இதுவரை நித்தி நடாத்திய ஆனந்தக்கூத்துக்கள்

எழுதுவதற்கு எவ்வளவோ இருந்தும் அதை எல்லாம் விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் நித்தி இன்று சரணடைந்தார் நித்தி இன்று வெளியேறினார் என்று அந்த டாஸைப்பற்றி  போஸ்ட் செய்வதற்கு விருப்பமில்லை....என்னவோ தெரியல ஆனந்தா என்ற பெயர் கொண்ட அனைத்து சாமியார்களும் ஒரே மாதிரித்தான் இருக்கிராங்கள்...நானும் ஒருவகையில் நித்தியால் பாதிக்கப்பட்டவந்தான்...எனது நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசியில் அழைக்கும் போது என்ன செய்கிறாய் என்று கேட்டார் நான் கதவைத்திற காற்று வரட்டும் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன்..மிகவும் நல்ல விடயம் என்று பாராட்டினார்...விட்டேனா நான் அடுத்த நாள் பாடசாலையில் எனது நண்பர்களுக்கு நித்தி பற்றியும் அவரது கதவைத்திற தொடர் பற்றியும் சிறு சொற்பொழிவு ஆற்றினேன்அதாவது அவரை பரிந்துரை செய்தேன் ....என் போதாத காலம் அதற்கு அடுத்த நாள்தான் சன் டி வியில் நித்தியின் ஜில்மாவைப் போட்டுத்தொலைத்தார்கள்..எனக்கு அடுத்த நாள் நண்பர்களிடம் அமோக வரவேற்பு...அவனவன் லைன்ல நிண்டு பின்னிட்டாங்கள்...முடியல காதில இருந்து ரத்தம் வந்திச்சு..youtube இல் நித்தியனந்தவின் சொற்பொழிவிற்கு அண்ணன் கவுண்டமணி இடையில் புகுந்து தனது பாணியில் குதறி விட்டார் ..பின் தொடர்ச்சியாக இப்படி பல வீடியோக்கள் இல் வலம் வந்தன ..இவைகள் நித்தியனந்தவின் காதுக்குஎட்டிவிட்டது பலதை பார்க்கும் போது இதுவும் அகப்பட்டிருக்கும்...இதனால் நித்தி கடுப்பகிவிட்டார் சாபம்கொடுத்தார் என்னா பாத்துக்குங்க சாமியோ...சாபம் விட்ட நித்தியானந்தா
கர்நாடகாவில் இவரின் ஆசிரமத்தில்ஆசிரம காம்பவுண்ட் ஓரத்தில் பயன்படுத்திய ஆணுறைகளும், கஞ்சா, ஆபாச சி.டி-களும், காலி மதுப் புட்டிகளும், நித்தியின் புகைப்படங்களும், புத்தகங்களும் கண்டேடுக்கப்பட்டன.இவைதவிர ஆசிரமத்தின் உள்ளே, பக்தர்களுக்கு முக்தி வழங்குவதற்காக வைத்திருந்த சில போதை மருந்துகளும் வெளிநாட்டு மது வகைகளும் சிக்கி இருந்தது. 'இது எல்லாமே எங்களைப் பிடிக்காத‌ கன்னட அமைப்புகள் செய்யும் திட்டமிட்ட சதி. எங்களை இங்கே இருந்து துரத்துவதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க’ என்று அப்பாவியாகக் பேசுகிறார்கள் நித்தியின் பக்தர்கள்.

இதனால்  நம்ம் நித்தியை கர்னாடகா போலீஸ் தேடியதாகவும் அறிந்திருப்பீர்கள் அப்படி செய்யும்போது நித்தி நமது தமிழ்படங்களில் வில்லன் தப்பிப்பது போல் தப்பித்துள்ளார்.
