ஏகாதிபத்தியப் போட்டிகளும் சர்வதேசக் கூட்டணிகளும் 1871 -1914

1871 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரின் ஒப்பந்தம் மத்திய ஐரோப்பாவிலே தேச எல்லைகளில் பெருமாற்றத்தை ஏற்படுத்திய பொதிலும் பரம்பரை முடியாட்சி முறை நிலவிய ஓஷ்திரிய-ஹங்கேரி , இரசிய , துருக்கி  ஆகிய  கிழக்கு ஐரோப்பியப் பேரரசுகளை எவ்வழியாயினும் பாதிக்கவில்லை. எனினும் சில ஆண்டுகளின் பின் நடை பெற்ற  நிகழ்ச்சிகள் இம்மூன்று பேரரசுகளிலும் மற்றாங்களை ஏற்படுத்தின. 1877 இல் நடைபெற்ற இரசியா, துருக்கி  போரானது 1768
இன் பின் இவ்விரு நாடுகளிடையே ஏற்பட்ட ஐந்தாவது போராகும். இப்போர் கிராமியப் போரின் இயல்புகளைப்  பேரளவிற் கொண்டிருந்தது. கிராமியப் போர் பெறிய ஐரோப்பிய வல்லரசுகள் சிலவற்றின் மகாநாட்டின் தீர்த்து வைக்கப்பட்டதுபோல். இப்போரும் 1878 இல்  பேர்லின் நகரிற் கூடிய சர்வதேச  மாகாநாட்டினுற் தீர்த்துவைக்கப்பட்டது. பேர்லின் மாநாட்டின்  ஒழுங்குகளினுற் துருக்கியின் ஆதிக்கப்பலன் மேலும் தளர்ச்சியுற்றது சிக்கலான கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினையில் ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அவசரமான சுயநலன்களும் பேராசைகளும் புதிய வகையில் வற்புறுத்தப்பட்டன. ஐரோப்பியப் அரசியலரங்கில் வல்லரசுகளின் ஆதிக்கச் சமபல  நிலையை ஏற்படுத்தும்  முயற்சியில் இரசியா ஐரோப்பிய இரயதந்திர அமைப்பில் ஓர் அம்சமாக மறுபடியும் பங்குபற்ற வழிவகுத்தது. போல்கன் நாடுகளிலும் இரசியப் பேரரசின் மேற்கெல்லைப் பிரதேசங்களிலும் உள்ள மக்களின் தேசிய இன எழுச்சியும், குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றுவதில் வல்லரசுகளிடையே ஏற்பட்ட போட்டிகளும் வல்லரசுகளின் இரயதந்திரச் பெருந்திட்டங்களை மேலும் சிக்கலாக்கின இந்த அரசியல் இரயதந்திரச் சிக்கல்களுக்குப் பின்னல் இக்காலத்திலேற்பட்ட பொருளியல் கைத்தொழில் வளர்ச்சி, வியாபாரம், முதலீடு, சனப்பெருக்கம் என்ற நிலைமைகளும் காணப்பட்டன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தம்முள் தொழிற்பட்டு 1914 ஆம் ஆண்டு ஏற்றபட்ட போருக்குக் காரணங்களயிருந்தன.

கிழக்கு ஜரோப்பாவிலும் குடியேற்ற நாடுகளிலும் வல்லரசுகளிடையே ஏற்றப்பட்ட சிறிய பூசல்கள் சர்வதேச உறவுகளிற் காலத்திற்கும் காலம் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் அரசுகளின் அயல் நாட்டுக்கொள்கைகளையும்ப் நிர்ணயித்தன 1873 இல் அமைக்கப்பட்ட "முப்பேரரசுசரணி" அயல் நாட்டுறவுகளிலேற்பட்ட மாற்ங்களுக்கு வழி வகுத்தது.... ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் மிடையில் மீண்டும் போறேற்படக்கூடிய நிலையே 1875 வரைக்கும், ஜரோப்பிய சமாதானத்திற்குப் பங்கத்தை உண்டாக்கும்போற்தெரிந்தது இதன் பின்னர் ஜேர்மனியின் பாதுகாப்பிற்கெனப் "பிஸ்மாக்கினால்" வகுக்கப்பட்டபோதும் இறுதியில் எல்லா ஐரோப்பிய நாடுகளையும் போரிற்பங்குகொள்ளச் செய்து  கூட்டணி முறைகள், இராயதந்திர அடிப்படையில் ஆறு வல்லரசுகளையும் பாதித்தன. இதன் பின்னர் ஆறு வல்லரசுகளும் நாசூக்கான முறையில் கூட்டணி வகுக்கத்துவங்கின பிரான்சிலிருந்து ஜேர்மனியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு இந்த இராயத்ந்திர முறையை மேற்கொண்டது பிஸ்மாக்கின் கொள்கை ஈற்றில் எல்லா வல்லரசுகளையும் போரில் ஈடுபடக் செய்தது.

