wal-mart லஞ்சம் கொடுத்து மாட்டிய கதை -02


       சென்ற பதிவில் Wal-mart பற்றியும், Wal-mart லஞ்சம் கொடுத்த விவகாரத்தை The Newyork Times அம்பலப்படுத்தியதைப் பற்றியும் பார்த்திருந்தோம். [ சென்ற பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ] மேலும் நான் மெக்ஸிகோ சென்று அடுத்த பாகத்தை எழுதுவதாகவும் கூறியிருந்தேன் அந்த சோகக்கதையை இக் கட்டுரையின் கீழே எழுதியுள்ளேன். முதலில் இக் கட்டுரையின் விடயத்துக்கு வருவோம்.    சென்ற பதிவில் இந்த லஞ்சம் கொடுத்த விவகாரம் எப்படி வெளியே வந்தது என்று பார்ப்போமா என்று கூறியிருந்தேன். இதோ, இப்படித்தான் விவகாரம் வெளியே வந்தது....

இடம்:  மெக்ஸிகோ நகரம்    நாள்:  21 செப்டெம்பர் 2005    நேரம்: பேய்கள் உலாவும் நேரம்.  
      Ms.munich இற்கு ஒரு email வந்தது. அதை open  பண்ணி பார்த்தார். wal-mart இன் மெக்ஸிகோ கிளை சம்பந்தமாக வந்த email அது. ஒரு அனாமதேய நபர்; தான் ஒரு  walmart de mexico இன் முன்னாள் நிர்வாகி என்று அறிமுகப்படுத்தி, walmart de mexico உயர் மட்டங்களின் லஞ்ச விவகாரம் தொடர்பாக தனக்கு பல விடயங்கள் தெரியும் என்று கூறினார். 
Ms.munich  தான் walmart mexico இன் senior lawyer  ஆக அப்போது பணியாற்றி வந்தார். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் walmart இல் இணைந்திருந்தார். அதற்கு முன் அவர் லத்தீன் அமெரிக்கா, மெக்ஸிகோவில் 12 வருடங்களாக lawyer ஆக இருந்து ஊழல், லஞ்சம் என்பவற்றுக் கெதிராகப் போராடி வந்திருந்தார். எனவே தான் அந்த முன்னாள் நிர்வாகி; Ms.munich ஐ தேர்ந்தெடுத்திருந்தார் போலும். 

    பின்னர் நிகந்த மின்னஞ்சல்,நேரடி தொடர்பாடல்களில் Walmart நிறுவனத்தின் மெக்ஸிகோ கிளையை நிறுவ எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று விவரித்தார் அந்த முன்னாள் நிர்வாகி. மெக்ஸிகோவின் பலபகுகளிலும் சுப்பர் மார்கெட்களை நிறுவ நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் முடியிலிருந்து அடிவரை லஞ்சம் கொடுத்திருந்தது  Walmart. அந்த முன்னாள் நிர்வாகி லஞ்சம் பெற்றவர்களின் பெயர்கள், லஞ்சம் கொடுக்கப்பட்ட தேதி, கொடுக்கப்பட்ட தொகை என்று அத்தனை விபரங்களையும் கூறியிருந்தார். கொடுக்கப்பட்ட மொத்தத் தொகை 24 மில்லியன் டொலர்.(1991 இல் இருந்த பெறுமதி) அவருக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தது. ஏனென்றால் அவர் லஞ்சம் வழங்கப்பட்ட நாட்களில் Walmart de mexico இன் உருவாக்கம் தொடர்பான பணிகளையே கவனித்து வந்திருந்தார். { ஒருவேளை, கொடுக்கப்பட்ட லஞ்சத்தில் ஒரு பகுதியைத் தன்னால் சுருட்டிக்கொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற கடுப்பில் தான் போட்டுக் கொடுத்தாரோ தெரியவில்லை }

          இந்த விவகாரம் தொடர்பாக Oct.15,  2005 இல் Walmart இன் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்த michael duke ( தற்போதைய C.E.O)இற்கு Ms.munich அறிவித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த லஞ்ச விவகாரம் Walmart இன் உயர் அதிகாரிகளுக்குத் தெரிந்தே தான் நடைபெற்று இருந்தது. michael duke இற்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் Ms.munich உம், குறித்த அனாமதேய நிர்வாகியும் இந்த விவகாரத்தை நிறுவனத்துக்கு வெளியே கொண்டு போய் விடுவார்களோ என்ற பயத்திலும், லஞ்சம் கொடுத்து 13-14 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் இது தொடர்பாக என்னத்தைக் கண்டுபிடித்து விடப் போகிறார்கள் என்ற நம்பிக்கையிலும் உள்ளக விசாரணைக்கு சம்மதித்தது நிர்வாகம்.  


      Nov.12,2005 இல் 21 வருடங்கள் F.B.I இல் Special agent ஆக  பணியாற்றிய அனுபவம் வாய்ந்த Ronald Halter தலைமையில் இது பற்றி விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் லஞ்சம் கொடுத்தது பற்றிய ஆதாரங்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.  இவர்களோ, ஆதாரம் எதையுமே கண்டுபிடிக்க முடியாது என்று நிம்மதியாக இருக்க, அவர்களோ, 441 கணக்கில் வராத பணம் கொடுப்பு சம்பவங்களையும், அதற்கான ஆதாரங்களையும் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்கள். இதனையடுத்துத் தான் இந்த குழுவுக்குச் சனி பிடித்தது. இந்த அறிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள்; இந்தக் குழு தனது வரம்பை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடத் தொடங்கினார்கள். { இந்த வசனங்களை எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஹா ஹா நம்ம ஜாதிக ஹெல உறுமயவுக்கு இந்த வசனங்கள் தான் தாலாட்டு. இதை ஒரு நாளுக்கு நாலுமுறை என்றாலும் கூறாவிட்டால் அவர்களுக்கு நித்திரையே வராது }