கர்நாடகாவில் நிலைமை சிக்கலாகத் துவங்கியபோது, பிடதியில் தான் இருந்தார் இளைய சுவாமிகள். அவர் மட்டுமின்றி, மூத்த சுவாமிகளும் அங்கேதான் பள்ளி கொண்டிருந்தார். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இருவரும் மதுரைக்கு புறப்பட்டனர். தமிழகத்தில் யாரும் தம்மை டச் பண்ண முடியாது என்று மூத்தவர் சொன்னதை இளையவர் நம்பியதால் துவங்கிய பயணம் அது.
மதுரையில் தங்கியிருந்தபோது, கர்நாடகாவில் நிலவரம், கலவரமாகிக் கொண்டிருந்தது. ஆச்சிரமத்துக்கு திரும்பாவிட்டால், அங்கே நிலைமை மோசமாகும் என்று தெரியவந்ததும், மதுரையில் இருந்து பிடதிக்கு புறப்பட்டார் நித்தி. ஏன் போகிறோம் என்று புரியாமல் மூத்தவரும் அவருடன் தொற்றிக் கொண்டார். இது நடந்தது கடந்த வியாழக் கிழமை. அப்போது அவர் தலைமறைவாகவில்லை.
மெயின் சாமியார் பிடதிக்கு வந்த தகவல் கிடைக்கவே ஆச்சிரமத்தை நோக்கி படையெடுத்த செய்தியாளர்களுக்கு தரிசனம் கிடைக்கவில்லை. மாறாக, லேசான மிரட்டலுடன் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
இதையடுத்து, மறுநாள் (வெள்ளிக்கிழமை) அங்கு வெளியான நாளிதழ்கள் பலவற்றில் நெகடிவ் ரிப்போர்ட்களாக வெளியாகின. அவற்றைப் பார்த்து, சாமியாரின் மீடியா தொடர்பாளர்கள் அலறிய அலறலில், செய்தியாளர்களை ஆச்சிரமத்தில் சந்திப்பது என்று முடிவாகியது.
அந்தச் சந்திப்புதான் அடிதடியில் முடிந்தது. நித்தியின் சிஷ்யர்களும், சிஷ்யைகளும் செய்தியாளர்களை சூரசம்ஹாரம் செய்துகொண்டிருந்தபோது, சுற்றும் முற்றும் பயப் பிராந்தியுடன் பார்த்தபடி மதுரை ஆதீனமும் அங்குதான் இருந்தார்.
மீடியாக்காரர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அழைத்தபின், மிதி மிதியென்று மிதித்து அனுப்பியதால், ஆச்சிரமத்துக்கு வெளியே நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. மூத்தவரையும் அவசரமாக இழுத்துக்கொண்டு காரில் பாய்ந்த அவதார புருஷர், கிருஷ்ணகிரியில் ஓரிடத்தில் சில மணிநேரம் தங்கிவிட்டு இரவு சேலம் போய் சேர்ந்தார்.
சேலத்தில் “கிருத்திகா பேலஸ்’ என்ற மூன்று நட்சத்திர ஹோட்டலில் (ஐந்துரோடு அருகேயுள்ளது) இரவு மூத்த, இளைய சுவாமிகள், 4 ரூம்கள் எடுத்து தங்கினர். ஆனால், ஹோட்டல் லாபியில் வெளியாட்களின் (கியூ பிராஞ்ச்) நடமாட்டம் தென்படவே, மறுநாள் காலையே ரூம்களை காலி செய்துவிட்டு, இரு திக்குகளில் புறப்பட்டனர்.
இளையவர் மீண்டும் கர்நாடகா புறப்பட்டுச் சென்றார். மூத்தவர், வைஷ்ணவி, கஸ்தூரி, அவர்களின் தாயார் கமலா ஆகியோருடன் மதுரை மடத்துக்கு பதட்டத்துடன் திரும்பினார்.

கர்நாடகா நோக்கி திருவுலா மேற்கொண்ட அவதாரம், என்ன காரணத்தாலோ யு-டர்ன் அடித்து மீண்டும் சேலத்துக்கு வந்தார். ஆனால், சேலத்தில் தங்கவில்லை. சேலத்தில் இருந்து சுற்றிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார். இரவு மடத்துக்குள் புகுந்தும் விட்டார்.
