கமரூனின் அவதார் அவதாரம்


 அவதார் 2   

ஜேம்ஸ் கமரூன்
ஜெமேஸ் கமரூன் கூகிள் அதிகாரிகள் சிலருடன் இணைந்து மண்வெட்டியுடன் ஒரு செயற்திட்டத்தில் இறங்கியுள்ளார். விண்வெளியில் கனியங்களை தொண்டுவது குறித்து ஆராய்ச்சி செய்வதே இந்த திட்டத்தின் குறிக்கோள். Planetary Resources Inc. என்ற நிறுவனமே ஜேம்ஸ் கமரூன், மற்றும் கூகிள் CEO லர்ரி பேஜ், செயற்திட்ட அதிகாரி எரிக் ஸிச்மிட் இவர்களுடன் இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. “இயற்கை வளப் பயன்பாடு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய இரண்டு துறைகளையும் இணைத்து உலகளவிலான மனிதவளத்தை மேம்படுத்துவதே நமது நோக்கம்.” என்று தனது திட்டப்பிரேரணையை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். மனிதகுலத்துக்கு நன்மை செய்வதே திட்டத்தின் நோக்கம் என்றும், விரிவான திட்டமானது சியாட்டிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள மாநாட்டில் வெளியிடப்படுமென்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

ராம் ஸ்ரீராம்
இத்திட்டத்தில் கமரூனுடன் Planetary Resources Inc. நிறுவனத்தின் நிறுவனர்கள் எரிக் ஆண்டர்சன் ( former NASA Mars Mission Manager) மற்றும் பீற்றர் டயமாண்டிஸ் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். திட்டத்துக்கு முன்னாள் மைக்ரோசொப்ட் பணிப்பாளர் சார்ல்ஸ் சிமோனி, கூகிள் இயக்குனர்களில் ஒருவரான
க. ராம் ஸ்ரீராம்
, மற்றும் ரோஸ் பெரோட் ஆகியோர் நிதியுதவி செய்கின்றனர்.

செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையிலான கோளப்போலிகளில் கனியங்களைப் பிரித்தெடுக்க முடியுமா என்பதுபற்றியே ஆராய்ச்சி இருக்கும். மேலும், நீண்டகாலத் திட்டமான இதில், ஏனைய கோள்களிலிருந்து கனியங்களை மனிதப்பயன்பாட்டுக்கு கொண்டுவருவது பற்றியும் ஆராயப்படும். (அவதார் கதை மாதிரி போகிறதா? இப்போது புரிகிறதா ஏன் இங்கே கமேரூன் வருகிறார் என்று? ஆங்கிலப் படம் எடுத்தால் அதை வைத்து ஆராய்ச்சி தொடங்குகிறார்கள், தமிழ்ப் படம் எடுத்தால் அடுத்ததாக கட்சி தொடங்குகிறார்கள்.)

 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}