வித்தியாசமான கார்ட்கள்-01

Business cards ஒரு தனிப்பட்ட நபரைப்பற்றிய அல்லது நிறுவனங்களைப்பற்றிய அறிமுகங்கள் ,விபரங்கள் என்பவற்றை தெரிவிப்பதற்கும் நினைவு படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.இதில் பொதுவாக விலாசம்,ஃஃபோன் நம்பர்,ஈ மெயில் போன்றவை பொறிக்கப்பட்டிருக்கும்.வழக்கமாக ஒரு செவ்வக வடிவ உருவில் தான் இவ்வாறான கார்ட்களை நம்மவர்கள் பயன்படுத்துவது வழக்கம்...ஆனால் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக்கவரும் விதத்தில் வித்தியாசமான வடிவில் ,நிறங்களில் இவ்வாறான கார்ட்களை உருவாக்குகின்றன.உதாரணமாக தளபாடங்களை தயாரிக்கும் நிறுவனம் தனது கார்ட்டை கதிரை போல் தயாரித்துள்ளது..அவர்களது கார்ட் சாதாரணமான கார்ட்டாக இருக்கும் அந்த கார்ட்டை பிரித்து நாம் அதை கதிரை போல் உருவாக்கிக்கொள்ள முடியும். மரவேலைகளாய் செய்யும் நிறுவனங்கள் தமது கார்ட்டை மரத்திலேயே செய்து வழங்குகின்றன..நாய் பிஸ்கட் செய்யும் நிறுவனம் தனது கார்ட்டை நாய் பிஸ்கட் போலவே செய்து வழங்குகின்றது...ஒரு தயாரிப்பு/ஒரு நிறுவனத்திற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியமோ அது போலத்தான் அவர்கள் வழங்கும் கார்ட்களும் ஏனென்றால் நம்முடன் இவை கூடவே இருந்து அவற்றை நினைவு படுத்தும் வேலையை செய்கின்றன.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}