ALL ABOUT NOBELPRIZE

நோபல் விருது உலகில் மிகப்பெரும் விருதாக கருதப்படுகின்றது இது ஒப்பற்ற ஆய்வுகள் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்புக்கள்  மேற்கொண்டவர்களுக்கும் அரிய சமூகத்தொண்டுகள் ஆற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உயரிய விருதாகும்
நோபல் பரிசை பெற்றவர்கள் பெறமறுத்தவர்கள் நோபல் பரிசு தொடர்பான சர்ச்சைகள் பரிசை வழங்குவதற்கு நபர்களைஎவ்வாறு தெரிவுசெய்கிரர்கள்
என்ற பல விடயங்களை என்னால் இயலுமான அளவிற்கு இப்பதிவில் உள்ளடக்க முயன்றுள்ளேன்


நோபல்  பரிசை தோற்றுவித்தவர் "Alfred Bernhard Nobel "  இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் இவர் ஒரு வேதியலாளர் பொறியியலாளர் கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆயுதவியலாளர் 1833 ஆக்டோபர் 21 இல் "Immanuel Nobel " என்பவருக்கு 3 வது மகனாகப் பிறந்தார்  "Immanuel Nobel " ஆயுதத்தொழிற்சாலை வைத்திருந்தார் 
நோபல் தனது வாழ்வில் 355 கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியிருந்தாலும் டைனமைட்டின் கண்டுபிடிப்பிற்காகவே பெரிதும் நினைவு கூரப்படுகின்றார்

இம்மானுவேல் நோபெல் 
இவரதுகாலத்தில் நைட்ரோகிளிசரின்  என்னும் இரசாயனபொருள்தான் வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது
இதை கையாளுதல் மிகவும் கடினம் இதனால் வெடிவிபத்துக்களும் மரணங்களும் ஏற்பட்டன 
இதற்கான தீர்வை நோபெல் தனது சகோதரருடன் இணைந்து கண்டுபிடிக்க முயன்றார் "kieselguhr"  என்னும் மண் வகையை நைட்ரோகிலீசரின் உடன் சேர்த்தால் கையாளல் இலகுவானது என்ற உண்மையை தவறுதலாக கண்டு பிடித்தார்  அனால் இதை நடைமுறையில் செயற்படுத்த சற்று கடினமாக இருந்தது இது தொடர்பான ஒரு பரிசோதனையில் 1864 இல் ஒரு வெடி விபத்தில் தனது சகோதரனான Emil ஐ இழந்தார் 


நோபல் இறந்துவிட்டார் என்ற செய்தியை
நோபல் வாசித்தபோது 
பின் 1867 இல் டைனமைர்ட் ஐக் கண்டுபிடித்தார் இதனால் இவர் புகழின் உச்சிக்கே சென்றார்  வெடிவிபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதால் ஸ்வீடன் அரசாங்கம் வெடிமருந்து தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு   தடை விதித்திருந்தது டைனமைட் நைட்ரோ கிலீசரினைவிட பாதுகாப்பானது என அரசாங்கத்துடன் போராடி புரிய வைத்தார் நோபல் ..டைனமைட்டின் கண்டுபிடிப்பால் நோபலை மரணத்தின் வியாபாரி ,மரணத்தின் அரசன் என்றெல்லாம் பட்டப் பெயர்கொண்டு அழைத்தார்கள் 


1888 இல் பிரெஞ்சு செய்தித்தாளில் இவரது மரண அறிவித்தல் இரங்கலை இவரே பார்த்தார் "மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார் "என்று அப்பத்திரிகை தவறுதலாக செய்தி வெளியிட்டிருந்தது..இச்செய்தி நோபலின் அடித்தளத்தையே உலுக்கிவிட்டது ... உண்மையில் இறந்தது  நோபலின் சகோதரர் லுட்விக் ..இச் செய்திதான் நோபலின் மன மாற்றத்திற்கு காரணமாக இருந்தது தான் இறந்தபின் தன்னை யாவரும் எவ்வாறு நினைவுபடுத்த போகிறார்கள் என்று நோபலுக்கு  புரிந்தது 


உண்மையில் நோபல் தன்மீது ஏற்படப்போகும் களங்கத்தை துடைக்க முனைந்தார் என்றுதான் கூறவேண்டும் ......


இதனால் ஒரு முடிவுக்கு வந்தார் தனது சொத்துக்களின் பெரும்பகுதியை (94%) மனித குல  மேன்மைக்கு வெவ்வேறு துறைகளில் உழைத்தவர்களுக்கு பரிசாக அளிக்க முடிவு செய்தார் 
தனது மரண உயிலில் தனது சொத்தின் பெரும்பகுதி மனிதகுல முன்னேற்றத்திற்கு பங்களித்தவர்களுக்கு இயல்பியல், வேதியல்,அமைதி ,மருத்துவம் ,இலக்கியம் ஆகிய துறைகளுக்கு வழங்க வேண்டு என்று முடிவு எனக்குறிப்பிட்டார் ..
நோபலின் இறுதி உயில் 
1896 டிசம்பர் 10 இல் தனது 63 ஆவது வயதில் இத்தாலியில்  காலமானார் இவர் இறக்கும்போது இவருக்கு 93 தொழிற்சாலைகள் இருந்தன 
1900  ஜூன் 29  இல் நோபல் அறக்கட்டளை என்னும் அமைப்பு அமைக்கப்பட்டது இந்நிறுவனத்தின் பணி நோபலின் சொத்துக்களை பராமரிப்பதும் நோபல்பரிசுகளை வழங்குதலை மேற்பர்வையிடலுமாகும் இந்நிறுவனம் பரிசுகளை தேர்ந்தெடுப்பதில் எந்த செல்வாக்கையும் செலுத்துவதில்லை உண்மையில் இது ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகின்றது இது நோபலின் சொத்தை முதலீடகக் கொண்டு பரிசுக்கு வேண்டிய நிதியை திரட்டிக்கொள்கிறது 1946 இல் இருந்து ஸ்வீடனில் அனைத்து விதமான வரிகளும் நோபல் அறக்கட்டளைக்கு நீக்கப் பட்டிருக்கின்றது 1953 இல் இருந்து அமெரிக்காவும் வரிவிலக்கு அளித்திருக்கின்றது 1980 இல் இருந்து இதன் முதலீடுகள் அதிக இலாபம் ஈட்டி வருகின்றன   2007 இல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 560 மில்லியன் டாலர்கள் 
நோபலின் சமாதி 
1901 இல் இருந்துதான் நோபல் பரிசு நடைமுறைக்கு வந்தது தற்பொழுது 6  துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது இயல்பியல் வேதியல் மருத்துவம் இலக்கியம் உலக அமைதி பொருளாதாரம்
இயல்பியல் ,வேதியல்
இலக்கியம்


பொருளாதாரம்


மருத்துவம் 

உலக அமைதி


ஆனால் உண்மையில் நோபல் 5  துறைகளுக்குதான் பரிசுகளை வழங்கவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்....

தொடரும் .....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}