யாழ்ப்பாண இராஜ்ஜியம்-02

[இதன் முன்னைய பகுதிக்கு செல்ல]
யாழ்ப்பாண இராஜ்யத்தை கிபி 13  ஆம்   நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுவதாலும், மகாவம்சம் சிங்கள  தேசத்தின் வரலாற்றை மட்டுமே கூறுவதாலும், யாழ்ப்பாண வைபவமாலை கிபி 18  ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாலும்  பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்கள் மறைக்கப்பட்டு   அல்லது மறைந்து போனதனாலும் போதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறாமையாலும் நாங்கள் யாழ்ப்பாண இராஜ்யத்தின் தோற்றக் காலத்தையும் தமிழர் ஆட்சியின் தோற்றத்தையும் சிறிது பார்க்க வேண்டி உள்ளது.
      
இராவணன் 
                                                     
வீணை கொடியை தன் கொடியாக கொண்ட  இராவணன் என்பவனை போதிய ஆதாரங்கள் மூலம் அறிய முடியாவிட்டாலும் இராமாயணம் மற்றும் தேவாரங்களில் இருந்தும் சில சிங்கள நூல்களில்  இருந்தும்  அறியலாம்[இராமாயணம் என்பது ஆரியர்களால் இயற்றப்பட்ட இதிகாசம் என்பதாலேயே ஒரு தமிழ் மன்னன் ஒரு கொடுரனாகவும் அரக்கனாகவும் காட்டப்படுகிறான் என்பதும் கருதப்படவேண்டிய வாதங்கள் ]. "இராவணன் மேலது நீறு........." எனும் தேவார வரியின் மூலமும் இராமாயணத்தில் குறிபிட்டதிலிருந்தும் இவன் ஒரு சிறந்த சிவபக்தனாக இனம் காணப்படுகிறான். மேலும் இசை கலைஞ்சன், சிறந்த மருத்துவன் , நல்ல வீரன் என்றெல்லாம் இனம் காணப்படும் இவனது அரசு இலங்கையில் இலங்காபுரியை தலைநகராய்  கொண்டது என்பது பலரது கருத்து [இராவணனின் இடத்தை இந்தியாவிலும் சிலர் இனம் காண்கின்ற போதிலும் அது இலங்கையிலேயே அமைந்திருந்தது என்பதே திண்ணம் ]. மேலும் இவனை இயக்கர்குலத்தின்  அரசனாகவும் பலர் கருதுவதுடன் நாகர் குலத்திலும் சிலர் இனம் காண்கின்றனர். இவனது குலாம் எதுவாயினும் இவன் புராதன  தமிழ்த்திராவிட இனத்தவன் என்பது  விடிவு. இவன் பல மருத்துவ நூல்களையும் ,இசை நூல்களையும் இயற்றியதாகவும் காணப்படுகிறது. இவனது இராஜ்ஜியம் இலங்கையில் இனம்காணப்பட்டால்  இவனது தலைநகரமான கடல் கொண்ட இலங்காபுரி இலங்கையின் தென்கிழக்கு கரையில் இருந்ததாக கருத இடமுண்டு. இவன் வரலாறு கூறும்  திருகோணமலை, இவன் மாமனாரான மயனால் புனரமைக்கப்பட்டதாக     சொல்லும் திருகேதீஸ்வரம், சீதையை சிறை வைத்ததாக கருதும்        சீதாஎலிய போன்ற பல இடங்கள் இலங்கையில் இருக்கின்றன என்பது பலரின் வாதம்.எது எவ்வாறாயினும் இராவணன் என்னும் தமிழ் மன்னனே இலங்கையில் பெயர் தெரியகூடிய வரையில் விஜயனுக்கு முந்திய இலங்கையின் முதலான தமிழ் மன்னன் என்று கூறலாம்.    
                            சீதாஎலியவில் காணப்படும் சீதை அம்மன் கோவில்
           
