விண்வெளி விபத்துகள்

அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பணத்தின் பெரும் பகுதியை இராணுவசோதனைகளுக்கும் விண்வெளி ஆராச்சிகளுக்கும் செலவிடுகின்றன. இந்நாடுகள் தமக்கிடையே பல துறைகளில் போட்டியிடுகின்றன. விண்வெளியாரச்சிகளிலும் இவை கடுமையாகப்போட்டியிடுகின்றன இதன் விளைவு பல  நிகழ்ச்சிகளில் சர்ச்சைகள் தோன்றியமை உதாரணம் நிலவில் காலடி வைத்தது அமெரிக்காவல்ல அந்த நிகழ்ச்சி அமெரிக்காப்பாலைவனத்தில் ஷூட்டிங் ஆக எடுக்கப்பட்டது இவ்வாறு பல சர்ச்சைகள் தொடர்கின்றன. விண்வெளி ஆராச்சியில் பணம் மட்டும் செலவிடப்படுவதில்லை பல மனித உயிர்களும் சேர்த்தே செலவிடப்படுகின்றன.ஆரம்பத்தில் ஏதோ நாயை அனுப்பி சோதனை பார்த்தோம் என்பதற்காக தொடர்ந்து நாயையே நம்பி இருக்க முடியாது. ஒரு நாடு ஒரு விண்வெளி வீரரை உருவாக்குவதற்கு  மில்லியன் கனக்கில் பணம் செலவிடுகின்றது .ஒரு நாடின் ஜனாதிபதியின் சராசரி ஆண்டு வருமானம் £4,000 to £7,000 ஆனால் ஒரு விண்வெளி வீரருக்கான சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா £40,000 to £86,000.இது வரை 22 வீரர்களே இறந்திருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விடயம்தான். ஆனால் நாம் அசரவில்லை தொடர்ந்தும் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராச்சியில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். இவ்வாறு விபத்துக்குள்ளான விண்வெளி ஒடங்கள்,மரணித்த வீரர்களைப்பற்றிய பதிவுதான் இது.The Columbia Accident


முழுமையாக 27 misssion கள் வெற்றிகரமாக அமைந்த்திருந்தது.ஆனால் அடுத்த மிஸினாக அனுப்பட்ட கொலம்பியா தோல்வியைத்தழுவியது அது பூமியை விட்டு புறப்படும்போது அதனது வெப்பத்தைகடத்தும் சாதனத்தின் தொழிற்பாடு பாதிக்கப்பட்டதால் அது நடுவானில் வெடித்துச்சிதறியது இச்சம்பவம் 1.02.2003 இல் நடைபெற்றது 66,000 அடிகளுக்கு மேலாக செல்லும்போது வெடித்தது அதில் பயணம்செய்த அனைவரும் இறந்தார்கள்.84000 துண்டுகளாக வெடித்துச்சிதறியது அத்தனைதுண்டுகளும் கென்னடி விண்வெளி ஆரச்சி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.பிரயாணம் செய்த 7 விஞ்ஞானிகளும் மரணமடைந்தார்கள்

மரணமடைந்த விஞ்ஞானிகள்The Challenger Disaster


புறப்பட்டு 73 செகண்ட்களில் நடு வானில் வெடித்துச்சிதறியது 28.01.1986 இல் தான் இது நடைபெற்றது ஒடத்திற்கு வெளியில் காணப்பட்ட எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட ஒழுக்கே இவ்வோடம் வெடித்ததற்கு காரணமாக கூறப்படுகின்றது 48 000 அடி உயரத்திற்கு மேலாகவே வெடித்துச்சிதறியது.
எரிய ஆரம்பித்த பொழுது

பிரயாணம் செய்த 7 விஞ்ஞானிகளும் மரணமடைந்தார்கள்

மரணமடைந்த விஞ்ஞானிகள்
Soyuz 11
Space station ற்கு முதன் முதலில் மனிதர்களை அனுப்புவதற்காகவே இது அமைக்கப்பட்டது.ஜுன் 7 1971 இல் Space stationஐ அடைந்தது ஜீன் 30 1971 இல் Space station ஐ விட்டு தனது தாய்க்கலத்திற்கு வரும்பொழுது அண்டவெளியில் தவறுதலாக அதன் உள்ளே அமுக்கத்தை பேணும் கப்சியூல் திறந்துகொண்டது இதனால் இவர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள்.அண்டவெளியில் விண்வெளிவீரர்கள் முதன்முதலில் இறந்தது இந்த மிசினில்தான்.உள்ளே அமுக்கம் 0 ற்கு குறைந்ததும் 40 செக்கன்களில் வீரர்கள் மரணமடைந்தார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}