உயிர்த்தெழுந்த ஒலிம்பிக்(1896)

(ஓலிம்பிக் பற்றிய 2 ஆவது பதிவு இது ஒலிம்பிக் வரை முக்கியமான ஒலிம்பிக் பற்றிய பதிவுகள் இடப்படும் முதலாவது பதிவு )
கி.பி393 இல் கிறீஸ்தவ மதத்தை சேர்ந்த உரோமை சேர்ந்த மன்னன் “Theodosius” இனால் ஒலிம்பிக் சடுதியான நிறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து 1000 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஒலிம்பிக் நடைபெறாமல் இருந்துவந்தது.இன் நிலையில் தொடர்ந்து நடைபெறாமல் இருந்த ஒலிம்பிக்கை மீண்டும் உயிர்ப்பிக்க பலர் முயற்சிசெய்தார்கள்.1796 இல் இருந்து 1798 வரை ஒவ்வொரு வருடமும் L'Olympiade de la République என்ற பெயரில் ஒலிம்பிக்கைபோன்ற போட்டி நடைபெற்றது.இது பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை உள்ளடக்கி இருந்தது.1796 இல் விளையாட்டுக்களில் அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.1850 இல் ஒலிம்பிக் வகுப்புக்கள் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டன.

1859 இல் புரூக்ஸ் என்பவர் இதன் பெயரை  Wenlock Olympian Games என்று மாற்றினார்.ஒலிம்பிக் திருவிழாக்கள் 1862 இல் இருந்து 1867 வரை வருடா வருடம் இடம்பெற்றது.
கிரேக்கம் 1821 இல் ஒட்டோமனிடமிருந்து விடுதலையடைந்தது.இதன் பின்னர் ஒலிம்பிக்கை உயிரூட்டுவதற்கான குரல்கள் வலுவாக எழு ஆரம்பித்தன.ஒலிம்பிக்கை உயிர்ப்பித்தல் தொடர்பாக முதல் முதலில் கருத்தை வெளியிட்டவர் பத்திரிகையாசிரியரும் கவிஞருமான  Panagiotis Soutsos இவரது "Dialogue of the Dead" என்ற கவிதையினூடாக 1833 இல் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

 Evangelis Zappas என்பவர் மன்னர் ஒட்டோவிற்கு ஒலிம்பிக்கை உயிர்ப்பிப்பதற்கு நிதிவழங்கி உதவுமாறு 1856 இல் கடிதமொன்றை எழுதினார்.அத்துடன் இவரே அதற்கு நிதியையும் வழங்கினார்.இவ் ஒலிம்பிக் 1859 இல் எதேன்ஸில் 1859 இல் நடைபெற்றது.பாரம்பரியம் வாய்ந்த Panathenaic stadium  இல் நடைபெற்றது.1870 இல் இருந்து 1875 வரை ஒலிம்பிக் நடைபெற்றது.1870 இல் நடைபெற்ற ஒலிம்பிக்கிற்கு 30,000 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள் என கூறப்படுகின்றது.ஆனால் இவற்றிற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.1894 இல் Pierre de Coubertin  என்பவரால்  International Olympic Committee (IOC) ஆரம்பிக்கப்பட்டது. Coubertin இனால் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக்கை  நட்த்துவதற்கான யோசனை 1894 இல் பாரிஸ்ஸில் நடைபெற்ற முதலாவது IOC  மானாட்டில் தெரிவிக்கப்பட்டது. விவாதங்களை தொடர்ந்து இம்மானாட்டின் முடிவில் இவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நவீன ஒலிம்பிக் போட்டியானது எதேன்ஸில் 1896 இல் நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

1896 இல் ஒலிம்பிக்...1896 இல் ஒலிம்பிக் எதேன்ஸில் நடைபெற்றது.இவ் ஒலிம்பிக் Games of the I Olympiad என அழைக்கப்பட்டது.இது பல விளையாட்டுக்களை தன்வசம் கொண்டிருந்தது.புதிய சகாப்தத்தின் முதலாவது ஒலிம்பிக் இதுவாகும்.ஒலிம்பிக் விளையாட்டின்தாய் நாட்டிலேயே முதலாவது ஒலிம்பிக் இடம்பெற்றதுதான் கூடுதல் சிறப்பாகும்.
வரலாற்றில் 1886 ற்கு முன்னர் யாரும் பாத்திராத அளவிற்கு விளையாட்டுவீரர்கள் குவிந்தார்கள்.80 000 பார்வையாளர்களால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.இந்த ஒலிம்பிக் நடைபெற்ற போது ஒலிம்பிக் சர்வதேசமயமாக்கப்பட்டிருந்தது.14 நாடுகளில் இருந்து 241 விளையாட்டு வீரர்கள் 43 விதமான விளையாட்டுக்களில் பங்குபற்றினார்கள்.இதன் தொடக்கவிளா ஏப்ரல் 6 இல் கிரேக்க மன்னர் முதலாம் ஜியோர்ஜ் இனால் ஆரம்பிக்கப்பட்டது.அன் நாள் ஒரு ஈஸ்ரர் தினமாகும் அத்துடன் அன் நாள் கிரேக்கத்தின் சுதந்திர தினமும்மாகும்.80 000 பார்வையாளர்களுடன் மன்னனின் குடும்பமும் வருகை தந்திருந்தது.
 ஒலிம்பிக் கொமிட்டி தலைவரின் பேச்சு
"I declare the opening of the first international Olympic Games in Athens. Long live the Nation. Long live the Greek people."
150 நபர்களைக்கொண்ட இசைக்குழுவினால் ஒலிம்பிக் கீதம் ஒலிக்கப்பட்டது.இதை அமைத்தவர் கவிஞர் kostis palamas.இன் நிகழ்வுடன் ஒலிம்பிக் ஆரம்பமானது.ஒலிம்பிக் தீபமேற்றல் நிகழ்ச்சி 1928 இன் பின்னர்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
 மரதன் ஓட்டப்போட்டியில் கிரேக்கஒலிம்பிக் வீரர் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.கிரேக்கத்தை சேர்ந்த Spyndon louis என்ற வீரர் வெற்றிபெற்றார்.
மிகவும் திறமையாக விளையாடிய வீரராக தெரிவு செய்யப்பட்டவர் Carl suhuhmann இவர் 4 வகையான விளையாட்டுக்களில் வெற்றிபெற்றார்.


