coincidence-02


முதற் பதிவில் coincidence என்றால் நாம் எதை விளங்கிக்கொள்கின்றோம்..வரலாற்றில் நடந்த மிகவும் ஆச்சரியமான coincidence கள் coincidenceசை ஒத்த சில மாறுபட்ட விடயங்கள் போன்றவற்றை பார்த்தோம்
coincidence-01
சரித்திர புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதுபதிகளின் 16 பொருத்தங்கள் லிங்கன் ,கென்னடி பற்றியது 
லிங்கன் 1860 இலும் கென்னடி 1960 இலும் ஜனாதிபதியானர்கள் சரியாக 100 வருடங்கள் 

இருவரும் நீக்ரோ இனத்தவர்களின் உரிமைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள் 
இருவரும் வெள்ளிக்கிழமை தத்தம் மனைவிகள் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள் 

இருவரது மனைவியரும் வெள்ளை மாளிகையில் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் ..இருவரதும் பிறந்ததும் இறந்துவிட்டது 
கென்னடி லிங்கன் இருவரும் தலையின் பின் புறம் குண்டு துளைத்து இறந்தார்கள் 
லிங்கன் இறந்தது ஃபோர்ட் அரங்கில், கென்னடி இறந்தது லிங்கன் என பெயர்கொண்ட காரில். அக் கார் ஃபோர்ட் கொம்பனியால் செய்யப்பட்டது.

இருவரும் இறந்ததும் ஜன்ஸன் எனும் பெயர்கொண்டவர்கள் உடனே ஜனாதிபதியாக பதவியேற்றார்கள்.
அன்று ஜன்ஸன், லின்டன் ஜன்ஸன்.

அன்று ஜன்ஸன் பிறந்தது 1808, லின்டன் ஜன்ஸன் பிறந்தது 1908. அதே 100 வருட இடைவெளி.

லிங்கனின் செயலரின் முன்பெயர் ஜான்!, அதே வேளை கென்னடியின் செயலரின் பின் பெயர் லிங்கன்!!!

இருவரையும் கொன்றவர்கள் பிறந்த ஆண்டுகள், ஜோன் வில்க்ஸ் 1839. ஹர்வி 1939. அதே 100!!!

கொன்றவர்கள் இருவரும் தென்மாநில தீவிர வாதிகள்.

இருவரும் பிடிபட்டு வழக்கு தொடர முன் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

லிங்கனை கொன்றவன் அர‌ங்கத்தில் கொண்டுவிட்டு ஒரு கிடங்குக்குள் ஓடினான். கென்னடியை கொன்றவன் கிடங்கிலிருந்து கொண்டுவிட்டு தியேட்டரை நோக்கி ஓடினான்.

லிங்கன், கென்னடி இருவரினதும் ஆங்கில எழுத்துக்கள் 7. தற்காலிகமாக பதவியேற்றவர்களினது ஆங்கில எழுத்துக்கள் 13!

கொன்றவர்களின் பெயர்களின் எழுத்துக்களும் 15!





இருவரும் ஆறடி உயரமானவர்கள் 
இருவரும் சட்டம் படித்தவர்கள் 
இருவருக்கும் பரம்பரை பாதிப்புக்கள் இருந்தன லின்கனுக்கு Marfan's disease  கென்னடிக்கு Addison's disease
இருவரும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் லின்கன் Black Hawk War இல் கப்டினாக இருந்தவர் கென்னடி இரண்டாவது உலக யுத்தத்தில்  navy lieutenant  ஆக இருந்தவர் 
இருவருக்கும் பயமே இல்லை இருவரும் தமது போடி கார்ட்ஸ்சை ஒதுக்கினார்கள் 
இருவரும் தமது தாத்தாவின் பெயரை தமது பெயர்களுடன் இணைத்துக் கொண்டவர்கள் 
இருவரும் தமது குடும்பத்தின் இரண்டாவது மகன்கள் 
இருவரும் தமது மனைவியை மனைவி 24 வயதாக இருக்கும்போது திருமணம் செய்தார்கள் 
இருவருக்கும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு 



