தொடர் கொலைகாரர்கள்-02


சென்றபதிவில் நாம் ஒரு கொலைகாரன் எப்படி உருவாகின்றான் என்றுபார்த்தோம் கொலைகாரனைப்பற்றிய நமது கற்பனைகள் எப்படி தவறாகின்றன என்பதையும் பார்த்தோம்..முதல் பதிவு தொடர் கொலைகாரர்கள்-01

ஒரு சாதாரண மனிதன் மிகுந்த வன்முறையாளனாகவும் கொலைகாரனாகவும் மாறுவதற்கு அவனது இளமைப்பருவத்தில் ஏற்பட்ட மிகக்கசப்பான அனுபவங்கள் துஸ்பிரயோகங்கள் வன்முறைகள் காரணமாகின்றன இப்படி பாதிக்கப்பட்ட சிறுவர்களை அதாவது எதிர்கால தொடர் கொலையாளிகளை சில நடவடிக்கைகள் மூலம் அடையாளம் காணமுடியும்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள்,நெருப்புபற்ற வைப்பதை ரசிப்பார்கள்,
 நாய் பூனை போன்றவற்றை சித்திரவதை செய்வதில் இன்பம் காணுவார்கள் அவற்றை வெகு நேரம் சித்திரவதைசெய்து துடிதுடித்து சாகடிப்பார்கள் இதன் மூலம் பரவசமடைவார்கள். இது முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து பின் பெரிய அளவிற்கு மாறிவிடும். இதற்கு இவர்களுக்கு சரியான ஊக்குவிப்பு வழங்கும் ஒரு நபர் சந்தித்துவிட்டால் அவளவுதான்..ஆனால் இப்படிப்பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் எதிர்காலத்தில் கொலைகார்ர்களாக மாறுவதில்லை.

 பிற்காலத்தில் சரியான கவனிப்புக்கள் வழிநடத்தல்கள் அரவணைப்புக்கள் காரணமாக சாதாரண மனிதர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் கவனிக்கப்படத்தவறும் ஒரிருசிறுவர்களின் எதிர்காலம் தான் கொலைக்களம் ஆகிவிடுகின்றது.

வன்முறை என்றவார்த்தை சகலருக்கும் பொதுவானது. அது ஒவ்வொருவரிடமும் அவரவர் இயல்புக்கேற்ப வெளிப்படுத்தப்படுகின்றது. வன்முறை தனிமனிதரிடமிருந்து  வெளிப்படுத்தப்படலாம். அல்லது கூட்டாக வெளிப்படுத்தப்படலாம். இரண்டும் ஆபத்தானவைதான் ஆனால் கூட்டாக வன்முறை வெளிப்படுத்தப்படும் போது பாதிப்புக்கள் கொடூரமாக அமையும். ஏனெனில் வன்முறையில் ஈடுபடும் கூட்டத்தில் இருக்கும் ஏனையோரால் அதற்கு ஊக்குவிப்பு உற்சாகம் வழங்கப்படுதல் இதற்கு முக்கிய காரணம்.

தனிமனித வன்முறைகளின் உச்சக்கட்ட உதரணங்களாக இத்தொடர்கொலைகாரர்களைக்கருதலாம் அல்லது பத்திரிகைகள் டிவிக்களில் நாம் அசராது தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் சாதாரணகொலைகாரர்களைக்கருதலாம். கூட்டாக வன்முறையில் ஈடுபடுதலுக்கு கலவரங்கள் யுத்தங்கள் நல்ல உதாரணம். யுத்தம் நடைபெறும் பகுதியில் அது எங்கு நடைபெற்றாலும் அங்கு கொலைகள் பொருட்கள் சூறையாடப்படுதல் கற்பழிப்புக்கள் என்பன சர்வசாதாரணமாக நடைபெறும்.

இவை இன்று நேற்று தொடங்கியவை அல்ல உலக வரலாற்றின் பலசம்பவங்கள் எமக்கு இவற்றை காலாகாலமக படிப்பித்துவந்திருக்கின்றன.