அதன்பின் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் சாமியின் திருமுகத்தைக் காணவேண்டி போலீஸ் அலைந்து கொண்டிருக்க, திருதிருவென விழித்தபடி, மதுரை ஆதீன மடத்துக்குள் மேல்மாடியில்தான் பதுங்கியிருந்தார் காலபைரவரின் ஷடோ!
தமாஷ் என்னவென்றால், நம்ம அவதார புருஷரின் பெயில் ஆர்டர் ரிக்வெஸ்ட் தயாரானதுகூட மதுரை மடத்தில்தான். அதை எடுத்துக்கொண்டு கர்நாடகா பறந்த வக்கீல் ஒருவர், ஹைகோர்ட்டில் அதை தாக்கல் செய்தார். பலன் பூச்சியம். ரிக்வெஸ்ட் கோர்ட்டில் டிஸ்மிஸ் ஆனது.
அந்த நேரத்தில்தான், சாமியாரைத் தேடி கர்நாடகா போலீஸின் ஸ்பெஷல் டீம் ஒன்று மதுரை வரும் தகவல் கிடைத்தது. மதுரை மடத்தில் நித்தியானந்தா நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றில், தேனி நோக்கி சென்றார். அங்கிருந்து கேரளாவுக்குள் சென்றதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் உண்டு.
இதற்கிடையே கர்நாடகா போலீஸ் மதுரை மடத்துக்கு விசாரிக்க வந்தபோது, அங்கிருந்து வெளியேறிய கார் பற்றிய விபரங்களை மதுரை போலீஸ் கொடுத்தது. குறிப்பிட்ட காரை தடுத்து நிறுத்துமாறு, செக் போஸ்ட்களுக்கு தகவல் போனது.
காலபைரவர் அறியாததா காவல்துறை நடைமுறை? மதுரையில் இருந்து சென்ற காரை மாற்றி, கேரள ரிஜிஸ்ட்ரேஷன் கார் ஒன்றில் ஏறினார். சிக்கல் ஏதுமில்லாமல், செக்போஸ்ட்களை கடந்து ராம்நகர் கோர்ட்டுக்கு போய்ச் சேர்ந்தார். சரணடைந்தார்.


தன் சீடர்களோடு உள்ளே போன நித்தி, ராம்நகர் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சரண் டர் ஆனார். பத்திரிகையாளர்களையும், கன்னட அமைப்பினரையும் தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி தன் வக்கீல் மூலமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தன்னை நிபந்தனை இல்லா ஜாமீனில் உடனடியாக விடுவிக்க வேண்டும். இது சாதாரணக் குற்றச்சாட்டு என்பதால் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக் கூடாது’ என்று தெரிவித்து இருந்தார். நித்தியின் வருகையால் கோர்ட்டில் ஏகக்கூட்டம். அதனால் குற்றவாளிக் கூண்டில் நின்ற நித்திக்கு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போதிய காற்று வரவில்லை. வியர்த்தது. 'சாமரம் வீசலாமா சாமி?’ என்று நித்தியைக் கேட்டபடி நின்றார்கள் சீடர்கள்.
அட்வான்ஸ் அப்ளிகேஷன், சரண்டர் அப்ளிகே ஷன், பெயில் அப்ளிகேஷன் மூன்றையும் தாக்கல் செய்து முடிப்பதற்குள், காவல்துறை சார்பாக ஒரு நாள் போலீஸ் கஸ்டடி கேட்டனர். இதற்கு நித்தி தரப்பு வக்கீல் முத்து மல்லையா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஜாமீன் வழங்க போதிய நேரம் இல்லாததால் நீதிபதி கோமளா, நித்தியானந்தரை  ஒரு நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். மந்தகாச சிரிப்போடு வெளியே வந்த நித்திக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் போட்டதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.