         இறுதியாக, குறித்த அறிக்கை சம்பந்தமாக ஆராய Walmart ஒரு general counsel ஐ உருவாக்கியது. நான் சென்ற பதிவில் எழுதிய கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்களேயானால், நீங்கள் சட்டென்று அந்தக் குழுவில் யாரெல்லாம் இருந்திருப்பார்கள் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். yes, சாட்சாத் அந்த லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதே அதிகாரிகள் தான் அந்தக் குழுவிலும் இருந்தார்கள். அப்புறமென்ன இதன் பிறகும் கிளைமாக்ஸ் ஐ உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீங்கள் இந்தியத் தமிழ்ச் சினிமா பார்ப்பவரல்ல என்று தான் அர்த்தம். ரஸ்யத் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்காக கிளைமாக்ஸ் ஐ சொல்கிறேன். Ronald Halter இன் அறிக்கையைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டார்கள்.

           இதனால் கடுப்பாகிய Mr.Cicero நீண்ட காலம் பொறுத்திருந்த பின் Newyork Times இடம் வந்து போட்டுக்கொடுத்து விட்டார். என்னது...Mr.Cicero வா? யாரது புதிதாகக் காட்சிக்குள் வருகிறாரே என்று நினைக்கிறீர்களா?  அவர் தான் அந்த.....அந்த....அனாமதேய முன்னாள் நிர்வாகி!!! என்ன திடீரென்று இவரது பெயர் வெளியில் தெரியவந்திருக்கிறது என்று பார்க்கிறீர்களா? சூழ்நிலை அப்படி. இவர் இதுவரையும் தனது பெயரை வெளிக்காட்டிக் கொள்ளாததன் காரணம் வால்மார்ட் இன் கடுமையான நம்பிக்கைப் பொறுப்புச் சட்டம். இந்தச் சட்டம் வால்மார்ட் இல் வேலை செய்தவரின் ஆயுள் முழுவதற்கும் செல்லுபடியாகும் என்று நினைக்கிறேன். அதனால் தான் இவர் வால்மார்ட் இன் சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி விவகாரத்தை இவ்வளவு நாளும் அமுக்கி வைத்திருந்திருக்கிறார். இறுதியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று Newyork Times ஐ அணுகியிருக்கிறார்.

           Times அவரின் 15 மணித்தியால பேட்டியையும் பெற்றுள்ளது. அந்தப் பேட்டியில் அவர் எவ்வாறு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று விரிவாக விளக்கியுள்ளார். இரண்டு வெளி/கம்பனி சாராத வழக்கறிஞர்கள் மூலமாகவே லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. நகர மேர்கள், city council உறுப்பினர்கள், மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் ரொக்க உரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான 1000 க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் Times பெற்றுள்ளது. இறுதியாக கடந்த April 21 ம் திகதி விவகாரத்தை வெளியே கொண்டுவந்து விட்டது Newyork Times!
{இதனால் தான் ஊடகச் சுதந்திரம் தாராளமாக வழங்கப்பட வேண்டும் என்று நம்ம நாடுகளிலும் போராடுகிறார்கள். ஆனால் நம்மாளுகளோ நித்தியானந்  வீடியோ ஐப் பரப்புவதற்கே ஊடகச் சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். எல்லாம் தலைவிதி!! } இதனால் வால்மார்ட் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதைக் கடந்த பதிவிலேயே சொல்லி விட்டதால்  கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

      இனி நான் மெக்ஸிகோ போன கதையைச் சொல்கிறேன். பாஸ்போர்ட் இல்லாமலேயே மெக்ஸிகோ செல்லலாம் என்று ஜோதிடத்தில் கூறியதால்   கப்பலில் செல்லலாமா என்று ஜோசித்தேன். போனால் அப்புறம் மூன்று மாதத்துக்கு பதிவு கோவிந்தா. so, கெதியாகப் போகவேண்டுமே  என்ற அவசரத்தில் இந்தியாவுக்குப் படகில் போய் அக்கினி-05 ஏவுகணையில் ஏறி ஜம்மென்று உட்கார்ந்தேன். என்ன ஒரு சின்னப் பிரச்சினை என்றால் இங்கேயிருந்து மெக்ஸிகோ 15,594 km என்பதை மறந்து விட்டேன். அப்புறமென்ன மீதி 10,594 km ஐயும் நீந்திக் கடக்க வேண்டியதாப் போச்சு!!  என்ன கேட்கக் கடுப்பாயிருக்கிறதா ? இப்படிக் கடுப்பாகித்தான் மெக்ஸிகோ போலீஸ்ஸும் என்னைப் பிடித்து நாடு கடத்திவிட்டார்கள்.  so, மீண்டும் ஸ்ரீலங்கா. ஆனாலும் அவர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க சார். free யாக flight பிடித்து அனுப்பி விட்டார்கள். flight இல் சாப்பாடும் சூப்பர். இந்த இழவெடுத்த காரணத்தால் தான் 2 நாட்களில் இந்தக் கட்டுரையை எழுதுவதாக கூறிய போதும் தற்போது 6 நாட்கள் கழித்து எழுத வேண்டி இருக்கிறது. 

முற்றும். வால்மார்ட் இனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மே தினத்தை முன்னிட்டு  இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

{ஏதாவது தவறிருந்தால் அல்லது கடுப்பானவர்கள் தமது கடுப்பைத் தீர்க்க விரும்பினால் கீழே comment செய்யவும் அல்லது ஒரு விகாந்த் படம் பார்க்கவும்}

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}