நோஸ்ரடாமஸ்ஸின் தீர்க்கதரிசனங்கள் -02


உலகின் மிகப்பெரும் தீர்க்கதரிசியான நொஸ்ரடாமஸ் எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றையும் பிரபலங்களை பற்றியும் முன்பே கூறி உள்ளார் முதற் பதிவில் நெப்போலியன் , டயானா டவர் உடைதலைப் பற்றி  இவர் முன்பே கூறிய விடயங்களை பார்த்தோம் 


ஹிட்லர் ,டயானாவின் மரணங்களின் போது வீரகேசரியில் ...இவர் எவ்வாறு எதிர்காலத்தை கணித்தார் தெரியுமா ?
நள்ளிரவில் நிசப்தமான நேரம் செப்புத்தகடு போர்த்திய ஆசனத்தில் அமர்ந்து நீர் நிரம்பிய முக்காலி ஒன்றை முன்னே வைக்கிறார் அந்நீர் தெளிவற்றதாகும்வரை பார்க்கிறார் அதில் எதிர்கால நிகழ்வுகள் இவருக்கு  சலனப்படங்களாக தோன்றுகிறது ..பின்னர் அவற்றை குறிச் சொற்களுடன் பாடல் வடிவில் எழுதுகின்றார் ...
ஹிட்லர் ...

வரலாற்றில் ஹிட்லர் என்னும் பெயர் சற்று தடித்த எழுத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது எனவே ஹிட்லரை இவர் கருத்தில் கொண்டதில் ஆச்சரியம் இல்லை 
மிருகங்கள் மிகுந்த பசியுடன் ஆற்றைக் கடக்கின்றன ...போர்க்களத்தில் ஹிட்லருக்கு பாதகமாகவே இருக்கும் ..ஜேர்மனிய குமரன் சட்டத்தை அறிய மாட்டன் சிறப்பு மிக்க ஒருவனை கூண்டில் அடைப்பான் 


"Beasts ferocious from hunger will swim across rivers:  
The greater part of the region will be against the Hister,  
The great one will cause it to be dragged in an iron cage,  
When the German child will observe nothing. "
இதைவிட நொஸ்ரதாமஸ் ஹிட்லரின் பெயரை முன்பே அண்ணளவாக எடுத்துக்கூறி விட்டார் "Hister"
இங்கு ஜேர்மனிய குமரன் =ஹிட்லர்


அந்த மனிதன் Nuremberg  Augsburg பஸ்லே பகுதிகளைக் கைப்பற்றுகிறான் கொலோனில் இருந்து பிராங்க்பர்ட்டை அவன் மீண்டும் எடுத்துக்கொண்டு விடுகிறான் Flanders வழியே பிரான்ஸ்சுக்கு போகின்றான் 


When the greatest one will carry off the prize  
Of Nuremberg, of Augsburg, and those of Bвle  
Through Cologne the chief Frankfort retaken  
They will cross through Flanders right into Gaul. 


ரோமின் அதிகாரம் வீழ்ச்சியடையும் பலம் பொருந்திய அண்டை நாட்டுக்காரன் அங்கெ கால் வைப்பான் மறைமுக வெறுப்பும் உள்ளநாட்டு பிரச்சனைகளும் அந்த கோமாளிகளின் முட்டாள்தனமான காரியங்களை தாமதப் படுத்தும் 

"The Roman power will be thoroughly abased,  
Following in the footsteps of its great neighbour:  
Hidden civil hatreds and debates  
Will delay their follies for the buffoons." 


முசோலினி இத்தாலியை ஆண்ட பொழுது ஜெர்மனிதான் பலம் பொருந்திய நாடு முசோலினி ஹிட்லரை பின்பற்றியவன் 
அவர்களின் ஆரிய புனிதம் உலக ஆதிக்கம் ஆகிய இரண்டுமே முட்டாள் தனமானவை  இதனால் இவர்களை கோமாளிகள் என்கிறார்

முற்றுகை இடப்பட்டவர்களின் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தால் மூடப்பட்டிருக்கின்றது துரோகிகள் உயிரோடு சமாதியடைவர்கள்The fortresses of the besieged shut up,  
Through gunpowder sunk into the abyss:  
The traitors will all be stowed away alive,  
Never did such a pitiful schism happen to the Saxons. 

