பவருக்கு நடந்தது என்ன? எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்

(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..)
விஜய் டிவியின் நீயா நானாவில்  தல பவர் ஸ்டாரின் நிகழ்ச்சியை பார்த்திருப்பீர்கள் பதிவுலகமே இப்பொழுது அதைப்பற்றித்தான் கலவரப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்னையும் சேர்த்து எல்லோருடைய கோபமும் ஒட்டுமொத்தமாக கோபினாத் மீதும் விஜய் டி வி மீதும் திரும்பி உள்ளது 
ஒவ்வொரு விடயமக வருவோம்
பவரிடம் எரிச்சலூட்டிய விடயங்கள்
 தமிழ் சினிமாவில் சில பல படங்கள் தறிகெட்டு ஒடினாலும் பல நடிகர்கள் தங்கள் உயிரைக்கொடுத்து சினிமாவில் நடித்து வருகிரார்கள் ரஜனி கமல் போன்ற நடிகர்கள் சிறந்த உதாரணம் கமல் போன்ற கலைஞர் தமது ஒவ்வொரு படத்திற்கும் படும் பாடு உங்களுக்குத் தெரியும் எந்திரனில் மேக்கப்பிற்கு ரஜனி தொடர்ந்து ஒரே இடத்தில் 5 மணித்தியாலத்திற்கு மேல் படுத்திருக்க வேண்டியேற்பட்டது ..இவர்களுடன் மற்றைய நடிகர்களின் நிலமையும் இதேதான் ரஜனி கமல் ஏனைய நடிகர்கள் வானத்தில் இருந்து "தொபுக்கிடீர்" என்று குதிக்க வில்லை ஒவ்வொரு நடிகனுக்கும் தான் மக்களின் மனதில் இடம்பெற நாய்படா பாடு பட்ட கஸ்டத்தின் வரலாறு இருக்கின்றது 


குறைந்த பட்சம் ஒரு நடிகர் தான் பல தடைவை  தனது நடிக்கும் திறனை முயற்சி செய்து பார்ட்தபின் தான் திரைஉலகிற்கு நுழைகிரான் அதாவது தனது முதல் படத்தில் எந்த நடிகரும் தனது நடிப்பை ரயல் பர்ப்பதில்லை ஆனால் பவர் இதைத்தான் செய்கிரார் தான் தெரிவு செய்த துரையைப்பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லதது வெளிப்படையாகத்தெரிகிரது 


தரமான ஒரு படத்தை வெளியிடுவதற்கு போதிய காலம் தேவை என்பது உங்களுக்கே தெரியும் சில வருங்கள் எடுக்கும் ஆனால் பவர் ஒரெ நெரத்தில் எத்தனை படம் நடிக்கின்ரார் என்று கேல்விப்பட்டிருப்பீர்கள் அத்துடன் தன் கைவசம் 10 படங்கள் இருக்கின்றது என்றும் கூறியிருக்கின்ரார்


அடுத்த விடயம் விளம்பரப்படுத்தல் இது சினிமாவில் அனைவராலும் அவசியமாக செயற்படுத்தப்படுகின்ற விடயம்
இதற்கு பல யுத்திகள் இருகின்றன ஆனால் பவரு தெரிவு செய்த யுத்தி மிகவும் கீழ்தரமானது அல்லது ஆரம்பகட்டமானது 


பிரபலமாவதற்கு பொதுவாக இரண்டு வழிகள் உள்ளன 1.மற்றையவரை தாழ்த்தி/தரக்குறைவாக/கேலியாக/குற்றம் சுமத்தி பேசுவதால் பிரபலம் அடைதல் 
2.தன்னைத்தானனே இழிவுபடுத்திக் கொள்ளுதல்


இதில் 2ஆவதைத்தான் பவரு தெரிவு செய்துள்ளார் செந்தில் கவிண்ட மணியிடம் 2 மணித்தியாலம் படத்திற்காக அடி வாங்கினால் பவரு 24 மணித்தியாலம் அடி வாங்க தயாரக உள்ளார் 
பவரின் பட ட்ரைலர் 


இவரது பிரபலமான பன்ச் டயலொக் "குல குலையா முந்திரிக்கா இந்த பவர் ஸ்டார் அடிச்சா நீ கத்தரிக்கா " இப்படி இவரது படங்களில் பல சின்னப்புள்ள தனமான குளறு படிகள் இருக்கும் அதாவது உலக சினிமாவிற்கே புதிதான விடயங்கள் தான் இவை


