமுகம் எனப்பொருள் கொள்ளலாம். விஜயன் வந்திறங்கியதாய் கூறப்படும் மாதோட்ட துறைமுகம் விஜயன் காலத்திற்கு முன்றே புகழுடன் இருந்தது என்பர் ஒரு பகுப்பினர். இன்று மன்னார் எனப்படுவதும் அன்று மாதோட்ட நகரின்   ஒரு பகுதியாகும்.  மாதோட்டம் எனும் நகரின் தலைநகரமாக வணிக நிலையமாய் திகழ்ந்த மாந்தை கொள்ளப்படலாம். மாந்தை வணிக நிலையாமை திகழ்ந்ததை இங்கு பழைய கோவில் அகழ்வு ஆராச்சிகளின்  போது  கிடைக்கப் பெற்ற ரோம,இந்திய,அரேபிய,நாணயங்களில் இருந்தும் சீனாவை சார்ந்த களிமண் பாத்திர சீதை வுகளும் இதையே பறை சாற்றுகின்றன.
                                     இலங்கையின் பஞ்ச புராதன ஈஸ்வரம்கள்                                                              
 போத்துக்கீசர் காலத்திட்கு முற்பட்ட கேதீஸ்வரம் 
 புராதன ஈஸ்வரம் இரட்டை அகழிகளால் சூலபட்டிருந்து என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வரும் அதே வேளை கடல் நீரால் ஒரு அகழியும் நதி நீரால் ஒரு அகழியும்  சூலபெற்றது இவ்வாலயம் என்பது ஊகமாகும்.
                                                  பாலாவி தீர்த்தம் 

நிலத்தின் கீழ் உள்ள இரட்டை அகழிகளும் கட்டிட சிதைவுகளும் இதை பறை சாற்றி நிக்கின்றன. தற்போதைய சிவாலயத்திட்கு தென்திசை தேடி ஆய்வாளர் ஒரு தெரிவை அகழ்ந்த போது பல புதை பொருட்கள் கிடைக்கப் பெற்றதுடன் இசுரங்கமூடே இரு அடி அகலமான செங்கட்டிச்சுவர் செல்வதும் ,வளையல்கள், மட்பாண்டங்கள், சங்குகள்,மனித என்புகள், போன்றனவும் முற்கூறிய நாட்டு   நாணயங்களும் கிடைகபெற்றதில் இருந்து மாந்தை ஒரு வணிக மையமாய் திகழ்ந்தது என்பது சான்று.பழைய ஆலயம் இந்தியக் கொவில்களில்னை போன்று நடுவில் கோவிலும் நாற்புறம் வீதிகளும் இருமருங்கும் வணிகநிலையங்களும் சூழ்ந்த சிறப்புடன் விளங்கியது என்பது இத்தலத்தை அண்டிய பகுதியில் பெற்ற சோழக் கல்வெட்டிலிருந்து [தற்போது கொழும்பு நூதன சாலையில் உளது]    அறியலாம்.மேலும் இச்சூழலில் பிராமணர்களுக்கு ஓரிடமும் இருந்ததுடன் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இருந்ததாக அறியப் படுகின்றது.

அடுத்தபகுதியில்  மிகுதி .....                                                                                           
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}