உதாரணமாக உலகப்போரை எடுத்துக்கொள்வோம் இரண்டாவது உலக யுத்தத்தில் அதிக மனித இழப்புக்களையும் காயங்களையும் சந்தித்த நாடு ரஷ்யா அண்ணளவாக 21 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்பட்டார்கள் ..
5 ஜேர்மனிய வீரர்களில் 4 வீரர்கள் இறந்தார்கள்


இந்த யுத்தத்தில் இறந்த சிறுவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன்
1923 இல் சேவியத்தில் பிறந்த 8 % ஆண்கள் இறந்தார்கள்


1939 தொடக்கம் 1945 வரை allies இனால் போடப்பட்ட குண்டுகளின் எடை 3 .4 மில்லியன் டன் சராசரியாக ஒரு மாதத்திற்கு 27700 டன் என்ற வீதத்தில் போடப்பட்டுள்ளது


ரஷ்யா இராணுவத்தினர் பாரிய அளவிலான போர் குற்றங்கள் புரிந்துள்ளார்கள்
ஜெர்மனியை சேர்ந்த 13 -70 வயது வரை உள்ள பெண்களில் 2 மில்லியன் பெண்கள் கற்ப்பளிக்கப்பட்டார்கள்.


nazi இனத்தவர்கள் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை 12 மில்லியன்

nazi இன மருத்துவர்கள் யூதர்களை மருத்துவ பரிசோதனைக்காக பயன்படுத்தினார்கள் ..உதாரணமாக ஒருமனிதனின் எலும்புகள் எத்தனை தடவைகள் உடைந்தபின் மீண்டும் பொருந்தாது என்பதை யூதர்களின் எலும்பை உடைத்து பரிசோதித்தார்கள் ..சுத்தியலால் யூதர்களின் தலை ஓட்டை (மண்டை ஓடு) உடைத்து தலை ஓட்டின் வலிமையை பரிசோதித்தார்கள்Dr.josef mengele இவரை angel of death என அழைப்பார்கள் இவர் 3000 இரட்டையர்கள் மீது மரபணு பரிசோதனையை மேற்கொண்டார் இதில் அநேகமானவர்கள் சிறுவர்கள் இதில் 200 சிறுவர்களே பிழைத்தார்கள் .

உலகப்போரில் அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விபரங்கள் 
 650 000 ஜீப்கள்

300 000 விமானங்கள்
89 000 டாங்கிகள்
3 மில்லியன் இயந்திரத்துப்பகிகள்
7 மில்லியன் துப்பாக்கிகள் உருவாக்கப்பட்டன.

இது ஒரு உதாரணம்தான் உலக வரலாற்றில் பல கொடூரமான மன்னர்கள்,தளபதிகள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.விதம் விதமான கொலைகள் சித்திரவதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகள் இவர்கள்.இவர்களின் கீழ் இவர்கள் இடும் கொடூரமான கட்டளைகளுக்காக காத்திருந்து அவற்றை ரசித்து செயற்படுத்தும் விசுவாசமான படைகளும் இருந்திருக்கின்றன.

ஹிட்லர்,முசோலினி,செங்கிஸ்கான்,கலிக்யூலா போன்றவர்கள் இந்த லிஸ்டில் அடங்குகிறார்கள். முதலில் செங்கிஸ்கான்.செங்கிஸ்கான் மன்கோலிய மன்னன் தான் செல்லும் பிரதேசங்களையெல்லாம் ரத்தத்தில் தோய்த்து எடுத்த கொடூரமான சர்வாதிகாரி.நெப்போலியன் ஹிட்லர் போன்றவர்களால் கைப்பற்ற முடியாத ரஸ்யாவை கைப்பற்றியவன் செங்கிஸ்கான்.
சீனப்பெரும் சுவர் கட்டப்பட்டதே எதிரிகளிடமிருந்து  நாட்டை பாதுகாப்பதற்குத்தான்.ஆனால் செங்கிஸ்கான் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.செங்கிஸ்கானின் படைகள் சுவரில் காவலில் ஈடுபட்டிருந்த அனைத்து சீனவீரர்களையும் கொன்றுவிட்டு சர்வசாதாரணமாக வடசீனா முழுவதையும் கைப்பற்றின.
செங்கிஸ்கானின் இதயம் கல்லாகப்போனதற்கும் காரணம் இருக்கின்றது.செங்கிஸ்கானின் தந்தை எதிரிகளால் கொல்லப்பட செங்கிஸ்கான் சித்திரவதை செய்யப்பட்டான்.பின்னர் படைகளைத்திரட்டி எதிரிகளுடன் போர்செய்தான் ஆனால் தோற்கடிக்கப்பட்டான்.அவனது கண்முன்னாலேயே அவணுக்கு விசுவாசமான 70 வீரர்கள் பானையில் போட்டுவறுத்து எடுக்கப்பட்டார்கள்.இதைஎல்லாம்  நேரேகண்ணால் பார்த்த செங்கிஸ்கானின் இதயம் கல்லாகிப்போய்விட்டது.

