நிஜ டைட்டானிக் ஏப்ரல் 15 2012 titanic  கப்பல் மூழ்கி முழுமையாக 100 ஆண்டுகள் பூர்த்தியாகிவிடும்  எனவே நூற்றாண்டு நினைவில் titanic பற்றிய பதிவு 
titanic கப்பல் இன்று கடலுக்கடியில் 12 ,600 அடி ஆழத்தில் அட்லாந்திக் கடலின் நடுவே இரண்டு துண்டுகளாக அமிழ்ந்திருக்கின்றது ஒவ்வொரு துண்டும் 1970 அடிக்கு அப்பால் உள்ளது 
titanic கப்பல் மூழ்கி 74 ஆண்டுகளின் பின் ஜூலை 14 1986 இல்தான் மீண்டும் அது கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது 

milvina dean தான் titanic கப்பலிலேயே மிகவும் வயது குறைந்தபயணி கப்பல் மூழ்கும்போது இவருக்கு வயது இரண்டு மாதங்கள் இவர் தனது 97 வது வயதில் 2009 இல் காலமானார் titanic விபத்தில் பிழைத்தவர்களில் இறுதி நபர் இவர்தான் 

உண்மையில் டைட்டானிக்கின் உண்மையான பெயர் RMS titanic RMS என்றால் Royal mail steamer ,titanic கப்பலை நிர்மானித்த கம்பெனி White star line இதன் உரிமையாளர் J.P.morgan இதை வட அயர்லாந்தில்பெல்பாஸ்ட்  நகரில் உருவாக்கப்பட்டது titanic ஐ கட்டி முடிப்பதற்கான செலவு 7.5 மில்லியன் டாலர்கள் (1921 இல் )
1912 இல் இது முதல் முதலில் சேவைக்கு விடப்படும்போது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக்கப்பலாகும் இதன் கட்டுமானப்பணியில் 3000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர் இதைக்காட்டி முடிப்பதற்கு  அண்ணளவாக இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது 1909 மார்ச் 31 இல் இருந்து 1911 மே 31 வரை  .இதற்கு தேவைப்பட்ட ஆணிகளின் எண்ணிக்கை 3 மில்லியன் 

titanic கப்பலின் captain ஆக இருந்தவர் Edward Smith 
 Edward Smith 

titanic side plan 
கப்பலின் நிறை 52 310 டன் ,நீளம் 882 அடிகள் (269m ),உயரம் 175 அடிகள் (53m )
இக்கப்பலில் அதிகமாக 2435 பயணிகள் பிரயாணம் செய்யலாம் 

Cutaway diagram of Titanic's midship section
டைட்டானிக் கப்பல் A முதல் G வரை தளங்களை கொண்டது இவைகள் முதல்வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது இதில் A தளம் செல்வந்தர்களுக்குரியது இத்தளம் நீச்சல் தடாகம் ,விளையாட்டு மைதானம் என பல வசதிகளை கொண்டது 
739 ,674 ,1026  முதலாம்,இரண்டாம் ,மூன்றாம் வகுப்பு பிரயாணிகள் பிரயாணம் செய்தனர் முதல்வகுப்பு டிக்கெட்டின் விலை 4700 டாலர்கள் இன்றைக்கு இதன் பெறுமதி 50000 டாலர்கள் கப்பலில் நன்கு புகை போக்கிகள் 
காணப்படும் உண்மையில் இதில் மூன்றுதான் இயங்கும் ஒன்று பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது 

கப்பல் மூன்று இயந்திரங்களை கொண்டிருந்தது மொத்தமாக இவைகள் 46000 குதிரை வலு உடையவை இவற்றின் மொத்த  எடை 720 டன் இவற்றை இயக்குவதற்கு 176 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் 

டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதிய நாளில் மோதுவதற்கு முன்னராக ஆறு எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தன ஆனால் வயர்லெஸ் ஒபெரடோர் அவற்றை புறக்கணித்துவிட்டார் மோதல் நடைபெற்ற இரவில் நிலவு வெளிச்சமும் இல்லை எனவே பனிபாறைகளை அவதானித்திருக்க முடியாது போனது 

டைட்டானிக் கப்பலுடன் மோதிய பனிப்பாறை மற்றைய பனிப்பாறைகளை போல் வெள்ளையனது அல்ல இரவு வானம் அழுத்தமான பரப்பை கொண்ட நீரில் தெறிப்படையும் பாறையிலும் தெறிப்படையும் இதனால் கடலும் கடலில் உள்ள பாறைகளும் கறுப்பாகவே தெரியும் குறிப்பிட்ட தூரம் அருகாமையில் செல்லும்வரை பனிப்பாறைகளை அவதானிப்பது கடினம் இவ்வாறான  பாறைகளை black berg என்று அழைப்பார்கள் 

கப்பல் 22 .5 knots வேகத்தில் சென்றுகொண்டிருந்தது இது டைட்டானிக் கப்பலின் அதிஉயர்  வேகத்தின்  0.5 knots குறைவாகும் (knots கப்பல்களின் வேகத்தை அளக்க பயன்படும் அளவீடு )

The route of Titanic's maiden voyage, with the coordinates of her sinking.

டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன்துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமைஏப்ரல் 10,1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க்என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயோர்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது
Titanic leaving Belfast for its sea trials on 2 April 1912

பனிக்கட்டியுடனான மோதல் நடைபெற்றது ஞாயிறு ஏப்ரல் 14 1912 இரவு 11 .40 pm பனிக்கட்டிபற்றிய எச்சரிக்கை தாமதமாக உணரப்பட்டதும் கப்பலை திருப்புவதற்கு இயலுமான அளவிற்கு முயற்சி செய்தார்கள் ஆனால் முடியாமல் போனது  
 பனிப்பாறை கப்பலின் முன்பகுதியை 220 -245 அடி நீளத்திற்கு வெட்டித்தள்ளியது கப்பலின் முழு நீளம் 882 அடிகள் மோதிய பனிப்பாறையின் நீளம் 220 அடிகள் பனிப்பாறையின் 1 /10 பங்கே நீரிற்கு வெளியில் காணப்பட்டது 11 .40 pm இற்கு மூழ்க ஆரம்பித்து அதிகாலை 2.20 am இற்கு டைட்டானிக் முழுமையாக மூழ்கியது 

மூழ்குவதற்குள் டைட்டானிக்இற்கு அண்மையில் இருந்த கப்பலாகிய RMS carpathia விடம் உதவி கோரப்பட்டது இது டைட்டானிக் இற்கு 93 km கள்  தொலைவில் இருந்தது இக்கப்பல் டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கு செல்வதற்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது இதனால் இது டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கு வந்து எஞ்சியவர்களைத்தான் காப்பாற்ற முடிந்தது 

மொத்தமாக 2240 பேர் அதில் காப்பாற்றபட்டவர்கள் 706 நபர்கள் 
"Untergang der Titanic" by Willy Stöwer, 1912

விபத்து ஏற்பட்டால் தப்பி செல்வதற்கு 20 life board வைத்திருந்தார்கள் அதில் 1200 பேர்வரை தப்பித்திருக்க முடியும் ஆனால் 710 நபர்கள் தன தப்பித்தார்கள் 
முதலாவதாக தப்பிய உயிகாக்கும் படகு  64 பேரை கொள்ள கூடியது  ஆனால் அதில் 28 நபர்களே சென்றனர் அப்போதிருந்த  பதட்டமான சூழ்நிலையில் இப்படி படகை முழுமையாக  பயன்படுத்தாமல் விட்டதும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகும் 
A collapsible lifeboat, notice canvas side

நெரிசல்கள் ,விபத்துக்களில் இறந்தவர்களை விட அதிகமானவர்கள்  குளிரினாலேயே இறந்தார்கள் வெப்பநிலை -2c க்கு இருந்தது 
எல்லோருக்கும் life -jackets வழங்கப்பட்டிருந்தது ஆனால் அடுத்தநாள் காலை 300 நபர்களின் இறந்தஉடலையே பெற முடிந்தது இந்த விபத்தில் இரண்டு நாய்களும் உயிர்தப்பி உள்ளன   பெண்களுக்கும் குழந்தைகளுக்குமே முன்னுரிமை என கப்டன் அறிவித்ததும் Daniel buckley என்பவர் பெண்வேடமணிந்து உயிர்காக்கும் படகுக்குள் சென்றுவிட்டார் 

கடும்குளிரிலும் இருந்தாலும் தப்பித்த ஒரே ஒரு நபர் charles joughain படகு மொல்ல்கும் இறுதி நேரத்தில் பேண்ட் வைத்திய குழுவினர் படகில் இருந்தவரே தமது வாத்தியங்களை உயர் தொனியில் வாசித்தார்கள் அவர்களின் இறுதிப்பாடல் "song d  automne " இப்பாடலுடன் அவர்ககளும் இறந்தார்கள் 

