விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-02

[இதன் முன்னைய பதிப்பிற்கு விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-01 ]
வெளிநாட்டு பயணம் 

முன்னைய பதிப்பில் குறிப்பிட்டது  போல் நேதாஜியும் அவரின் தோழர்களும் 2 ஆண்டு காலம் தங்கள் கல்வியை தொடரமுடியாதவாறு இடைநிறுத்தப் பட்டனர். இதனால் தன் கல்வியை ஓராண்டு காலம் தொடர முடியாதிருந்த நேதாஜி சி .ஆர் .தாஸ் சி ஆர் தாஸ் என்று அறியப்பட்ட இவர் சித்தரஞ்சன் தாஸ் ஆவார் பின்னாளில் நேதாஜி இவரின் கீழ் தான் தன் தேசத் தொண்டை ஆரம்பித்து ஆற்றினார். வழக்கறிஞரான சி ஆர் தாஸ் தன் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கி   தேசப் பணியாற்றியவராவார். தான் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் மகளுக்கே கொடுத்தவர். ]     மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார் அங்கு   நேதாஜி 1919 ஆம் ஆண்டு B .A  பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய ராணுவப் பயிட்சியிலும் சிறப்பாக தேறினார். அக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட நேதாஜியை பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது அவரை லண்டனுக்கு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க   அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு போயும் மேலைத்தேய மோகங்களில் நாட்டம் செலுத்தாத சந்திரபோஸ் எதிலும் பற்றற்று இருந்ததால் நண்பர்களால் பகிடியாக சாமியார் போஸ் என்றழைக்கப்பட்டார்.   மேலும் அங்கு நேதாஜி "ஏழரைக்கோடி மக்களை கொண்ட இங்கிலாந்து எப்படி முப்பது கோடி மக்களை கொண்ட இந்தியாவை ஆட்சி செய்துவருவதுடன் இவ்வளவுகாலமும் எவ்வாறு தாக்கு பிடிக்க முடிந்தது" என்று குழப்பமுற்றார்.இவ்வாறு தன் படிப்பை தொடர்ந்த போஸ் லண்டனில் நடந்த "இந்தியன் சிவில் சர்வீஸ்" எனப்படும் ஐசிஎஸ் தேர்வில் 1920 ஆம் ஆண்டு ஆடி மாதம் 4 ஆவதாக தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி  வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் தன் தாய் நாட்டில் வேலை செய்வதா என்று கோபமுற்ற நேதாஜி கஷ்டப்பட்டு படித்து பெற்ற   தன் ஐசிஎஸ் பதவியை லண்டனிலேயே ராஜினாமா செய்தார். மேலும் கடிதம் மூலம் சி.ஆர்.தாஸ் இடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய சுதந்திரதிட்காக தன்னை  எப்பணியிலும்  ஏவலாம் என ஆலோசனை கேட்டிருந்தார்  . அதை ஏற்ற சிஆர் தாஸும் நேதாஜி வரும் பட்சத்தில் தான் ஏற்றுகொள்வதாகவும் நேதாஜி பதவி துறந்ததை இட்டு பாராட்டுக்களையும் கூறி மறுகடிதம் அனுப்பினார்.   இக்காலகட்டத்தில் தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்திஜியும் இந்திய அரசியலில் ஈடுபட்டதுடன் இந்திய மக்களும் காங்கிரசின் தலைமையின் கீழ் சுதந்திர எழுச்சி பெற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டு ஆடிமாதம்   16 ஆம்  திகதியன்று பம்பாய் துறைமுகத்தில் வந்திறங்கிய   சந்திரபோஸ் பம்பாயில் அப்போது தங்கியிருந்த காந்திஜியையும் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். அப்போது "ஒரே ஆண்டில் இந்திய சுதந்திரத்தை பெற ஏதாவது வழி உண்டா...???? " என கேட்ட நேதாஜியின் கேள்விக்கு பதில் கூறாமல் தட்டி கழித்துவிட்டார் காந்திஜி இதானால் தான் பின்னாளில் நேதாஜி காந்திஜி பற்றி குறிப்பிடும் போது காந்திஜி முதல் சந்திப்பிலேயே தன்னை கவரவில்லை என குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் நேதாஜி சித்தரஞ்சன்தாஸின் கீழ் தொண்டாற்றவே விரும்பியிருந்ததுடன் ஒரு மரியாதைக்காகவே காந்திஜியை சந்தித்திருந்தார். நேதாஜியை ஏற்று கொண்ட சி.ஆர்.தாஸும் நேதாஜியின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன் திறமைமிக்க அவரது குடும்ப பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ் தான் நிறுவிய "தேசியக் கல்லூரி" அதிபராக 25 வயது வாலிபனான போஸை நியமித்திருந்தார்.  லண்டனில் கேம்பிறிட்சில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலை போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார். 
அரசியல் நுழைவு  

இவ்வாறு நேதாஜியின் பேச்சால் கவரப்பட்ட பல மாணவர்கள் நேதாஜிக்காக எதையும் செய்ய தாயாராய் இருந்தனர். இது இவ்வாறு தொடர வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டிஷ் அரசு தீர்மானித்து இருந்தது இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் ஆதிக்ககாரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடுபூராயும்  பாரிய ஏற்பாடு மேட்கொண்டிருந்தனர் ஆனால் சுயாட்சி அதிகாரத்தை தரமறுத்த பிரிட்டிஷின் ஒரு கூறான இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். இதன்படிதான் கார்த்திகை மாதம் 17 ஆம் திகதி பம்பாய் துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் பூரண ஹர்த்தாலுக்கு காந்திஜி அழைப்பு விடுத்தார். அதன்படி கல்கத்தா நகரில் ஹர்த்தாலை நடத்தும் பொறுப்பை சி.ஆர்.தாஸும் சந்திரபோஸிடம் அளித்திருந்தார் அதை ஏற்றிருந்த  நேதாஜி கல்கத்தா நகரில்   17 ஆம் திகதி பரிபூரண ஹர்த்தாலை நடத்தியிருந்தார். அதுவரை  காங்கிரசின்  பிரச்சார பிரிவில் தொண்டாற்றி வந்த சுபாஷ் அரசியல் போராட்டத்திற்கு முதல் முறை தலைமை தாங்கியபோதும் தான் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வீரர் தான் என நிருபித்திருந்தார். நாடுமுழுதும்  பொதுவாக  அனுட்டிக்கப்பட்ட ஹர்த்தாலை விட கல்கத்தாவில் நேதாஜி தலைமையில் ஹர்த்தால் பரிபூரணமாக அரங்கேறியிருந்தது. இதனால்  கடுப்படைந்திருந்த அரசாங்கம் பொதுக்கூட்டம் ,ஆர்ப்பாட்டம் ,ஊர்வலம் போன்றவற்றிற்க்கு தடை விதித்திருந்தது.
                                                                                    .............. தொடரும் ....................
 அடுத்தபதிவில் நேதாஜியின் சிறை வாசம் பற்றி பார்க்கலாம் 
ஏதாவது தவறுகள் இருப்பின் அறியத்தரவும்    
இதன் அடுத்த பதிவிற்கு 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}