நித்தி கைது செய்யப்பட்டிருக்கும்போது ஆதீனம் வழங்கிய பேட்டியில் ரஞ்சி (ரஞ்சிதாவை சுருக்கமாக சொல்கிறார்) ஒரு பக்தை. சிஷ்யை. அவருக்கு ஆன்மீக அறிவு ஜாஸ்தி. என்னிடமும் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். இளைய சுவாமிகள் மதுரை ஆதீனத்துக்கு கொண்டுவந்த ஆன்மீகச் சொத்துக்களில் ரஞ்சியும் ஒருவர். என்னாது ஆன்மீக சொத்தாஆஆஆஆ?(அட போங்கையா உங்க கதையும் சரி கால்ராத்தல் பாணும் சரி)

கைது செய்யப்பட்ட மறுநாளே, முதலாவது வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட சாமியார் வெளியே வந்து சோம்பல் முறிப்பதற்குள், இரண்டாவது வழக்கில் கைதாகியிருந்தார். இது பொது அமைதியை சீர்குலைத்த குற்றச்சாட்டு. அதற்காக மைசூர் சிறையில் எழுந்தருளி இருந்தவரை, நேற்று மாலை ஜாமீனில் வெளியே விட்டிருக்கிறார்கள்


மாநில முதல்வர் சதானந்த கவுடா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டியில், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்துடனும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவுமே நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்தேன். சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டால் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நித்யானந்தாவுக்கு எதிராக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய பிறகே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

நித்தியின்பிடதி ஆசிரமம் பார்க்கலாம் வாங்க!

ஏதோ நாட்டின் ஜானதிபதியைசந்திப்பதற்கு 5 அடுக்குகள் கொண்ட படையணியை தாண்டவேண்டும் என்பதைப்போல் நித்தியை சந்திப்பதற்கும் அத்தனை சோதனைகள் அவ்வளவு கஸ்டப்பட்டுத்தான் அவரைசந்திக்கணுமாம்.

 பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் 32-வது கிலோ மீட்டரில் இருக்கிறது பிடதி. அனைத்துப் பஸ்களும் நின்று கிளம்புகின்றன. அங்கே இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தியான பீடத்தின் நுழைவாயில் இருக்கிறது.
வாசலில் இருக்கும் காவலாளிகள், உங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் கேட்டுத் தெரிந்து​கொண்ட பிறகுதான் கேட்டைத் திறப்பார். செக்யூரிட்டி அறைக்கு அருகே இருக்கும் டேபிளில் ஒரு ரிஜிஸ்டர் இருக்கும். அதில் உங்களது பெயர், முகவரி, செல்போன் எண் என அத்தனையும் எழுதிக் கையெழுத்துப் போடவேண்டும். ஓர் அடையாள அட்டையில் உங்களது பெயரை எழுதி கழுத்தில் மாட்டிய பிறகுதான், உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்த சம்பிரதாயங்கள் நடக்கும் நுழைவாயிலில் இருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஆசிரமம்.
நீங்கள் சாதாரண பக்தராக இருந்தால் நடந்துதான் போகவேண்டும். ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள், வேண்டப்பட்டவர்கள் என்றால், செக்யூரிட்டி இன்டர்காமில் தகவல் சொல்வார். உடனே ஆசிரமத்தில் இருந்து கார் வந்து அழைத்துச் செல்லும்.
நடந்து செல்லும் வழியில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை இருக்கிறது. ஒரு பெரிய குளத்துக்கு நடுவில் சிவன் இருப்பதைப் போன்று வடிவமைத்து இருக்கிறார்கள். நித்தியானந்தரின் பிறந்த நாள் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த இடம் விழாக்கோலத்துடன் இருக்கும். நித்தியானந்தர் பட்டாடை உடுத்தி வந்து, சிவனுக்குக் குடம் குடமாக பாலும் தேனும் ஊற்றி அபிஷேகம் செய்வார். விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடப்பதும் இங்கேதான். அதையும் கடந்து நடை போட்டால், முதலில் வருவது வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதி. அதை ஒட்டி ஓர் இலவச மருத்துவமனை இருக்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்வதற்கு சில செக்போஸ்ட் இருக்கின்றன.
