ஃப்ரெண்ட் ரிக்குவஸ்ட் ஃப்ரொம் லோர்ட் முருகா


முகப்புத்தகத்தில் ஆரம்பகாலத்தில் மனிதர்களிடமிருந்துதான் request கள் வரும் ஆனால் தற்பொழுது செல்லாத்தா மாரியாத்தா மங்காத்தா.முருகன் பிள்ளையார் என பலரிடமிருந்து request கள் வருகின்றன இவ்வாறான account களில் ஒரு முருகன் படத்தைப்போடுவார்கள் அதற்கு 80 லைக்குகள் அத்துடன் "ஆரோகரா" என்ற கொமன்ட் வேறு...
அட லைக் பண்ணினால் முருகன் "குழந்தாய் உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கவாபோறார்? கடவுள்மீதிருக்கும் பயம்தான் இதற்கு காரணம் எண்று நினைக்கின்றேன்...கோவிலுக்குள் இருக்கும் கடவுளுக்கு பயப்படலாம் ஆனால் ஃபேஸ்பூக்கில் இருக்கும் கடவுளுக்கு நாம் பயப்படத்தேவையில்லை விவேக் ஒரு படத்தில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது பைக் ஓட்டுபவர் ஒவ்வொரு கோவிலிலும் வித்தியாசம் வித்தியாசமாக வணங்குவார்...நம்மில் பலரும் இவ்வாரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது இதைத்தான் செய்கின்றோம்..வாகனத்தில் சென்றுகொண்டே கண்களைமூடிக்கொண்டு கிஸ் பண்ணி வழிபடுதல் வாயையும் நெஞ்சையும் மாறி மாறி தொட்டு வழிபடுதல்...கிரிக்கெட்டில் பந்தை பிடிப்பது போல வழிபடுபவர்களையும் பார்த்து இருக்கின்றேன்...விட்டால் புதுசு புதுசா அறிமுகப்படுத்துராங்கள் போகிற போக்கைப்பார்த்தால் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது வழிபடுவது எப்படி என்று புத்தகம் வெளியிடுவார்கள் போல...
விவேக் தனது காமடியில் இப்படி கும்பிட்டு கடவுள் வழிபாட்டை அவமானப்படுத்தாதீர்கள் என்று கூறியிருப்பார்...அப்படியான அவமானப்படுத்தல்தான் இதுவும் இப்படி வழிபடுவதாயின் பூ எதற்கு மந்திரம் எதற்கு ஐயர் எதற்கு? இவாறு account வைத்திருப்பதால் கோவிலை வேண்டுமானால் பிரபலப்ப்படுத்தலாம் அதற்காக கடவுளைபிரபலப்படுத்தலாம் என்று மொக்கை போடக்கூடாது...காலாகாலாமாக விளம்பரமில்லாமல் பிரபலமடைந்தவர் அவர்


வீதியில் அவசரமாக சென்றுகொண்டிருக்கும் போது வலுகட்டாயாமாக எமக்கு ஒரு துண்டுப்பிரசுரத்தை திணிப்பார்கள்...வாசித்தால்....ஒரு பாம்பு வந்தது அது பெண்ணாக மாறியது என்று ஒரு பெரிய கதை இருக்கும் அத்துடன் நமக்கு ஒரு எச்சரிக்கை..இதைக்கிழித்துப்போட்ட முனுசாமி ரத்தம் கக்கி செத்தார்...500 ப்ரின்ட் போட்ட ராமசாமி அமெரிக்க ஜனாதுபதியானார் எண்று இருக்கும் அது கைத்தொலை பேசிகள் ஊடாக குறுந்தகவல்களாகவும் சென்று தற்பொழுது பதிவர்கள்,ஃபேஸ்பூக்வரை  வந்துவிட்டது என்பதுதான் கொடுமை...அதை நான் இக்காலத்திற்கேற்றவாறுமாற்றி இருந்தேன்...


பரம பக்தர்களே!
ஆனைமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவிலில் ஒரு அற்புதம் நடந்தது. ஒரு நாள் பூசாரி பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒரு பாம்பு வந்தது. அதை கண்டு பூசாரி பயப்பட்டார். அது ஒரு பிராமண அவதாரம் எடுத்து தர்மத்தை யார் கெடுக்கிறார்களோ அவர்களை அழிப்பேன். யாரவது என்னுடைய பெயரில் 1000 போஸ்ட்,ஷேர்  தமது பேஸ் பூக்கில்  வெளியிடுகிறார்களோ அவர்கள் நினைத்ததை 22 நாட்களில் தீர்த்து வைப்பேன். ஆனால் போஸ்ட் செய்வதை  இன்று நாளை என கழித்தால் அதிக கஷ்டத்தை கொடுப்பேன் என்று அந்த நாகதேவதை விஷயத் see more


நைனை  நாகபூஸனி அம்மன் தேவஸ்தானம் தாம் யாரையும் பணம் சேகரிக்க அனுப்பவில்லை யாராவது நாகபூஸனி அம்மன் பெயரில் வந்து பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் என்று அறிவித்தது..ஆனால் இவ்வாறு பலர் பணம் வசூலிக்கின்றார்கள்..ஒரு முதியவர்தான் இவ்வாறு பணம் வசூலிக்கின்றார் வீதியில்  நின்று கூப்பிடுவார் வாசலுக்கு சென்றவுடன் இவர் செய்யும் முதல் வேலை நமது கைகளில் திருனீறை திணிப்பது அத்துடன் பணம் கேட்பது இவர் செய்த தவறு ஒரு மாதத்தில் மூண்று தடவைகளுக்கு மேலாக ஒரெ வீட்டில் இவாறு வந்து கேட்டதுதான் பணம் கொடுக்காவிட்டால் தம்பி விரலுக்கேத்த வீக்கம் தம்பி..கடவுளோட விளையாடக்கூடாது என்று பயப்படுத்துவது....அட போய்யா என்று நான் வந்து விட்டேன்
ஆனால் எனது உறவினர் ஒருவர் ஆர்வக்கோளாறில் வீடிற்குள் அவரை அழைத்து சாத்திரம் கேட்டிருக்கின்றார் முடிந்ததும் அவர் 5000 ரூபாய் கேட்டிருக்கின்றார் இவர்கள் பணம் அதிகம் எண்று கூற "ஏய் உன்ர வீட்டுக்கு கெட்டது நடக்கப் போகுது" அது இது என்று மிரட்ட அவர்கள் பயத்தில் 1000 ரூபா கொடுத்து அனுப்பினார்கள்..
இவ்வாறு றோட்டில போறவன் வாறவன் எல்லாம் நம்மள பயன்படுத்திக்கிராங்கள்


இப்படி இவர்கள் கூறுவதைக்கேட்க கடவுள் 4/5 ரவுடிகளை வைத்து கட்ட பஞ்சாயத்தா நடத்துறார்?


நாம இளிச்சவாயனா இருக்கும் மட்டும் நம்மள குனியவச்சு முதுகில மிளகாய் அரைச்சுக்கொண்டுதான் இருப்பார்கள் ...இப்படி இருந்தா நம்மள ஆயிரம் பெரியார்வந்தாலும் திருத்த முடியாது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}