ரயிலில் மூவர்
மூன்று ஆங்கிலேயர்கள் அமெரிக்காவில் ரயிலில் பயணம் செய்தார்கள் ஒருவரை ஒருவர் முதன் முதலில் சந்தித்துக் கொண்டார்கள் அவர்களின் பெயர்களில் தான் இருக்கின்றது விடயம் 
முதலாவது நபர் -பின்ஹம் 
இரண்டாவது நபர்- போவெல் 
மூன்றாவது நபர் -பின்ஹம் போவெல் 
பிரான்க் ரிக்டர் என்பவர் முதலாம் உலகப்போரில் பங்குபற்றிய பின் ஓய்வு பெற்று பேருந்து கம்பனியில் வேலை பார்த்தார் இவர் ஒரு முறை நிமோனியாவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அதே வேளை மற்றொரு பிரான்க் ரிக்டர் நிமோனியாவிற்காக அனுமதிக்கப்பட்டார் இருவருமே முதலாம் உலகப் போரில் பங்கு பற்றி ஓய்வு பெற்று பேருந்து கம்பனியில் வேலை பார்த்தவர்கள் 
1974 இல் தி சண்டே டைம்ஸ் நிகழ்த்திய வாசகர் போட்டியில் நம்பமுடியாத தற்செயல்கள் பற்றிய தமது அனுபவங்களை வாசகர்கள் ஆதாரத்துடன்  சமர்ப்பித்திருந்தார்கள். அதில் எல்லோரையும் விழி பிதுங்க வைத்த நிகழ்ச்சி பேஜ் என்ற ராணுவ வீரனின் அனுபவம்தான் 1940 இல் நான் ஒரு இளம் ராணுவ வீரன் எனது கல்யாண போட்டோக்களை எனது மனைவி எனக்கு பாசல் செய்து அனுப்பி இருந்தார் கவரை பிரித்து பார்த்த பொழுது எனது வயதை ஒத்த வேறொருவரின் போட்டோ இருந்தது கவரை வடிவாக அவதானித்த பொழுது பேப் என்பவருக்கு அனுப்பப்பட்டது என தெரிந்தது பின்பு பேப் என்பவரிடம் அவரது போட்டோக்களை ஒப்படைக்க சென்றால் அவர் அங்கு என் போட்டோக்களை வைத்து குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் எனது ராணுவ நம்பர் 1509321 அவரது நம்பர் எனக்கு அடுத்த நம்பர் 

பின்னர் ராணுவத்தை விட்ட பின்னர் லண்டன் ட்ரான்ஸ்போர்ட்டில் வேலை பார்த்தேன். எனது சம்பள கவரில் பணம் குறைவாக இருந்தது கவரில் பேப் என்று இருந்தது அதை விசாரித்து கொடுக்க சென்றபோது அங்கு அதே ஆசாமிதான் நின்றுகொண்டிருந்தார் 
அவரது லைசென்ஸ் நம்பரை பார்த்த பொழுது ராணுவ நம்பரை போலவே எனக்கு அடுத்த நம்பராக இருந்தது. 

ஜோசப் பிக்வக் என்பவர் 1930 இல் டெட்ரோயிட் நகரில் தெருவில் நடந்து செல்லும்போது ஒரு குழந்தை திடீரென்று அவர்மேல் மாடியிலிருந்து விழுந்து உயிர் தப்பியது ஒரு வருடம் கழித்து அதே குழந்தை அதே மாடியிலிருந்து அவரின் மீதே திரும்பவும் விழுந்து உயிர் தப்பியது. 
க்யு பிரிமென்ட் என்பவர் பிரபல பத்திரிக்கை நிபுணர் ௧௯௫௩ எலிசபத் அரசியின் முடி சூட்டு விழாவை விபரிப்பதற்கு சென்றிருந்தார் அங்கு அவர் தங்கிய அறையின் இழுப்பறையை திறந்து பார்க்கும் போது அதில் அவரது பழைய நண்பர் ஹான் என்பவரது பொருட்கள் இருந்தன திரும்ப அதனை கொடுத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது கடிதம் வந்தது ஹனிடமிருந்து அதில் "நான் பாரிஸில் தங்கி இருக்கின்றேன் நான் தங்கி இருக்கும் அறையின் இழுப்பறையில் உனது பெயர் பொறித்த டை இருக்கின்றது அதை அனுப்பிவிடவா? என்று இருந்தது 
ஜேம்ஸ் ஸ்பைசெட் என்பவர் ௧௭௮௭ ஜனவரி 25 இல் கொல்லப் பட்டார் அப்போது அவர் அணிந்திருந்த கோட் அவரது அண்ணன் டானியினுடையது அதை அணிந்திருக்கும் போதுதான் அவர் அண்ணனும் கொல்லப்பட்டார் அண்ணன் மரபை துளைத்த அதே துளையிநூடாகத்தன் தம்பியும் இறந்தார் 

இரட்டையர்களாக பிறந்தவுடன் வேறு வேறு குடும்பத்திற்கு வளர்க்க கொடுக்கப்பட்ட குழந்தைகள் நீண்டகாலம் ஒருவருக்கொருவர் சந்திக்கவே இல்லை. 39 வயதான போது 1979 இல் சந்தித்து கொண்டார்கள் இருவரும் தத்தமது வாழ்வை ஒப்பிட்டு பார்த்தார்கள். 
இருவருக்குமே ஆச்சரியம் 
இருவரும் சட்ட மீறல் தடுப்பு உத்தியோகத்தில் இருந்தார்கள் 
இருவருக்கும் சித்திரம் வரைவதிலும் தச்சு வேலையிலும் விருப்பம் 
இருவரது மனைவியரின் பெயர்களும் லிண்டா 
இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் மகள்கள் இருவரினதும் பெயர் ஆலன். 
இருவரும் விவாகரத்தாகி மீண்டும் திருமணம் செய்தவர்கள். 
அவ்விரு பெண்களின் பெயர்களும் பெட்டி. இருவரும் நாய் வளர்த்தார்கள் பெயர் ?இரண்டுக்குமே ...டைனி

தொடரும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}