coincidencecoincidence என்பதை தற்செயல் என்று கூறுவதைவிட சற்று அதிர்ச்சியான சுவாரசியமான தற்செயல் என்று கூறுவது கூடுதலாகப் பொருந்தும் இதை "தேஜா  வு"(deja vu ) என்றும் கூறுகிறார்கள்
 இரண்டுக்கும்  சிறிய வித்தியாசம்  இருக்கிறது நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரை சந்திக்க வேண்டு என நினைத்துக்கொண்டு வீதியில் செல்லும்போது உங்களது நண்பரும் உங்களைத்தேடி வந்துகொண்டிருப்பார் ...உங்களது கைபேசி அழைக்கும் போது யார் அழைக்கிறார்கள் என்பதை சிலவேளைகளில் நீங்கள் கைபேசியை பார்க்காமலேயே ஊகித்து விடுவீர்கள் சில நண்பர்களின் குறும் செய்தி பார்க்காமலே புரிந்துவிடும் நீங்கள் உங்களது நண்பருடனோ காதலிப்பவருடனோ பேசும்போது இருவரும் ஒரே நேரத்தில் ஒரே விடயத்தைப் பற்றி பேச முனைந்து வாயடைத்துப்போய் இருப்பீர்கள்
..நீங்கள் மனதுக்குள்  பாடிக்கொண்டிருக்கும் பாடலை உங்களுக்கு அருகில் இருக்கும் நபர் பாடிவிடுவது  இவ்வாறனவை உங்களது வாழ்வில் நிகழ்ந்திருக்கக்கூடிய சில அழகான coincidence கள்

 தேஜா  வு என்பது நீங்கள் ஒருவிடயம் அல்லது ஒரு இடம் அல்லது ஒரு சம்பவத்தை அனுபவிக்கும் போது அது இதற்கு முன்னரே நிகழ்ந்தது போல் தோன்றுவது .... தேஜா  வு போல் சில வேறுபட்ட விடயங்கள் உள்ளன
Presque vu ( a situation in which when one cannot recall a familiar word or name, but with effort one eventually recalls the elusive memory)


Jamais vu(never seen  opposite of déjà vu)


Déjà entendu (the experience of feeling sure that one has already heard something, even though the exact details are uncertain and were perhaps imagined)


Reja vu( The feeling something that has happened or is happening will happen again, possibly in the near future, possibly in the distant future.)


தேஜா  வு விற்கு disorders,Pharmacology என பல விஞ்ஞான   விளக்கங்களும் உள்ளன ஆனால் coincidence இற்கு எதை கூற முடியும்? .. நமது வாழ்கையில் நடக்கும் சில சாதாரணமான அசாதாரண விடயங்களை விட அதிகமான அசாதாரணங்கள்  கூடிய விடயங்கள் சிலரது வாழ்வில் சாதாரணமாக நடந்திருக்கின்றது வாசித்தால் மண்டையைப்  பிய்த்துக்கொள்ளலாம்   போல தோன்றும்  ..அவ்வாறான சில விடயங்கள் இதோ ....
 Egdar Allan Poe  பிரபலமான திகில் கதை எழுத்தாளர் இவர் The narrative of Arthur Gordon Pym’    என்ற புத்தகத்தை எழுதினார் இதில் ஒரு கப்பல் விபத்தில் உயிர் தப்பிய 4 நபர்களை பற்றியது நீண்ட நாட்களாக உணவு நீர் என்று எதுவுமில்லாமல் நடு கடலில் (கடல் நீர் உப்பு என்பதால் அருந்தமுடியாது   ) மிகவும் சிரமப்பட்டார்கள் பின் அவர்களுடன் ஒரு சிறுவனும் இருந்தான் அவன் பெயர்  Richard பர்கர்   3 வரும் அவனைக்கொன்று தம் பசியை போக்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.... இதை  அவர் தனது  புத்தகத்தில் கதையாகக் குறிபிட்டிருந்தார் சில வருடங்கள் கழித்து 1884 இல் ஒரு படகு விபத்தில் மூவர் உயிர்பிளைத்த்தார்கள் அவர்கள் தம்முடன் நான்காவதாக தப்பித்து இருந்த ஒரு பையனை கொன்று சாப்பிட்டே உயர் தப்பியதாக கூறுகிறார்கள் அவர்கள் கூறிய அந்தப்பையனின் பெயர்   Richard Parker  19 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரியா வில் பிரபலமான ஓவியர் ஒருவர் இருந்தார் அவரது பெயர் Joseph Aigner   இவர்  1836  இல் தனது 18 வது வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார் ஆனால் ஒரு Capuchin  துறவி எங்கிருந்தோ வந்து தடுத்துவிட்டார் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் தற்கொலை செய்ய  முயன்ற போது அதே துறவியால்  தடுக்கப்பட்டார்  8 வருடங்களின் பின் joseph  aigner  அரசியல் காரணங்களுக்காக தூக்கிலிடப்பட  இருந்தார் அதே துறவியின் சாட்சியத்தால் தப்பினார் அவரது 64 வது வயதில் தனது கைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டார் அவரது இறுதிக்கிரியைகளை நடத்தியது அதே துறவிதான் இறுதிவரை   joseph  aigner   அந்த துறவியின் பெயரை தெரிந்து கொள்ள வில்லை 


