நீயா நானா கோபிநாத்தும் அவர்மீதான குற்றச்சாட்டுக்களும்(பதிவு சற்று நீண்டு விட்டது மூச்சை நன்றாக உள் இழுத்துக்கொண்டு வாசிக்கவும் )
நீயா நானா விஜய் டிவி யின் ஸ்டார் நிகழ்ச்சி. கோபிநாத் விஜய் டிவியின் ஒரு முக்கியமான ஸ்டார் என்பதை விட விஜய் டிவிக்கு அவர் ஒரு ஸ்டார் என்றும் கூறலாம் விஜய் டிவி இல் நடந்து கொண்டிருக்கும் நீயா நானா மிக பிரபலமான ஷோ நீங்களும் பார்த்திருப்பீர்கள் காரசாரமான விவாதங்கள் அங்கு நடைபெறும்...... பொதுவான நம்பிக்கைகள்  கருத்துக்கள் சமூக பார்வைகள் என பல விடயங்களை அங்கு கோபிநாத்  சபையோரிடம் பிரித்து மேய்ந்துகொண்டிருப்பார் ...கோபிநாத் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் "நீயா நானா கோபிநாத்"என்று அழைக்கப்படுகிறார் என்றால் நிகழ்ச்சி எவ்வளவுக்கு மக்களிடம் சென்றடைந்திருக்கிறது என்று புரிந்திருக்கும் ...இவரது மற்றைய  பிரபலமான ஷோ நடந்தது என்ன ?
இவற்றுக்கு முன் இவர் "மக்கள் யார்பக்கம் ?" "சிகரம் தொட்ட மனிதர்கள் "போன்ற நிகழ்சிகளை வழங்கிக்கொண்டிருந்தார்
கோபிநாத் 1975 ஜூலை 4 இல் பிறந்தார் தந்தை பெயர் சந்திரன் அறந்தாங்கியை சேர்ந்தவர்  இவர் பல புத்தகங்களையும்  எழுதியிருக்கிறார்
<        இவர் வாங்கிய விருதுகள்


Young Achiever award by India Today magazine (2007)
Best Anchor of the State by Anantha Vikatan (2007,2008)
Outstanding Young Indian by JCI (2008)