முதலில் ஆசிரமத்தின் பிரமாண்டமான வரவேற்பு அறை. யாரைப் பார்க்க வேண்டும், எதற்காகப் பார்க்க வேண்டும் என்று ஒட்டுமொத்த ஜாதகமும் கேட்பார்கள். அதன் பிறகு நீங்கள் சந்திக்க வந்த நபருக்குத் தகவல் சொல்லப்படும். அவர் விருப்பப்பட்டால், உங்களை சந்திப்பார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த வரவேற்பு அறைதான் பக்தர்களின் போனுக்குப் பதில் சொல்லும் கால் சென்டராகவும் இருக்கிறது. ஆசிரமத்துக்கு வரும் விசாரிப்பு, டொனேஷன் போன்ற பெரும்பாலான விஷயங்கள் இந்த அறையிலேயே ஃபில்டர் செய்யப்பட்டுவிடும்.
அதைத் தொடர்ந்து இருக்கும் ஹாலில், ஈசனின் மடியில் இருக்கும் பார்வதி சிலைக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. நித்தியானந்தர் பிடதியில் இருந்தால், தினமும் காலை 8 மணிக்கு இந்த ஹாலுக்கு வருவார். அங்கே உள்ள சிலைகளுக்கு சுமார் அரை மணி நேரம் பூஜை செய்வார். பூஜை முடிந்த பிறகு, நித்தி அங்கேயே அமர்ந்துகொள்வார். பக்தர்கள் வரிசையில் நிற்க... ஒவ்வொருவராக அழைத்து தலையைத் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்.
இந்த ஹாலுக்குப் பின்பக்கத்தில் 600 வருடங்கள் பழமையானதாகச் சொல்லப்படும் ஆலமரம் ஒன்று இருக்கிறது. இந்த ஆலமரமத்துக்கு அடியில்தான் நித்திக்கு ஞானம் கிடைத்ததாகச் சொல்வார்கள். ஆலமரமத்துக்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் இந்த ஆலமரத்தைச் சுற்றி, நித்தி வாக்கிங் போவார். அதன்பிறகு அங்கேயே சற்று நேரம் தியானத்திலும் ஆழ்ந்து விடுவார். நித்திக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த ஆலமரத்துக்கு அடியில் வந்து ஹாயாக அமர்ந்து கொள்வார்.
'எத்தனையோ வசதிகள் இருந்தாலும் இந்த ஆல மரத்தடியில் உட்காருவதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு...’ என்று நித்தியே அவரது அடிப்பொடிகளிடம் அடிக்கடி சொல்வார். ஆலமரத்துக்கு இடதுபுறத்தில் இருக்கும் ஒரு நீண்ட அறை முழுக்க, நித்தி சிறு வயதில் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். அதோடு நித்தி உட்காந்து ஆசி வழங்குவதைப் போன்ற ஒரு மெழுகுச் சிலையும் இருக்கிறது.
சற்றுத் தள்ளி இருக்கிறது ஆனந்தக்கூடம். நித்திக்காக பிரமாண்ட நாற்காலி, ஃபோகஸ் லைட், வீடியோ கேமராக்கள் என்று பக்காவான செட் அமைப்போடு இருக்கிறது. நித்தி பத்திரிகையாளர்களை சந்திப்பதும், உரை நிகழ்த்துவதும் இந்தக் இந்தக் கூடத்தில்தான்.
இந்த கூடத்துக்கு எதிரில்தான் டைனிங் ஹால். காலை தொடங்கி இரவு வரை யார் ஆசிரமத்துக்குப் போனாலும், சாப்பாடு உண்டு. வரிசையாக அடுக்கி இருக்கும் சில்வர் தட்டை எடுத்துக்கொண்டு, வேண்டி​யதைச் சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைக்க​வேண்டும். இங்கே சமைக்கப்படும் உணவில் வெங்​காயம், பூண்டு சேர்க்க மாட்டார்கள். (கிளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க!)
