நித்திக்கு அடுத்ததாக கிளம்புகிறது சாய்பாபாவின் சர்ச்சைகள்

சாய்பாபா...பலருக்கு மனிதராக அவதரித்த கடவுளின் அவதாரம்..மனிதன் எப்பொழுது தான் கடவுள் என அறிவிக்கிறானோ அப்பொழுதே உண்மையான ஆன்மீகம் அவ்விடத்தில் தோற்றுவிடுகின்றது..இது  நாம் அனுபவத்தால் கண்ட உண்மையும் கூட...வாரம் ஒரு மூலிகை மாதிரி வாரம் ஒரு சாமியார் என்றவகையில் பதிவு எழுதலாம் என்றால் பாத்துக்கொள்ளுங்கள்...சாமியார் என்றுவந்து விட்டாலே சர்ச்சைதான்..அது சாய்பாபாவை விட்டு வைக்குமா என்ன? சாய் பாபா போன்றவர்கள் உருவாவதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் இந்து மதம் கொண்டிருக்கிறது. இந்து மதம் தனிநபர் வழிபாட்டையும் தெய்வமாக்கல் கோட்பாட்டையும் ஆதரிக்கிறது. தமக்கு தீமைகள் நடைபெறும் போது கடவுள் மனித உருவில் வந்து காப்பாற்றுவார் என்பது நமது 98% ஆன சமயக்கதைகளின் சாரம். இதனால் பலர் தாம் கடவுள் என அறிவித்துக்கொள்வதுடன் அவர்கள் வசம் இருக்கும் கண்கட்டு வித்தைகளினால் மக்கள் இலகுவாக ஈர்க்கப்படுவதுடன் மக்களின் அறிவுக்கண்களும் சேர்ந்தே கட்டப்பட்டுவிடுகின்றன.இப்பதிவு சாய்பாபாவின் சர்ச்சை பற்றியது.கீழே சில காணொளிகளும் இடப்பட்டிருக்கின்றன.அவற்றையும் பாருங்கள்.


உண்மையான அற்புதம் காலத்தைக் கடந்து மனதைத் தாண்டி நிலவுதல் மட்டுமேதான். அத்தகைய நிலை பெற்றவர்கள், பொதுவழக்கில் ‘அற்புதங்கள்’ என்று கருதப்படுகின்றவற்றை மதிப்பதில்லை.

அவர்களைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமான சின்னச் சின்ன விஷயங்களிலேயே அற்புதம் பொதிந்துள்ளது. சாதாரண வாழ்வினைப் புத்துணர்வுடன் சந்திக்க கூடிய நுட்ப உணர்வோ உக்கிரமோ அற்றவர்கள்தான், அற்புதங்களைக் கௌரவிப்பார்கள்.

                                                      பி.சி.சர்க்கார் 


சத்தியசாயி பாபா என்பவர் அற்புதங்களின் மூலம் மட்டுமே பிரசித்திபெற்றவர். இவரைப் பத்திரிகை ஆசிரியர்கள், விஞ்ஞானப் பேராசிரியர்கள், இலங்கையின் ஆபிரகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் விமர்சித்திருக்கிறார்கள்.

இவர்களின் விமர்சனத்தின்படி சத்திய சாயிபாபா வெறும் கண்கட்டு வித்தைக்காரர். அற்புதங்கள் என்று எதுவுமே கிடையாது என்ற அளவுக்குப் போனவர்கள் கோவூரும் அவரைப் போலச் சிந்திப்போரும்.

                                  (குளத்துத் தண்ணீரில் சைக்கிள் ஓட்டி மேஜிக்)

இஸ்ரேலின் யூரிகெல்லர், தம்மைத் தெய்வீகச் சக்தி பெற்ற அற்புதமனிதராக விளம்பரம் செய்தவர். நூலில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு சாவியை, உற்றுப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வளைப்பது அவரது அற்புதம். இது வெறும் கண்கட்டு வித்தை என்று நிரூபித்தவர் உலகத்தின் மிகப் பெரிய மாஜிக் நிபுணரான பிரதீப் சந்திர சர்க்கார். இவர் ஒரு வங்காளி.