செங்கிஸ்கானின் உண்மையான பெயர் தெமுசின் பின்னர் செங்கிஸ்கான் என மாற்றி அமைத்துக்கொண்டான்.செங்கிஸ்கான் என்றால் முழுமையான போர்வீரன் என்று அர்த்தம்.ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் செங்கிஸ்கானின் படைகள் எட்டிப்பார்த்த பொழுது செங்கிஸ்கானைப்பற்றி அறியாத கவர்னர் அவர்களை வெட்டி விட்டார்.சரணடைந்துவிடும் படி செங்கிஸ்கான் தூதுவனை அனுப்ப தூதுவனின் தலையை வெட்டி பார்சலாக செங்கிஸ்கானுக்கு அனுப்பி வைத்தார் கவர்னர்.செங்கிஸ்கானின் கண்கள் சிவந்துவிட்டன.செங்கிஸ்கானின் படைகள் வெறிகொண்டு தாக்க அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.கவர்னரை கைது செய்து கொண்டுவரும்பொழுது கவர்னர்.தயவு செய்து என்னை உடனே கொண்றிவிடுங்கள் என்று கத்தினார்.ஆனால் செங்கிஸ்கான் சிம்பிளாக முடியாது என்று கூறிவிட்டான்.அத்துடன் உனக்கு நான் வெள்ளியை பரிசாகத்தரப்போகின்றேன் என்று கூறிவிட்டு வீரர்களே வெள்ளியை காய்ச்சி இவனது காது கண் இறுதியில் தொண்டைக்குள் ஊற்றுங்கள் என்று கட்டளை இட்டான் கட்டளை இனிதே நிறைவேற்றப்பட்டது.

புகார என்ற நகருக்குள் செங்கிஸ்தான் செல்லும்பொழுது அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் மசூதிக்குள் ஒழிந்துகொண்டார்கள்.செங்கிஸ்கான் அங்குவர ஒருவர் குர்ரானுடன் செங்கிஸ்கானின் முன்னே வந்தார் உடனடியாக அவர் வெட்டித்தள்ளப்பட்டார் குர்ரான் தீயிட்டுக்கொழுத்தப்பட்டது.மசூதிக்குள் இருக்கும் அனைத்து ஆண்களும் தமது மனைவிமாரை தாங்களே கழுத்தை நெரித்துக்கொண்றார்கள்.தங்கள் மனைவிமாரை தங்கள் கண்முன்னாலேயே பலாத்காரம் செய்துவிடுவார்களோ என்ற பயம்தான் இதற்குக்காரணம்.

தாம் கைப்பற்றும் நாடுகள்,பிரதேசங்களை ரத்தவெள்ளத்தில் அமிழ்த்திய சர்வாதிகாரிகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம்.
1.தமது நாடு இனத்தவரை விட்டுவிட்டு தமது எதிரிகளை ரத்த வெள்ளத்தில் அமிழ்த்துபவர்கள்.

