கர்நாடகா அரசைக்கடுப்பாக்கிய நித்தி

தமிழ்நாட்டின் பிரபலமான 10 நபர்களின் பட்டியலை எடுத்தால் அதில் நித்தியானந்தாவின் பெயர் வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆன்மீகவாதி என்றதும் தற்பொழுது யாருக்கும் ஆன்மீகம் பற்றிய சிந்தனைகள் வருவதில்லை மாறாக இவரது வீடியோ எப்பொழுது வெளிவரப்போகின்றதோ? என்ற பீதிதான் வருகின்றது.  அந்தஅளவிற்கு ஆன்மீக வாதிகளின் புகழை ஒரே ஒரு வீடியோவில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் நித்தி. இவர் அண்மையில் தமிழ்னாட்டில் மதுரையில் ஆதீனமாக தெரிவு செய்யப்பட்டு கரண்ட் கட்டான  நேரத்திலும் 40 000 வோல்ட் அதிர்ச்சியை வழங்கினார். அத்துடன் மதுரைஆதீனமும் இவருடன் சேர்ந்து "ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா " என்று ஆடியது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு.

சாபம் விட்ட நித்தியானந்தா


நித்திக்கு உலகம்முழுவதுமாக 33 நாடுகளில் 1000ற்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன (ஆமா அவரு பெரிய ஆலமரம் ) தமிழ்னாட்டில் ஆடியது போதாதென்று கர்நாடகா வரை சென்ரு தனது திருவிளையாடல்களை நடத்தியுள்ளார் நித்தி இதனால் கர்நாடகா அரசு கடுப்பாகியுள்ளது
இவரது ஆசிரமங்கள் தியான பீடங்களில் நடக்கும் கூத்துக்கள் பற்றி அந்தப்பிரதேச மக்கள் மிகவும் கொதிப்படைந்து புகார் அழித்தமைதான் இப்பிரச்சனை பெரிதாவதற்குக்காரணம்

ஆசிரமம் அமைந்துள்ள ராமநகரம் மாவட்டத்துக்கு பொறுப்பாகவுள்ள
 அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், “நித்யானந்தா ஆசிரமத்தில் நடைபெற்றுவரும் சில சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இதுபற்றி அறிக்கை அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நித்யானந்தர் ஆசிரமம் குறித்து முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்என்று கூறியுள்ளார்

இது பற்றி கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் சுரேஷ்குமார், “நித்தியானந்தா ஆசிரமத்திலும், தியானபீடத்திலும் ஆட்சேபத்திற்குரிய நடவடிக்கைகள் நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால், அவற்றின் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அரசு பரிசீலித்து வருகிறது. நித்யானந்தர் தியானப் பீடத்தை நிர்வகிப்பதற்கு தனி அதிகாரியை நியமிப்பது பற்றியும் அரசு யோசித்து வருகிறதுஎன்று  தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளையடுத்து, நேற்று நித்யானந்தா ஆசிரமத்துக்கு போலீஸ் துணையுடன் சென்ற அரசு அதிகாரிகள், அங்குள்ள சிலரிடம் விசாரணை நடத்தினர். நித்தியானந்தா அங்கு தங்கியிருப்பதால், பிடதி பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, சில நாட்களுக்கு நித்யானந்தா அங்கு வசிக்கக்கூடாது என்று அதிகாரிகள் ஆசிரம நிர்வாகியிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.
ராமநகரம் மாவட்ட எஸ்.பி. அனுபம் அகர்வால், “இங்கே சட்டமேலவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், உடனடியாக நித்யானந்தாவைக் கைது செய்வது இயலாத காரியம். ஆனால், நாம் நித்தியானந்தர் ஆசிரமத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பற்றி வந்த புகார்களை விசாரித்து வருகிறோம்என்றார் நித்திபாடு கோவிந்தா....

இது போதாதென்று கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கௌடா, மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக் ஆகியோருடன் இது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நித்தியானந்தா ஆசிரமத்தில் நடைபெறும் இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளதை அடுத்து என்னேரமும் மக்கள் கூரைகளைப்பிரித்தெறிந்து விடுவார்கள் என்ற பதட்டம் காணப்ப்டுகின்றது. 

நித்திக்குத்தான் இவ்வாறு தொடர்ந்து அடி விழுந்து கொண்டேய்ருக்கின்றது .அண்மையில்  ஆர்த்திராவ் என்ற அமெரிக்கப் பெண் நித்தியானந்தாவின் வீடியொ பற்றி ஆந்திர தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்து நித்தியானந்தாவை மீண்டும் சர்ச்சையில் இழுத்துவிட்டார்.

ஆர்த்திராவ் என்கேயோ கேட்டது மாதிரி இல்ல...(இல்லை)

14.3.10 ஜூ.வி-யில் 'கேமரா பொருத்திய வெளிநாட்டு பக்தை’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியும், 12.6.11 ஜூ.வி-யில் 'வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்..?’ என்ற தலைப்பில் செய்தியும் வெளியிட்டிருந்தது அந்தக் கட்டுரையில் ரஞ்சிதா, 'நான் நித்தியானந்தருடன் இருப்பதைப் போன்ற மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை வைத்து லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். நான் பணம் கொடுக்காததால், அந்த வீடியோவை வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தினார்கள். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என வழக்கு தொடர்ந்து இருந்தார் ரஞ்சிதா

இது பற்றி ஜூ.வி யில் வெளியாகிய கட்டுரை இதோ


 ''நான் நித்தியானந்தரோட ஆசிரமத்தில் இருந்தவரை என்னோட பேரு மா நித்யானந்த பிரம்மேஸ்வரிமை. சென்னையில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் நான். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்தேன். அங்கேயே ஒருத்தரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டேன்.


