கார்ல்மார்க்ஸ்-01


சேவியத் உடைந்து பல நாடுகளாக சிதறிய பொழுது மார்கஸ்சின் தத்துவம் பொய்த்துவிடப்போகிறது என்றுதான் பலரும் எண்ணி இருந்தார்கள் ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் ஆயிரம் ஆண்டுகள் சிந்தனையாளர்களின் வரிசையில் முதலாம் இடத்தில் நிற்பவர் கார்ல் மார்க்ஸ் இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு முதலாளித்துவ  நாட்டின் செய்தி நிறுவனமான B.B.C தான் இக்கருத்துக்கணிப்பை நடாத்தி இதை வெளியிட்டது ..ஏழைகளை சுரண்டிவாழும் முதலாளித்துவம் அழிவதற்கான தீயை தன்னகத்தே கொண்டவர் மார்க்ஸ் 
உலகத் தொழிலளர்க்ளே ஒன்று படுங்கள் உங்க்களிடம் இழப்பத்ற்கு ஒன்றும் இல்லை பெறுவதற்கு ஒரு புதிய பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற துவக்கத்துடன் தன்னுடைய பொதுவுடமை அறிக்கையை வெளியிட்டவர் கார்ல் மார்க்ஸ் அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக பொதுவுடமையின் முக்கிய மூலவேராக இருந்தவர் கார்ல் மார்கஸ் ...உலகின் மக்கள் தொகையின் பெரும் பகுதி மக்களின் தலை விதியை உன்னதமான முறையில் மாற்றி அமைத்தவர் ..

கார்ல் மார்க்ஸ் உருவாக்க  முயன்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு 1889  ஜூலை 14 அன்று பரிசில் (ஃபிரான்ஸ்) நடைபெற்றது.

 பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல தொழிலாளர் பிரதிநிதிகள் 

கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கார்ல் மார்க்ஸ் சொன்ன எந்த

 தொழிலாளர் ஆகினும் 8 மணிநேர உழைப்பு என்ற கொள்கையை 

உலகமயமாக்குவதாக தீர்மானிக்கப்பட்டது அதே கூட்டத்தில் மே முதல் 

திகதியை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் தத்தமது இயக்கங்களை

 நடத்திட, கொண்டாட ஒரு தினமாக தெரிவு செய்தார்கள்.அதுதான் நாம்

 கொண்டாடும் மே தினம் 

பிறப்பு: 05-05-1818.
தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.
தாய்: ஹென்ரிட்டா.
பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.
மதம்: யூத மதம்.
சொந்த நாடு: பிரெஞ்சு.
பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.
உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

இவரது தந்தை கிறீஸ்தவராக மாறிய யூதர் 3 வது மகனாகப்பிறந்தார் மார்க்ஸ் ...பாடசாலையில் மிகச்சிறந்த மாணவராக தன்னை நிலை நாட்டிக்கொண்டார் ...பெர்லின் பல்கலைக்கழகத்தில் சட்டம் வரலாறு மெய்யியல் போன்றவற்றை கற்றார்  யென பல்கலைக்கழகத்தில் p.h.d பட்டம் பெற்றார் 23 வயதிலேயே அவரது அறிவாற்றல் அவரது நண்பர்களையும் அவரை சார்ந்தவர்களையும் வியக்க வைத்தது பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது.

இவரது பாடசாலைப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவன்தான். இவருக்கு சிறுவயதிலேயே வீட்டில் வால்டர்,ரூஸோ,இம்மானிவேல் போன்றோரின் தத்துவ நூல்களை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.இவரது பாடசாலையில் அப்போதிருந்த ஏனைய பாடசாலைகளைப் போலவே புனித நூல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மதமே பிரதானம் எனவும் மதம் விதிக்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்பணிந்துநடப்பதே ஒரு மனிதனின் கடமைஎன்று போதிக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு திறமையிருந்தும் அவர்களால் நூல்களை மீறி கற்பிக்க முடியவில்லை. கல்வி முறை மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பயன்படாமல் ஆளுமையை குறைக்கும் செயலை செய்தது.சுருக்கமாக கூறினால் ஜடப்பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக தொழிற்பட்டன.
மார்க்ஸ் அனைத்துப்பாடங்களிலும் சராசரி புள்ளிகளைப்பெற்றார். வரலாறு பாடத்தில் மிக்குறைவான புள்ளிகளைப்பெற்றார்.இப்பாடத்தில் இவரது விடைத்தாளில் மார்க்ஸ் எதை எழுத வேண்டுமொ அதை விடுத்து கூடுதலான பல விடயங்களை குழப்பமாக,கடினமான சொற்பிரயோகத்துடன் விளக்கப்பட்டிருன்தன.இதனால் இவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் விடைத்தாளின் மேல் ஏறியிருந்து பிழை போட்டார்கள். அத்துடன் மார்க்ஸ் கிறுக்கலான கையெழுத்துடையவராகவும் கடினமான சொற்பிரயோகத்தை பயன்படுத்துபவராகவும் மிகையான அலங்கார நடையில் எழுதுபவராகவும் நோக்கப்பட்டார்.
ஆனால் எதிர்காலத்தில் உலக சரித்திரத்தை மாற்றும் படைப்பை நிகழ்த்தப்போகும் ஒருவரின் விடைத்தளைத்தான் நாம் திருத்திக்கொண்டிருக்கின்றோம் என்ற விடயம் அவர்களுக்கு தெரியாது.
பள்ளிப்பாடங்களிற்கும் புறஉலக யதார்த்தத்திற்குமிடையே முற்றிலும் தொடர்பில்லை என்பதை மார்க்ஸ் சிறிதுகாலத்தில் நன்றாக புரிந்துகொண்டார்.