2.தமது எதிரிகளுடன் நின்றிவிடாது தனது நாட்டுமக்கள்,குடும்ப உறுப்பினர் வரை வன்முறையை கட்டவிழ்த்தவர்கள்.பொதுவாக இவ்வாறானவர்களுக்கு நண்பர்கள் மிக குறைவு காரணம் யாரையும் நம்ப மாட்டார்கள்.
செங்கிஸ்கான் முதலாவது ரகம் அவன் இறந்ததும் மொங்கோலிய மக்கள் "ஓ" என்று கதறி அழுதார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் மன்னன் கலிக்யூலா 2 ஆவது ரகம் சொந்த நாட்டு மக்களை வன்முறைக்கடலில் ஆழ்த்தியதுடன் நின்றுவிடாது தனது சகோதரிகளை படுக்கையறை வரை கொண்டுசென்ற செயலைசெய்தவன் இவன்.
கலிக்யூலா உரோம் நாட்டின் மன்னன் இவன் முதல்முதலில் காதல்வயப்பட்டது தன் சகோதரிமீதுதான்.திருமணமான அவனது சகோதரிகளின் 3 கணவன்மார்களையும் அடித்துத்துரத்தப்பட்டார்கள்.பின்னர் அவனது சகோதரிகள் அவனது படுக்கையறைக்கு அனுப்பப்பட்டார்கள்.இவன் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்வது சிறுவர்களிடமும் சிறுமியரிடமும்தான்.இதனால் இவனது நெருங்கிய உறவினர்களும் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள்.மக்களை மகிழ்விக்கின்றேன் என்று கூறி ஸ்ரேடியத்தில் சிங்கங்கள்,புலிகளுடன் வீரர்களை மோதவிடுவான்.தோற்றவர்தான் சிங்கத்திற்கு அன்றைய உணவு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு முன்னால் சிங்கம் தனது அன்றைய 6 அறிவு இரையை தின்றுவிட்டு ஏப்பம் விடும்.

கேளிக்கை விடுதிகள் விபச்சார விடுதிகள் என பலவற்றை அமைத்தான்.இவ்வாறு தொடர்ந்து செலவளிக்க கஜானா காலியாகியதால் சிங்கங்கள் எலும்பும் தோலுமாகின.வீரர்கள் கலிக்யூலாவிடம் என்ன செய்வது என்று கேட்க சிறைக்குள் இருக்கும் அடிமைகளை ஒவ்வோரு நாளும் உணவாகப்போடுங்கள் என்று  சலிப்புடன் கூறினான் மன்னன்.
மக்களிடம் மாமூல் வாங்க இவனே அடியாட்களை அனுப்பினான்.

பின்னர் ஒரு நாள் தனது சகோதரிகளையே அரண்மனைக்கு அழைத்துவந்து எனி யார் வேண்டுமானாலும் எனது சகோதரிகளை அனுபவிக்கலாம்.ஆனால் அதிக பணம் தரவேண்டும் ஏனெனில் அவர்கள் ராஜவம்சத்தினர் இல்லையா? என்று கூறி யார் யார் எப்பொழுது வரவேண்டும் என்று நேரஅட்டவனையையும் அமைத்துக்கொடுத்தான்.அத்துடன் மந்திரிகள் பிரதானிகளிடம் நாளை முதல் நீங்கள் உங்கள் மனைவி பிள்ளைகளையும் விபச்சாரத்திற்காக இங்கே அழைத்துவரவேண்டும் அதற்கான கட்டணத்தை பின்னர் அறிவிக்கின்றேன் என்று கூறிவிட்டான்.சிறுமியரிடம் உடலுறவு கொண்டபின் அவர்களது முகத்தின்மேல் தலையணையை வைத்துவிட்டு ஏறி அதன் மேல் அமர்ந்துகொள்வான் அவர்கள் மூச்சுத்திணறி இறப்பார்கள்.
ஒரு நாள் தன் குதிரையை அரசனாக்கி அழகுபார்த்தான்.இவற்றால் கடுப்பாகி இவனுடன் நெருக்கமாக இருந்த படைவீரன் ஒருவனே கலிக்யூலாவை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டான்.

மனனிலை பாதிக்கப்பட்ட ஒருவனை மக்கள் தமது மன்னனாக அல்லது தலைவனாக தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனைகள்தான் இவைகள்.அத்துடன் இவர்களைப்பற்றி மக்கள் அறியாததும் முக்கிய காரணம் .தலைவனாகுவதற்கு முன் இவர்கள் மக்கள் முன் வடிக்கும் முதலைக்கண்ணீரை மக்கள் இலகுவாக நம்பிவிடுகிறார்கள்.

அடுத்த பகுதியில் இங்கா மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்...

தொடரும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}