கொப்பி அடிக்கவேண்டுமா மதம் மாறுங்கள்


மதக் குறியீடு


பரீட்சை மண்டபம். வினாத்தாள்மேல் ஏறி இருந்து வாட்டு வாட்டென்று வாட்டுகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவன் மட்டும் கூலாக அமர்ந்து புத்தகத்தைப் பார்த்து விடைகளை எழுதிக்கொண்டிருக்கிறான். மேற்பார்வையாளர் வந்து காட்டுக் கத்தல் கத்துகிறார். “என்ன துணிச்சல் இருந்தால் இப்படி செய்வாய்? என்று அவன் சாந்தமாக தனது மத அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறான். உடனே அவரும், “இதை முதலிலேயே சொல்லக்கூடாது? எனக் கேட்டவாறே நகருகிறார்.

திருட்டுகளில் கேவலமானது உழைப்பையே திருடுவது. நம்பிக்கைகளுள் கேவலமானது மதநம்பிக்கை. உள்ள கூத்துக்கள் போதாதென்று உழைப்பை திருடுவதே அடிப்படை மார்க்கமாகக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உழைப்பவன் ஒருவன், மதிக்கப்படுபவன் ஒருவன் என்பதாக ஒரு மதம் மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. (அதுதான் இந்துமதம்.) போதாததற்கு இதுவேறு.

The Missionary Church of Kopimism என்கிற திருப்பெயரைக் கொண்ட இது, ஸ்வீடனில் ஐசக் கேர்சன் (Isac Gerson)  என்கிற ஒரு 19 வயது தத்துவவியல் மாணவரால் உருவாக்கப்பட்டது. (உப்ஸாளா பல்கலைக்கழகம். இவருடன் குட்ஸவ் நைப் என்று இணை ஸ்தாபகர்.) 3 முறை விடாபிடியாக விண்ணப்பித்து விண்ணப்பித்து அரச அங்கீகாரம் வேறு பெற்றுவிட்டார்கள். இந்த ஐடியா எங்கிருந்து கிடைத்தது பாருங்கள்.....
மத நிறுவுனர்.

“Copy me, my brothers, just as I copy Christ himself 1 கொரிந்தியன்ஸ் 11: 1 இல் வரும் ஒரு வேதவசனம்தான் அவர்களை கொப்பி பண்ண ஊக்குவிக்கிறதாம்.

இம்மதம் பிடித்துப் போய்விடவே, அள்ளுகொள்ளையாக வந்து இந்த மதத்தை தழுவினார்கள் மக்கள். இப்போதுவரையே 3000 தாண்டிவிட்டது. வழிபாட்டு முறை என்ன தெரியுமா? கொப்பி பண்ணுவது. மதத்தை பின்பற்றுபவர்கள் கொப்பிமிஸ்ட் எனப்படுவார்கள். எல்லா தகவல்களும் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்பதுதான் இவர்களின் சமத்துவக் கொள்கை. இம்மதத்தவர்கள் கள்ள DVD விற்றாலோ, பரீட்சையில் பார்த்து எழுதினாலோ, புத்தகங்கள், பாடல்கள் போன்றவற்றின் பதிப்புரிமை சட்டத்தை மீறினாலோ சட்டப்படி தண்டிக்க முடியாது. அது இவர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவது போலாகும். உதாரணமாக நாம் இரவிரவாக லவுட் ஸ்பீக்கர்களில் பாட்டுக்கள் போட்டு படிக்கும் மாணவர்களையும், மக்களையும் துன்பப்படுத்துவதையும், வீதிகளில் தவ்வல்கள் விளையாடுவதுபோல ஒரு சிலையை தூக்கிக்கொண்டு திரிந்து போக்குவரத்தை இடைஞ்சல் பண்ணுவதையும் தட்டிக்கேட்பது நமது மத உணர்வை கொச்சைப்படுத்துவதாக இல்லையா? அதுபோலத்தான்.

இந்த மதத்துக்கு கடவுள் என்று யாரையும் இன்னும் finalise பண்ணவில்லை. மதத்தின் முக்கிய குறியீடு பின்வரும் ctrl+c  மற்றும் ctrl+v தான்.


2012 ஜனவரி 5 இல் அரச அனுமதி கிடைத்ததும் மதமாக ஆகிவிட்ட இது இதற்குரிய தேவாலயங்களுடன் இயங்குகிறது. செர்பியா வரைக்கும் பரவி அங்கு இந்த மதம் நடத்துகின்ற முதலாவது திருமணமும் முடிந்துவிட்டது. father மணமக்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா??
நாங்கள் இன்று மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம். காதல் என்பது பகிருவதுதான். நீங்கள் உங்கள் DNA க்களை share பண்ணி, copy பண்ணி, remix பண்ணி புது மனிதரை உருவாக்குகிறீர்கள். சந்தோஷத்தை அனைவரும் கொப்பி பண்ணுங்கள்.

இப்போதுதான் SOPA சட்டத்தை அமெரிக்கா கொண்டுவரப் படாத பாடு பட்டு  தோற்றுவேறு விட்டது. இடையில் இதுவேறு. மதம் என்றாலே தொல்லைதான் போல. இப்படியே போனால், ரேப்பிமிசம் என்று கற்பழிப்பதைக்கூட மாத வழிபாடாக்கும் மதங்கள் கூட வந்துவிடும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}