டெலிவிஷன் காமிராக்களுக்கும் விஞ்ஞானப் பிரமுகர்களுக்கும் முன்னிலையில் யூரிகெல்லர் சாவியை ‘உற்றுப் பார்த்து’ ஒரு புறம் வளைத்தபோது அதே சாவியை அதேபோல் ‘உற்றுப் பார்த்து’  எதிர்ப்புறமாக வளைத்தார் பி.சி.சர்க்கார்.

அவரது தீர்ப்பு; ‘தெய்வீக சக்தி மூலமாக இதைத்தாம் செய்ததாக கூறுகிறார் யூரிகெல்லர். நான் இதையே வெறும் மாஜிக் மூலம் செய்துள்ளேன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு விஷயமறிந்த வட்டாரங்கள், யூரிகெல்லரைப் பற்றிப் பேசுவதே இல்லை.

பி.சி.சர்க்காரின் மூலம்தான், சத்திய சாயிபாபாவின் அற்புதங்களுக்கு கூட அதிர்ச்சித் தாக்குதல் கிடைத்தது. இந்நிகழ்ச்சியை சர்க்கார் விவரித்துள்ளார். ‘சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே மாஜிக் படித்தவர்கள். நான் அவரிடம் இன்டர்வியூ கேட்டபோது மறுத்துவிட்டார். ஆகவே நான் வேறுபெயரில் மீண்டும் கேட்டு அவரைச் சந்திக்க ரூமுக்குள் காத்திருந்தேன்.

அங்கே மேஜையில் நிறைய ஸ்வீட் வகைகள் இருந்தன. உள்ளே வந்த சாயிபாபா, வெற்று வெளியிலிருந்து எடுப்பது போல ஒரு ஸ்வீட் வரவழைத்து, என்னிடம் கொடுத்தார். ‘நான் எனக்கு அந்த ஸ்வீட் பிடிக்காது. இதுதான் பிடிக்கும்’ என்று வேறு ஒரு வகை ஸ்வீட்டை வரவழைத்துக் காட்டினேன். அவரும் நானும் செய்தது  ஒரே மாஜிக்கைத்தான். இருவருமே அதற்காக அதே ரூமிலிருந்த ஸ்வீட்டுகளைத்தான் உபயோகித்தோம்.

உடனே என்னை அடையாளம் கண்டுகொண்டு உணர்ந்த சாயிபாபா ‘ஓ’ என்று கத்தினார். மறுவிநாடி, ரூமுக்குள் குண்டர்கள் புகுந்து என்னை வளைத்து, ‘இங்கிருந்து உயிரோடு வெளியே தப்பிப் போக முடியாது’ என்றனர். ‘என்னால் முடியும்’ என்று பதில் கூறிய நான் அதைச் செய்து காட்டினேன்.

யூரிகெல்லரும் சாயிபாபாவும் மாஜிக்காரர்கள் என்று கூறுகிற பி.சி.சர்க்கார் கருணையின் சிகரத்தில் நிலவியபடி உண்மையான அற்புதங்களை செய்வோரை தாம் சந்தித்திருப்பதாகவும் கூறுகிறார். அத்தகையவர்களைத் தேடிப் போவது அவரது ஆர்வங்களுள் ஒன்று.

- இந்த கட்டுரை எழுதியவர் மறைந்த கவிஞர் 'பிரமிள்'. 1987ல் எழுதியது.
நூலின் பெயர்; பாதையில்லாப் பயணம்-பிரமிள். வம்சி பதிப்பகம்


நன்றி-மாயன்:அகமும் புறமும்

ஒரு காணொளியும் கிடைத்துள்ளது... 

சாய்பாபாவால் பாதிக்கப்பட்ட இருவரின் சாய்பாபாமீதான பாலியல்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இக்காணொளி தொடர்கின்றது 1 தொடக்கம் 7 வரை இதன் பகுதிகள் செல்கின்றன ,இதில் பாபவுடன் சம்பந்தப்பட்ட கொலைகள் ,பாலியல் குற்றங்கள்,அவரது ஆதரவுகள் போன்றவை பற்றி காணொளிகள் தொடர்கின்றன.


