பிரான்சியப் புரட்சி பகுதி 1


அறிமுகம்
1789  ஆம் ஆண்டிலே உலக முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்ச்சிகள்  நடை பெற்றன. அமெரிக்க ஜக்கிய நாட்டின் கூட்டாட்சியமைப்பு நடைமுறைக்கு வந்ததாள் பிரான்சியப் புரட்சி மூண்டது. நெகிழும் தன்மை வாய்ந்த  ஆட்சி முறையின் வழி புதிய உலகமானது விரிவடைதலும் ஒன்றுபடுதலும் ஒருங்கு திகழ்ந்த ஓர் ஊழியினை அடைந்தது. இருபத்தைந்து   ஆண்டுகளாகப் பெரும் குழப்பம் கொந்தளிப்புமுள்ள நிலைமைக்குப் பழைய உலகம் திரும்பியது. பின்பு அவற்றால் ஏற்கனவே நிலவிவந்த அரசியல் அமைப்புத் தகர்க்கப்பட்டது.  
   1789 இற்குப் பிந்திய அந்நூற்றாண்டின் இறுதிகளில் ஜரோப்பாவிலே நிகழ்ந்த சம்பவங்களை முறையே புரட்சி, போர், சர்வதிகாரப் பேரரசு என்ற நான்கு சொற்களால் குறிப்பிடலாம். இவ்வரலாற்றினை அடிக்கடி கூப்படுவதுபோல ஏற்கனவே நிருயிக்கப்பட்ட ஒரு முடிவினை  நோக்கிச்  செல்லும் வீரகாவியமாக கருதலாம். இக்கருத்துப்படி, வலோற்காரப் புரட்சியானது இயற்கையாகவே போரிற்கு அடிகோலியது. புரட்சியும் போரும் ஒன்று பட்டு அவற்றின் இருதிவிளைவகப் போர்வீரநெருவனின் சர்வதிகார ஆட்சியாக முடிந்ததன படைப்பலத்தோடு கூடிய இயற்கையாகவும் கட்டாயமாகவும் நெப்போலியனின் பேராசைகளுக்கு அடிகோலியது. அடுத்து நிகழ்ந்த கொந்தளிப்புகளின் சாயல் ஐரோப்பாவின் பிற்கால அபிவிருத்தியிலும் காணப்பட்டது. ஏனெனில் புரட்சியின் செய்தியப் பெற்றும் இதனலேற்பட்ட போர்களைத் தாங்கியும் நெப்போலியனின் திறமையான ஆனால்  கடினமான ஆட்சியினைக் கண்டும் அவனுடைய கொடுங்கோன்மைன்  இருந்தும் விடுதலை பெறப் போரடியுமே ஜரோப்பிய நாடுகள் தற்கால வடிவம் பெற்றன தற்கால ஜரோப்பா உருவாகிய விதத்திற்கு இத்தகைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாற்றசிரியர்கள்  சிலவற்றால் திக்குமுக்கடுகினறனர் அதாவது வரலாற்றை மிகவும் விளக்கிச் சொல்வதற்கு ஆவலாக உள்ளனர்  ஏனேனில் பத்தொன்பதாம் நூற்றண்டில் ஜரோப்பா எவ்வாறு தொடங்கிற்று என்பது  பற்றி இவ்வாறு திட்டமாக விளக்கி கூறுவதை ஏற்கின்றனர் பிரான்சியப் புரட்சி நெப்போலியனுடைய பேரரசில் ஏற்ப்பட்ட பின் விளைவுகளும் இவ்விராண்டிலும் போர்களும் உண்மையாகவே முக்கியத்துவம் வய்ந்தவனவாகும். ஆனால் இவை முக்கியத்துவத்தில் வேறுபாடான இவை மட்டுமே பத்தொன்பதாம்    நூற்றாண்டு ஐரோப்பாவை உருவாக்கவில்லை இந்நிகழ்ச்சிப் போக்கானது தவிர்க்க முடியததொன்ரேனவும் குறிப்பிட முடியாது 

புரட்சியின் நிலை  
