நடந்தது என்ன? பேஸ்புக்கால் இப்படியும் நடக்குமா?

அண்மையில் நடைபெற்ற நடந்தது என்ன நிகழ்ச்சியில் அதிர்ச்சிகரமான சம்பவத்தைப்பற்றி நிகழ்ச்சியை வழங்கியிருந்தார் கோபினாத். நாம் அனைவரும் பேஸ்புக் ஐ தொடர்ந்து தாராளமனதுடன் பயன்படுத்திவருகிறோம்.முகம் தெரிந்தாலும் தெரியாதுவிட்டாலும் இதில் நட்புவட்டாரங்களை நம்மால் இயன்ற அளவிற்கு பெரிதாக்கிக்கொள்ள முடியும்.இதில் எதிர்ப்பாலரது நட்பும் இலகுவாகவே கிடைத்துவிடுகின்றது.சட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்க் வரை சென்ற கதைகளையும் நாம் அறிந்திருக்கிறோம்.நமது நட்பு வட்டார்ங்களில் ஆரம்பித்து நமக்கு அறிமுகமில்லாதவர்கள் வரை பலரும் போலியான எகவுண்ட்களை வைத்திருந்து தமக்கு விரும்பியதை செய்துவருகின்றார்கள்.இது இப்படி இருக்க இப்படியும் ஒரு காரியத்தை செய்யமுடியுமா? என்றவகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கின்றது.திருச்சி ராம் நகரை சேர்ந்தவர் டேவிட் இவர் திருமணமானவர் இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளார்கள்.சென்னையில் வேலை கிடைத்ததால் தனது குடும்பத்தை திருச்சியில் தங்கவைத்துவிட்டு சென்னையில் தனது வேலையை தொடர்ந்திருக்கிறார் டேவிட்.அங்கு ஆபீஸுக்கு செல்வது வீட்டிற்கு வருவது பேஸ்புக்கில் தனது நண்பர்களுடன் சட்டிங்கில் ஈடுபடுவது என அவரது காலம் கடந்திருக்கின்றது.

ஒரு நாள் இவர் தனது நண்பர்களுடன் பேஸ்புக்இல் சட்டிங்க் செய்துகொண்டிருக்கும்போது இவருக்கு அறிமுகமில்லாத பெண்ணிடம் இருந்து ஃப்ரெண்ட் ரிகுவெஸ்ட் வந்திருக்கிறது.அந்தப்பெண்ணின் பெயர் அனிதா. தனக்கு அறிமுகமில்லாதவராயினும் அவரது ஃஃபோட்டோவில் அவர் அழகாக இருக்கவே அவரை அக்செப்ட் செய்தார் டேவிட். அக்செப்ட் செய்த சிறிது நேரத்திலேயே அனிதா டேவிட்டுடன் சட்டிங்க் செய்ய ஆரம்பித்துள்ளார்.இவர்களது இந்த சட்டிங்க் விளையாட்டு நாட்கணக்காக தொடர்ந்துள்ளது.தனக்கொரு குடும்பமிருப்பதை மறந்து ஆபீஸ் வீடு என்று  தொடர்ந்து அனிதாவுடன் சட்டிங்கில் ஈடுபட்டார் டேவிட்.

இன்னிலையில்தான் திடீரென்று அனிதாவிடமிருந்து தொலைபேசியழைப்பு வந்தது.தொலைபேசியில் அனிதாவின் குரலைக்கேட்டு மகிழ்ச்சியடைந்தார் டேவிட்.இவர்களது தொலைபேசி உரையாடலும் மேலும் தொடர்ந்தது.இவர்களது உரையாடல் இரவு 10 மணிக்கு பின்னர்தான் தொடர்வதாக டேவிட் குறிப்பிட்டுள்ளார்.
அனிதா டேவிட்டிடம் டேவிட்டின் பேர்சனல் விடயங்க்ளைக்கேட்க டேவிட் தனது வயது,வேலை,படிப்பு என சகலவற்றையும் குறிப்பிட்டுள்ளார் டேவிட்.
இன்னிலையில் எப்படியாவது அனிதாவை சந்தித்துவிடவேண்டும் என்று முடிவுசெய்தார் டேவிட். அப்பொழுது வீட்டின் கதைவைத்தட்டி இருவர் டேவிட்டுக்கு அறிமுகமானார்கள்.தாம் பாங்க் கிரிடிட் கார்ட் டிபர்ட்மெண்ட்டில் இருந்து வருவதாகவும் சிலவருடங்களுக்கு முன்பதாக நீங்கள் கட்டவேண்டியிருந்த பணத்தை வசூலிப்பதற்காகவே வந்திருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