 இராவணனுக்கு பின்னர் அவனது தம்பியான விபீடணன் இலங்கையை ஆண்டான் என்று தெரிகின்ற போதிலும் அதற்கடுத்து அரசாண்டவர்கள் யாரென்று தெரிய போதிய ஆதாரங்கள் இல்லை.  
                              நிற்க; பொதுவாக இதிகாசங்கள் எல்லாம் வடஇந்தியாவை சார்ந்த ஆரியர்களாலேயே இயற்றப் பட்டது எனவே அவர்கள் தமிழ் மரபினரை குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் காட்டினர்  என்பது பலரது கருத்திட் கொள்ளப்படும் வாதம். கிரேக்கரும் மற்றும்  ரோமரும் ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்ற முற்பட்டபோது  அவர்களுக்கு எதிராக பெரும் சவாலாக விளங்கிய பழம்குடி இனத்தவர்களை காட்டுமிராண்டி எனும் பொருள் படும் வகையில் கெல்டிக் என அழைத்தது போலவே ஆரியர்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய தமிழ் குடிகளை அவர்கள் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைத்தனர்.  மேலும் பழம் திராவிடக் குடியினர்களில் ஒருவகையினர் எருதுகளை வேட்டையாடி அவற்றின்  கொம்புகளை தலையில்  தம் பாதுகாப்பிற்காக அணிந்திருந்தனர் என தேவநேயப்பாவாணர் குறிபிடுகின்றார். ஒரு வேளை அப்படி இலங்கையை சேர்ந்த பூர்வ திராவிட குடிகள் வசித்திருந்தால் அவர்களை உண்மை அறியாத பிறநாட்டவர்கள் பார்க்கும் அக்கொம்புகள்   அவர்களுடன் இயற்கையில் அமைந்தது எனக்கருதி அவர்களை மனிதர்களில் இருந்து பிரித்து இனம் கண்டிருக்கலாம் என்பது எனது கருத்து.
                  இதில் மேலும் தெரிவிக்க வேண்டிய விடயம் என்னவெனில்   இராமாயணம் பற்றி  எதிர் கருத்துகள் பல இருந்தாலும் இலங்கை எனும் தீவில் விஜயன் வர முன்னமே மன்னர் ஆட்சி உண்டென்றும் அவ்வாறு இருந்த தமிழ் மன்னர் மரபின் அரசனாக இராவணன் இனம் காணப் படுகிறான் என்பதும் ஏற்புடையதே என்பதே ஆகும்.
                                         


எந்த ஒரு இராட்சியமும் திடீரென முளைத்து விட முடியாது. அந்த வகையில் கிபி 13  ஆம் நூற்றாண்டு தோற்றம் பெற்றதாக கருதப்படும் ஆரிய சக்கரவர்த்திகள் தான் இலங்கை வாழ் தமிழரில் முதல் அரசர்களா என்றால் ஆம் என்றோ இல்லை என்றோ உறுதியாக கூறமுடியாதபடி தொடர்ச்சியாக நடந்த படைஎடுப்புக்களாலும் குடிப்பெயர்வுகளாலும் மன்னர் வீழ்ச்சி எழுச்சிகளாலும் எங்கள் வரலாற்று சான்றுகள் கிடைக்க பெறவில்லை அல்லது அழிக்க அல்லது மறைக்கப் பட்டு விட்டது. எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் சான்றுகளை ஒன்று திரட்டி என் கல்வியறிவுக்கு ஏற்ற வகையில் தர முயன்றிருகின்றேன். அந்த வகையில் தமிழர் ஆட்சி பற்றி இன்னும் நாம் பார்ப்பது தகும். இராவணனின் ஆட்ச்சியின் பின்னர் அவனது இலங்காபுரி கடல் கோளால் மூழ்கிப்போயிற்று என விட்டிபொத் என்ற சிங்கள நூல் குறிபிடுவதுடன் அது கிமு 2367  இல் நிகழ்ந்ததாய் சொல்லுகிறது. இராஜவலிஜ எனும் சிங்கள நூலும் புத்தரின் காலத்திற்க்கு 1884  ஆண்டுகளுக்கு முன்னர் அவ் நகரம் கடலால் மூழ்கி போயிற்று என கூறுகின்றது. [புத்தரின் காலம் 483 ,இக்கடல்கோள் அதற்க்கு  1884  ஆண்டுகள் முதல் நிகழ்ந்ததால் இது நிகழ்ந்த காலபகுதியும் 483+1884= கிமு 2367  எனலாம்] எனவே சிங்கள் நூல்களும் இலங்காபுரி பற்றி கூறுவதால் இலங்காபுரி என்னும் ஒரு தலைநகர் இருந்தது என்றும் அதன் தலைவனாக இராவணன் இருந்தான் என்பதிலும் ஐயுறவு இல்லை.
                                       
நாகதீபத்திட்க்கு புத்தரின் விஜயம்

இலங்கைக்கு புத்தரின் வருகை பற்றி மகா வம்சமும் மணிமேகலையும் கூறுவது யாதெனில் நாகதீபத்தில் மகோதரநாகன் ,சூலோதரநாகன் எனும் இரு நாக அரசவழியினரிடையே ஏற்பட்ட இரத்தினம் பதித்த சிம்மாசன ஆட்சி போட்டியை தீர்பதற்காக புத்தர் நாகதீபிட்க்கு விஜயம் செய்தார் என்றும் இன்நாகர்களின் உறவினர்களான கல்யாணி எனபட்ட களனியில் வசித்துவந்த நாகர்களின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்றும் சொல்லுகின்றன. இச்சான்றுகள் எமக்கு பகர்வது யாதெனில் இலங்கையின் பூர்வ குடிகள் பிறமத எதிர்ப்பு கொள்கையை கடைபிடிக்கவில்லை என்பதும் புத்த மதம் பால் ஈர்ப்புற்றிருந்தனர் என்பதுமாகும்.
                                              
