Moog synthesizer ஆக மாறிய Google Doodle




கூகிள் டூடில் இன்று ஒரு விசேச தினத்துக்காக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தமுறை சாட்டு விஷேசமாக. வெறும் படமாகவோ, அனிமேஷனாகவோ இல்லாமல் ஒரு சிந்தஸைசராகவே மாற்றப்பட்டுளது. சிந்தஸைசர் என்பது இசைத்துணுக்குகளை மெருகேற்றி அதனை கோர்க்கும் கருவி.

ஏனெனில் சிந்தெஸைசர் என்கிற கருவிக்கு இலத்திரனியல் வடிவம் கொடுத்து, தொழில்நுட்பரீதியாக அதை மேம்படுத்திய ரொபேர்ட் மூக் (Robert Moog) உடைய பிறந்தநாள் இன்று. 1934 இதே நாள் பிறந்த (மே 23) இவர், பௌதிகவியலிலும், இலத்திரனியலிலும் பட்டம் பெற்றவர். மேலும் 2 கௌரவ உட்பட்ட 3 கலாநிதி (doctor) படங்களும் பெற்றவர். எல்லாமே ஒரு சிந்தஸைசருக்காக. 

மூக் - அவர் வடிவமைத்த சிந்தஸைசருடன்

1964 ஆம் ஆண்டு இசைக்கலைஞர்கள் தமக்குத் தேவையான எந்த உபகரணத்தினதும் ஒலியை பெறக்கூடியதான ஒரு கருவியை இவர் திட்டமிட்டார். அதை அவர் தயாரித்தபோது அது உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. முதன் முதலாக The Beatles இசைக்குழுவினர் அதனை தமது Abby Road என்ற அல்பத்தில் பயன்படுத்தினர். மேலும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த A Clockwork Orange என்ற திரைப்படத்திலும் இது பயன்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறாக பிரபலமடைந்த இவரது சிந்தஸைசர் மூலம் இவர் பெரும் பணக்காரரானார். ஓரிரு திருமாங்களும் செய்துகொண்ட இவர், கடைசிவரை இலத்திரனியல் இசையில் புதுமைகளை செய்யும் முயற்சிகளிலேயே ஈடுபட்டிருந்த இவர், 2005 ஏப்ரல் 28 ஆம் திகதி Brain Tumour நோய் காரணமாக உயிரிழந்தார். Grammy விருதுகளின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட்ட பல விருதுகள் இவரைத் தேடி வந்துள்ளன. இவரது வாழ்க்கை, Moog என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு electronic  keyboard இல் நாம் வாசிக்கும் இசைத்துணுக்குகள் மின்னழுத்தங்களாகவே கடத்தப்படும் என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு கடத்ப்படும் மின்னழுத்தங்களில் (voltage) ஏற்ற இறக்கங்கள் செய்தால், அந்த இசைத்துணுக்கின் ஒலி வடிவம் மாற்றமடையும் என்கிற எளிய சிந்தனைதான் மூக் இனுடைய கருவி. இந்த எளிய எண்ணத்தை மேம்பட்ட வடிவம்தான் AR ரஹ்மான் உள்ளிட்ட பல இலத்திரனியல் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தும் இன்றைய நவீன சிந்தஸைசர். பரவலாக நாம் பயன்படுத்தும் keyboard (organ) களில் button காலை தட்டி பலவித இசைக்கருவிகளின் இசையை பெறுகிறோமே, அதுகூட மூக் சிந்தஸைசர் உடைய வடிவம்தான்.



மூக் வடிவமைத்த சிந்தஸைசரின் எளிய வடிவம்தான் இன்றைய கூகிள் டூடில். அதை ஒருமுறை பயன்படுத்திப் பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}