பெயர்கள்: உட்கார்ந்து யோசித்தவை.அப்பிள்:
ஸ்டீவ் ஜொப்ஸின் மனங்கவர்ந்த கனியாம் அப்பிள்.
CISCO:
இது ஒரு சுருக்கப்பெயர் இல்லை. ஸன் ஃபிரான்ஸிஸ்கோ வின் வால்தான் ஸிஸ்கோ.
COREL:
ஸ்தாபகர் பெயர் மிச்சேயில் கௌப்லன்ட். COwpland REsearch Laboratory.

GOOGLE:
googol என்றால் பத்தின் நூறாம் அடுக்கு. அந்தளவு எண்ணிக்கையான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகக் காட்டத்தான் ஸ்தாபகர்கள் ஸேர்கேய் ப்ரின் மற்றும் லர்ரி பெய்ஜ் அப்பெயரை வைத்தார்கள். துரதிர்ஷ்டவசமாக ஒரு spelling mistake.
HOTMAIL:
ஜக் ஸ்மித் mail என்று முடியும் நிறைய பெயர்களை முயன்றுபார்த்தார். கடைசியில் அந்த eMail பக்கத்தை எழுதப் பயன்பட்ட HTML language இன் பெயரைத் தன்னகத்தே கொண்ட HoTMaiL தெரிவானது.
HP:
ஸ்தாபகர்கள் Hewlett & Packard தம் நிறுவனத்துக்கு HP என பெயர் வைப்பதா, PH என பெயர் வைப்பதா என்று பூவா, தலையா போட்டுப் பார்த்தார்கள்.

SONY:
sonus என்ற லத்தீன் சொல் ஒலியைக்குறிக்கும். sonny என்ற சொல் அமெரிக்காவில் துடிதுடிப்பான இளைஞர்களைக் குறிக்கும்.
YAHOO:
YAHOO! என்ற பெயர் சந்தோஷத்தில் கத்தும் ஒலியைக்குறிக்குமென்பதற்காக அது தெரிவுசெய்யப்படவில்லை. yahoo என்றால் அருவருப்பானவர், காட்டுமிராண்டி என்று அர்த்தம். ஸ்தாபகர்கள் ஜெர்ரி  யங்கும் டேவிட் ஃபிலோவும் தங்களை யாகூக்களாக எண்ணிக்கொண்டார்கள்.

FACEBOOK:
மார்க் ஸக்கர்பேர்க்கின் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பேராசிரியர்களைப்பற்றிய கையேட்டின் பெயர்.

வெங்காயம்:

இதுவேதான், இங்கேயேதான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}