 எனக்கும் என் கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை விட்டுப் பிரிந்து விட்டேன். அப்போதுதான் என் பயணம் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது. நித்தியானந்தரின் ஆசிரமத்தில் சேர்ந்து  சேவை செய்ய ஆரம்பித்தேன். 'உனக்கு சீக்கிரமே ஜீவன் முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி நித்தியானந்தர் என்னை செக்ஸுவலாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 

'இது தப்பு’ என்று நான் அவரிடம் சொன்னபோது, 'கண்ணன் - ராதை போல நாம இருக்கணும். அப்போதான் சீக்கிரமே ஜீவமுக்தியை அடைய முடியும்’ என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார். அவர் சொன்னதை நானும் நம்பினேன்.
லெனின் கருப்பன் என்னிடம், 'ஜீவ முக்தி என்று பொய் சொல்லி நித்தியானந்தர் ஏமாற்றுகிறார்’ என்று சொன்னார். அதைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் நித்தியானந்தரின் அறையைச் சுத்தம் செய்யும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. நித்தியானந்தரின் அறைக்குள் இருக்கும் ஏர் பியூரிஃபையர் மெஷினுக்குள் ரகசிய கேமரா ஒன்றை நான் பொருத்தி வைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கேமராவை எடுத்து ஓடவிட்டுப் பார்த்தபோது, எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. கேமராவை வேறு யாராவது வைத்திருந்தால்கூட, நான் அதை மார்ஃபிங் என்று நினைத்திருப்பேன். நானே வைத்ததால் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. உடனே, ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்''

என்கிறார்.

ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டுக்கு நித்தியானந்தா என்ன சொல்கிறார்?

''கடந்த 2004-ம் ஆண்டு கொடிய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகத்தான் ஆர்த்தி ராவ் என்ற பெண் எங்களது ஆசிரமத்துக்கு வந்தார். ஆசிரமத்தில் ஒரு பக்தையாகத்தான் வந்து போவாரே தவிர அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. பல ஆண்களோடு உறவு வைத்துக் கொண்டால் என்ன வியாதி வருமோ, அப்படிப்பட்ட ஒரு வியாதிதான் ஆர்த்திக்கும் வந்திருந்தது. ஹெர்பீஸ் டூ என்ற அந்தக் கொடிய பால்வினை நோய் எளிதில் மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது. 


ஐந்து வருடங்களாக உடல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார் என்று சொல்கிறாரே, என் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து சோதனை செய்யுங்கள். அந்தப் பெண்ணோடு உடல் ரீதியான தொடர்பில் இருந்தால் எனக்கும் அந்த நோய் வந்திருக்க வேண்டும் அல்லவா..?

அமெரிக்காவில், குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நித்தியானந்தரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளை செய்திருக்கிறார். அவர் ஒரு ஃபிராடு. அமெரிக்கப் போலீஸ் மற்றும் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி. இன்றுவரை அவர் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். லெனின் கருப்பனோடு சேர்ந்து ஆசிரமத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தார்.

பொய்யான ஒரு வீடியோவைத் தயாரித்து ரஞ்சிதாவை மிரட்டி இருக்கிறார். ரஞ்சிதாவும் அப்போதே போலீஸில் புகார் செய்து, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இப்போது நான் மதுரை ஆதீனமாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர்தான், இந்த ஆர்த்தி ராவைத் தூண்டி விட்டு எனக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார்கள். ஆர்த்தி ராவ் விவகாரத்தை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்கிறார்.

ஆர்த்திராவ் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது அது பாதியிலெயே இடைநிறுத்தப்பட்டதை அறிந்திருப்பீர்கள்அங்கு வந்த நிருபர் ஒருவர் குறுக்கிட்டு, ‘‘ஆர்த்தி ராவ் விவகாரம் தொடர்பாக 2001-ல் உங்களுக்கு வந்த சம்மனை ஏன் வாங்கவில்லை?’’ என கேட்டார்.
‘‘சம்மனா? எனக்கா? அப்படி எதுவும் வரவில்லையே’’ என்றார் நித்தியானந்தா.
ஆனால், அந்த பொல்லாத நிருபர், நித்தியின் இந்தப் பதிலுக்கு தயாராகவே வந்திருந்தார். அப்படியா சமாச்சாரம் சுவாமிகளே.. உங்களுக்கு வந்த அந்த சம்மனின் நகல் என்னிடம் உள்ளது. பார்க்கிறீர்களா?’’ என கூறியபடி ஒரு காகிதத்துடன் நித்தியானந்தா அருகே சென்றார்.
மிரண்டு போனார் நித்தி. சூழவிருந்த சீடர்களை பார்த்து, “என்ன சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? வெளியேற்றுங்கள் இந்த ஆளைஎன உத்தரவிட்டார் நித்தியானந்தா...நித்தியானந்தாவின் காரக்டரையே புரின்சுக்க முடியல....


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}