அடுத்த விடயம் பவரு ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகள்


ஐஷ்வர்யா ,அனுஸ்கா போன்ற நடிகர்கள் தன்னுடன் நடிக்க போட்டி போடுவார்கள் போன்றவை 
இவை எல்லவற்ரையும் விடு கழுதையை எண்டு மன்னிக்கலாம்
ஆனால் எனக்கு எதிரி ,போட்டி ரஜனி என்று கூறியதைத்தான்  ஜீரணிக்க முடியவில்லை அத்துடன் ரஜனியின் படங்களுடன் தான் தனது படங்களை வெளியிடுவேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிரார் 
நம்ம பவரு
இவரைப் போல இன்னுமொருவர் இருக்கின்ரார் அவரது பெயர் சாம் அண்டர்சன் நான் அவரைப் பற்றீ நான் கொமன்ட் பண்ண விரும்பல  நீங்களே பாருங்கள் 
 சாம் அண்டர்சனின் விடியோ


இருவருக்குமிடையில் குறைந்த பட்சம் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது கூடக்கடினம்
பவரின் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் சாட்டப்படுகின்றன 
அவரே படங்களை அவரே பணம் கொடுத்து ஒடவைக்கிறார் ரசிகர்களை அவரெ பணம் கொடுத்து சேர்க்கிறார் என்றவாறு நீழ்கிறது அந்த லிஸ்ட்


இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் பவருக்கு பணம் செலவழிக்காமலே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது


பவரின் பவர்ஃபுல்  லத்திகா


பல முன்னனி டி விக்கள் தமது டி.ஆர்.பி ரேடிங்க் கை உயர்த்துவதற்கு பவரை பயனபடுத்திக்கொண்டார்கள் இவர்கள் தமது டி.ஆர்.பி யை பற்றி யொசித்தார்களே தவிர அத்துடன் ப்வரின் டி.ஆர்.பி யும் சேர்ந்து எகிறப்பொகின்றது என்பதை சிந்திக்கவில்லை
இவரை அழைத்த அனைத்து டி விக்களும் பவரை ஜோக்கராக்கி அழகு பார்த்தார்கள் பவர் இதைத்தான் எதிர் பார்த்தார் கவலைப்படாமல் நிகழ்ச்சிகளில் வழக்கமாக கூறும் தமது பதில்களை கூறினார்


விஜய் டி வி யின் அது இது எதுவில் பவர் கலந்து கொண்டார் (இதில் சாம் அண்டர்சனும் கலந்து கொண்டார்)
அப்பொழுது எனது நண்பனுக்கு தவருதலாக ஒன்று கூறினேன் விட்டால் பவரு நீயா நானா நிகழ்சிக்கும் வந்துடுவார் போல என்று அப்படியெ நடத்திவிட்டார்கள்


நீயா நானா வில பவரு கலந்து கொண்டார் அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது பவர் பிரபலமான நடிகர் இல்லை என்பதால் அவரது பந்தாக்களை கோபினாத்   நேரேகூறிவிட்டார் பவருடன் வந்தவர்கள் தன்னிடம் பவரை சீனிவாசன் என்று அழைக்கக் கூடாது பவரு என்றுதான் அழைக்க வேண்டும் ..கூடவெ எப்பொழுதும் 11 பேர் கொண்ட குழுவை அழைத்து வருவது போன்றவை 
அத்துடன் கோபி சில கேள்விகளைக்கேட்டார் நீங்கள் டொக்ரர் ஃபீல்ட்டையே தொடர்ந்திருக்கலாமே ஏன் இப்படி ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தீர்கள்
உங்களை காமடியனாக பேட்டி எடுக்கும் பல ஊடகங்கள் இருக்கின்றன ஆனால் சீரியஸ்ஸாக கூறுன்கள் உன்களின் உண்மையான முகம் எது?
எப்படியானவர் நீங்கள்?


