4 வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட கொலையை அம்பலமாக்கிய நிகழ்ச்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30க்கு நடைபெறும் நிகழ்ச்சிதான் "சொல்வதெல்லாம் உண்மை" இன்நிகழ்ச்சியில் குடும்பப்பிரச்சனைகள்,இரு சமூகத்தினரிடையே ஏற்படும் பிரச்சனைகள்,காதல் விவகாரங்கள் போன்றவை நேரே அவ்விரு பிரிவினரையும் அழைத்து விவாதித்து சட்ட ஆலோசனைகள்,தீர்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சன் நியூஸ் புகழ் நிர்மலா பெரியசாமி .இன் நிகழ்ச்சியில் அண்மையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது . அந்நிகழ்ச்சியில்  காதல் விவகாரத்திற்காக அழைக்கப்பட்ட  விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பார்க்கவி தனது தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டையும் கொலைக்குற்றச்சாட்டையும் தெரிவித்தார். விழுப்புரம் குச்சிப்பாளையத்தை சேர்ந்த முருகன்,ராஜெஸ்வரி தம்பதியரின் மகள்தான் இந்தப்பார்க்கவி .தனது தந்தை சேகர்,லாவன்யா,சிலம்பரசன் ஆகிய மூவரையும் கொண்றார் இதை நான் வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னையும் அதே மாதிரிக்கொல்வேன் என்று தன்னை மிரட்டியதாகவும் இதற்கு தனது தாயும் உடந்தை என்றும் கூறினார். நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த முருகனின் நண்பரான சேகர் என்பவரின் மனைவி ஜீவாஇந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். ஜீவாவின் கணவர் சேகர், மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய் உள்ளார்கள் . லாவன்யா,சிலம்பரசன் என்பவர்கள் காதல் விவகாரத்தால் வீட்டைவிட்டு ஓடி சென்று முருகனிடம் தஞ்சம் புகுந்ததார்கள். அவர்களிடம் அதிக பணம் நகை என்பன இருந்திருக்கின்றது.இதனால் அவர்களை கொலை செய்ததாகவும் தேடிவந்த சேகரையும் கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வீட்டில் பின்னால் உள்ள கிணற்றில் அவர்களைப்புதைத்து வைத்துள்ளார்கள் என்றும் பார்க்கவியால் கூறப்பட்டது .இதனால் விழுப்புரம் தாசில்தார் ராஜேந்திரன், துணை பொலிஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் குச்சிப்பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பார்க்கவி கூறிய இடத்தில் தரைக்கிணற்றை தோண்டிய போது 3 வரது எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.இவற்றை உறுதி செய்த பின் முருகன் கைது செய்யப்பட்டார்.


முருகன் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைக்கொடுத்துள்ளார். அதில் அவர்  காம வெறியின் காரணமாகவே தான் இக்கொலைகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.


அவரது வாக்குமூலம்
நான் சோபா செய்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். என்னிடம் நல்லான்பிள்ளை பெற்றால் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சோபாக்களை வாங்கி விற்று வந்தார்.
தொழில் முறையில் நாங்கள் 2 பேரும் நல்ல நண்பர்கள் என்பதால், நான் அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவரது மகள் லாவண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
லாவண்யாவை செக்சியாக வர்ணிப்பேன். அவருக்கு அது ரொம்ப பிடிக்கும். இதனால் எங்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டது.
லாவண்யா வீட்டில் தனியாக இருக்கும்போது அவளுடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன். ஒரு நாள் எங்கள் விவகாரம் சேகருக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட்டது. இதனால் அவரது வீட்டிற்கு செல்வதை குறைத்துக் கொண்டேன்.
இந்த நிலையில் சேகரிடம் சோபா விற்கும் வேலை பார்த்த சிலம்பரசன் என்ற வாலிபர் லாவண்யாவை காதல் வலையில் வீழ்த்தினார். சிலம்பரசன் – லாவண்யா காதல் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் சேகர் ஆத்திரமடைந்தார்.
தன்னிடம் வேலை பார்ப்பவனுக்கு பெண்ணை கொடுப்பதா? என்று கோபப்பட்ட அவர், லாவண்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்.