அதிர்ச்சியடைந்த டேவிட் அப்பொழுதுஇருந்த நிலையில் ஏதோ பொய்களை சொல்லி வந்தவர்க்ளை அனுப்பிவிட்டார். சிலவருடங்களுக்கு முன்பாக டேவிட் ஒரு பாங்கில் இருந்து கடனட்டை ஒன்றை வாங்கி தனது நண்பர்களுடன் மிகவும் ஜாலியாக பணத்தை செலவழித்திருந்தார். பணத்தை செலவுசெய்யும்போது இவர் செலவு செய்யும் பணத்தை பற்றி சிந்திக்கவில்லை.ஆனால் மாதத்தின் இறுதியில் இவர் தான் செலவுசெய்த பணத்தை பற்றி அவதானித்தார் ஒரு மாதத்தில் மட்டும் 75 000 செலவழித்திருந்தார்.அதிர்ச்சியடைந்துவிட்டார் டேவிட்.பாங்கில் இருந்து தொலைபேசியழைப்பு வர அதை ஒருமாதிரியாக சமாழித்தார் டேவிட் ஆனால் நேரிலும் வரத்தொடங்கினார்கள்.இதனால் ரொம்பவும் குழம்பினார் டேவிட்.பணம் கட்டமுடியாமல் இவருக்கு வேரொரு பிரச்சனையும் இருந்தது.இவர் வேலை செய்த கம்பனியை சில காரணங்களுக்காக மூடிவிட்டார்கள்.இதனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பியிருக்கிறார்.

ஆனால் எப்போதோ நடந்த இந்த விடயத்திற்காக இப்பொழுது எப்படி என்னை தேடிவந்தார்கள் என்று குழம்பினார் டேவிட்.அத்துடன் பாங்கில் இருந்து கோல் செய்தவர்கள் இவரது சம்பளம் முதற்கொண்டு அனைத்தையும் கூறியது இவருக்கு அதிர்ச்சியை அளித்தது.அப்பொழுதுதான் அனிதா தான் பாங்கில் வேலை செய்வதாக கூறியது நினைவுக்கு வந்தது.அனிதாவுக்கு கோல் செய்தார் டேவிட் அனிதா கூறிய விடயம்  டேவிட்டை  தூகிப்போட்டது.தான் நீங்கள் கடனட்டை வாங்கிய பாங்கில்தான் வேலைசெய்கிறேன்.உங்களைப்பற்றிய விடயங்களை அறிவதற்காகத்தான் உங்களுடன்  நான் பழகினேன் எனவும்  இனிமேல் நீங்கள் எங்கும் மறையமுடியாது உங்களைப்பற்றிய சகலவிடயங்களும் எங்களிடம் தற்பொழுது இருப்பதாகவும் கூறியுள்ளார் அனிதா...

டேவிட் தற்பொழுது அந்தப்பணத்தை முழுமையாக கட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்காக பணத்தை வசூலிப்பதற்கு இப்படியொரு நாடகத்தை ஏன் நடத்தினார்கள் என மனவருத்தப்படுகிறார் டேவிட்.

இது தொடர்பாக நீயா நான குழு அனிதாவிடம் தொடர்புகொண்டபொழுது அப்படி எதுவுமே நடைபெறவில்லை என அனிதா கூறியுள்ளார்.

பேஸ்புக்ஐ வைத்து என்னென்னவோ செய்கிறார்கள் ஆனால் இப்படியும் செய்ய முடியும் என இன்னிகழ்ச்சி நமக்கு எடுத்துக்காட்டுவது நமக்கு சற்று அதிர்ச்சியழிக்கின்றது.இனி பேஸ்புக்ஆல் என்னென்னவெல்லாம் செய்யலாம் என அவனவன் செய்துகாட்டும்பொழுதுதான்  நமக்கு தெரியும்.
நம்மூர் பொண்ணுங்களைப்போல் முகம்தெரிந்தவர்களை மட்டும்தான் பேஸ்புக்இல் இணைத்துக்கொள்ளவேண்டும்.

இதே போல இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.பாங்களூரில் கைகால் கட்டப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலத்தை பொலீசார் கண்டுபிடித்தார்கள்.கொலை என்ற தளத்தில் விசாரனை நடத்திய போதுதான் அது கொலைஅல்ல தற்கொலை என்று பொலீசாருக்கு தெரியவந்தது.தற்கொலை செய்தவரின் பெயர் ஸ்ரீதர்.இவர் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர்.
இவர் தனது கடனட்டை தொடர்பாக பாங்கிற்கு தொடர்ந்து மெயில்களை அனுப்பிவந்தார் இவற்றை ரிசீவ் செய்தவர் அங்கு பணிபுரியும் ஜெனிஃபர் என்ற பெண்.மெயிலில் ஆரம்பித்த சட்டிங்க் பேஸ்புக் வரை சென்றது.ஜெனீஃஃபர் தனது பேஸ்புக் ப்ரொஃஃபயில்  ஃபோட்டோவாக அழகான ஒரு பெண்ணின் ஃபோட்டோவை போட்டிருந்தார்.அது அவரது போட்டொ என நம்பி காதலில் விழுந்திருக்கிறார் ஸ்ரீதர்.ஜெனீஃபெர் தான் திருமணம் செய்ய உள்ளதாக ஸ்ரீதரிடம் கூறவே மனமுடைந்த ஸ்ரீதர் தற்கொலை செய்துள்ளார்.

பேஸ்புக்ஆல் நடைபெறும் பிரச்சனைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துகொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.இதனால் நாம் சற்று விழிப்புணர்வுடந்தான் இவற்றை அணுகவேண்டி இருக்கின்றது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}