அழைப்புக்கள்

Invited for the International Health Conference, Sydney (2007)
American Government invitation to participate in International Visitors’ Programme (2004)இவர் தனது பாடசாலை பருவத்தில் வித்தியாசமானவராக இருந்தார் பாடசாலையில் நன்றாக கல்வி கற்பார் அனால் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற மாட்டார்...இந்த துரதிஷ்டம்  அவரது +2 வரை சென்றது ..இதனால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கனவாகவே போய் விட்டது ..அதைவிட அவருக்கு MBA கற்கவேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார் அதுவும் ஈடேற வில்லை ...வீட்டில் நன்றாகத்தான் கோபிநாத்தை கவனித்தார்கள் ...ஆனால் தனது செலவிற்கான பணத்தை தெரு தெருவாக  துணிகளை விற்பதன் மூலம் பெற்றுக்கொண்டார் இவருக்கு துணிகளை கொடுப்பவர்கள்  இவரது BBA சேர்டிபிகட் கலை வாங்கிக்கொண்டுதான் கோபிநாத்துக்கு  துணிகளை வழங்கினார்கள் ....இவர் இவ்வாறு துணிகளை விற்று பணம் சம்பாதிக்கின்றார் என்பது அவரது வீட்டினருக்கு தெரியாது ..ஒரு நாள் இவர் துணி விற்கும் சமயம் இவரது சகோதரன் பார்த்துவிட்டார் அவரால் கோபிநாத் இப்படி துணிகளை விற்றுக்கொண்டிருப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை ...அழுதுவிட்டார் அவர் ..மீடியா இவருக்கு மிகவும் பிடித்திருந்தது அவரது நண்பர்கள் சூழல் எல்லாமே அவரிற்கு மீடியா பற்றிய தூண்டல்களை வழங்கிக்கொண்டிருந்தன ....இவருக்கு கனவுகள் வருமாம் தான் உயர்ந்த இடத்தில் பிரபலமாக இருப்பதாகவும் ...வரவேற்புக்கள் மரியாதைகள் எல்லாம் கிடைப்பது போலவும் ..கனவுகள் தொடருமாம் ...தான் இப்படி ஒரு இடத்தை அடைவேன் என உறுதியாக நம்பியதாக குறிப்பிடுகிறார் கோபிநாத் ....இவரது முன்னேற்றத்திற்கு மிகவும் பலமாக இருந்தவர் இவரது தந்தை சந்திரன் ...இவருக்கு மிகவும் கடினப்பட்டு வேலை வாங்கி கொடுத்திருக்கிறார் ...ஆனால் கோபிநாத்தால் அவ்வேலையில் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியவில்லை ...
"நான் குமாஸ்தா வேலைக்கு தயாரிக்கப்பட்டவன் அல்ல ..எனது கனவுகள் வேறு .......ஓட வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது "என்று கடிதம் எழுதிவிட்டு வேலையையே விட்டுவிட்டார் ....இவரை சகலரும் திட்டினார்கள் ...இவரது குடும்பமும் அப்பொழுது சிறிய அளவில் கஷ்டப்பட்டிருந்த சமயந்தான் கோபிநாத் வேலையை விட்டிருந்தார் ....ஒருவர் விடாமல் திட்டினாலும் ஒரே ஒருவர் மட்டும் இவருக்கு துணை நின்றார் இவரது தந்தை சந்திரன்..... இவர் கடிதம் அனுப்பிய சமயம் அவரது தந்தை "இது கனவுகளுக்கு பின்னால் ஓட வேண்டிய உலகம் உன் கனவுகளை எந்த நெருக்கடிக்ககாகவும் காயப்படுத்தாதே..." இது கோபிநாத்தை மிகவும் தூக்கிநிறுத்திய வார்த்தைகள்... தனது புத்தகத்தை தனது தந்தைக்க சமர்ப்பணம் செய்திருந்தார் பின்வரும் வசனங்களுடன்


 "என்னையும் என் தன்னம்பிக்கையையும் என்னை விட அதிகமாக நம்பும் எனது அப்பாவிற்கு சமர்ப்பணம் "

நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சியில் ...கோபிநாத்தின் ..உரையாடல் ....

கோபிநாத் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்

காதில் வைத்திருக்கும் ரிசீவர் மூலமாகவே முடிவுகள் ,கேள்விகள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார் சுயமாக இவர் பேசுவதில்லை.
நாடக பாணியில் முன்பே சொல்லி வைத்தது மாதிரி நிகழ்ச்சி நடை பெறுவதாக தோன்றுகிறது.
மற்றவர்கள் பேசும்போது கோபிநாத் குறுக்கிடுகின்றார்....
எல்லோருக்கும் பேசுவதற்கு சந்தர்ப்பங்களை வழங்குவதில்லை ....
கோபிநாத்தின் mannerism தில்  superiority காம்ப்ளெக்ஸ் அதிகமாக  இருக்கின்றது.

இப்படி கோபிநாத்தின் மீது குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகின்றார்கள் ..இணையத்தளங்களில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகமாக உலா வர தொடக்கி உள்ளன ....இதற்கெல்லாம் காரணமாக  என்னால் வைக்கப்படும் முதல்விடயம் இவற்றினூடாக தாம் பிரபலமடைய முயற்சி செய்தல் இது ஒருவித மன நோய் போல் ஆகிவிட்டது ...உதாரணமாக 'einstein was wrong' என்றதும் அதிர்ச்சியுடன் அதிகமாக அவ்விடயம் பேசப்படுதல்....
அடுத்த விடயம் இவ்வாறான பதிவுகளுக்கு ஆதரவு முன்னணி நட்சத்திரத்தின் விசிறிகள் ...அவர்களது கோபிநாத் மீதான கோபமும் ஒருவகையில் காரணம்...விடயத்திற்கு நேரடியாக வருகிறேன் அந்த முன்னணி நடிகர் விஜய் ...ஒரு நீயா நானாவில் ஒரு பெண் ஒரு நடிகரின் இப்பொழுது வரும் படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை தெரிவித்தார்