செய்யுளில் saxons என்ற வார்த்தை இருக்கின்றது இது ஜேர்மனியரை குறிக்கின்றது ஹிட்லர் (தற் கொலை)அவருடைய சகாக்கள் பதுங்கு குழியில் இறந்து விடுவார்கள் அனால் நேச நாடுகளின் குண்டு வீச்சுக்கு இலக்காகிறார்கள் 

ஆண்மையுள்ள பெண்ணொருத்தியால் வடக்குப் பகுதி சிரமப்படும் ஐரோப்பாவும் உலகமும் சினமடையும் ஹங்கேரியில் வாழ்வா சாவா என்ற நிலை ஏற்படும் 
Great exertions towards the North by a mannish women 
to vex Europe and almost all the Universe.  
The two eclipses will be put into such a rout  
that they will reinforce life or death for the Hungarians. 

இங்கு ஜெர்மனி விரிவடைவதைப் பற்றி நொஸ்ரடாமஸ் குறிப்பிடுகின்றார் 
ஆண்மைத்தனமுள்ள பெண் "mannish women " என்பது germina வைக் குறிக்கும்

நொஸ்ரடாமஸ் தனது மகன் சீசர்ருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் கடிதத்தினூடாக அதுவும் சங்கேத வார்த்தைகளினூடாக எச்சரித்திருந்தார் ..
தனது தந்தையின் பெயரை தவறாக பயன்படுத்த முயற்சி செய்வாய் ஆனால் அது உனக்கு நன்மை பயக்காது ஆனால் மகன் அதை அலட்சியப்படுத்திவிட்டார் தனது தந்தையைப் போலவே எதிர்வுகூறவேண்டும் என்ற ஆசையில் விவாரிஸ் நகரம் அழியப்போகின்றது என்று கூறிவிட்டார் மூன்று நாட்களில் அழிந்துவிடும் என்று கூறினார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை பின்னர் இவரே நகருக்கு தீ வைக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டு படையினரால் கொல்லப்பட்டார் 1982 இல் இத்தாலியின் பிரபல பத்திரிகையாசிரியர் Enza Massa என்பவர் ரோமில் உள்ள  Italian National Library யில் தவறுதலாக ஒரு புத்தகத்தைக் கண்டு பிடித்தார் அதில் Nostradamus Vatinicia Code.என தலைப்பிடப் பட்டிருந்தது இது 13 - 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது இது 80 க்கும் மேற்பட்ட வேட்டர் கலர் வரைபடங்களைக் கொண்டது இது நொஸ்ரடாமஸ்சின் மகனான César de Nostredame ஆல் ரோமிற்கு வழங்கப்பட்டது இது நொஸ்ரடாமஸ்சால் எழுதப்படவோ வரையப்படவோ இல்லை அவரது மகனால் அவரது எதிர்வுகூறல்களை விளக்குவதற்காக வரையப்பட்டவை இது நொஸ்ரடாமஸ் மறைந்த பின்னர்தான் வெளியிடப்பட்டது அவர் 1566 இல் மறைந்து விட்டார் இதில் 1629 என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது இதில் உள்ள வரை படங்கள் யாவும் டாவின்சி யின் படங்களைப் போல ஒவ்வொரு  காரணத்தை மறை முகமாகக் கூறுபவை இந்தப் படங்கள் நொஸ்ரடாமஸ்சின் எதிர்காலத்தை பற்றிய எதிர்வு கூறல்களை படங்கள் வாயிலாக கூறுபவை எனவே இதுவும் ஒவ்வொருவரின் விளங்கும் தன்மைக்கேற்ப பலவாறு விளங்கிக்கொள்ளப்படுகின்றது .


அதில் வரையப்பட்ட ஓவியங்கள் 

அரிய ஓவியங்கள் அடங்கிய வீடியோ 
தொடரும் >>>>>>>
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}