விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-03

[இதன் முன்னைய பதிவிற்கு  விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-02]
சிறை நுழைவு 
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் மார்கழி மாதம்  24 ஆம் திகதி வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவிட்க்கு வருகை தரும் போது கல்கத்தாவில் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்து கல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. சுபாஷின் தலைமையிலான ஹர்த்தாலின் தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு இளவரசரின் வருகை சிறப்பாய் இருக்க கருதி நேதாஜியின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து நேதாஜியையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்திருந்தது. மேலும் அவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்திருந்ததுடன்  சில நாட்களின் பின்னர் ஜவகர்லால் நேரு,சித்தரஞ்சன்தாஸ் போன்றோரும் கைதானார்கள்.   இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கைதானவுடன் மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாது ஹர்த்தாலும் சிறப்புற மக்களால் நடக்கப் பெற்றது. இவ்வாறு ஆறு மாதம் கழித்து நேதாஜி 1922 ஆம் ஆண்டு   புரட்டாசி மாதமளவில் விடுதலையானபோது காந்திஜியும் ஒத்துழையாமை இயக்கத்தையும், வரிகொடா இயக்கத்தையும் விரிபு படுத்தியிருந்தார்.மேலும்   சில நாட்களில்  ஏதோ ஒரு கிராமத்தில் நிகழ்ந்த பலாத்கார நிகழ்வை காரணம்   காட்டி காங்கிரசுடன் கூட ஆலோசிக்காது ஆங்கிலேயர்கள் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்த ஒத்துழையாமை போராட்டத்தை காந்தி ஒத்தி வைத்திருந்தார். ஏதோ ஒரு சின்ன விடயத்திட்கேல்லாம் காந்திஜி ஆங்கிலேயர்களுக்கு அச்சம் தந்த போராட்டங்களை நிறுத்தி வைத்திருந்தது மக்களுக்கும் ஆகட்டும் நேதாஜி ,ஜவகர்லால் நேரு, சிஆர் தாஸ் போன்ற தலைவர்களுக்கும் ஆகட்டும் பிடிக்கவில்லை. 
காந்திஜிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியான சிஆர்தாஸ் கயாவில் மார்கழியில் கூடிய காங்கிரஸ் மகா சபைக்கு தலைமை தாங்கியதுடன் சட்ட சபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாஸும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால் இதை காந்திஜி ஆதரவாளர்கள் எதிர்க்க காங்கிரஸ் இரண்டாக உடைந்து  சிஆர்தாஸ் தலைமையிலான சுஜராட்சியக் கட்சி ஆரம்பமாயிற்று. இக்கட்சியின் "பார்வட் " எனும் ஆங்கில பத்திரிகையில் ஆசிரியாரான நேதாஜி உணர்சிததும்பும் கட்டுரைகளை எழுதினார். இதை தொடர்ந்து தேர்தல்களில் மத்திய மாகாணசபையையும்,கல்கத்தா காப்பரேஷனையும் சுஜராட்சியக் கட்சி   வெற்றிபெற மேஜராக சி.ஆர்.தாஸும் காப்ரேஷன் நிர்வாக அதிகாரியாக போஸும் தெரியப்பட்டு கல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவுகளையும் அள்ளி இருந்தனர். இப்போக்கை அவதானித்த அரசு, மக்கள் சுஜராட்ச  கட்சியின் பின்னால் அணிதிரண்டால் தமக்கு ஆபத்து என அஞ்சி அதற்க்கு காரணமான நேதாஜியை ஆள்தூக்கி அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு  ஐப்பசி மாதம் 25 ஆம் திகதி கைது செய்து கல்கத்தா மத்திய சிறையில் அடைத்து விட்டது. மேலும் வங்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை கவிழ்க்க சதிகார இயக்கம் ஓன்று தோன்றி இருப்பதையும் அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கை விட்டது.   நேதாஜிக்கு ஆதராவாய் மக்களின் கோஷம் மட்டுமல்ல பல தலைவர்களின் கோஷமும் நாடு முழுதும் கிளம்பியது. கார்த்திகை மாதம் முதல் வாரம் கல்கத்தாவிட்க்கு விரைந்த காந்தி உட்பட பல தலைவர்களும் நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான் சுஜராட்சிய கட்சி சட்டசபைகளில் வெற்றி பெற்று ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும் பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி சட்டசபை பகிஷ்காரம் எனும் கொள்கையை கைவிட்டு சுஜராட்சிய கட்சியின் கொள்கையே காங்கிரசின் கொள்கை என கூறி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார். சுபாஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றிவிட்டது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது. நோயின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்குகூட  அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசும் அவரை வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு கார்த்திகை நடக்க இருந்த தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது  நேதாஜியும் தன் சேவையை கருதி அதற்கு உடன் பட்டார். இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும் சிறையில் வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை ஆனால் மக்களுக்காக உண்மையாய் உழைத்த தலைவரன்றோ சந்திரபோஸ் எனவே மக்களும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜியை ஜெயிக்க வைத்துவிட்டனர்துளியும் அசைந்து கொடுக்காத அரசோ நேதாஜியின் உடல் நிலையை கருத்திட் கொண்டு "கல்கத்தா வராமல் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும் 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும் இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார் என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்படிய விரும்பாத நேதாஜி இதற்கு முற்று முழுதாக மறுத்துவிட்டார்.  இப்படியே காலங்கள் கடக்க நோயும் அதிகரித்து படுத்தபடுக்கையில் நேதாஜியை தள்ளி விட்டது. இச்செய்தி வெளியில் பரவி "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும் "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் "  என்றும் வதந்திகள் பரவின நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை என தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுத்தபடுக்கையிலேயே தன்னை ஜெயிக்க வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி.
                                                              
                                                         ........................தொடரும்......................
இதன் அடுத்த பதிவிற்கு இங்கே 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}