...அடுத்தநாள் பிளாஷ் நியூஸ் விஜய் டிவிக்கு பல விஜய் ரசிகர்கள் கண்டனம் ...கோபிநாத் தனது புத்திசாலித்தனமான மன்னிப்பை கேட்டு (கடந்த நீயா நானாவில் நடிகர் விஜய் பற்றிய கருத்து பலரை புண்படுத்தியது இதற்காக விஜய் டிவி தனது வருத்தத்தை பதிவு செய்கிறது )பிரச்சனை முடிந்ததுஇங்கு விஜய் பற்றிய கருத்துதான் கூறப்பட்டதே தவிர விஜயை பற்றி தனிப்பட்ட ரீதியிலோ அல்லது நடிகர் விஜய் அயல் கிரகத்தில் இருக்கவேண்டிய ஜந்து என்றோ கூறவில்லை அப்படி கூறினால் ரசிகர்கள் கோப படுவதில்  அர்த்தம் இருக்கின்றது( காரணம் ஒரு ரசிகனின் மிக முக்கிய பணிகளில் அதுவும் ஒன்று ) ஆனால் அப்பெண் கூறியது ஒரு கருத்து மட்டுமே.... அதையும் நாகரீகமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்.... நீயா நானா நிகழ்ச்சி ஒரு சுதந்திரமான விவாதக்களம் ...யாரும் தமது கருத்தை சுதந்திரமாக வெளியிட முடியும்... அதை விட கருத்து சுதந்திரம் யாவருக்கும் இருக்கின்றது ...கருத்துக்கூறிய பெண் நேரடியாக விஜயிடம் கூறியிருந்தால் விஜய்" உங்கள் கருத்துக்கு நன்றி நான் முயற்சி செய்கிறேன் "என்று கூறியிருப்பார் என்பது எனது நம்பிக்கை...... இதனால் தாக்கப்பட்டவர்கள் கோபிநாத்தின் இவ்வாறான எதிர்ப்புகளுக்கு கொடி பிடிக்கிறார்கள்


//காதில் வைத்திருக்கும் ரிசீவர் மூலமாகவே முடிவுகள் ,கேள்விகள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார் சுயமாக இவர் பேசுவதில்லை//

நிச்சயமாக காதில் இவ்வாறான உபகரணத்தை அணிந்து கொண்டு களத்தில் சமாளிக்க முடியாது அவ்வாறு முயற்சி செய்தால் அரங்கில் உள்ளோர் ,நிகழ்ச்சி நடத்துபவர் இருவரது கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இருக்காது ..சபையில் அதுவும் நீயா நானா மேடையில் கோபிநாத் அரங்கில் பேசுபவர்களை கவனித்தால்தான் விடயங்களை புரிந்து கொண்டு நிகழ்ச்சியை தொடர்பு அறுபடாமல் கொண்டு செல்ல முடியும் ..கோபிநாத்தின் காதில் ஒருவர் எந்தநேரமும் நிகழ்ச்சி எவ்வாறு நடைபெறவேண்டும் என்று சொல்லியவாறு இருந்தால் கோபிநாத்தால் கவனிக்கவும் முடியாது காதில் சொல்லியவரின் கூற்றிற்கு ஏற்ப பேசுபவரை இடையில் நிறுத்தவும்  முடியாது ...


//நாடக பாணியில் முன்பே சொல்லி வைத்தது மாதிரி நிகழ்ச்சி நடை பெறுவதாக தோன்றுகிறது//

வருபவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கு 100 ரூபா கொடுத்து பேசுவதற்கு இது கட்சிக் கூட்டமல்ல...பேச வருபவர்கள் தாம் என்ன பேசப்போகிறோம் என்று எழுத்திகொடுக்க மாட்டார்கள் ....