ஆசிரமத்தில் குடும்பத்தோடு வந்து தங்கி இருப்பவர்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பும், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இன்​னொரு பகுதியிலும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். குடும்பத்தோடு இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், பகல் நேரத்தில் ஆசிரமத்தில் சேவை செய்ய வேண்டும்.
பிரம்மச்சரியத்தை ஏற்க விரும்புபவர்களுக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அந்தச் சோதனைகளில் வெற்றி பெறாதவர்களுக்கு பிரம்மச்சரியம் கொடுப்பது இல்லை. பிரம்மச்சரியம் ஏற்ற ஆண்களை 'மஹாராஜ்’ என்று அழைக்கிறார்கள். பெண்களை, 'ம்மா’ என்கிறார்கள். ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பிரம்மச்சாரிகளில், இன்ஜினீயர்கள், டாக்டர்கள், பேராசிரி​யர்கள் என்று பெரும்பாலும் மெத்தப் படித்த​வர்கள்தான் அதிகம். அவரவர் படித்த படிப்புக்கு ஏற்ப வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
இங்கிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாகத்தான் நித்தி தங்கும் அறை இருக்கிறது. நித்திக்கு எல்லாமுமாக இருக்கும், மூன்று மஹாராஜ்கள் மட்டும்தான் இந்த அறைக்குள் போய்வர முடியும். நித்ய பிரவானந்தா, நித்ய ஞானானந்தா, நித்ய ரூபானந்தா ஆகியோர்தான் அந்த மூன்று மஹாராஜ்கள். மூவருமே சேலம் விநாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரியில் படித்த பல் டாக்டர்கள். சேலத்தில் நித்தியானந்தரின் சொற்பொழிவைக் கேட்டு, அவரது கொள்கைகள் பிடித்துப்போனதால் படிப்பை முடித்த கையோடு ஆசிரமத்தில் சேர்ந்தவர்கள்.
நித்தி விருப்பப்பட்டால் மட்டுமே அவரது அறைக்குள் புதியவர் எவரும் நுழைய முடியும். ஆனால் இப்போது, நித்தியின் அனுமதி இல்லாமலே கர்நாடகப் போலீஸ் நுழைந்து விட்டது!
கே.ராஜாதிருவேங்கடம்    
  கைதுக்குக் காரணம் ஜெயேந்திரர்?
நித்தியின் ஆசிரமத்தை சீல் வைக்கும் அளவுக்கு நிலைமை போனதற்கு, முக்கியக் காரணம் என்று ஜெயேந்திரரைக் கை காட்டுகிறார்கள், நித்தியின் சீடர்கள். ''ரஞ்சிதாவைப் பற்றி ஜெயேந்திரர் அவதூறாகப் பேசினார். அதற்காக ரஞ்சிதா, அவர் மீது வழக்கு தொடர்ந்தார். ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி ஜெயேந்திரர் தரப்பில் பலமுறை பேசினார்கள். ஆனால் சுவாமியோ, 'அது பத்தி எனக்குத் தெரியாது. அது ரஞ்சிதா சம்பந்தப்பட்ட விஷயம்’னு தெளிவாகச் சொல்லி விட்டார். இதில் ஜெயேந்திரருக்கு ரொம்பவும் கோபம். கர்நாடக முதல்வர் கவுடா, ஜெயேந்திரரின் தீவிர பக்தர். அதனால் ஜெயேந்திரர்தான் நடவடிக்கை எடுக்கத் தூண்டி இருக்கிறார். கர்நாடக முதல்வரும், உண்மையை விசாரிக்காமல் ஆசிரமத்துக்குச் சீல் வைக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். எங்க சுவாமியின் சக்தி என்னன்னு அவருக்குத் தெரியலை, இனி போகப் போகப் புரிந்து கொள்வார்'' என்று ஆத்திரப்படுகிறார்கள் நித்தி சீடர்கள்.