 1789  இற் பிரான்சிலே முக்கியமான எந்தவொரு மக்கள் பிரிவினரோ சக்திகளோ புரச்சியினை விரும்பவில்லை. இது ஒரு முரணுரையாகத் தோன்றலாம் மக்கள் உறுதியாக விரும்பாமலே போர்கள் அடிக்கடி தொடங்குவது போலத் புரட்சிகளும் தோன்றலாம். இவை ஏற்படுத்துவதற்கு காரணம் மக்கள் விரும்பும் காரியங்கள் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அவர்களை புரட்சியில் அல்லது போரில் சிக்க வைக்கிறது பத்தொம்பதாம்  நூற்றாண்டில் பெரும்பாலும்   ஜரோப்பாவிலே "புரட்சி மனப்பான்மை" எனப்படுவது வளர்ந்தது வந்தது. குறிப்பாக தலை சிறந்த சிந்தனையாளரும் இலக்கிய ஆசிரியர்களும் தத்துவஞானிகளும் இந்த மனப்பான்மையை பேணி வளர்த்தனர். பகுத்தறிவை தழுவி எழுந்த கண்டன உணர்ச்சியானது உரோமன் கத்தோலிக்க திருச் சபையையும் சிறப்புருமை உள்ள விழுமியோரும் எதேச்சதிகார முடியாட்சியும் செலுத்திவந்தத அதிகாரங்களை எதிர்ப்பதாயிற்று. ஜரோப்பா வடங்கலும், வொல்தையர், மொன்ரெஸ்கியு, திதேரட், ரூசோ போன்றோர்களின் 
நூல்களை பலர் படித்தனர்இவ்வறிஞர்களே ஐரோப்பாவில் மேன்மையும் செல்வக்குமுள்ளவரயினர்.
அவர்களுடைய கருத்துக்களுக்கும் 1789  இற் புரட்சி மூண்டமைக்குமுள்ள தொடர்பு முற்றாக அண்மையானதுமன்று, நேரானதுமன்று. அவர்கள் புரட்சி வேண்டுமென்று போதிக்கவில்லை. தம்மைப்  பேணித் 
தமது போதனைகளை ஏற்றுக் கொள்ளும் எத்தகைய எதேச்சாதிகார வேந்தனுக்கும் ஆதரவு நல்குவதற்கு அவர்கள் பொதுவாகத் தயாராகவிருந்தனர். அவர்களுடைய நூல்களைக் கற்றோறிற் பெரும்பாலானவர்கள் புரட்சி வேண்டுமெனவோ அல்லது புரட்சிக்காக செயலாற்றவோ ஊக்கம் பெற்வரல்லர். அவர்களிற் பெரும்பான்மையோர் உயர் குடி மக்களாகவும், சட்டவாணராகவும், வணிகராகவும், உள்ளுர்ப் பிரமுகராகவுமே விளங்கினர். அவர்கள் அக்காலச் சமுதாய ஒழுங்கிலே பெரிதும் துன்பப்பட்டவரல்லர். பிற்காலத்திலே பிரான்சிற் புரட்சி நடந்து கொண்டிருக்கையிலே அத்தத்துவ ஆசிரியர்களின் கோட்பாடுகள் புரட்சிகாரரின் நடவடிக்கைகளைச் சரியெனக் காட்டப்பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு தம் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டவற்றைத்  தத்துவ ஆசிரியரே எதிர்த்திருப்பர் இவர்களுடைய கருத்துக்கள் பின்னரே முக்கியத்துவம் அடைந்தன. அக்காலத்தில் நிலவிய நிறுவனங்கள் யாவற்றையும் பற்றி நுணுக்கமாகவும் அடக்கமின்றியும்  கண்டிக்கும் ஒரு மனப்பான்மையைப் பேணிய அளவிற்கு மட்டுமே அக்கருத்துக்கள் புரட்சி மூண்ட காலத்திலும் அதற்கு சிறிது பின்னரும் செல்வாக்குடையனவாக இருந்தன எனலாம். அக்கருத்துக்கள் பரவியமை காரணமாக ,மக்கள் பழைய சமுதாய அமைப்பின் முழு அத்திவாரத்தையுமே அவசியமானவிடத்து, ஆராய்ந்து கண்டிக்குத் தகைமை உடையராயினர். "புரட்சி நிலைமை" உருவக்கியிருந்தமையே 1789 இல் முக்கியமான அம்சமாயிருந்தது. அந்நிலைமையே மக்களை அவர்தம் விருப்பத்துக்கு மாறாக புரட்சி மனப்பான்மைக்கு உய்த்தது எனலாம். அத்தகைய நிலைமையை உருவாக்குவதில், தத்துவ ஆசிரியர் பங்கு அத்தனை பெரிதன்று.தொடரும்.....------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}