சாவின் சாத்தியங்கள்


 செத்துச் செத்து விளையாடுவோமா?

இந்த சாவு இருக்கிறதல்லவா சாவு,அது நமக்கு எப்படியும் வரலாம். இதோ, இந்த வலைப்பதிவை வாசிக்க தொடங்கும்போதே உங்களது கணனி திடீரென்று வெடித்து, உங்களுக்கு மோட்சம் தரலாம். நீங்கள் இருக்கும்  கதிரை விழுந்து, உங்கள் பிடரியில் அடிபட்டு, இருக்கும் கொஞ்சநஞ்ச மூளையும் சிதறி, உங்களுக்கு கபால மோட்சம் கிடைக்கலாம். என்னடா இது அபசகுனமாக ஆரம்பிக்கிறானே.. என்று அதிர்ச்சியாக இருக்கிறதா? அதேதான். அதே அதிர்ச்சியில்கூட நீங்கள் இப்போது மண்டையை போடலாம். (அவ்வாறு இறந்தவர்கள் தயவு செய்து தத்தம் இறப்புக்களை comment ஆக பதியவும்.) யார் கண்டது.. உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இறந்து, ஆவியாகத்தான் இதை வாசிக்கிறீர்களோ, என்னமோ...
சாவும் சரி, சனியும் சரி, நமக்கு எப்போது வரும் என்று தெரியாமலேதான் மற்றவர்களுக்கு வரும்போது சிரிக்கிறோம், அழுகிறோம். சாவே இல்லாதவர்கள் போல செல்வம் சேர்க்கிறோம், எதிரிகளை சேர்க்கிறோம். நாம் சாவை ஏய்த்து ஒவ்வொரு வேலையையும் செய்யும்போது நமக்குப் பின்னாலேயே நின்று சிரித்துக்கொண்டிருக்கிறது சாவு. 

சாவு நமக்கு எப்படியும் வரலாம், எந்த வயதிலும் வரலாம். (இங்கே கிளிக்கவும்.)
சாவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன - நிகழ்தகவுகள். உலகளவிலான மனிதச் சாவுகளின் நிகழ்தகவுப் பட்டியல் இதோ. உதாரணமாக, இதய நோயால் சாகும் வாய்ப்பு 1/5. என்றால், ஒவ்வொருவரும் இதய நோயால் சாகும் நிகழ்தகவு 1/5. அதாவது 20%. இதேபோல்,

# புற்றுநோய் :  1/7
# காய்ச்சல் : 1/63
# நஞ்சாதல் (விபத்து) : 1/193

அவ்வாறாக, உயிர்பிழைக்க மருத்துவமனை போய், அங்கு வேறு காரணங்களால் சாகவும் வாய்ப்புண்டு.
# மருத்துவர்களின் கவனயீனம் : 1/ 1313
# வைத்தியசாலை தொற்று : 1 / 360

விபத்து
வீதி விபத்துக்களுக்கு பெயர்போன நாடு நம்முடையது. (அண்மையில் வாகனங்களுக்கு தாறுமாறாக விலை ஏற்றியதற்கு இதுவும் ஒரு காரணம்.) இலங்கையில் 4 மணித்தியாலத்துக்கு ஒருவர் வீதி விபத்தால் இறக்கிறார்.
# வீதி விபத்துக்கள் (எல்லாவகை) : 1/87
# பாதசாரிகள் : 1/625
# கார் விபத்து : 1/260
# வான் / டிரக் : 1/1049
# பாரவூர்திகள் : 1/8441
# பேரூந்து : 1/64380
# வண்டிகள் : 1/31653
# தொடருந்து : 1/115103
# விமானம் : 1/6438


இயற்கை அனர்த்தங்கள்
# அதிக வெப்பம் : 1/8151
# அதிக குளிர் : 1/5426
# புவியதிர்ச்சி : 1/102660
# சூறாவளி : 1/4346
# வெள்ளம் : 1/316534
# சுனாமி : 1/500000
# விண்கற்கள் : 1/500000
# ஏனையவை : 1/90438