''என்னத்தைச் சொல்ல?'' 
மனவருத்தத்தில் மதுரை ஆதீனம்
 கடந்த இரண்டரை மாதங்களாக நியூஸ் சுரங்கமாகவும் டென்ஷன் சென்டராகவும் திகழ்ந்த மதுரை ஆதீனம் இப்போது கப்சிப்!
நித்திக்கு எதிராக ஆதீன மீட்புக் குழுவினர் கடும் போராட்டம் நடத்திவந்த போதிலும், மதுரை ஆதீன விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது. ஒரு கட்டத்தில், நித்தியானந்தா மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தபோது சர்ச்சை ஏற்பட்டதால், தன்னைப் போலவே இளைய ஆதீனமான நித்தியானந்தாவுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதினார் அருணகிரி. கடந்த 5-ம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குரு பூஜை விழாவின்போது, நித்தியானந்தாவுக்கும் கோயில் சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. இதனால், நித்தியானந்தாவின் நியமனத்தை தமிழக அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாகவே கருதப்பட்டது. பெங்களூருவில் உள்ள நித்தியின் மடத்தில் போலீஸ் ரெய்டு நடந்தபோது, மதுரை ஆதீனத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு கொடுத்தார்கள்.
எப்போதும் திறந்திருக்கும் மதுரை ஆதீனத்துக்கு நித்தியின் சீடர்கள், கடந்த 11-ம் தேதி உள்பக்கமாகப் பூட்டுப் போட்டார்கள். வெளியே கர்நாடக ரிஜிஸ்ட்ரேஷன் என்ட்ரோவர் கார் நிற்பதைப் பார்த்த ஆதீன எதிர்ப்பாளர்கள், 'நித்தியானந்தா உள்ளேதான் பதுங்கி இருக்கிறார்’ என்று கிளப்பி விட்டார்கள். இதைஅடுத்து கர்நாடக போலீஸார் மதுரை ஆதீனத்துக்குள் வந்து, அவரைத் தேடினார்கள். அதன்பிறகே, அவர் அங்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து பூஜைகள் நடக்கத்தான் செய்கின்றன என்று ஆதீனத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அங்கே முறைப்படி பூஜை செய்யவே ஆள் இல்லையாம். பிரச்னை பெரிதானதும், நித்தியின் ஆண், பெண் சீடர்கள் பலர் மடத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள். தொடர்ந்து மடத்தில் இருந்தவர்களையும் கர்நாடக போலீஸ¨க்குப் பயந்து, அவர்களது பெற்றோர்களே வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தத் தொடங்கி விட்டனர். அப்படியிருந்தும் பி.இ. பட்டதாரியான ராகவன் வெளியேற மறுத்ததால், அவரை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் மதுரை விளக்குத் தூண் போலீஸில் புகார் செய்தனர். 'ராகவன் மேஜர் என்பதால், அவரைக் கட்டாயப்படுத்த முடியாது. அவரை யாராவது தடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று போலீஸார் கையை விரித்து விட்டார்கள்.
தனது பணியாட்களில் பலர் விலகிச் சென்று விட்டதால், தனிமைச் சிறையில் இருப்பதைப் போல் கவலையில் இருக்கிறாராம் பெரியவர். பத்திரிகையாளர்களோடு எப்போதும் நட்பாக இருக்கும் அருணகிரிநாதரை, இப்போது யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை. எப்போதாவதுதான் போனை அவர் எடுக்கிறார். அப்படி அவரிடம் பேசிய நெருக்கமான நிருபரிடம், ''என்னத்தைச் சொல்ல... பொறுமையாக இருப்போம்'' என்றாராம் அருணகிரி.
''இளைய ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் இருப்பதுபோல், நீக்குவதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?'' என்று அருகில் இருந்தவர் கேட்டபோது 'அதிகாரம் இருக்கிறது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்று பார்ப்போம். அதுவரையில் பொறு மையாக இருப்போம்'' என்று சோர்வான குரலில் சொன்னாராம் அருணகிரிநாதர்.