//கோபிநாத்தின் mannerism தில்  superiority காம்ப்ளெக்ஸ் அதிகமாக  இருக்கின்றது//
இவ்வாறான மாற்றுக்கருத்துக்களுடன் கூடிய சமூகவியல் மாற்றங்களை கொண்டுவர முயற்சி செய்யும் நிகழ்ச்சியை நடத்துபவர் அரங்கில் ஒருவர்  concomitant என்றதும்  அண்ணாத்த என்னது ?என்று கேட்டால்

யாருக்குத்தான்  நிகழ்ச்சி தொகுப்பாளரில் நம்பிக்கை வரும் ?அவரது தீர்ப்பை எவ்வாறு  

ஏற்றுக்கொள்வர்கள் ...இதற்காகத்தான் கோபிநாத் சபையில் உள்ள ஒரு

சிலரை விட விடயங்கள் சில குறைவாக தெரிந்தாலும் எல்லோரையும் 

விட தனக்கு அதிகம் தெரியும் என்ற உணர்வை ஏற்படுத்தவேண்டி 

இருக்கிறது ....உண்மையில் கோபிநாத் தனக்கு தெரியாத விடயங்கள் பேசப்பட்டால் என்ன செய்வது என்று ஒரு கலக்கத்துடனேயே நடத்திக்கொண்டிருப்பார் ...காரணம் நிகழ்ச்சியின் தலைப்புடன்  ஒரு துறையில் அதிக வருடங்கள் அனுபவமுள்ளவர்கள் நீண்டகாலம் பணி புரிந்தவர்களும் வருவார்கள் ஆனால் அவற்றை பற்றிய புத்தக அறிவு மட்டுமே கோபிநாத்திடம் இருக்கும் ....


//மற்றவர்கள் பேசும்போது கோபிநாத் குறுக்கிடுகின்றார்....
எல்லோருக்கும் பேசுவதற்கு சந்தர்ப்பங்களை வழங்குவதில்லை ....//

இவ்வாறான நிகழ்ச்சிகளில் முக்கிய பிரச்சனையாக இருப்பது நிகழ்ச்சியை குறித்த தலைப்பின் விடயங்களை விட்டு வேறு விடயத்திற்கு செல்லாமல் கொண்டு செல்வது பலசமயங்களில் பலர் இவ்வாறு எங்கோ தொடங்கி எங்கோ முடித்து விடுவார்கள் ...இதை சரி செய்வது கோபிநாத்தின் கையில் உள்ளது ...அதை விட ஒருவர் அரை மணித்தியாலம் பேசினால் நிகழ்ச்சி அவருடனே முடிக்க வேண்டியதுதான் இல்லாவிட்டால் நாடக பாணியில் "தொடரும்" என்று போட வேண்டியதுதான்...முடிந்த அளவில் சுருக்கமாக விடயங்களை எல்லோராலும் பேச முடிவதில்லை  இவ்வாறானவர்களை  ஒரு அளவிற்குமேல் நிறுத்தினால்தான் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் ..

// கோர்ட் போட்டுகிட்டு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற நினைப்பில் பேசுகிறார் //