தீ
# கட்டிடங்களில் தீவிபத்து (பெரியளவு) : 1/1451
# கட்டிடங்களில் தீ (சிறியளவு) : 1/73046
# சரக்குகளில் தீ : 1/60292
# இரவில் விளக்குகளால் உடையில் தீப்பிடித்தல் : 1/633068
# ஏனைய, உடைகளில் தீ : 1/39159

மின்னல்
# மின்னல் : 1/700000

பிராணிகளால்
# நாய்க்கடி : 1/115103
# பூச்சிக்கடி : 1/422045
# நஞ்சான தாவர, விலங்குகளுடன் தொடுகை : 1/36175
# நஞ்சான பாம்பு, பல்லிகளுடன் தொடுகை : 1/542630

மூழ்குதல்
# கடற்பிரயானத்தின்போது : 1/9641
# குளியல் தொட்டியில் : 1/11042
# நீச்சல் குளத்தில் : 1/6258
# இயற்கை நீர்த்தேக்கங்களில் : 1/2370

விழுதல்
# சமதளத்தில் : 1/5442
# தளவாடங்களில் இருந்து : 1/4225
# ஏணி : 1/7963
# மாடிப்படி : 1/7963
# கட்டிடங்களில் இருந்து தவறி விழுதல் : 1/7126
# துள்ளுதல் : 1/55049

ஏனையவை
# துப்பாக்கிகளால் சுடப்படல் : 1/308
# மின்னதிர்ச்சி : 1/5007
# பட்டாசுகள் கொழுத்தும்போது : 1/615488
# கூரிய ஆயுதங்களால் தாக்கப்படல் : 1/1811
# நஞ்சு : 1/1172
# துப்பாக்கி (தவறுதலாக) : 1/17187
# நாடுகளுக்கிடையான போர் (துப்பாக்கி) : 1/11510
# போர், தாக்குதல் நடவடிக்கைகள் : 1/140682
# மரண தண்டனை : 1/70341

மிக ஆபத்தான 10 தொழில்கள்
1)மீன்பிடி : 100000 பேரில் 200 பேர் சாகிறார்கள்
2)மரம் வெட்டல் : 100000 பேரில் 68.1 பேர் சாகிறார்கள்
3)விவசாயம் : 100000 பேரில் 61.8 பேர் சாகிறார்கள்
4)கூரைவேலை : 100000 பேரில் 61.8 பேர் சாகிறார்கள்
5)விமானி : 100000 பேரில் 57.1 பேர் சாகிறார்கள்
6)இரும்பு வேலை : 100000 பேரில் 35.8 பேர் சாகிறார்கள்
7)சுகாதாரப் பணி : 100000 பேரில் 34.7 பேர் சாகிறார்கள்
8)தொழிற்சாலை : 100000 பேரில் 30.3 பேர் சாகிறார்கள்
9)ஓட்டுனர் : 100000 பேரில் 25.2 பேர் சாகிறார்கள்
10)கட்டுமானப் பணியாளர் : 100000 பேரில் 18.3 பேர் சாகிறார்கள்.

சாவுக்கு TOP 10 காரணிகள்.
1)இதய நோய்கள்
2)புற்றுநோய்
3)நரம்புநோய்கள்
4)சுவாச நோய்கள்
5)விபத்துகள்
6)அல்சைமர் நோய் (அறிவாற்றல் இழப்பு, மூளைக்குறைபாடு)
7)நீரிழிவு
8)வைரஸ் தொற்று (influensa)
9)சிறுநீரக வியாதிகள்
10)செப்டிஸீமியா

இவ்வாறாக,நாம் சாவதற்காக எத்தனையோ வலைகளை விரித்து வைத்திருக்கிறான் எமன். அப்படியானதொரு வலைதான் இந்த வலைப்பூ.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}