பிரான்சு திறமைசாலியான தியர்சின் ஆட்சியில் மீண்டும் வலுப்பெற்றது வேற்று  நாட்டின் உதவியில்லாதமையினாலேயே 1870  இல் பிரான்சு படுதோல்வியடைந்ததென்பதை நன்குணர்ந்து தியர்ஸ் சர்வதேச அரங்கில் பிரன்ன்ஸ் தனிப்பட்ட நிலையை ஒழிக்க முயச்சி செய்தான் எனவே பிஸ்மாக் வேற்று நாடுகளிலிருந்து   பிரித்து பிரான்சைத் தனிமைப் படுதுவதற்கான முயற்சியில் இடுபட்டான். பிரித்தானிய வேறு நாடுகளுடன் இராணுவ உடன்படிக்கை செய்வதில் ஆர்வம் காட்டதபாடியல் பிஸ்மாக் 1815  இல் பரம்பர முடியாட்சிய முறையைப் பதுகப்பதர்கேனத் தோன்றிய இரசியா, ஜேர்மனி, ஓஸ்திரியா , ஹங்கேரி ஆகிய மூன்று வட  வல்லரசுகளின் பழைய கூட்டு முன்னணியை மீண்டும் அமைப்பதிர்ற்கு கவனஞ் செலுத்தினான் இக் கூட்டனியே "பரிசுத்தக்கூட்டனி"  என்ற பெயரால் 1815  இல் முதன் முதல் தோன்றியது 1848-1849  ஆண்டின் நிகழ்ச்சிகளினால் இம்மூன்று அரசுகளின் கூட்டுறவானது பலவீனமடைந்தபோதும் தன் காலத்துச் சூழ்நிலையில் அதை மீண்டும் அமைக்கலாமென்று பிஸ்மார்க் கருதினான் ஓஸ்திரியா, ரஷ்யா ஆகிய நாடுகளும் உடன்பட்டன. 1870  இன் பின்னர் ஜேர்மனியில் மீண்டும் ஆதிக்கம் பெறுவதும் பிரான்ஸிஸ் ஜோசெப் உணர்ந்தார்  மகியரினத்துப் பேரு குடிமகனான ஒச்திரிய அயல்நாட்டு அமைச்சர் அந்திரிசிப் பிரபு இரசியாவிற்குகெதிராக ஜேர்மனியின் உதவியை பெற விரும்பினான் இரசியாப் பேரரசனாகிய இரண்டாம் அலெக்ஸாந்தர் பரம்பரை முடியாட்சியின் சிறப்பினை நிலைநாட்டுவதற்க்கப்  பரம்பரை முடியாட்சி நாடுகளிடையே  கூட்டுறவு ஏற்படுத்தவிரும்பினான் அத்துடன் தனக்கெதிராக ஏற்பட்ட ஓஸ்திரியா ஜேர்மன் உறவிற்கஞ்ச்சியமையாலும் ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்து கொள்ள விருப்பங்கொண்டான் . போல்கன் நாடுகளிலும் இரசியாவிற்கும் ஒச்திரியாவிற்கும் போட்டியேற்பட்டதல் "முப்பேரரசணி"  வழியாகவே ஜேர்மனியோடு மற்றிரு வல்லரசுகளும் இனங்கலாமென பிஸ்மார்க் கருத்தினான். எனவே 1873  இல் அவன் ஏற்படுத்திய முப்பேரரசரணி உருதியுடையாதயிருக்கவில்லை அது மாற்றத்திற்கு இடமளிக்காத அரசியற்தத்துவங்களையும் ஜரோப்பிய சமதனங்களையும் பேணுவதற்கென்ற அமைக்கப்பட்ட பொழுதிலும் மேற்கிற் பிரச்சினை வேறு வல்லரசுகளோடு சேராது  தனிப்படுத்துவதையும் கிழக்கிற் போல்கன் நாடுகள் காரணமாக ஓஸ்திரியா இரசியாப் போட்டிஏற்படாது தடை செய்வதையுமே தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தது. அது கிழக்கிலோ மேற்கிலோ தோன்றுந் தீவிர எதிர்ப்புகளை நிர்வகிக்கக் கூடிய இயல்பினை பெற்றிராத பொழுதிலும்  ஜேர்மனியின் தற்காலிக நோக்கங்களை யடைவதற்குச் சிறந்த சாதனமாகப் பயன்பட்டது.     (தொடரும்....) 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}