1843 இல் தடை செய்யப்பட்ட ரைனிஷ் ஸைத்துங்  என்னும் எதிர்க்கட்சி செய்தித் தாளின் ஆசிரியராகப் பணியாற்றினார் ஜெனி என்ற பெண்ணை காதலித்தார் ஜெனி பிரபுவின் மகள் ஆதலால் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர் மார்க்ஸ் தனது 17  ஆவது வயதில் காதலிக்க தொடங்கினார் 29 ஆவது வயதில் ஜெனியை திருமணம் செய்தார் ..

மார்க்கஸ்சின் வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி ஜெனியின் பங்களிப்பு மிகப்பெரியது ...சாதாரண மனைவியைப்போல் இல்லது அவரது கொள்கைகளுக்கு உந்துதலாகவும் அதரவகவும் நின்றவர் ..இன்னல்கள் வறுமை பாதுகாப்பின்மை இவற்றுடன் சிறைவாசத்தையும் மார்கஸ்சுக் காக தாங்கிக்கொண்டவர் ..என்றுமே ஜெனி நிலைதடுமாறவில்லை பிரான்ஸ் ,பெல்ஜியம் ,ஜெர்மனி போன்ற ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெற்ற புரட்சி இயக்கங்களில் பங்கு பற்றியதால் ஒவ்வொரு நாடாக நாடு கடத்தப்பட்டார்  ஈற்றில் பிரெஞ்சு அரசாங்கம் உடல் நலத்திற்கு ஒவ்வாத இடத்திற்கு நாடு கடத்த முயற்சித்த போது பணிய மறுத்து லண்டன் சென்று குடியேறி 35 ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே வசித்தார் ..

எங்கெல்ஸ் என்ற தனது ஆயுள் கால நண்பனை மார்க்ஸ் 1844 ஆகஸ்ட் இல் சந்தித்தார் இருவருக்கும் பல விடயங்களில் கருத்து ஒற்றுமை இருந்தது 

இவர்களைப்பற்றி லெனின் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் "தமது முன்னோரிடையே காணப்பட்ட எந்த நெஞ்சுருக்கும் கதையையும் மீறும் உறவு கொண்ட அறிஞர்களும் போரளிகளுமான இவ்விருவராலேயே தமது தமது அறிவியல் உருவாக்கப்பட்டது என பாட்டாளி வர்க்கம் சொல்லக்கூடும் "

எங்கெல்ஸ் எப்போதுமே தன்னை இரண்டாம் இடத்திற்கு ஒதுக்கிக்கொள்பவரகவும் தன்னலமற்றவராகவுமே காணப்பட்டார் ...
"மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் நான் ஒத்து ஊதுகின்றவராகவே இருந்தேன் ..இதில் நான் சிறப்பு பெற்றுள்ளேன் மார்க்ஸ் என்ற நல்ல பிரதம வித்துவான் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என எங்கெல்ஸ் கூறி உள்ளார் ...
லண்டனில் வாழ்ந்த காலத்தில் தனது உடைகளை அடகு வைக்கும் அளவிற்கு வறுமைப்பட்டார் ஒருமுறை வீட்டை விட்டு விரட்டப்பட்டார்
1852 செப்டம்பர்  8 இல் தனது நண்பன் எங்கெல்ஸ்சுக்கு இவ்வாறு கடிதம் எழுதினர் "எனது மனைவிக்கு உடல் நிலை சரி இல்லை எனது மகளுக்கும் வீட்டை பராமரிப்பவருக்கும் எதோ நரம்புக்காச்சல் மருத்துவரை அழைக்க இயலவில்லை சென்றவாரம் முழுவது எனது குடும்பத்திற்கு பாணும் உருளைக்கிலன்குமே கொடுத்தேன் இன்று மேலும் அவற்றை வங்க முடியுமோ தெரிய வில்லை "என்று குறிப்பிட்டிருந்தார் 
தனது ஒரே ஒரு மகள் இறந்ததும் தன் நண்பருக்கு மீண்டும் கடிதம் எழுதினர் "இந்நாட்களில் நான் அனுபவித்த மிகையான துன்பங்களுக்கு இடையேயும் உன் நட்பும் நாம் இவ்வுலகத்திற்கு செய்ய வேண்டிய அறிவார்ந்த பணியும் இருக்கிறது என்ற நம்பிக்கையுமே என்னை நிமிர்த்தி வைத்துள்ளது" என்று எழுதினார் நியூ யார்க் டெய்லி பத்திரிக்கைக்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார் ஆனால் போதிய பலனளிக்கவில்லை ..

தொடரும்..

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}