ஏற்கெனவே மதுரை ஆதீனம் தொடர்பாக கோர்ட்டில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புதுமையான வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், 'நான் நித்தியானந்தாவின் மாறுபட்ட வழிபாட்டு முறைகளைக் கண்டு அவரது சீடனாக மாறினேன். ஜூன் 11-ம் தேதி மாலை அவரைத் தரிசிக்க மடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த சீடர்கள், 'நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது’ என்று கூறி வெளியே விரட்டினர்.  அதே நாளில் அவர் அருணகிரிநாதருடன் சேலத்தில் இருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. நித்தியானந்தாவை, அருணகிரிநாதர் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவரை மீட்டு ஆஜர்படுத்துமாறு போலீஸுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
அடப் போங்கப்பா..!
- கே.கே.மகேஷ்
 ''நித்தியிடம் இருப்பது தெய்வீக சக்தி அல்ல... ரெய்கிதான்!'
- விளக்குகிறார் அமுதவன்!
எத்தனையோ பேர் பேர் நித்தியானந்தரின் 'மருத்துவத் திறமை’யை வாயாரப் புகழ்ந்துள்ளார்கள். இது என்ன மாதிரியான சிகிச்சை?
'நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் நித்தியானந்தாவிடம் கிடையாது. எல்லாமே ரெய்கியின் மகிமைதான்’ என்று அடித்துச் சொல்கிறார் எழுத்தாளரும் ரெய்கி சிகிச்சையாளருமான‌ அமுதவன்.
''தொடு உணர்வின் மூலம் நோயைக் குணப் படுத்துவதுதான் ரெய்கி. இதைத்தான் நித்தியானந்தா 'ஹீலிங் டச்’ என்ற பெயரில் செய்கிறார். நமது உடல் ஏழு சக்தி மையங்களால் ஆனது. இந்த மையங்களில் சக்தி குறையும் போது நோய் உண்டாகிறது. நம் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்தும் சக்தி பிரபஞ்ச சக்திக்கு இருக்கிறது. எனவே, குறைபாடு ஏற்பட்டுள்ள சக்தி மையத்துக்கு கைகளின் மூலமாக பிரபஞ்ச சக்தியை அளித்தால் நோய் குணமாகும்.
இந்த ரெய்கி சிகிச்சையில் கைகள்தான் அதிகம் பயன்படுகிறது. கைகளின் மூலமாக பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி, அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். அதற்குத் தேவை முறையான பயிற்சிதான். அதன்பிறகு தொடாமலும் குணப்படுத்தலாம். அப்படித்தான் பெருந்திராளான கூட்டத்துக்கு 'மாஸ் ஹீலிங்’ முறையில், கைகளை உயர்த்தி ஆசிர்வதிக்கிறார். தனிப்பட்ட முறையில் சந்திக்கும் நபர்களுக்கு உச்சந்தலையில் நீண்ட நேரம் கையை வைத்து 'ஹீல்’ செய்கிறார். நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ரெய்கி பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை வைத்துத்தான் நோயோடு வருபவர்களுக்கு குணப்படுத்தும் சிகிச்சைகள் நடக்கின்றன. இதெல்லாம் என்னுடைய ஆசீர்வாதத்தால் மட்டுமே நடக்கிறது என்று நித்தியானந்தா தன்னுடைய படித்த சீடர்களையே நம்ப வைத்திருப்பதுதான் ஆச்சர்யம். பொதுவாக மாற்று மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டால்தான் நித்தியானந்தா போன்ற சாமியார்களின் பாச்சா பலிக்காது'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் அமுதவன்.
ரெய்கியே ஒரிஜினல்தானா என்ற சர்ச்சைக்கு யார் பதில் சொல்வது?
(நன்றி-விகடன்)

அந்த அர மன்டையன் தான் நித்யானந்தாவாம்...

அப்பரசண்டியா (Apprentice) இருந்த போது எடுத்த புகைபடமாம்!!------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}