கோபிநாத் பேசிய வார்த்தைகள் .....
"ஒரு மரபு எப்படி அழிகின்றது ..ஆதிக்க சக்தியின் நோக்கம் என்னவோ அதன் படி நாம் மற்றப் படுகின்றோம் ...இந்த கோர்ட் உட்பட அதுதான் இன்றுவரைக்கும் இந்த கோர்ட் உட்பட எல்லாம் அதுதான் இத போட்டுகிட்டு பேசினா அவன் சொல்லுறது சரியாத்தான் இருக்கும் என்கின்ற அபிப்பிராயம் இருக்கிறது ..இதயே நான் வேட்டியை கட்டிக்கொண்டு பேசினால் என்னத்த இவன் பெசரப்புல ? அதே கோபிநாத்தான் கோர்ட் போட்டுகிட்டு பேசுற கோபிநாத் ரொம்ப புத்திசாலி என்று நம்புகிற அதே சமூகம் வேட்டிகட்டிக்கொண்டு பேசும்போது கொஞ்சம் சந்தேகத்துடனேயே பார்க்கின்றது ....அடுத்து நீயா நானாவில் அதிகம் எதிர்ப்பை கிளப்பிய விடயம் தாலி பற்றிய விவாதங்கள் ....
.இது நடைபெற்றதன் பின்பு கோபிநாத் "இதே போல் சில நேரங்களில் மக்களது நீண்டகால நமிபிக்கைகள் செண்டிமெண்ட்கள் போன்றவற்றை தாக்கும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து விடுகிறார்கள் என்றும் கருத்துக்கள் பதிவு செய்திருக்கிறார்கள் குறிப்பாக தாலி சம்பந்தமான விடயத்தில் மனம்வருந்தும் படியாக சில கருத்துக்கள் தெரிவித்திருந்தர்கள் பல்வேறுவிதமான கருத்துக்களோடு மன உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் மேடையில் சில நேரங்களில் இது போன்ற கருத்துக்கள் வந்துவிடுகின்றன அனால் இந்த நிகழ்ச்சி யாரையும் காயப்படுத்தும் வகையிலோ காழ்புணர்ச்சியிலோ நடத்தப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் "என்று தமது குழுவின் சார்பில் மன்னிப்பு கேட்டிருந்தார் ...ஒரு பெண்ணுக்கு தாலி என்பது அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது 

என்பதற்கான ஒரு அடையாளம். அவ்வளவே. அதை அவளுக்கு 

தேவைப்படும்பொது  

அணிவதும், அவசியமென்றால் கழற்றுவதும் அவளின் விருப்பம். தாலி 

என்கிற அடையாளத்தை

 உணர்ச்சிபூர்வமாக பார்ப்பதே முட்டாள்தனமானது. பழந்தமிழர் 

வழக்கத்தில் திருமணத்தின் 

அடையாளமாக ஆணுக்கு மெட்டி அணிவதும், பெண்ணுக்கு தாலி 

அணிவதும் இருந்தது. காலம்

 ஆணை ஆதிக்கப் பாலினமாக மாற்ற, மெட்டியும் பெண்ணின் காலுக்கு 

மாற, ஆணினம் 

சுதந்திரமாக, தலைமுதல் கால்வரை (வயிறு உட்பட) கல்யாண 

அடையாளங்களை சுமக்கும் 

பலகையானாள் பெண். 