கோபி பவரின் உண்மையான தோற்றம் என்ன என்பதை வெளியில் கொண்டுவர முயற்சி செய்தார் அதாவது பவரை அதுவரை காமடிப் பீசாக பார்த்த பவரின் உண்மையான தோற்றத்தை வெளிக் கொண்டுவர முயற்சி செய்தார் ஆனால் தன்னிடம் என்ன கேட்கின்ரார் என்று புரியாத மாதிரியே பதில் கூறினார் பவரு  தனக்கு ஒரே முகம்தான் என்று கூரி விட்டார் புரொகிராம் முடிந்த அடுத்தனாள் சமூகத்தளங்கள் பதிவர்கள் என அனைவரும் கொத்தித்தெழுந்து விட்டார்கள்


பவரது பஞ்சுகளைப் பார்த்தலெ தெரியும் மிக முட்டாள் தனமான/சின்னப்பிள்ளய் த்தனமக இருக்கிறது  என்பதை
இப்படி இவர் செய்வதற்கு இவர் அடி முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது அதி புத்திசாலியாக இருக்கவெண்டும் 
(அடி முட்டாள் -ஒன்றுமே தெரியாமல் வெங்காயத்தனமாக செய்தல்
அதி புத்திசாலி-இப்படி செய்தால் பிரபலமடையலாம் என்று பிளான் பண்ணி செய்தல் )
நான் பவரை 2 ஆவது லிஸ்டில் தான் சேர்த்துள்ளேன்
காரணம் எப்படி இருந்தால் அல்லது நடித்தால் பிரபலமடையலாம் அதற்கு நான் எப்படி இருக்க வேண்டும் என் சொந்த கரக்டரை இதற்காக எப்படி மாத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டுதான் இதை செய்கின்ரார் ஏனெனில் ப்வரை முட்டாள் என்று கூரிவிட முடியாது காரணம் இவர் ஒரு மருத்துவர்
அவரது சொத வாழ்க்கையிலும் நல்ல மனிதர் தன்னை அளவுக்கு அதிகமாக புகழ்வதைத்தவிர வேறு எதுவும் இவர் செய்வதில்லையென்பது உண்மை
அதைவிட மற்றைய ஹீரொக்கள் செய்வது போலத்தான் பவரும் சுய விளம்பரங்களை செய்துள்ளார் மற்றையவர்கள் முண்ணணி ஹீரோக்கள் ஆதலால் அவர்களைப் பற்றிய சுய விளம்பரங்கள் பந்தாக்களை இப்படி ஒரு நிகழ்ச்சியில் பப்லிக்காக கூற முடியாது அப்படிக் கூறினால் அவர்களது ரசிகர்கள் கூறியது உண்மையா இல்லையா என்று சிந்திக்க மாட்டார்கள்  நீ எப்படி என் தலைவனைப்பற்றி தவறாக கூறலாம் என்று கிளர்ந்து விடுவார்கள்
(அவர்களது மூளை அப்படி மழுங்கடிக்கப்பட்டிருக்கின்றது)
ஏதோ பவர் என்பதால் இப்படி கூறிவிட்டார்கள்


கோபி பவரிடம் நீங்கள் டாக்டர் ஆகவெ இருந்திருக்கலாம் தானே என்று கேட்டதற்கு பிரபல பதிவர்கள் சரியான கேள்வியைத்தான் முன்வைத்திருக்கிறார்கள்
பவர் இருந்த இடத்தில் ரஜனியொ விஜயகாந்தொ இருந்திருந்தால் கோபியால் இப்படிக் கேட்டிருக்க முடியுமா?
ரைஸ்மில் அதிபர்,கொண்டக்டராக இருந்த  விஜயகாந்த் ரஜனியிடம்
ஏன் நீங்கள் சினிமாவுக்கு வந்தீர்கள்  உங்களிடம் என்ன கலையறிவு இருக்கின்றது என்று கேட்க முடியுமா?
ஊழல் வழக்கில் இருந்து விட்டு ஜாமீனில் வெழிவந்தால் 2ஜி வழக்கு தீர்ந்து போகும் என்று கூறிய முதல்வரை அழைத்து ஏன் இந்த போலி வாழ்க்கை என்று கேட்க முடியுமா?


இதை விட கோபினாத்தின் மீது நான் வைத்திருந்த இமேஜ் குறைந்து விட்டது என்பது கசப்பான உண்மை
அவரைப்பற்றிய பல எதிர்க்கருத்துக்களுக்கு விளக்கம் கொடுத்தாலும் சிலவற்றை என்னால் ஜீரனிக்க முடியவில்லை
ஈரொட்டில் பெருந்துறை என்னுமூரில் கல்லூரி ஆண்டு விழாவிற்கு கோபினாத்தை அழைத்திருந்தார்களாம் இதற்கு கோபினாத் சில கண்டிசன்ஸ் போட்டாராம்
ஒரு மணி  நேரம் மட்டுமெ இருப்பேன் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் அதுவும் இப்பொழுதெ முழுத்தொகையும் தரவேண்டும்
சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே கொண்டு சென்று விட வேண்டும் காரில் ஏசி இருக்க வேண்டும்
பயணத்தில் சரக்கு கிகரெட் எல்லவற்றிற்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் ...வரும் வழியில் இடையிடையெ  காரை நிறுத்தி தம் தண்ணி போட்டிட்டு ஃபுல் மப்பிலதான் வந்தாராம் 
இவைகள் இரண்டு வருடத்திற்கு முன்னதாக இடம் பேற்ற தாம் இத்தகவலின் நம்பிக்கைத்தன்மை பற்றி என்னால் உறுதியாக கூறமுடியாது


