face bookஇல் அதிக லைக்குகள் வாங்கிய புகைப்படங்கள்

அண்மைக்காலமாக face bookஇல் அதிகமாக பேசப்பட்ட விமர்சனத்திற்கு உள்ளன புகைப்படங்கள்தான் இவை ...face book அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அரசியலில் நடைபெறும் கூத்துக்கள் ,சினிமா விமர்சனங்கள் ,நடிகர்கள் நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் ,சாமியார்களின் விடயங்கள் என சகல விடயங்களுக்கும் பத்திரிகைதான் கேலி சித்திரங்கள் வரைந்து அவற்றை பற்றி கடுமையான விமர்சனம் செய்வார்கள் அதன் பின்புதான் நமக்கு உண்மை புலப்படும் ..ஆனால் தற்பொழுது உலக அளவில் பயங்கர ஆயுதமான மீடிய துறையாகவும் பரிணமித்திருக்கிறது face book இதனால் எதாவது குளறுபடிகள் நடந்தால் முதலில் சாட்டையடி விழும் இடமாக face book காணப்படுகின்றது ..உதாரணமாக நமது சாமியார் இருக்கின்றார் அல்லவா அட அதுதாங்க நம்ம நித்தியானந்தா ...அவர் மதுரை ஆதினமாக தெரிவு செய்யப்பட்டார் என்பது உங்களுக்கே தெரியும் ..அவர் தெரிவு செய்யப்பட்டதும் ...face book அவரை படாத பாடு படுத்திவிட்டது ...இதை விட நம்ம பவர் ஸ்டார் பற்றிய அரிய விடயங்கள் ,why this kolavery பாடலை பிரபலப்படுத்தியது(((தனுஷ் சச்சினுக்கு ஒரு பாடல் அமைத்திருந்தார் அதில் ஒன்றை ஆரம்பத்தில் அவதானித்தேன் total viewers 1500 என்று இருந்தது  ஆனால் லைக் 2500 dislike 500 என்று இருந்தது முழுமையாகப் பார்த்தவர்களே 1500 பேர்தான் ஆனால் 3000 பேர் like ,dislike செய்திருக்கிறார்கள் இது எப்படி சத்தியம் என்று எனக்கு புரியவில்லை இதுவே அவரது கொலவெறி யிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தரவும் )))போன்ற பல விடயங்களை face book தனக்கே உரிய பாணியில் வெளிக்காட்டி உள்ளது ..இத்தனை சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் ஒரு செய்தியை ஆதரிப்பதற்கும் நிராகரிப்பதற்கும் விமர்சிப்பதற்குமான வசதிகள் face bookஇல் இருப்பதுதான் மற்றைய பாரம்பரிய ஊடகத்துறையில் இவ்வாறு நமது கருத்துக்களை உடனுக்குடன் தெரிவிப்பது சாத்தியமற்றது ..இதனால் ஒரு தனி மனிதன் முன்வந்து தனது கருத்துக்களை பலர்முன்னிலையில் முன்வைக்க வழி செய்துள்ளது உதாரணமாக ஒருவர் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு உடனடியாகவே விமர்சனத்தை தனது face book சுவரில் எழுதிவிடமுடியும் இது face book இன் முக்கிய பலமாகும் ..இவ்வாறு face bookஇல் விமர்சனத்திற்கு உள்ளான நொந்து நூடில்ஸ் ஆன புகைப்படங்கள் இதோ (கீழ்வரும் பகுதி  09/05/2012 இல் இணைக்கப்பட்டது மேலும் சில லைக் வாங்கிய போஸ்ட்கள் )
ரசனை முரண்பாடுகள் ...
எமது நாட்டில் மட்டும்தான் why this kolaveri பாடல் ஜெயிக்கிறதும் அன்பே சிவம் மாதிரிப் படங்கள் தோற்பதும் நடைபெறும் .....

......................................................
பிடித்த பெண்ணை எளிதாக பிக் அப் செய்வது எப்படி??? இளைஞர்களுக்கு மட்டும்

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க.

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது. இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}