அன்றைய நிகழ்ச்சியின்போது தாலியை கழற்ற துணிவு உள்ளதா என்ற 

சவாலை 

ஏற்றுக்கொண்டு தனது வாதத்தை வலிமைப்படுத்த அந்தப் பெண்மணி 

தனது தாலியை 

கழற்றினார். அது வெறும் ஒரு கண நிகழ்ச்சி. அதில் வாதிக்க 

ஒன்றுமில்லை.அத்துடன் அவர் நிகழ்ச்சிக்கு வரும்பொழுது தாலியுடனேயே 

வந்துள்ளார்ஒருவேளை அவர் 


எக்காலமுமே தாலி அணியமாட்டேன் என்று வாதிட்டால், அதைப்பற்றி 

குழம்பலாம்.ஒரு 

மூதாட்டி, பழைய பல்லவிகளை பாடாமல், தாலி என்பதை வெறும் ஒரு 

அடையாளமாய் 

மட்டுமே பார்த்து, சபையின் விமர்சனங்களுக்கு அஞ்சாமல், 

கேட்டுக்கொண்டிருக்கும்போதே 

கழற்றி காட்டியது அவரது முற்போக்குத்தனம். பெரியார் பிறந்த மண்ணில் 

வாழ அவருக்கு உள்ள

 தகுதி. அதற்கு பரிசு கொடுத்தது கோபிநாத் செய்த ஒரு ஊக்குவிப்பு. தாலி 

என்பது உண்மையில் 

வலிமையானதாக இருக்குமானால், தாலியை தெய்வமாக வழிபட்டு, அதை 

உயிர் போனாலும்

கழற்றாது, பூசித்து பாதுகாக்கும் பெண்களின் கணவர்கள் எப்படி 

இறக்கிறார்கள்??இதே கோபிநாத்தான் "நமது தனிப்பட்ட அடையாளத்தை 

இழந்துவருகிறோம் நாம் தயிர் சாதத்தை ஒதுக்கி விட்டு பிய்சா 

உண்கின்றோம் அனால் மேலைத்தேயத்தவர் பிய்சா  வை ஒதுக்கி 

வைத்துவிட்டு தயிர் சாதத்தை உண்ண மாட்டார்கள் அவர்களுடைய 

அடையாளங்களில் அவர்கள் தெளிவாகத்தான் உள்ளார்கள் என்றார் 

....இதனால் கூற வருவது இது எமது எமக்கே உரிய ஒரு தனியான  

அடையாளம் என்றவகையில் 

அதற்குரிய மதிப்பு போதுமானது அதை மிகைப்படுத்த வேண்டிய 

அவசியமில்லை ....

//நீயா நானாவில் பங்கேற்ற ஒருவர் தான் யூகேவில் இருந்தபோது ஒரு பெண்னை காதலித்ததாகவும், பின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கினங்க அந்தப்பெண்ணை கைவிட்டு விட்டதாகவும் சொல்கிறார். அப்போதெல்லாம், குறுக்கிட்டு எதிர் கேள்வி கேட்காத கோபி...அதே கருத்தை இன்னொருவர் சொன்னதும் இடையிடையே குறுக்கிட்டு கேள்விக்கணைகளை அள்ளி வீசுகிறார். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களிடமும் அதைப்பற்றி கருத்துகேட்கிறார்.... பார்வையாளர்களும் அதை தேசிய குற்றமாக கருதி தவறென்று ஜால்ரா தட்டுகிறார்கள்.
யூகே-யில் இருப்பவன் செய்தால் சரியாம்... நம் ஆளுங்க செய்தால் தப்பாம்... நல்லாருக்குடா உங்க நீதி?...//

யூகே, யூஎஸ் போன்ற மேற்கத்திய  நாடுகளில் வாழ்பவர்கள் களுக்கு கலாச்சாரம் என்பது வேறு . காதலிப்பதும். படுத்து எழுந்திருப்பதும், காரியம் முடிந்ததும் கை விடுவதும் அங்கு சகஜம் ஆனால் எமது  கலாச்சாரம் அப்படியில்லை...ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரத்தில் அது குற்றம்தான்  அந்த யூகே வாசி பேசியபோது வாயை "மூடிக்கிட்டு " இருந்து விட்டு, நம் தமிழ் நாட்டுவாசி பேசும்போது மட்டும் அவர் கொதிப்படைந்தது நம் கலாச்சாரத்திற்காக .....
ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டியது ....

அழகு என்பதும் முக்கியமான விடயம் தான் என்று சமூக அமைப்பு சொல்லிகொடுத்திருக்கிறது அழகாக இருக்க வேண்டும் என்பதை கொஞ்சம் அன்னியப்படுத்தியே எமது சமூகம் சொல்லி வந்துள்ளது இதை உலக அரசியல் அழகுத்தளம் சரியாக பயன்படுத்திக்கொண்டது அழகுசதனங்களுக்கு குறைந்தது 60 கோடி வாடிக்கையாளர்கள்  இந்தியாவில் இருக்கின்றார்கள் திடீர் என்று அழகுசாதன விளம்பரங்களில் உதித்தார்கள் அழகிகள் சுஸ்மிதாசன் ஐஸ்வர்யாராய்  போன்றோர் அதுவரை எங்கள் வீட்டில் அழகிகள் இல்லையா என்ன ?உங்களுடைய அம்மா என்னுடைய அம்மா உங்களுட்டைய அக்கா,சகோதரிகள் எல்லோரும் அழகாகத்தான் இருந்திருக்கிறோம் உங்களுக்கு அழகு என்றால் என்ன என்ற புரிதலை ஏற்படுத்துவதற்கு பதிலாக  புதிதாக ஏற்பட்டிருக்க கூடிய பொருளாதார சித்தாந்தம் அழகென்றால்  இதுதான் என்று ஒரு வரை படத்தை உங்கள் முன்னால் வைத்திருப்பதுதான் வருத்தத்திற்குரிய விடயம் ரொம்ப அழகாக உங்களுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத உருவத்தை முன்வைக்கிறார்கள் ஏன் அப்படி முன்வைக்கிறார்கள் என்றால் அப்படி முன்வைத்தால் தான் நீங்கள் அதை நோக்கி ஓட முடியும் உங்களை போன்ற ஒரு சக மனிசியை முன் வைத்தல் இதுதானே நான் நான் ஏன் அதை நோக்கி ஓட வேண்டும் 
உங்களுக்கு பொருத்தமில்லாத இன்னும்  சொன்னால் இந்திய பெரும்பான்மை சமூகத்திற்கு பொருத்தமில்லாத உடல் வடிவமைப்பும் முக வடிவமைப்பும் நிற வடிவமைப்பும் மேலை நாடுகளால் உருவாக்கப்பட்டு அது படமாக்கப்பட்டு உங்கள் கண்முன்னால் தொடர்ந்து திணிக்க படுகின்றது 
நமக்கு ஏற்ற  விதமாக மாறி  இருக்க கூடிய அழகின் அரசியலை கையாளுங்கள் 