இதற்கிடையே சிலம்பரசனும் – லாவண்யாவும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். அடைக்கலம் தேடி எனது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு லாவண்யாவை பார்த்ததும் அவள் மீது ஆசை அதிகரித்தது. அடைக்கலம் கொடுப்பது போல் நாமும் அனுபவிக்கலாம் என்ற திட்டத்துடன் காதல் ஜோடிக்கு தஞ்சம் கொடுத்தேன்.
சிலம்பரசன் வெளியே செல்லும் நேரத்தில் லாவண்யாவுடன் உல்லாசம் அனுபவித்தேன். இது எனது மனைவி, மகளுக்கு தெரியவந்தது. காதல் ஜோடி 3 மாதம் என் வீட்டில் இருந்தனர்.
இந்நிலையில் காதல் ஜோடியை தேடி சேகர் வந்தார். என்னிடம் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு தகராறு செய்தார். அன்று இரவு அவரை சமாதானப்படுத்தி மது விருந்து வைத்தேன். நான், சேகர், சிலம்பரசன் ஆகியோர் சேர்ந்து குடித்தோம்.
ஏற்கனவே திட்டமிட்டபடி சிலம்பரசன் வாங்கிவந்த விஷத்தை மதுவில் கலந்து சேகருக்கு கொடுத்து கொன்றோம். அவரது உடலை வீட்டில் உள்ள கிணற்றில் வீசி புதைத்து விட்டோம்.
இருதினங்கள் கழித்து சேகரை தீர்த்துக்கட்டிய விவகாரம் லாவண்யாவுக்கு தெரியவந்தது. என்னுடைய அப்பாவை அநியாயமாக கொன்றுவிட்டீர்களே, பொலிஸில் சொல்வேன் என்று மிரட்டினாள். அன்று இரவு மீண்டும் மது விருந்து நடந்தது.
நானும், சிலம்பரசனும், மது அருந்திவிட்டு லாவண்யாவுடன் இருந்தோம். அவருக்கு மது ஊற்றி கொடுத்தோம்.
அவர் போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும்போது ஷோபா கவர் கட்ட பயன்படும் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் அவர் உடலையும் கிணற்றுக்குள் புதைத்தோம். 2 கொலைகள் பற்றியும் பொலிஸில் சொல்லிவிடுவேன் என்று கூறி சிலம்பரசன் என்னிடம் பணம் பறிக்க தொடங்கினான்.
இதுபற்றி எனது மனைவியிடம் தெரிவித்தேன். சிலம்பரசன் உயிரோடு இருந்தால் நம்மை காட்டிகொடுத்து விடுவான். எனவே அவனை தீர்த்துகட்டுவது என்று முடிவு செய்தோம்.
அதன்படி நானும் எனது மனைவி ராஜேஸ்வரியும் சேர்ந்து சிலம்பரசனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றோம். சிலம்பரசனின் உடலை மட்டும் குடிநீர் குழாய் அருகில் தனியாக புதைத்தோம்.
இது எனது மகள் பார்கவிக்கு தெரிந்துவிட்டது. எனவே நான் அவளை கண்காணிக்க தொடங்கினேன். அப்போது பார்கவி எனது மகள் என்பதையும் மீறி செக்ஸ் ஆசை ஏற்பட்டது. பலமுறை அவளிடம் தவறாக நடக்க முயன்றேன். அவள் தப்பி விட்டார்.
இதற்கிடையே அவர் சதீஷ் என்ற வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதையடுத்து எப்படியாவது பார்கவியை செக்சுக்கு பணியவைக்க முயன்றேன், முடியவில்லை.
அவரது மனைவி ராஜேஸ்வரி சற்று முரண்பாடாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனது கணவர் முருகனும், சேகரும் நண்பர்கள். சேகரின் மகள் லாவண்யா, சிலம்பரசன் என்ற வாலிபரை வீட்டை விட்டு ஓடி காதல் திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் ஏராளமான பணம் ,நகைகளுடன் எங்களிடம் அடைக்கலம் தேடி எங்களிடம் வந்திருந்தார்கள்
அப்போது எனது கணவர் லாவண்யா, சிலம்பரசன் ஆகியோருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் வீட்டிற்கு முன்பு உள்ள கிணற்றில் புதைத்தார்.
காதல் ஜோடி தங்கியிருந்த தகவல் அறிந்து லாவண்யாவின் தந்தை சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரையும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து எனது கணவர் கொலை செய்தார்.
அவரது உடலை வீட்டில் உள்ள குடிநீர் குழாய் அருகில் புதைத்தார். இதுபற்றி வெளியில் சொன்னால் எங்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனால் இந்த சம்பவம் குறித்து நாங்கள் வாய் திறக்கவில்லை.
உறவினர்களிடம் லாவண்யாவையும், சிலம்பரசனையும் அழைத்துக்கொண்டு சேகர் சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடினார். அதை அவர்கள் அப்படியே நம்பிவிட்டனர்.
4 வருடங்களுக்கு முன்னால் நடந்த கொலைக்கு ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக தீர்ப்புக்கிடைத்துள்ளது.




------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}