நெல்சன் மண்டேலா-01

எங்கெல்லாம்  மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ  அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் போராளிகளும் கிளர்ச்சியாளர்களும் உருவாகிவிடுவதுதான் உலக சரித்திரத்தில் காலம் காலமாக நடந்து வருகின்றது. அந்த வகையில் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களால் ஒடுக்கப்பட்ட பழங்குடி கறுப்பின சமுதாயதிட்க்கு ஆதரவாக வந்து உதித்த விடிவெள்ளிகளில் நெல்சன் மண்டேலா முக்கியமானவர். நம்மில் பெரும்பாலானோர் நெல்சன் மண்டேலா பற்றி பெயரளவில் மட்டுமே அறிந்திருக்கிறோம் தவிர அவரது வரலாற்றை பெரிதாக அறிய யாருமே நினைத்ததில்லை. அந்த வகையில் நெல்சன் மண்டேலா குறித்து என்னறிவுக்கு எட்டிய வரையில் அவரது வரலாற்றை அறியத்தருவதே இத் தொடர் கட்டுரையின் நோக்கம். 

 பிறப்பும் வளர்வும் 
தென்னாபிரிக்காவில் டிரான்ஸ்கியின் [TRANSKEI ] தலைநகரான உம்டாடாவில்  வெஸோ [MVEZO ]    எனும் கிராமம் ஒன்று உள்ளது.  டிரான்ஸ்கியில்  அண்ணளவாக 35 இலட்சம் "கோசா" பழங்குடி மக்கள் வசித்து வந்தனர் . அவர்களில் ஒரு பிரிவினரே "தெம்பு" எனும் பழங்குடி மக்கள். "தெம்பு" எனும் இப்பழங்குடியினத்தில்  1918 ஆம் ஆண்டு ஆடி மாதம் 18 ஆம் திகதி "தெம்பு" மக்களின் தலைவராக இருந்த காட்லா ஹென்றி [GADLA HENRY MPHAKANYSWA] என்பவருக்கு மகனாக வெஸோவில் பிறந்தவர் தான் நெல்சன் மண்டேலா. [காட்லா ஹென்றி தெம்பு இன அரசரால் தெம்பு இனத் தலைவராக நியமிக்கப்பட்டவர் அதை விட இவர்கள் பரம்பரை அரச மரபை சார்ந்தது ஆனால் அப்போது தெம்பு இன அரசரே பிரிட்டனால் நியமிக்கப்பட்டவர் தான் எனவே அரசரும் காட்லாவும் பிரிட்டிஷாருக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டி இருந்தது ] . காட்லாவுக்கு அக்கால வழக்கப்படி 4 மனைவிகள். அதில் 3 ஆவது மனைவியின் மகனாய் பிறந்தவரே மண்டேலா. தந்தையார் மண்டேலாவிட்க்கு சூட்டிய பெயர் ரோலிலாலா மண்டேலா என்பதாகும் அக்கால பழங்குடியினரிடையே ஆண்கள் பகலில் வீடுகளில் இருக்க முடியாது எனும் ஒரு பழக்கம்  பேணப்பட்டது. எனவே மண்டேலாவும் சிறு வயதில் அதிகம் வெளியே திரிந்தவாறே இருப்பார். அதன் போது ஆடு மாடுகள் மேய்த்தவாரும் விளையாட்டுகளில் ஈடுபட்டவாறும் இருந்ததுடன் சில தட்காப்புக்கலைகளையும் கற்றார்.    மண்டேலாவின் தாயார் கிறிஸ்தவதிட்க்கு மாற அவரை தொடர்ந்து மண்டேலாவும் மாறினார். இதற்க்கு எதுவித எதிர்ப்பும் சொல்லாத தந்தையார் இவரை பாடசாலைக்கு அனுப்பவும் சம்மதித்தார். இவரின் குடும்பத்தில் முதலில் கல்வியறிவு பெற்றவர் மண்டேலாவே. அக்கிராமத்தில் பள்ளிஎன்பது ஒரு அறையை கொண்ட ஒரு கட்டிடமே அதை ஆங்கிலயர்களே  நிர்வகித்ததுடன் பாடமும் கற்பித்தார்கள். ஆங்கிலர்களை பொறுத்தவரை நிறவெறி உடையவர்களாக இருந்த அவர்கள் ஆபிரிக்க மக்கள் தமக்கென்று ஒரு அடையாளத்தை வைத்திருப்பதை விரும்பியிருக்கவில்லை. அதனால் தானோ என்னமோ பழங்குடி சிறார்கள் வைத்திருந்த ஆபிரிக்க பாணியினாலான பெயரை அழைக்காது ஆங்கில பெயர்களை இட்டு கல்வி கற்க வந்த சிறார்களை அழைத்தனர். அந்த வகையில் மண்டேலாவிட்க்கு இடப்பட்டதே நெல்சன் எனும் பெயர். பெயர்களை கூட ஆபிரிக்கர்களின்  போக்கில் அனுமதிக்கவில்லை வெள்ளையர்கள்.இதனால் தான் மண்டேலாவும் தன் பெயரான ரோலிலாலா மண்டேலா எனும் பெயரை இழந்து நெல்சன் மண்டேலா என அழைக்கப்பட்டார்..   

