சோழர்களும் அவர்களின் வரலாறும்-03

சோழர்கள் பற்றி இதுவரை ஒரு முன்னோட்டக் கட்டுரையை பார்த்தோம். இனி வரும் கட்டுரைகளில் ஆழமாகவும் விரிவாயும் பார்க்கலாம்.

(இதன் முதல் பகுதியைப்பர்ப்பதற்கு சோழர்களும் அவர்களின் வரலாறும்-02 )
சோழர்களின் தோற்றம்
சோழர்களின் தோற்றம் என்பது எவ்வாறு  ஏற்பட்டது என்பதில் பல குழப்பங்கள் இருந்தாலும் மூவேந்தர்களில் மூத்தகுடி பாண்டியர்கள் என்பதில் ஐயுறவு இல்லை. தமிழனினதும் தமிழினதும் பிறப்பிடமான குமரிக்கண்டம் பாண்டிநாடு என்னும்  பெயர் கொண்டும் அழைக்கப்பட்டது [  குமரிக்கண்டம் குறித்து சில எதிர்   வாதங்களும் உள்ளன ஆனால் தமிழ் சங்ககால நூல்கள்  குமரிக்கண்டம் இருந்ததாயும் பாண்டியர் ஆண்டதாயும் குறிப்பிடுகின்றன எது எப்படியோ முதலில் தோற்றம் பெற்ற தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் என்பது தெளிவு]. முற்கால மாந்தரில்   மக்களை ஒழுங்கமைத்தவர்களாயும் மக்களின் தலைவர்களாயும் இருந்த பாண்டியர்களின் குடியினர் மன்னர் ஆட்சி தோன்றியபோது  அரசர்களாயும்      மாறிப் போயினர். காலசுழட்சியால் மக்களின் பெருகினபங்கினரின்  பரந்த வாழ்கையை தனி ஆட்சியின் கீழ் கவனிப்பதில் சிரமுற்ற பாண்டியர்கள் தம் அரசின் கீழ் பாகத்தையும் ,மேல் பாகத்தையும் பிரித்து மண்டிலத் தலைவராகவோ அல்லது துணையரசராகவோ ஆளும்படி பணிக்கப்பட்ட பாண்டிய அரசமரபினரே  காலத்தின் மாற்றத்தால் சேரர்களாயும்  , சோழர்களாயும்  மாறிப் போயிரல் வேண்டும் என்பது பலரால் முன்வைக்கப்படும் கருத்து. எது எப்படியோ கடலோடு மூழ்கிப்போன குமரிநாடு ஆதாரங்களையும் சான்றுகளையும் தன்னோடு கொண்டு மூழ்கிவிட்டது என்பதே வெளிச்சம்.
                                                              குமரிக்கண்டம்
சோழர்கள் எனப்பட்டவர்களும் அவர்களின் குலப்பெயர்களும்
சோழப்பேரரசின் கீழ் வாழ்ந்த ஆட்சிப்பிரிவுகளும் மக்களும் சோழர்கள் எனும் பெயராலேயே இனம் காணப்பட்டனர்.காரணம்  பொதுமக்களின் துணைகொண்டே  படைவீரர்கள்  இடம் பெற்றதாலும்  பேரரசுகளின் கீழ் சிற்றரசுகள் இடம் பெற்றதினாலும் மக்களுக்கும் அரசிற்கும் இருந்த தொடர்புகள் காரணமாயும் மக்கள்களும் சோழர்கள் என்னும் பெயர்கொண்டே விளிக்கப்பட்டனர். வளமான நாடுகளுக்கு மன்னர்கள்   என்பதை குறிக்கும் பொருட்டு   "வளவர்கள்" எனும் பெயரும்,உறையூரை தலைநகராய் கொண்டு ஆண்டவர்களாதலால் உறையூரின் மறு பெயரான கோழி எனும் பெயர் குறித்து "கோழி வேந்தர்கள்" என்றும் சிபி எனும் செம்பியன் சோழன் பருந்து துரத்திய புறாவிட்க்கு பதிலாய் தன் தசையை கொடுத்துதவியதால் "செம்பியன்" என்னும் பெயர்கள் அவர்கள் குலப் பெயர்களாய் விளங்கியதுடன் அவர்களின் பெயர்களின் பின்னும் இணைந்து கொண்டது.மற்றும் பரகேசரி,இராஜகேசரி  என்னும் பட்டங்களை மாறிமாறி புனைந்தபடி முடியேறுவதும் அவர்கள் வழக்கமாய் இருந்தது.
அரசுரிமையும் ஆட்சியமைப்பும்
அக்கால வழக்கின் படி மன்னனின் மூத்த புத்திரனுக்கே நாடாளும் உரிமை இருந்தது.வம்சாவழி  இல்லாவிடத்து மன்னர்களின்   சகோதரர்களும் முடியேறியதுடன்  சில சமயங்களில் பெண்வழி வந்த வாரிசுகளும் முடி சூடிக்கொண்டனர். நேரடி வாரிசல்லாதவ்ர்கள் முடியேந்தும் போது அமைச்சரவையின் கருத்தும் மக்கள் கருத்தும் எதிர் பார்க்கப் பட்டன. மேலும் மக்களவை ,அமைச்சரவை என்பனவற்றின் கருத்துக்கள் எதிர்பார்க்கப்பட்டது   ஜனநாயகத்தன்மையை எடுத்துக் காட்டினாலும் மன்னனே சர்வ அதிகாரங்களையும் பெற்றவனாகவும்    மன்னனின்   முடிவே அறுதியானதாயும் இருந்தது. மன்னன் வாழும் காலத்திலேயே அடுத்த அரசன் யாரென தீர்மானிக்கப்படுவதால் வாரிசுகளுக்கான குழப்பங்கள் குறைவாக இருந்தன. சூழ்ச்சிகளும் அபகரிப்புக்களும் நடக்கவில்லை என்று சொல்வதற்கும்    இல்லை. ஆட்சியமைப்பை பொறுத்தவரையில் பேரரசின் கீழ் சிற்றரசுகளும் அவர்களின் கீழ் பிரதானிகளும் எனும் வகையில் நாடு பல உபபிரிவுகளாக பிரிக்கபட்டதன்   மூலம் அரசு சீர்பேணப்பட்டது. எதிரி நாடொன்றை கைப்பற்றியபின் மன்னரின்   புதல்வர்களில் ஒருவன் அல்லது மன்னனின் நம்பிக்கைக்குரிய ஒருவனே அங்கு அரசனாக அமர்த்தப்பட்டான்.
           பிற்காலச்சோழர்கள் மற்றும் சாளுக்கிய சோழர்கள் 
      


இளம்சேட்சென்னி சோழன்
                                       
                                         கங்கைகொண்ட சோழபுரத்தின் நந்தி 

கிமு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவனாதலால் முற்காலச்சோழருள்   அடங்கும் இவனே  புகழ்பெற்ற கரிகாலசோழனின்   தந்தையாயும் கொள்ளப்படுகின்றான்.  இவன்பற்றியறிய உதவும் சங்ககால நூல்களும் புறநானூறு அகநாறு போன்றனவும் இவனை போர்நுட்பங்களில் யானைப்படை, குதிரைப்படை போன்றன  உடையவனும் தானகாரியங்களில்    சிறந்தவன் என்றும் கூறுகின்றன. 

மேலும் தொடர்வோம் வரும்  பதிப்புக்களில்................
[இதன் அடுத்த பதிவிற்க்கு  சோழர்களும் அவர்களின் வரலாறும்-04]                                       
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}