ஈழம் என்னும் பெயரும் அதுசார் விளக்கமும் 
ஈழம் என்னும் பெயர் எவ்வாறு உருப்பெற்றது என்பதுபற்றி பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏழ்பனை நாடு என்ற தமிழக நிலப்பரப்பின் பிரிவுற்ற பகுதியே சொல்திரிவால் ஈழம் என ஆயிற்று என்பது செ.இராசநாயகம் அவர்களின் கருத்தாகும். மேலும் ஈழர் என்னும் ஆதிகுடியினர் வாழ்ந்த இடமாதலால் அவர்பெயர் கொண்டே அவ்விடமும்  ஈழம் எனப் பெயர் பெற்றது என அ.செல்வநாயகம் அவர்களின் கூற்றாகும். மேலும் அனுராதபுர சிவாலயக்கல்வேட்டு ஒன்றில் சிறிசங்கபோ 3  ஆம்
மன்னனின்   [கிபி 702] காலத்தில் ஒரு விளக்கிட்காக வழங்கப்பட்ட 30 ஈழத்துக் காசுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கள மன்னர்களின் கஹவனுக் காசுகளே இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஓ.எம்.ஆர்.சிறிசேன கருதியம்பியுள்ளார். ஈழம் என்னும் பெயர் முழு இலங்கையையும்   குறித்ததால் இவர் கூறிய கருத்தும் ஏற்கத்தக்கது. மேலும் தேவாரங்கள் தொடக்கி சோழர் கால கல்வெட்டுகள் வரை ஈழம்,ஈழம் கொண்ட,ஈழ மண்டலம் எனும்  சொல்பிரயோகம் மூலம் முழு இலங்கையும் ஈழம் எனும் பெயர் கொண்டு  குறிக்கப் படுகிறது.

                   அனுராதபுரத்தில் காணப்படும் சிவாலய எச்சங்கள்
இராசநாயகம் குறிபிட்டதுபோல் ஏழ்பனை நாடு என்பதிலிருந்து ஈழம் எனும் பதம் தோன்றியிருப்பின் முந்தைய இலங்கை முழுவதும் தமிழர் வசமிருந்தது என்பது சாலத் தகும். மேலும் ஈழம் என்பது தமிழ் சொல் ஆதலால் அது தமிழர் வாழ் பிரதேசத்தை குறித்திரல் வேண்டும் ஆனால் முழு இலங்கையும் தமிழர் செறிந்து வாழ்ந்ததால் முழு இலங்கையும் ஈழம் என அறியபட்டது என்பதும் ஏற்புடையவாதமே. மேலும் தொலமி எனும் கடலோடி வரைந்த இலங்கைப்படத்தில் வட மேற்க்கு வடக்கு வடகிழக்கு பகுதியூடாக தென்கிழக்கு பகுதி வரை நாகர் வாழ்ந்த இடமாக காட்டியுள்ளார்.தெற்கில் நனிகிரி, நாகதும என்ற இடங்களையும் காட்டி உளார். [நாகர்களதும் தமிழர்களதும் இனங்கள் கலந்து போனதுடன் நாகர் என்னும் பெயரால் அறியப்பட்டவர்களும் தமிழரே என்பது பலரால் ஏற்கப்பட்ட கருத்து]
                                தொலமியால் வரையப்பட்ட இலங்கைப் படம் 


இவ்வாறு முழு இலங்கையிலும் பரவி வாழ்ந்த தமிழர் தம் வாழ்வாதார மற்றும் பொருளாதார நலன் கருதி வடக்கு நோக்கி நகர்ந்ததால் ஈழத்தின் எல்லை குறுகியது என்பதுடன் விஜயன் வருகையும் இதற்க்கு முக்கிய காரணம் ஆயிற்று. எனவே தமிழர் வாழ் பகுதிகளை இனம் கண்ட பிளினி " இலங்கையின் நடுப்பகுதிக்கும் தாய் நாட்டிற்கும்   இடைபட்ட தீபகட்பமே ஈழம்" என்றதுடன் ரெனட்டும் வட குடா நாட்டை   ஈழம் என்கின்றார்.
                   எல்லாளன் சேனன் குத்திகன் முதலிய இலங்கைவாழ் தமிழ் மன்னர்கள்   பற்றியும் அவர்களின் ஆட்சி பற்றியும் விஜயன் எவ்வாறு   கள்ளத்தனமாக ஆட்சியை கைப்பற்றியதை மகாவம்சமும் குறிபிடுவது பற்றியும்  அடுத்த   பதிப்பில் விரிவாய் பார்க்கலாம்.  

                                           ............தொடரும்...................
[இதன் அடுத்த பதிவிற்கு ]
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}