நீயா நானாவில் கோபினாத்தை திணறடித்த பவர்ஸ்டார்

பவர்ஸ்டாரை தெரியாத வேற்றுக்கிரக ஜந்துக்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு புகழின் உச்சியில் இருந்து கொண்டிருப்பவர் நம்ம பவரு பல ஊடகங்கள் டிவிக்கள் இணயத்தளங்கள் வலைபூக்கள் என அனைத்திலும் இப்ப பவருதான் பவர்லைட்...டிவிக்களில் வரும் அவரது பேட்டியால் பவரு ரொம்ப பிசி (ரசிகைகள் தொல்லை )
அவரது என்ரியால் முண்ணனி நடிகர்களைக் கிழித்துக்காயபோட்ட சமூகவலைத்தள குழுக்கள் எல்லாம் வாயடைத்துப் போய்விட்டன
சினிமாவுக்கு புதிதாக அறிமுகமாகும் நடிகர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் பம்மிக்கொண்டுதான் இருப்பார்கள் கேட்டால் எதிரிகள் யாரும் இல்லை  நான் யாருக்கும் போட்டி இல்லை என்றுதான் கூறுவார்கள் பவர் அப்படி எல்லாம் இல்லை ..வந்த முதல் நாளே கூறி விட்டார் தனக்கு போட்டி சூப்பர் ஸ்டார் தான் என்று அதைவிட ரானா படத்துடன் தான் தனது படத்தை  போட்டியாக விடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.. (இதனால் சூப்பர் ஸ்டார்  நிரந்தரமாக இமயமலைக்கு சென்றுவிடவும் வாய்ப்புள்ளது)
தன்னுடன் நடிப்பதற்கு அனுஸ்கா போன்ற முண்ணணி நட்சத்திரங்கள் போட்டி போடுவார்கள் என்றெல்லாம் சிங்கம் கர்ஜித்திருக்கிறது(இதனால் தான் அனுஸ்கா பல படங்களுக்கு மறுப்புத்தெரிவித்துவிட்டு ரூம் போட்டு அழுதிருக்கின்ரார் ....பாவம்..)

இவரது பன்ச் டயலக் எல்லாம் மிகவும் பிரபலம் "குல குலயா முந்திரிக்கா இந்த பவர தொட்டா நீ கத்தரிக்கா" இத மூச்சு விடாம 4 தரம் தொடர்ந்து சொன்னால் நாக்கு நாலுஇன்சி வெளில நட்டுக்கும்...இந்த பன்ச்சைக் கேட்ட ஆதிவாசிகள் சிலர் சம்பவ இடத்திலேயே மரணமானார்கள் என்பது பிந்திக்கிடைத்த செய்தி ..பவரு தனது சினிமா என்ரிக்காக டி ஆர் கிட்ட டுயூசன் எடுத்துக்கிட்டதாக FBI இல் இருந்து செய்திகள் கசிந்துள்ளன
இவரது லத்திகா படம் திரையரங்குகளில் 150 நாட்களுக்கு மேலாக ஒடி உள்ளதாம் (யாருடன் ஒடியது என்று கேட்கப்படாது) இவரது பேர்சனாலிட்டி பற்றி நான் கொம்மென்ட் பண்ண விரும்பல..வார்த்தைகள் போதாது எதிர்காலத்தில் பவரின் படங்களில் சாம் அண்டர்சன் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

THE TIMES பத்திரிகையில் பவரு


நம்ம பவரு படப் போஸ்டரை மாடு கூட திங்கிரதில்லை என்பது குரிப்பிடத்தக்கது


இவரது பேட்டிகள்

விஜய் டிவிசன் டிவிகலக்கல் சினிமா


98.3 ஃப்ம்
அலைமோதும் ரசிகர்கள் மத்தியில் டான்ஸ் ஆடும் பவருஅது இது எதுவில் பவருஇது எல்லவற்றையும் தாண்டி பவரு தற்போழுது கால்வைத்தஇடம் விஜய் டிவியின் நீயா நானா
(இதய பலவீனமானவர்கள் தொடரவேண்டாம்)
கோபினாத் எவளவோ ரை பண்ணினார் ஆனா பாவம் அவரால கூட முடியல
பவரு நீயா நானா ஷொவுக்கு என்ரி ஆகும் போது பல ரசிகர்களும் கூடவே வந்தார்கள் அவர்கள் கோபினாத்திடம் பவரை பவர்ஸ்டார் என்றுதான் அழைக்கவேண்டும் என பணித்திருந்தார்கள் "என்னிடம் தற்பொழுது 10 படங்கள் உள்ளன...உயிர் இருக்கும் வரை தொடர்ந்தும் நடிப்பேன்.."(அப்ப தமிழ் ரசிகர்களுக்கு விமோச்சனமே இல்லை எங்கிரீங்க)தமிழ் நாட்டில் மட்டும் எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கின்ரார்கள்"என்று பவரு கூறி உள்ளார்
அலை மோதும் ரசிகர்கூட்டம்

<<<முதலுதவி>>>>இதனால் அறியத்தருவது பாதிக்கப்பட்ட அனைத்து வாசகர்களுக்கும் இலவச சிகிச்சையை வழங்குவதாக உள்ளோம் அருகில் இருக்கும் வைத்திய சாலையில் பஞ்சு,மருந்து,தலைவலி மாத்திரைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}