தேவதைக்கு பிறந்தநாள் பரிசு...

காதலியின் பிறந்தநாள் வருகிறதே, என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று மண்டையை போட்டு குழப்புகிறீர்களா? பின்வரும் ஐந்தே ஐந்து படிமுறைகளை முயன்று பாருங்கள், உங்கள் காதலியின் முகத்தில் அத்தனை பரவசத்தை உண்டாக்கும்படியாக ஒரு பரிசை கொடுத்து அசத்தலாம்...

1.       உங்கள் காதலியின் விருப்பங்கள், ஆசைகள் எப்படிப்பட்டவை?
அவருக்கு என்னவெல்லாம் பிடிக்குமென்று உங்களுக்கு தெரியுமா? அவரது சுவாரசியங்கள் என்னென்ன? புத்தகங்களா, விளையாட்டா... ஏதாவது. இதனை அறிந்துகொள்ள காதலி சொல்லும் அத்தனையையும் காது கொடுத்துக் கேட்கவேண்டும். கொஞ்சம் கஷ்டம்தான், நம்முடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே அவர் சொல்லும் தனக்கு பிடித்த நிறம், பிடித்த உடை, பிடித்த உணவு, எதிர்கால லட்சியம்... .. இவை அனைத்தையும் அவ்வப்போதே நமது database இல் ஏற்றிவைத்தால், பிறகு அவை அனைத்தையும் திருப்தி செய்யும் பரிசை வாங்கினால், அப்படியே அள்ளிக்கொள்வார்.

2.       தன் கையே தனக்குதவி.
கூடுமானளவு உங்கள் கைகளாலேயே பரிசை தயார் செய்யுங்கள். கடையில் வாங்கும் பரிசாக இருந்தாலும், அதை pack செய்வதையாவது சிரத்தையுடன் நீங்களே செய்யுங்கள். தனக்காக இந்தப் பாயல் எவ்வளவு மினக்கெட்டிருக்கிறான் என்று பட்சி உருகும்.

3.       விஷேசமாக இருக்கவேண்டும்.
பூமியிலேயே வேறு எந்தப் பெண்ணிடமும் இல்லாததாக உங்கள் பரிசு இருக்கவேண்டும். தனக்காக விஷேசமாக உருவான பரிசு என்கிற உணர்வுதான் உண்மையாக அங்கே பரிசாக இருக்கும். நீங்களே வரைந்த ஓவியம், கவிதை, பாடல், விசேஷமாக design செய்த நகை...

4.       லூசுத்தனம்தான் காதல்.
எப்போதாவது அவர் பகிர்ந்த லூசுத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக் கொடுங்கள், அல்லது அவர் சொன்ன ஒரு லூசுத்தனமான ஐடியா உங்கள் பரிசுக்குள் இருக்கட்டும். ஏதோ ஒரு பழைய காமடியை ஞாபகப்படுத்துமாறு இருந்தால் போனஸ் காதல் மலரும். அவர் எப்போதோ எழுதிய மொக்கை கவிதை அல்லது ஓவியத்தை நாள் முழுக்க மாரடித்து போட்டோஷொப்பில் அழகாக்கி, பிரிண்ட் பண்ணி, frame பண்ணி கொடுக்கலாம்.

5.       வேறு வழியே இல்லையா? அவளிடமே கேட்டுவிடுங்கள்.
கடைசி ஆயுதமாக இது இருக்கட்டும். ஆனால், கேட்பதை பிறந்தநாளுக்கு ஒரு தசாப்தத்துக்கு முதலே கேட்டுவைத்துவிட வேண்டும், அத்தொடு ஒன்றே ஒன்று என்று கேட்காது ஒரு லிஸ்டையே கேளுங்கள். இதுதான் சாட்டு என்று கிளியும் 7 அடி நீளத்தில் ஒரு லிஷ்டை தரும். அதிலேயே முக்கியமானதை நீங்கள் தெரிவு செயலாம். அடுத்த வருடம் அடுத்தது.
நீங்கள் என்னதான் மாரடித்து, தலையை அடமானம் வைத்து பரிசை வாங்கிக்கொண்டு போய் கொடுத்தாலும், முகத்தை சுழித்தபடியே ம்ம்‌ம்.. தாங்க்ஸ்.. என்று மட்டும்தான் அந்தப் பிள்ளை சொல்லப்போகிறது என்றாலும், அதுவும் கிடைக்காமல் விடக்கூடாது அல்லவா?
 