அகஸ்டஸ் ஹோர் இவர் ஒரு திகில் எழுத்தாளர் இவர் தனது 13 வது மாதத்தில் தனது அத்தைக்கு ரயில் நிலையத்தில் வைத்து தத்துக் கொடுக்கப்பட்டவர் இவர் வளர்ந்து ஒக்ஸ்போர்ட் டில் படித்துவிட்டு 17 ஆண்டுகள் கழித்து தத்துக்கொடுக்கப் பட்ட அதே தினத்தில் வந்து இறங்கினர் அங்கு ஓரிடத்தில் ஒரு பெண் ஒரு குழந்தையுடன் அழுதுகொண்டிருந்தாள் இவர் சென்று "ஏனம்மா அழுகிறாய் ?"என்று கேட்டார் அதற்கு அந்தப்பெண் இது எனது குழந்தை பிறந்து 13 மாதங்கள்தான் ஆகின்றது குழந்தையை இதனது அத்தைக்கு தத்துக்கொடுக்கப் போகின்றேன் இனிமேல் பார்ப்பேனோ தெரியாது அதனால் அழுகின்றேன் என்றாளாம் அந்தப்பெண்மணி ... 


Arthur Koestler

Arthur  koestler  பிரிட்டிஷ் ஐ சேர்ந்த பிரபல எழுத்தாளர் இவர் The Roots of Coincidence என்னும் புத்தகத்தை எழுதினர் அதில் சுவாரசியமான coincidence களும் அதைப்பற்றிய விஞ்ஞான விளக்கங்களையும் குறிப்பிட்டுள்ளார் இந்தப்புத்தகத்தை எழுதியதும் அவருக்கு அந்தோணி கிளன்சி என்பவரிடம் இருந்து கடிதம் வந்தது 
"நான் வாரத்தின் ஏழாவது நாள் ஏழாவதுமாதம் ஏழாவது குழந்தையாகப்பிறந்தேன் எனது தந்தை ஏழாவதாக   பிறந்தவர் எனது 27 வது வயதில் நான் குதிரைப்பந்தயத்துக்கு போய் இருந்தேன் ஏழாவது பந்தயத்தில் ஓடும் குதிரைகளின் பட்டியலைப் பார்த்தபோது ஏழாவது குதிரையின் பெயர் எழாவது சொர்க்கம் என்று இருந்தது அதில் ஏழு சில்லிங் கட்டினேன் அந்தக் குதிரை 7000 பௌண்ட்கள் ஜெயித்தது என்று கூறியிருந்தால் கடிதத்தை நம்புவது கடினமாக இருந்திருக்கும் அனால் கடிதம் இப்படி முடிகிறது 

அந்தக் குதிரை ஏழாவதாக வந்தது ......"


தொடரும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}