ஆனால் இதே பந்தாகக்ள் முண்ணனி நடிகர்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும் நடைபெறும் என்பது உண்மை


எனக்கு கவலை அழித்தது என்னவெனில் இவ்வளவு இன்டலச்சுவல் அறிவு கொண்ட கோபியால் எப்படி தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போனது என்பதுதான் நடிகர்களில் பெரும்பாலானவர்களை ரொல் மொடலாக கொள்ள் முடியாது ஆனால் கோபிக்கு அந்த தகுதி இருந்தது
ஆனால் கோபி அதை இழந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்
அடுத்த நீயா நானா பனிகழ்ச்சியில் தண்ணியடித்தல் வெட்டி பந்தா பற்றிய தலைப்பை எடுத்துக்கொண்டால் கோபி யார் பக்கம் கதைக்கப் போகிரார்
சபையில் ஒருவர் இவரையெ உதரணம் காட்டிவிட்டால் என்ன செய்வார்
தனது இண்டல்ச்சுவலான அறிவை தன்னிடமே பிரயோகிக்க தவறிவிட்டார் கோபினாத்
நீயா நானா கோபினாத்தும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களும்


எது எப்படியாக இருப்பினும் ஜெயித்தது கோபினாத்தோ விஜய் டி வி யோ அல்ல ஜெயித்தது பவர்ஸ்டார்தான் கோபி கேட்ட கெள்விகளூக்கு சிரித்துக்கொன்டே பதிலை கூறி விட்டு சென்று விட்டார் ...இதனால் ஒட்டு மொத்தமான அனுதாப வோட்டுக்களும் பவருக்கு கிடைத்துள்ளன 
இதுவரை அவரை ஒரு காமடிப்பீசாக பார்த்த திரை உலகம் இப்பொழுது அவரையும் இரு ஹீரொவாக ஏற்றுக்கொண்டு விட்டது ஒரே நாளில் ஒரே நிகழ்ச்சியில் விளம்பரமில்லாமல்..பணம் செலவழிக்காமல்..புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார் பவரு 


தான் எந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் எண்று ஆசைப்பட்டாரோ எதற்காக கஸ்டப்பட்டாரோ அதை ஒரெ நிகழ்ச்சியில் பெற்றுவிட்டார் பவரு ..பவருக்கு சமூகத்தளங்கள் பதிவர்கள் (என்னையும் சேர்த்து) எல்லோரும் விளம்பர பதாகைகள் ஆகிவிட்டோம்..


ஆனல் ஒரு ஹீரொவாக ஆவதற்கு கொஞ்சம் பணம் வெட்டி பந்தா யார் எங்கு எதைக்கெட்டாலும் சிரித்துக்கொன்டெ பதில் கூறுவது மட்டுமே பொதுமானது என்று புது வரவிலக்கணத்தையெ வகுத்துவிட்டார் பவரு
இதைப்பின்பற்றி பல பவர்கள் எதிர்காலத்தில் தோண்றக்கூடும் தமிழ் சினிமாவை சுப்பர் மான் தான் வந்து காப்பாற்ற வேண்டும்


இன்னொன்றையும் கூற வேண்டும் எனக்கு ஒரு லிங்க்கை அனுப்பி இவந்தான் பவரு பெரிய வதயன்டாப்ப பாத்து சாவடா நாளைக்கு நீ உயிரோட இருந்தா நான் சந்திக்கிறன் என்று சில மாதங்களுகு முன் எனக்கு பவரை அரிமுகப்படுத்திய எனது நட்பு வட்டாரத்தை சேர்ந்த ஒருவனே இன்று பவர் ஸ்டாருக்கு நிகழ்ந்தது அனீதியென்று கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டான் இது ஏன் என்பது  உங்கள் சிந்தனைக்கு(பலர் இதனால் தாம் ஜீவ காருன்யம் மிக்கவர்கள் என்றூ இதன் மூலம் சித்திகரிக்க முயல்கிரார்கள் எல்லாம் பவருக்குத்தான் விளம்பரமாகி விட்டது)


இருதியில் பவரின் ரசிகர்களால் கோபத்துடன் முகப்புத்தகத்தில் வெளியிடப்பட்டவை
ஒரு டிவி ப்ரோக்ராம் மூலம் ஆட்சிய பிடிச்சது முதல்வன் அர்ஜூன் மட்டுமல்ல...பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் தான் எண்டு வரலாறு சொல்லும்!