TIPS…
·         பிறந்தநாள் வரப்போகிறது என்றாலே அவர் பேச்சிலேயே எதிர்பார்ப்பாவை என்ன என்பது தெரிந்துவிடும். அல்லது ஒரு நாகரிகமான காதலி உங்களுக்கு இருந்து, எனக்கு பரிசுகளே வேண்டாம் என்றாலும் நீங்கள் கொடுங்கள்.

·         பரிசை கொடுக்கும்போது புன்னகையுங்கள். ஒன்றும் சொல்லாதீர்கள்.


·         பிறந்தநாள் என்றில்லை, எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அந்தப் பரிசுகள் பிறந்தநாள் பரிசின் முக்கியத்துவத்தை குறைத்துவிடாமல் பார்க்கவேண்டும்.

·         நகைதான் எக்காலத்துக்கும் யாருக்கும் பொருத்தமான தீர்வு. ஆனால் அதை நடைமுறைப்படுத்தமுன் 1) பேர்சை தடவிப் பார்க்கவும். 2) காதல் எதுவரைக்கும் தாக்குப்பிடிக்கும் என்று யோசிக்கவும். காதல் முறிவில் நாம் கொடுத்த கடிதங்கள் எரிக்கப்படும், சிறு பரிசுகள் முகத்தில் விசிறி அடிக்கப்படும்... நகைகள்? அவை மட்டும் non refundable. நமது ஞாபகமாக வைத்திருப்பார்கள்.

·         உடுப்புகள்தான் வாங்குவதென்றால், அவரையும் கூட்டிக்கொண்டு போவது நல்லது. இன்ப அதிர்ச்சி மண்ணாங்கட்டியெல்லாம் இருக்கட்டும். நீங்களே வாங்குவதில் 3 ஆபத்துக்கள் உள்ளன. 1) டிசைன் பிடிக்காமல்போனால் நீங்களும் உடையும் கிழிபடுவீர்கள். 2) size சின்னதாகப் போனால் அவருக்கு நாம கொஞ்சம் குண்டோ?’ என்று யோசனை வரும். அடுத்ததுதான் கொலைக்கேசு. 3) size பெரிதாக வாங்கிக்கொண்டு போனால் செத்தீர்கள்! என்னை பார்த்தா யானைக்குட்டி மாதிரியா இருக்கு? என்று கேட்டவாறே நங்கு நங்கென்று மிதிதான்.


·         எல்லோரும் நினைப்பதுபோல டெடி பியர் கரடிகள் எல்லா பெண்களுக்கும் பிடிப்பதில்லை. வெறும் 30% பெண்கள்தான் விரும்புகிறார்கள். ஆகவே அவருக்கு பிடித்தாலொழிய வேண்டவே வேண்டாம்.

·         ஆர்வக்கோளாரில் துப்பரவாக்கும் பொருள் எதையும் வாங்கித் தொலைத்துவிடாதீர்கள்! சோப்பு, iron box, முகப்பூச்சுகள்... அவை எல்லாம் அவரை ஏதோ அசிங்கமான ஆள் என்று கேலி செய்யும் ஏற்பாடுகள்.


 இந்த ஐடியாக்களுடன் உங்கள் சொந்த சரக்கையும் சேர்த்து அன்புப்பரிசை கொடுத்த அசத்துங்கள்!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}