பள்ளிப் படிப்பை பொறுத்தவரையில் பழங்குடியினரின் பூர்வீக பெருமைகளை மறைத்து ஆங்கிலயரின் பெருமைகளே வரலாறாய் கற்பிக்கப்பட்டது. . தென் ஆபிரிக்க பழங்குடியினரிடையே காணப்பட்ட  ஒருமையை குலைத்து அவர்களை பிளவு படுத்திய ஆங்கிலர்கள் சிறார்களுக்கும் பூர்வீக பெருமைகளை போதிக்க மறுத்தனர். இதனால் பழங்குடி சிறார்கள் தம் குல பெருமையறியாதவராகவே வளர்ந்தனர்  இவ்வாறு மண்டேலாவின் வாழ்க்கை அமைந்து இருந்த போது திடீரென அவரது தந்தையாரும் மரணித்துவிட்டார். இதனால் நெல்சன் மண்டேலாவை அழைத்துக்கொண்டு புறப்பட்ட தாயார் அவரை தெம்பு இன மக்களின் அரசரான ஜோகிந்தாபா வீட்டில் தனியே விட்டு விட்டு மண்டேலாவை விட்டு விலகிவிட்டார். தந்தையையும் தாயையும் ஒருசேர பிரிந்த மண்டேலாவின் சோகத்திட்க்கு அந்த புதிய வசதியான சூழல் ஒரு மாறுதலாக அமைந்தது.  ஜோகிந்தாபா மண்டேலாமேல் பிரியம் கொண்டிருந்ததுடன் அவரை தன் பிள்ளை போன்றே நடத்தினார். மேலும் மாலை நேரங்களில் ஜோகிந்தாபா வீட்டிற்க்கு  வரும் ஊர்பெரியவர்கள் ஈடுபடும் அரசியல் விவாதங்களை மண்டேலாவும் புரிந்தும் புரியாமலும் அவதானித்து வந்தார்.  இவ்வாறு தன் 5 ஆம் வகுப்பை முடித்த மண்டேலா கிளார்க்பெரி இன்ஸ்டிடியூட் எனும், உயர் பள்ளியில்  இணைக்கப்பட்டார். 

1937 இல் தன் 19 ஆம் வயதில் இங்கு தன் கல்வியை பூர்த்தி செய்த மண்டேலா ஹில்ட்டவுன் எனும் வெஸ்லியன் கல்லூரியில் தன் உயர் கல்வியை தொடர்ந்தார். இங்கு நடந்த ஒரு சம்பவம் தான் மண்டேலாவை தன் குலப் பெருமையை மெச்ச செய்தது. இக்கல்லூரி முற்று முழுதாக ஆங்கிலேயரின் கட்டுபாட்டிலிருந்தது ஆனால் இங்கு ஒருமுறை பேச அழைக்கப்பட்ட பழங்குடி கவிஞர் க்ரூனே சற்றும் பயமின்றி பழங்குடி பூர்வீக உடையணிந்து ஈட்டியுடன்  வந்திருந்தார். ஈட்டியை ஆட்டியபடி அவர் அங்கு ஆற்றிய உரைகளும் கவிதைகளும் இனவெறி பற்றியதையும் கோசா இன மக்களின் பெருமை குறித்துமே இருந்தன. இதனால் தான் ஒரு கோசா இனத்தவன் எனும் பெருமை மண்டேலாவின் மனத்தில் மேலோங்கியதுடன் அவரது உணர்சிகளையும் கவிஞர் க்ரூனேயின் பேச்சு தூண்டிவிட்டது.

                                               தொடரும் .................................   

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}