Mark Zuckerberg கல்யாண வைபோகமே... (facebook)

 facebook founder got married.

facebook  நிறுவனர் மார்க் சக்கர்பேர்க் (Mark Zuckerberg) தனது விக்கட்டை இழந்தார். தனது நீண்டகால தோழியான ப்ரிசில்லா சான் (Priscilla Chan) ஐ சனிக்கிழமை (மே 19, 2012) மணந்தார். பொதுமக்களுக்கு facebook பங்குகளை 20 பில்லியன் டொலருக்கு விற்று தான் மில்லியனர் ஆன மறுநாளே தனது காதலியை திருமணம் செய்தார் அவர். கலிஃபோர்னியா பாலோ அல்ட்டோவில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில், அதிரடியாக, ஒருவருக்குமே அறிவிக்காமல், வெறும் 100நண்பர்கள் மத்தியில் அது நடந்தது. வந்திருந்தவர்களில்கூட பலருக்கு விஷயம் தெரியாதாம். பிரிசில்லா அண்மையில் மருத்துவக்கல்லூரி பட்டம் பெற்றதற்கான party என்று நினைத்துத்தான் போனார்களாம். 

மணமக்களின் favorite உணவகத்திலிருந்து உணவு பரிமாறப்பட்டது. விசேட ஐட்டம் என்ன தெரியுமா? எலி வடிவ சொக்லெட். 9 வருடத்துக்கு முதல் இருவரும் முதன் முதல் dating போனபோது அதைத்தான் மென்றார்களாம். 

இப்போது இவர்கள் இருவரும், Beast சகிதம் தமது தேனிலவை கொண்டாட தயாராகிவிட்டார்கள். பதறாதீர்கள், Beast என்பது இருவரும் ஆசையாய் வளர்க்கும் நாய்க்குட்டி. (அதற்கே பேஸ்புக்கில் 600000 like உடன் ஒரு page உள்ளதப்பா!)


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}