நம்ம பசங்களுக்ககாக கோபிநாத் செய்த உதவி ...(இதற்கான வீடியோ யு டியுப் இல் கண்டுபிடிக்க முடியவில்லை ...நீங்கள் கண்டுபிடித்தால் அறியத்தாருங்கள் )

"பொண்ணுங்க ஒரு விடயத்தை புரிஞ்சுக்கணும் வாரணமாயிரம் படத்தில வர்ற மாதிரி உங்க லவர் உங்ககிட்டவந்து மாலினி நீ ரொம்ப அழகு இன்னு சொல்லி ஐ லவ் யு எண்டு சொல்லுவார் என்று நினைக்க கூடாது லவ் பண்ற பையன் தான் லவ் பண்ற பொண்ணுக்கு கிட்டவே வர பயபடுவான் கை கால் உதறும் பேச்சு வராது தன் லவ் தோத்திட கூடாது என்கிற பயம் அந்த பையனுக்கு இருக்கும் படத்தில மட்டும்தான் நீங்க நினைக்கிற மாதிரி லவ்ஐ சொல்ல முடியும்"

Neeya Naana Why Boys Reject to Marry City Girls Part1
Neeya Naana Why Boys Reject to Marry City Girls Part2


Vaastu Shastra
NEW YEAR SPECIAL


BOYS VS GIRLS
அண்மையில் நடைபெற்ற  கொபினாத் vs பவர் நிகழ்ச்சியில் கோபினாத் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஈரொட்டில் பெருந்துறை என்னுமூரில் கல்லூரி ஆண்டு விழாவிற்கு கோபினாத்தை அழைத்திருந்தார்களாம் இதற்கு கோபினாத் சில கண்டிசன்ஸ் போட்டாராம்
ஒரு மணி  நேரம் மட்டுமெ இருப்பேன் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் அதுவும் இப்பொழுதெ முழுத்தொகையும் தரவேண்டும்
சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே கொண்டு சென்று விட வேண்டும் காரில் ஏசி இருக்க வேண்டும்
பயணத்தில் சரக்கு கிகரெட் எல்லவற்றிற்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் ...வரும் வழியில் இடையிடையெ  காரை நிறுத்தி தம் தண்ணி போட்டிட்டு ஃபுல் மப்பிலதான் வந்தாராம் 

