NOSTRADAMUS-2இதன் முதற் பாகம்(http://venkkayam.blogspot.com/2012/03/nostradamus.html )

வாழ்க்கை வெறுமையாகி நாடோடி வாழ்கை வாழ்ந்தார் இத்தாலி பிரான்ஸ் நாடுகளினூடாக 6 ஆண்டுகள் பயணம் செய்தார் அவரது மனைவியின் உறவினர்கள் வரதட்சணையாக வாங்கிய பணத்தை திருப்பித்தரும் படி அவர் மீது வழக்கு தொடுத்தனர்
1544  இல் மக்ஸ்வெல்   நகருக்கு சென்றார்  அங்கு  ப்ளேக் நோயின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது இவரது சொந்த தயாரிப்பான ரோஸ் மாத்திரை மூலம் நோயாளிகளைக் குணப்படுத்தினார்
இவரது புகழ் மீண்டும் பரவத்தொடங்கியது ராணி கத்திரின் இவரை தனது மருத்துவ  ஆலோசகராக நியமித்தார்
பின்பு இவர் ஆன் என்ற இளம் விதவைப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்
பின்பு சிறிது காலம் பிரமுகர்களுக்கு அழகு சாதனப்பொருட்கள்  தயாரித்து வழங்கினார் இவர் கிறீஸ்தவராக இருந்தாலும் பிறப்பில் ஒரு யூதர் என்று சிலர் இவரை புறக்கணிக்க தொடங்கினார்கள்
இக்காலத்தில் இவர் ஜோதிட நூல்களை அதிகமாக கற்க தொடங்கினர்
1555 இல் தனது முதல் நூலான "The prophecies" என்னும் ஆரூடத்தை வெளியிட்டார்
இந்த நூல் வெளியிடலின் பின்னர்தான் இவரது பெயரை nostredame என்பதில் இருந்து nostradamus என்று அழைத்தார்கள் இதற்கு போதிய அளவு வரவேற்பு கிடைத்ததால் மேலதிகமாக நூல்களை எழுதினார்
இதில் குறிகியகால நீண்ட கால எதிர்வு கூறல்கள் இயற்கைக்கு  அப்பாற்பட்ட விடயங்கள் என பலவற்றை குறிப்பிட்டிருந்தார்
இவரது பெயரை வைத்து பல நிறுவனங்கள் போலி ஆரூடங்களை வெளி இட்டன
தி சென்டுரீஸ் என்ற நூல் இவரது மறைவுக்கு பின்தான் வெளியிடப்பட்டது
இவரது ஆரூடங்கள் அதிக வரவேற்பை பெற்றாலும் எதிரிப்பையும் சம்பாதித்து தந்தது நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக  வழக்கு தொடரும் அளவிற்கு சிலரை இவரது ஆரூடங்கள் கொண்டு சென்றன அரச குடும்பத்தவர்களுக்கு ஜோதிடம் கணித்துக்கொடுத்தர் ஒவ்வொன்றாக நடைபெற   தொடங்கியது
இதனால் பல முக்கிய மனிதர்கள் அவரை காண வந்தார்கள் இவருடைய ஆரூடங்களுக்கு ராணி கத்தரினிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது
கத்தரின் இவற்றை படிக்கும் போது மிகுந்த ஆவலுடனும் படித்தபின்பு அவருக்கு கோபமும் வந்தது ஆனால் ராணி காத்தரினுக்கு இறுதிவரை nostradamus மீது நம்பிக்கை இருந்தது
பிற்காலத்தில் சிறந்த மருத்துவர் என்ற விருதை nostradamus இற்கு அரசி வழங்கினார் அவருக்கு ஓய்வூதியம் அளித்து 300 தங்கக்காசுகள் கொண்ட பொன் முடிப்புடன் தீர்க்கதரிசி என்ற சிறப்பு பட்டமும் கொடுத்து கௌரவித்தார்


1565 இல் nostradamus இற்கு மூட்டு உபாதைகள் ஏற்பட்டன வீட்டை விட்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது
தன்னுடைய மரணம் எப்போது நிகழும் என்பதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்தார்
அடுத்தநாள் காலை தான் இறந்துகிடப்பதை பார்க்கமுடியும் என்று ஷவிக்னியிடம் கூறியிருந்தார் அவர்கூறிய படியேதான் நடந்தது
(ஷவிக்னி -சட்டம் படித்த 30  வயது இளைஞர் இவர் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவருக்கு நல்ல எதிர்காலம் இருந்தது nostradamus  பற்றி அறிந்ததும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரின் மாணவனாகிவிட்டார்  nostradamus இன் வாழ்கையின் இறுதிவரை கூடவே இருந்தவர் )
இறந்தபின் தன்னை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை முன்பே கூறி இருந்தார் அவரின் ஆசைப்படியே அவரது உடலை செங்குத்தாக புதைத்தார்கள் 1566 ஜூலை 2 இல் மரணமடைந்தார்
அவரது கல்லறையில் "இங்கே புகழ் பெற்ற nostradamus உறங்குகின்றார் ஒரு பேனாவால் உலகத்தலையெழுத்தை விவரித்தவர் "என்று  பொறித்து வைத்தார்கள்
அவரது கல்லறையில் இழிவான யாரும் என் மீது நடந்து செல்லக்கூடாது என்று எழுதப்பட்டிருந்தது
ஆனால் பிரெஞ்சு புரட்சியின்போது சிப்பாய்கள் அவரது கல்லறையை உடைத்தார்கள் அவரது மண்டைஓட்டை எடுத்து மதுவை ஊற்றி ஒரு சிப்பாய் குடிக்கும் பொழுது ஒரு bullet அவனது தலையை துளைத்தது
இதைப் பற்றியும் தனது சென்டுரிஸ்இல் குறிப்பிட்டுள்ளார்

The man who opens the tomb when it is found
And who does not close it immediately,
Evil will come to him
That no one will be able to prove.


பின்னர் nostradamus இன் எலும்புகளை சேர்த்து வேறு இடத்தில் புதைத்தார்கள்


அவர் வாழ்ந்த காலத்தில்  nostradanus இன் பெயர் அவரது எதிர்வுகூறல்களால் எவ்வாறு எல்லோரது வாயிலும் உச்சரிக்கப்பட்டதோ அதே போல் இப்பொழுதும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}