பால்டாயில் குடிச்சவனும்,பவர் ஸ்டாரை பகைச்சவனும் நல்ல இருந்ததா சரித்திரமே இல்லை"

கோபிநாதை தூக்கிரட்டுமா தலிவா?

-இவன்-
ஆறுகோடி பேரில் ஒரு ஆள்,
ஐம்பது லட்சம் பேரில் முதல் ஆள்.
பவர் ஸ்டார் ரசிகர் மன்றம் - அண்டார்டிக்காபவர் ஸ்டாரையும் அவர் ரசிகர்களையும் கடுப்பாக்கும் வகையில் கேள்விகளை கேட்ட விஜய் டி.வி 'கோர்ட் கோபிநாத்தை' கண்டிக்கும் வகையில் இன்று வெள்ளவத்தையில் தீக்குளிப்பு நிகழ்வொன்று மைந்தன் சிவா தலைமையில் இடம்பெறவுள்ளது.


தலைவருக்காக பவர் குறள்

”பால்காப்பிக்கு சுகர் எவ்ளோ முக்கியமோ அதே போல பப்ளிசிட்டிக்கு பவர்ஸ்டார்டா......”

“நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா பப்ளிசிட்டி பண்றதில தப்பே இல்ல”பவர் ஸ்டார்'ரின் தீவிர விசிறிகள்,ரசிகர்கள்,அபிமானிகள்,ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த உலகுக்கு பவர் ஸ்டாரின் பவர் என்ன என்பதை காட்டுவோம்!!
------------
சங்கத்தின் பஞ்ச் டயலாக்:::
1-"கொல கொலயா முந்திரிக்கா இந்த பவர் ஸ்ரார் அடிச்சா கத்தரிக்கா கத்தரிக்கா......"!!!

2-"கரண்ட்டு கம்பத்துல ஏறி கறிவேப்பில பறிக்கரவருடா எங்க பவரு.."

3--"பால்டாயில் குடிச்சவனும்,பவர் ஸ்டாரை பகைச்சவனும் நல்ல இருந்ததா சரித்திரமே இல்லை"!!

எப்பிடி சும்மா அதிருதில்லே!!

நீங்களும் உங்களுக்கு பிடித்த பன்ச் டயலாக் எங்க சங்கத்தில போஸ்ட் பண்ணினா,அவற்றையும் சங்கம் ஏத்துக்கும்!!கோர்ட்டு கோபி மீது ரசிகர்கள் பயங்கர கடுப்பு:
-செல்போன் அடிச்சா ரிங்கு ..எங்க பவர் அடிச்சா கோபிக்கு சங்கு ...
- மவனே...யாராவது கோபிநாத்துக்கு வாடைகைக்கு கோட்டு குடுத்தீங்கன்னா தொலைச்சுப்புடுவேன்
-நம்மளோட சொத்தை, நம்மளை தவிர வேற யாராவது டச் பண்ணினா கோபம் வருமா/வராதா...?
-கொய்யால மின்னலை பிடித்து மின்சாரத்தை உமிழும் எங்க பவர்கிட்டேயே உன் வேலையை காட்டுரியா ..
-வர் ஸ்டார் என்ன பொது சொத்தா எல்லோரும் வந்து ஒன்னுக்கு அடிச்சிட்டு போக ..
-எவனா இருந்தாலும் சரி பவர்ஸ்டார தொட்டவன் ரத்தம் கக்கிதான் சாவான்...:))
-"பால்டாயில் குடிச்சவனும்,பவர் ஸ்டாரை பகைச்சவனும் நல்ல இருந்ததா சரித்திரமே இல்லை"
-பனை மரத்துல வவ்வாளா ..எங்க பவருக்கே சவாலா ??????
-கடவுளை கண்டவனும் இல்லை ..எங்க பவரை வெண்றவனும் இல்லை 

பவரின் facebook page லிங்க்
  
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}