சாதாரணமான நாமே ஒரு கல்லூரி அல்லது பாடசாலைக்கு செல்லும்போது எவ்வளவு neat ஆக செல்லுவோம் என்பது நமக்கேதெரியும் அப்படியிருக்க கோபி இப்படிசெய்தார் என்று கூறுவது சற்று அபத்தமாக இருக்கிறது..இவ்வளவு தெரின்த கோபி மேடையில் வைத்து உளறினால் தனது மானம் விஜய் டி வி யின் மானம் என்பன என்ன ஆகும் என்பதை சிந்தித்திருப்பார் எனவே இவர்கள் கூறும் இச்செயல் நம்புவதற்கு சற்றுக்கடினமாக உள்ளது...தான் செல்லும் இடங்களில் யாருக்கும் பயப்படாமல் தண்ணி அடித்துவிட்டு அசராமல் மேடையில் பேசும் வல்லமை நம்ம கப்டனுக்குத்தான் இருக்கின்றது அது கோபிக்கு இல்லை இது என்ன அரசியல் மீட்டிங்காய்யா?(ஆரம்பத்தில் இவற்றை நானும் சற்று அதிர்ச்சியுடன் நம்பியிருந்தேன் பின்புதான் லாஜிக் பிடிபட்டது) கோபி இப்படிச்செய்தால் கோபியைக்கிளிப்பதற்கென்றே போட்டியிடும் மீடியாக்கூட்டங்கள் அலைந்துகொண்டிருக்கின்றன.அத்துடன் விகடன்,நக்கீரன் போன்ற பத்திரிகைகள் பார்த்துக்கொண்டா இருக்கும்? போட்டு நாறடிக்க மாட்டார்களா? ஆனால் அப்படியொன்று நடைபெறவில்லையே...
இத்துடன் இவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினார்கள் 
பவர் இருந்த இடத்தில் ரஜனியொ விஜயகாந்தொ இருந்திருந்தால் கோபியால் இப்படிக் கேட்டிருக்க முடியுமா?
ரைஸ்மில் அதிபர்,கொண்டக்டராக இருந்த  விஜயகாந்த் ரஜனியிடம்
ஏன் நீங்கள் சினிமாவுக்கு வந்தீர்கள்  உங்களிடம் என்ன கலையறிவு இருக்கின்றது என்று கேட்க முடியுமா?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி பிரபலமான ரஜனி,அரசியல் பிரபலமான விஜயகாந்த் போன்றொரை சினிமாவில் (தமது டிஆர்பிக்காக )உயர்த்தி வைத்தவர்கள் ஊடகங்கள்தான்...இவ்வாறான சந்தர்ப்பங்களில் உதாரணமாக ரஜனி விஜய் போன்றோரை எழுக்கிறார்கள் ஏதோ ஊடகங்கள் எல்லாம் இவர்களுக்கு பயந்து காலில் விழுந்ததுவிட்டது போலத்தான் இவர்களது கதை நீள்கிறது.... விஜயிடம்/ரஜனியிடம் இதே மாதிரி பவரிடம் கேட்டது மாதிரி கேட்டால் என்ன? விஜய் டி வி யை கொளுத்திவிடுவார்களா...ஏன் கொளுத்த வேண்டும்...உலகின் மிக பவரான ஆயுதம் ஊடகத்துறைதான் என்று கூறுகிரார்களே அப்படியானால் ரஜனி விஜய்யிடம் கேள்விகேட்க எந்த ஊடகத்துக்கும் தைரியம் இல்லையா?...ஒட்டு மொத்த ஊடகங்களும் ரஜனி, விஜயின் கால்களில் மண்டியிட்டு விழுந்து விட்டனவா? தனி மனிதர்களுக்காக ஏன் இவ்வளவு பயம்?...சாதாரண குடி மகனுக்கும் ரஜனி விஜய்க்கும் இடையில் பெரிய வெறுபாடு இல்லை என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?..நாம் கொடுக்கும் பணத்தில் தானே அவர்கள் மூன்று வேளை சாப்பிடுகிரார்கள்? பவர் ஃபுல்லான ஆயுதம் அணுகுண்டைவிட பவரன ஆயுதம் ஊடகத்துறை என்பது வெறும் வாய் பேச்சுதானா?


பவருக்கு நடந்தது என்ன? எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்


இந்தப்பிரச்சனையுடன் கோபினாத்தைப்போட்டுத்தள்ளுவோர் சங்கம்,கோபினாத்தை எதிர்ப்போர்சங்கம் என்று அவனவன் கிளம்பிவிட்டார்கள்....போடுங்கையா நல்லா லைக்வரும்...------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}