உயிர் தப்பியவர்களை காப்பாற்றிய Carpathia நியூயார்க்ஐ அடைய மூன்று நாட்கள் எடுத்தது பனிப்பாறைகளும்,மோசமான காலநிலையுமே இதன் பிரயாணத்தை தடுத்தன 

ஏப்ரல் 18 இரவு 9.30 இற்கு கப்பல் நியூயார்க்ஐ அடைந்தது கொட்டும் மழையிலும் 40 000 மக்கள் தப்பித்தவ்ர்களை வரவேற்க காத்திருந்தார்கள் 
நேரே இக்காட்சியை பார்த்தவர்கள் மிகவும் உருக்கமான காட்சி என விபரித்துள்ளர்கள் 
Carpathia கப்பல் பாதிக்கப்படவர்களை காப்பாற்றியதற்காக கெளரவிக்கப்பட்டது வெகுமதி அளிக்கப்பட்டது  உயிர் தப்பியவர்களும் இணைந்து மேலதிகமாக £66,038 (இன்றைய பெறுமதியில் )வழங்கினார்கள் 

பாதிக்கபட்டவர்களுக்கு மக்கள் இணைந்து உதவிப்பணமாக  £450,000 (£33,018,954 இன்றைய பெறுமதி )வழங்கினார்கள் 

உயிர் தப்பியவர்களின் விபரம் 


டைட்டானிக்கில் பணி புரிந்த பொறியியாளர்களுக்காக இங்கிலாந்த்தில்  கட்டப்பட்ட தூபி 

கப்பல் மூழ்கியது பற்றிய பத்திரிக்கை செய்திகள் 

டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி என உயிர் தப்பிய கப்பல் அதிகாரியின் பேத்தி விளக்கம்
கப்பல் எப்பக்கமாகத் திருப்பப்பட வேண்டும் என்ற குழப்பமே டைட்டானிக் கப்பல் மூழ்கியமைக்குக் காரணம் என மூழ்கிய கப்பலின் அதிகாரி ஒருவரின் உறவினர் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக்கின் இரண்டாம் நிலை அதிகாரியான சார்ல்ஸ் லைட்டொலர் என்பவரின் பேத்தி புதின எழுத்தாளர் லூயிஸ் பேட்டன் இது குறித்து தெரிவிக்கையில், ”டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்,” என சார்ல்ஸ் லைட்டோலர் தன்னிடம் தெரிவித்ததாக அண்மையில் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

பெல்பாஸ்டில் தயாரிக்கப்பட்ட சொகுசுக் கப்பலான டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு ஏப்ரலில் அத்திலாந்திக் பெருங்கடலில் முழ்கியதில் 1,500 பேர் உயிரிழந்தனர்.

கடல் போக்குவரத்து பாய்மரக் கப்பல்களில் இருந்து நீராவிக் கப்பல்களுக்கு மாற்றம் பெற்ற காலகட்டத்திலேயே இந்த அனர்த்தம் விளைந்ததாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அக்காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறான ஒழுங்கமைப்புகள் நடைமுறையில் இருந்தன. ஒன்று நீராவிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட ரடர் கட்டளை (Rudder Orders), மற்றையது பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட டில்லர் கட்டளை (Tiller Orders). இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. ஒரு முறையில் வலது பக்கம் திருப்பு என்ற கட்டளை மற்றைய முறையில் இடது பக்கத்துக்காகும்.

சார்லஸ் லைட்டோலர் இதனை வெளியில் சொல்லாமல் இரகசியமாகவே வைத்திருந்ததாக லூயிஸ் பேட்டன் தனது குட் அச் கோல்ட் (Good As Gold) என்ற தனது கடைசிப் புதின நூல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உயிர் தப்பியவர்களில் லைட்டோலர் மட்டுமே இதனைத் தெரிந்து வைத்துள்ளார். டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மே இவ்விரகசியத்தை வெளியிட வேண்டாமென்று அவரிடம் கேட்டுள்ளார். அதிகாரபூர்வ விசாரணைகளில் கூட லைட்டோலர் இதனைத் தெரிவிக்கவில்லை என லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். தான் பணியாற்றிய வைட் ஸ்டார் லைனர் கம்பனியைக் காட்டிக் கொடுக்க அவர் விரும்பாததே அதற்குக் காரணம் என பேட்டன் எழுதியுள்ளார்.

டைட்டானிக் மூழ்கியதை பற்றிய வீடியோ இணைப்பு
Last Mysteries of the Titanic (2005) Discovery Channel - Extended Edition 


thanks to 

wikinews 
wikipedia 
titanic-facts
eszlinger

for more information 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}