இன்று புரட்சியின் பிறந்தநாள்


புரட்சியின் மறுபெயரான சேகுவேராவின் பிறந்தநாள் இன்றாகும். ஆனி மாதம் 14 ஆம் திகதி 1928 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் பிறந்த இவர் மார்க்ஸியவாதி, சோசலிச புரட்சியாளர், மருத்துவர் ,எழுத்தாளர் என பல முகங்களை கொண்டு இருந்தாலும் புரட்சியாளர் என்றே பொதுவாக அறியப்பட்டவர். சிறுவயது முதல் கொண்டு வீரசாகசங்களின் பால் ஈற்புற்றவர் மட்டுமல்ல முதலாளித்துவ சிந்தனையை அடியோடு வெறுத்தவர். முதலாளித்துவ சிந்தனை மீதான வெறுப்பும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஈர்ப்பும் தான் இவரை போராட்ட பாதையில் சிறப்புற வழி நடத்தி சென்றது. தன் சிறந்த பேச்சாற்றலால் தன் சக தோழர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர் ஒரு போதும் தன்னை தலைவனாக கருதியது கிடையாது அதனால் தான் எர்னஸ்டோ எனும் பெயர் மறைந்து சக போராளிகளால் தோழர் குவேரா எனும் பொருள் பட “சே” குவேரா என அன்போடு அழைக்கப்பட்டதுடன் அப்பெயரே இன்று இவருக்கு நிலைத்தும் போனது. சிறந்த போர் வியூகங்களின் மூலமும் சரியான நேரத்தில் பொருத்தமான போர் கட்டளைகளை வழங்கியதன் மூலமும் கியூபப் புரட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். சேகுவேராவின் கெரில்லா முறை போராட்டம் மிகவும் பிரபலமானது. தான் பிறந்த நாட்டின் நலம் ஒன்றே முக்கியம் எனக்கொள்ளாது முழு உலகையும் தான் பிறந்த நாடாக கருதி அந்தந்த நாடுகளின் விடுதலைக்கான போராட்டங்களிலும் தன் பங்களிப்பை வழங்க ஆசை கொண்டவர். கியூபப் புரட்சியின் வெற்றியுடன் நின்று விடாது தான் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன என காங்கோ புரட்சியிலும் தன்னை அற்பணித்து கொண்டவர். காங்கோ புரட்சியின் தோல்விக்கான காரணங்கள்  பற்றி இவர் எழுதிய புத்தகம் இன்று வரை புரட்சி இயக்கங்களுக்கு அறிவுரை கூறும் தக்க ஆதனமாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து பொலிவியப் புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். இதன் போதே பொலிவிய இராணுவதினாலும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினாலும் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

 அன்று முதல் இன்று வரை சோசலிச இயக்கங்களின் தலை சிறந்த தலைவனாக கொண்டாடப்படுபவர் சேகுவேரா. இவர் பற்றிய விரிவான தகவல்கள் .....


சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-01


உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்கள் என்று  கூறப்படுபவர்களில் சேகுவேராவும் ஒருவர். சே அல்லது எல் சே என்று அறியப்பட்ட இவரை    மருத்துவன், சோசலிய புரட்சியாளன் , அரசிசல்வாதி, மார்கிசவாதி, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவன்   என்று  எத்தனையோ பரிமாணங்களில் சொல்லிக்கொண்டே  போகலாம். சேகுவேராவின் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பார்ப்பதே இத்தொடர் கட்டுரையை வரைவதன்   நோக்கம்.
பிறப்பும் வளர்வும்
அர்ஜென்டினாவிலுள்ள ரோசாரியோவில் 12 தலைமுறையாக வாழும் பின்னணியை  கொண்ட  ஸ்பானிய, ஐரிய மரபில்வந்த எர்னஸ்டோ குவேரா லிஞ்ச், செலியா டி லா செர்னா   ஒய் லோசா  என்பவர்களுக்கு மூத்த மகனாக 1928 ஆனி மாதம் 14 ஆம் திகதி பிறந்தார்  எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா.  
                                        எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா

எல் சேவின் தந்தையின் கொள்ளு தாத்தா அர்ஜென்டினாவில் ஆளுநராக 18 ஆம் நூற்றாண்டு இருந்தபடியால் சே அரசமரபில் வந்தவர் என்றும் கூறலாம். எல் சேவின் தாய் ,தந்தையர்கள் 14 வருடங்கள் கம்யுனிஸ் கட்சியில் அதிகாரபூர்வமான உறுபினர்களாக இருந்தவர்கள். இருவரும் சோசலிச ஈடுபாடுடையவர்கள் என்பதால் அதுவும் சேயின்  சோசலிச ஈடுபாட்டில் மிகுந்த செல்வாக்கு செலுத்திய see more


சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02சேகுவேரா பிறப்பில் மேட்டுக்குடியை சேர்ந்தவராக இருப்பினும் பன்முக மக்களுடனும் பழக்கம் கொண்டிருந்ததுடன் தன்னை விட வசதியில் குறைந்தவர்களுடன் இயல்பிலேயே இரக்கமும் அனுதாபமும் கொண்டிருந்தார்.

பாடசாலைப் பருவம். 
கல்வியை  பொறுத்தவரையில் சிறந்து விளங்கிய எர்னஸ்டோ இசையிலும் ஓவியத்திலும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுவந்தார். மேலும் ஆங்கிலத்திலும் அவருக்கு பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை என்று தெரிகிறது. இவரது சிறுவயதில் அரிதாகவே குளிக்கும் பழக்கம் உடையவராக இருந்ததால் பண்டி எனும் பொருள்படும் வகையில் சாங்கோ எனும் பட்டப் பெயரும் உண்டு. பாடசாலை பருவ நண்பர்களிடையே குவேரா மட்டும் வித்தியாசமான உடைபழக்கத்தை பின்பற்றினார் என்ற போதிலும் அவருடன் ஒழுக்கத்திலும் பண்பிலும் எவருமே போட்டி போட முடிவதில்லை

சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-03


எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியியல் துறையிலேயே ஈடுபாடு கொண்டதாக அறியவருகின்றது மட்டுமல்லாது   பொறியியட்துறையில் தன்னை பதிவு செய்திருந்தவரும் கூட அப்படியானால் எப்படி அவர் திடீரென மருத்துவத்துறையை தெரிவு செய்தார் என்பதட்க்கு ஒருசில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சே மீது அக்கறை கொண்டிருந்த அவரது அன்பு பாட்டியாரானஅனாலிஞ்  திடீர் நோய்வாய் படலும் அதால் அவரடைந்த மரணமும் சே தன் உயர் நிலை படிப்பை தொடங்கிய காலப்பகுதியிலேயே நிகழ்ந்தபடியால் தன் பாட்டியாரை போன்ற நோய்க்கு எவரும் ஆளாக கூடாது என்பதற்காக குவேரா மருத்துவத்துறையை தெரிவு  செய்தார் எனபடுகிறது. ஏனெனில் சே தன் பாட்டியார் நோய் வாய் பட்டபோது அவரை அருகிலிருந்து கவனித்ததுடன் வேண்டிய உதவிகளையும் செய்தார் இருந்தபோதும் ஏற்பட்ட பாட்டியாரின் மரணம் பெரிதும் சேயை மனதளவில் பாதித்திருந்தது  

சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-04


அர்ஜென்டினாவில் பிறந்தது முதல் தன் வாழ்வில் எத்தனையோ விதமான  நண்பர்களையும் நபர்களையும் சந்தித்தவர் சேகுவேரா. இதற்க்கு மேலும் பெரும் துணையாக உதவியது அவர்மேட்கொண்டிருந்த பயணங்கள் என்றால் மிகையாகாது. சேகுவேரா தனது இளமைக்காலத்தில் அவரது மனதளவில் தன் பாதை எது என்று பெரிதும் குழம்பி இருக்கின்றார் என்று தெளிவாக தெரிகிறது. என்னதான் இருந்த போதிலும் பிறரைப் போன்று பணத்துடனும்,  வசதியுடனும் ,சிறு சிறு அற்ப சந்தோசங்களுடனும் சச்சரவுகளுடனும் வாழும் குறுகிய வட்ட வாழ்கையை அவர் விரும்பி இருக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் தன் வாழ்கையை செழிப்பு மிக்கதாக அமைத்திருக்கலாம் ஏனெனில் அவர் ஒரு பட்டம் பெற்ற மருத்துவர். தன் வாழ்க்கை பயனுள்ளதாக வீரசாகசங்கள் see more ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}