சாய்பாபாவின் லீலைகள் பகுதி 1சாய்பாபாவின் உண்மை முகம் பகுதி 6


பாலியல்குற்றச்சாட்டு....புதுடில்லி அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்தில் ஆந்திர மானிலத்திற்கு செல்லும் அமெரிக்க குடி மக்களிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இளம் ஆண்பக்தர்களிடம் மோசமான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபலமான கடவுள் மனிதனைப்பற்றி அது குறிப்பிடுகின்றது.சாய்பாபாவைத்தான் நாம் குறிப்பிடுகிறோம் என அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

1993 ஜீனில் சாய்பாபவுடன் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் நான்கு நபர்கள் கத்திகளுடன் சாய்பாவின் அறையை நெருங்கும் போது சாய்பாபாவின் ஊழியர்களால் பிடிக்கப்பட்டனர்.அப்போது நடந்த போராட்டத்தில் ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.மற்றைய இருவர் மிக மோசமாக் காயமடைந்தனர்.சத்தத்தை கேட்ட சாய்பாபா பின்வாசால்வழியாக தப்பித்து ஓடி கூக்குரல் எழுப்பினார்.காவல்துறை ஆயுதங்களுடன் அங்கு ஓடிவந்தது.4 இளைஞர்களையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.தம்மை 4 இளைஞர்களும் தாக்கினார்கள் அதனாலேயே நாம் அவர்களை சுட்டுக்கொன்றோம் என காவல்துறையால் காரணம்கூறப்பட்டது. அப்பொழுது ஆந்திராவின் உள்துறை செயளாளராக இருந்த வேலாயுதம் நாயர் என்பவர் இதை மறுத்துள்ளார் மானிலகாவல்துறை இவரது பொறுப்பில்தானிருந்தது.அவர் பொறுப்பேற்றவுடன் காவல்துறைக்கோப்புக்களை ஆராய்ந்த பொழுது அது பொய்களாலும் நிச்சயமற்ற செய்திகளாலும் நிரம்பியிருந்தது.இது உளவுதுறையின் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.அத்துடன் இவர் கூறியதாவது"தாக்கப்படுவதால் தற்பாதுகாப்புக்கு சுட்டோம் என்பது முற்றிலும் அடிப்படையற்றது.

4 கத்தி ஏந்திய இளைஞர்கள் காவல்துறையின் துப்பாக்கிக்கு இணையாக மாட்டார்கள்" .இது தொடர்பாக சில காவல்துறைஅதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள் ஆயினும் பின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன.சாய்பாப எப்போதுமே காவல்துறையிடம் நெருக்கமான திடர்புகளைக்கொண்டுவந்துள்ளார்.பல மூத்த அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக வருகைதந்துள்ளார்கள்.அப்படி உயர்ந்த இடங்களில் நண்பர்களைக்கொண்டிருப்பதன் மூலம் சாய்பாப தொடமுடியாதவராக இருந்துவந்தார்.ஆசிரமத்தில் நடைபெறும் எந்தவிடயமும் கொலைகூட விசாரனை  நடத்தும் முயற்சியானது முழுவதும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

பின்னர் வழக்கு கைவிடப்பட்டது.காவல்துறையினரிடம் அவருக்கு இருந்த தொடர்புகளினால் அந்த இரவில் நடந்த சம்பவங்களின் நேரடி சாட்சியாக சாய்பாபா இருந்தபோதும்  சாய்பாபா இதைப்பற்றிக்கேட்டக்கூடப்படவில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.மத்திய அரசு விசாரணையை நிறுத்தியதாகவும் விசாரணை நடத்தப்பட்டால் ஊழல்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பொருளாதாரக்குற்றங்கள் என பல விடயங்கள் வெளிவரும் என்றகாரணத்தினாலேயே இவை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆந்திராவின் உள்துறை செயளாளராக இருந்த வேலாயுதம் நாயர் :"அந்த இளைஞர்களை கொலைசெய்தது என்பது எதையோ மறைப்பதற்கு மட்டுமே அவர்கள் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் பாபாவை சந்திக்க முற்பட்டனர் என்பது உட்பட பல விடயங்களை கூறியிருக்கக்கூடும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}