அமானுஷ்யங்கள்-02

சென்ற பதிவின் தொடர்ச்சி இது(சென்ற பதிவு click) சிலரது வாழ்வில் நிகழ்ந்த அமானுஷ்ய விடயங்கள் பற்றியது இப்பதிவு  சென்ற பதிவில் யோசப் டியுலிஸ் என்பவர்  சிக்காக்கோ நகிரில் பேப்பர் வாங்க கடைக்கு சென்று அடுத்து நடைபெற இருந்த  பெரிய விபத்தை முன் கூட்டியே தெரிவித்ததுடன் முன்னைய பதிவு முடிந்தது 
யோசப் டியுலிஸ் என்பவர் ஒரு தீர்க்க தரிசி அல்ல சாதரண முடி திருத்தும் தொழிலை செய்பவர் யாவர் இன்னும் பலவற்றை கூறி உள்ளார் 1967 நவம்பர் 25 அன்று ஒரு கூற்றை கூறினார் ஒரு பாலம் இடிந்து விழப்போகிறது என்று மூன்று வரம் கழித்து நவம்பர் 25 இல் ஓஹையோ நதியின் குறுக்காக இருந்த வெள்ளிப் பாலம் உடைந்து விழுந்து 36  நபர்கள் பலியானார்கள் ....நாட்டில் கலவரம் வரப்போகின்றது என 1968  ஜனவரி 8 இல் கூறினார் ஏப்ரல் 7 இல் சிகாக்கோவில் பெரிய கலவரம் ஏற்பட்டது இதை அடக்குவதற்கு 5000 மைய இராணுவப்படையினர் வரவேண்டி இருந்தது ....

1968 டிசெம்பர் 15 இல் டியுலிஸ் கென்னடி குடும்பத்திற்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறினார் ...ஒரு பெண் நீரில் மூழ்குவதை தான் பார்த்ததாகவும் கூறினார் ...1969  ஜூலை 18 இல் மேரிஜா என்னும் பெண் கென்னடியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் நீரில் மூழ்கி இறந்தாள் இது கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தது  மே 21 1969 இல் டியுலிஸ் ஒரு விமான விபத்து இடம்பெறும் அதில் 79  பேர் இறப்பார்கள் என்று கூறினார் செப்டம்பர் 9 இல் அலிகானி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி நன்கு பைலட்கள் 79 பயணிகள் இறந்தார்கள் ...

அடுத்த அமானுஷ்ய நிகழ்வு இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் பற்றியது இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தனது வீட்டிற்கு மூன்று மந்திரிகளை விருந்துக்கு அழைத்திருந்தார்  அப்பொழுது விமானத்தாக்குதல் தொடக்கி இருந்தது ...சாப்பிட்டுக்கொண்டிருந்த சர்ச்சில் திடீர் என்று எழுந்து சமையல் சிப்பந்திகளிடம் சென்று சாப்பாட்டை டைனிங் டேபிள் இல் வைத்துவிட்டு பாம் செல்ட்டர் இனுள் செல்லுமாறு கூறினார் அவ்வாறு அவர் கூறி விட்டு வந்து அடுத்த மூன்றாவது நிமிடம் வீட்டின் பின் புறம் குண்டு விழுந்து சமையலறை முற்றாக நாசமாகியது 


இவரது வாழ்வில் இன்னொரு சம்பவமும் நடந்தது லண்டனில் காரில் செல்ல தயாராகும் போது அவர் எப்பொழுதும் உக்காரும் பக்க சீட் கதவு திறந்து அவருக்காக காத்திருந்தது வழக்கத்துக்கு மாறாக அவர் வழமையாக இருக்கும் சீட்க்கு எதிர்புற சீட்டில் சென்று அமர்ந்தார் கார் சென்று கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது கார் நிலை குலைந்தது ஒரு பள்ளத்தில் விழ இருந்தது சர்ச்சில் உயர்ந்த இடத்தில் இருந்ததால் கார் சமநிலைக்கு வந்தது நான் குண்டக்க இருந்ததால் தப்பித்தேன் என சர்ச்சில் கூறினார் ..இவைகள் எப்படி நடந்தன  என்று பின்னர் தான் எண்ணி வியப்படைந்தார் 
சர்ச்சில்லின் மனைவி இதை பற்றி கேட்ட பொழுது ஒரு குரல் நில் இந்த பக்கம் ஏறாதே என்று கூறியது அதனாலதான் அவ்வாறு செய்தேன் என கூறினாராம் ...

1972 இல் ரிஜன்சி அச்சகம் black  abductor  என்ற நாவலை வெளியிடுகின்றது இதை எழுதியவர் ஹரிசன் ஜேம்ஸ் ரஸ்க்  இந்நாவல் தீவிரவாதிகளின் குழு வலது சாரி சிந்தனையுள்ள ஒரு பெரிய பணக்காரனின் மகளை கடத்துகிறது அவள் ஒரு கல்லூரி மாணவி பெயர் பாட்ரிசியா கடத்தப்படும் போது அவள் அவர்களை எதிர்க்கிறாள் பின் அவர்களின் கொள்கைகளால் அவள் ஈர்க்கப்படுகிறாள்  தனது போடோகளை தனது தந்தைக்கு அனுப்பி வைக்கிறாள் இறுதியில் போலீஸ் அவர்களை சூழ்ந்து மடக்கி அனைவரும் கொலை செய்கிறது இது நாவலின் கதை 

இந்நாவல் வெளியாகி ஒரு மாதத்தின் பின் ராண்டல்ஸ் ஹர்ஸ்ட் என்னும் என்னும் வலது சாரி பத்திரிக்கை முதலாளி பெரிய பணக்காரர்  அவரின் மகள் அவரின் மகள்  பாட்ரிசியா அவள் கல்லூரி வழக்கத்தில் சிம்பயானிஸ் விடுதலைப்படை என்ற குழுவினரால் கடத்தப்படுகின்றாள் பின்பு அவர்களால் ஈர்க்கப்படுகின்றால் இறுதியில் நாவலின் முடிவே ஏற்படுகின்றது 1974 இல் F.B.I அதிகாரிகள் நாவலாசிரியர் ரஸ்க்கை விசாரித்து பிழிந்து எடுத்துவிட்டார்கள் ..அனால் ரஸ்க் கூறிய பதில் நான் எழுதியது முழுக்க முழுக்க கற்பனை ..இதற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது ........என்பதுதான் ...
பாட்ரிசியா என்ற பெயர் பணக்காரனின் மகள் மனமாற்றம் எல்லாமே .....பொருந்துகிறது ....
இவ்வாறான சில அமானுஷ்ய விடயங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும் ...ஆனால் குறைந்தது  இரண்டு பேராவது பார்த்திருக்க வேண்டும் ....இல்லாவிட்டால் யாரம் நம்ப மாட்டார்கள் ...


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}