எச்சரிக்கையாக இருங்கள் ராசா!! நீங்கள் கொல்லப்படலாம்.......

ராசா ஜாமீனில் ஓடிய டீல் என்ன ?ஆ.ராசா தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இது நாள் வரையும் கடந்த 15 மாதங்களாக சிறையில் ஜாமீனே கோராமல் ராசா இருந்து வந்ததன் காரணம் தினமும் மணக்க மணக்க பரிமாறப்பட்ட இட்லி-சாம்பார் தான் என நீங்கள் நினைத்தால் உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்.( ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க! )

ராசா இதுவரை ஜாமீன் கோராமல் சிறையிலேயே இருந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.அவற்றில் முதலாவது பிரதான காரணம் ராசா மூலம் 2G  லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் என்கிற அச்சம். இரண்டாவது காரணம் ராசா வெளியே வருவதற்கு சி.பி.ஐ. கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்பது.
இதுவரை ஜாமீன் பெற்ற எஞ்சிய 13 பேருமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மனு மேல் மனுப் போட்டுத்தான் ஜாமீன் கனியை எட்டிப் பறித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரையுமே விட பிரதான குற்றவாளியான ராசாவுக்கு மட்டுமே முதல் மனுவிலேயே ஜாமீன் கிடைக்கக் காரணம் என்ன? அங்கே தான் நிற்கிறார் நம்ம ராசா.
 இதுவரையும் இருந்து வந்த தி.மு.க.- காங்கிரஸ் உறவு அவ்வளவு பிரமாதமாக இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. காங்கிரஸ் தனது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. வுடன் கொஞ்சம் ஒட்டி உறவாட ஆரம்பித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் அண்மையில் ஏ.கே.அந்தோணி கருணாநிதியை என்றுமில்லாதவாறு C.I.D. காலனியில் (ராசாத்தி அம்மாள் வீடு) வைத்துச் சந்தித்ததும், பின்னர் ராசாத்தி அம்மாளுடனும் கனிமொழியுடனும் ஏ.கே.அன்டனி போட்டோவுக்குப் போஸ் கொடுத்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதோ, இதேதான் அந்த பொன்னான சந்திப்பு!!
இவர்களில் யாருக்கு நன்றி சொல்வது என்று ராசா இப்போது செம குழப்பத்தில் இருப்பார்
அங்கே தான் இந்த டீல் தொடங்கியது. தமது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என ஏ.கே.அந்தோணி கேட்க; எனது மகளின் மீது வழக்கு உள்ள நிலையில் நான் எவ்வாறு ஆதரவு தர முடியும்? என்று கருணாநிதி முகத்தில் அறைந்தால்ப் போல் நேரடியாகவே கேட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
பின்னர் முடிவேதுமில்லாமல் முடிந்த அந்தச் சந்திப்பின் பின்னர் கனிமொழி தன்னை 2G வழக்கிலிருந்து நிரந்தரமாகவே கழட்டி விட வேண்டும் என்று கோரிய மனு கடந்த 11 ந் தேதி (மே) விசாரணைக்கு வந்தது. எதிர்பார்த்தபடியே C.P.I. யும் கனிமொழியைக் கழட்டி விடுவதற்கு மறைமுகமாக உதவி செய்தது. 
அதாவது கனிமொழிக்கெதிரான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் C.P.I. க்கு உத்தரவிட்ட நிலையில் C.P.I. வழக்கறிஞரோ வெறுங்கையை வீசியவாறு மன்றுக்கு வந்து ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இன்று தாம் விரும்பவில்லை என்றார், கூலாக! இதே நிலைமை வேறு வழக்கில் இருந்தால் குற்றவாளிக்குச்(மனுதாரருக்கு) சாதகமாக தீர்ப்பு வந்திருக்கும். கனிமொழியும் அதைத்தான் எதிர்பார்த்தார், C.P.I.  யும் அதைத்தான் எதிர்பார்த்தது. அதாவது சத்தமில்லாமல் கழட்டிவிடப் பார்த்தார்கள்!! ஆனால் நம்ம நீதிபதி இது போல் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்? அவர் கடுப்பாகி C.P.I. க்கு எச்சரிக்கை விடுத்து விட்டு வழக்கை செப்டம்பர் 5, 6, 7-ம் தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு விட்டார். அந்தோ பரிதாபம், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ஜனாதிபதித் தேர்தல் முடிந்து விடும்!! நீதிபதியா ? கொக்கா?
இப்பொழுது இதே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே ராசா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது. அந்த நாள்... ஞாபகம்... நெஞ்சிலே... வருகிறதா ? ஹா ஹ ஹா
ராசா ஜாமீனில் வெளியே வருவதைக் கருணாநிதியும் விரும்பவில்லை. கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பான ஒவ்வொரு நிறுவனங்களும் தாம் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பித் தருமாறு கேட்ட போதெல்லாம் ராசா தானே உங்களுடன் டீல் பண்ணிய நபர், அவர் முதலில் வெளியே வரட்டும் என்று கருணாநிதி நிறுவனங்களைச் சமாளித்துக் கொண்டிருந்தார். அதனால் ராசா சிறை வாழ்க்கை கசந்து கொந்தளித்த போதெல்லாம் தனது தூதுவர்களை அனுப்பிச் சமாதானப்படுத்தி வந்தார் கருணாநிதி. ஆனால் இப்பொழுது உள்ள நிலைமையைப் பயன்படுத்தாவிட்டால் தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் வெளியே வர முடியாது என்பது ஒரு வழக்கறிஞரான ராசாவுக்குத் தெரியாதா என்ன?
அதனால் தான் அவர் சரியான நேரத்தில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியே வந்துவிட்டார். இது நிச்சயமாக கருணாநிதிக்கு மகிழ்ச்சி இல்லாத ஒரு விடயமாகவே இருக்கும். இனிமேல் நிறுவனங்களைச் சமாளிப்பது யார்? So, தற்போது ராசாவுக்குக் கிடைத்துள்ள ஜாமீன் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே தோற்றுகின்றது. சுப்பிரமணிய சுவாமியும் ஆரம்பம் முதலே ராசாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி வருகின்றார் என்பதையும் கவனிக்க வேண்டும். 2G ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களின் தொல்லை அதிகமானால் ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் நிலையே ராசாவுக்கும் ஏற்படும் என்று யூகிக்கலாம்.....
ஏனென்றால் ராசாவின் உயிரின் பெறுமதி இரண்டுலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விட ரொம்ப சின்னது !!
..........Wait and See
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}