இவ் ஒலிம்பிக் பலதடைகளைத்தாண்டியே நடைபெற்றது.காரணம் அன்றையதினத்தில் நாட்டில் பணப்பற்றாக்குறையும் அத்துடன் அரசியல் குழப்பங்களும் காணப்பட்டன.1894 இல் விளையாட்டுக்களுக்கு தேவைப்படும் செலவைக்கணிப்பதற்கு ஒரு கொமிட்டியினை அமைத்தார்கள்.அக்கொமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.coubertin எதிர்பார்த்ததை விட 3 மடங்கு பணம் தேவையென கொமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது.3,740,000 gold drachmas தேவை என சமர்ப்பித்திருந்தது.


இதனால் ஒலிம்பிக் நடைபெறுவதே சந்தேகத்திற்கு இடமானது.மக்களிடமிருந்து பண உதவிகள் பெறப்பட்டன.முத்திரைகள் வெளியிடப்பட்டது,ரிக்கட்கள் விற்கப்பட்டன.இவற்றினால் நிதி சேகரிக்கப்பட்டது.ஸ்டேடியத்தை திருத்துவதற்கான பெரியதொகை செலவை வியாபரியான averoff ஏற்றுக்கொண்டார்.இது பெரிய உதவியாக இருந்தது.இவ் ஒலிம்பிக்கில் உலக சாதனைகள் எதுவும் இடம்பெறவில்லை.100மீட்டர் சைக்கிள் ஓட்டப்போட்டியில்  அமெரிக்க நாட்டின் thomas burke 12 செக்கனில் ஊடிமுடித்து வெற்றியீட்டினார்.400 மீட்டரை 54.2 செக்கனில் ஓடிமுடித்தார்.இவர் போட்டியின் ஆரம்பத்தில் மண்ணில் உதைத்தே புறப்பட்டார்.இதனால் நடுவர்களை குழப்பிவிட்டார் பின்னர் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Cycling...இது 6 நிகழ்ச்சிகளாக இடம்பெற்றது.5 நாடுகளில் இருந்து 19 சைக்கிள் ஒட்ட வீரர்கள் பங்குபற்றினார்கள்.இப்போட்டியில் ஒவ்வோரு நாடும் குறைந்தது ஒரு சில்வெர் மெடேலையாவது பெற்றிருந்தன.

நிகழ்ச்சிகள்,வெற்றிபெற்ற நாடுகள்,மெடல்களின் விபரங்கள்


  •  Austria , France , Germany , Great Britain , Greece  ஆகிய 5 நாடுகள் இன் நிகழ்ச்சியில் பங்குபற்றின. Fencing...


3 வாள்வீச்சுப்போட்டிகள் நடைபெற்றன.15 வீரர்கள் பங்குபற்றினார்கள்,3 நாடுகளைசேர்ந்த 8 வீரர்கள் வெற்றிபெற்றார்கள்.இவ்விளையாட்டு  Zappeionஇல் நடைபெற்றது.


நிகழ்ச்சி விபரங்கள்


  • பங்குபற்றிய நாடுகள்  Austria (1), Denmark (1), France (4), Greece (9)
 Gymnastics..


இதில் ஆண்கள் மட்டுமே பங்குபற்றினார்கள்.இவர்களை ஒலிம்பிக்கிற்கான சப்கொமிட்டி ஒழுங்குபடுத்தியது.9 நாடுகளை சேர்ந்த 71 வீரர்கள் இதில் பங்குகொண்டார்கள்.அதில் 52 வீரர்கள் கிரேக்கத்தை சேர்ந்தவர்கள்.EventGoldSilverBronze
Horizontal bar
details
 Hermann Weingärtner
Germany (GER)
 Alfred Flatow
Germany (GER)
none
Parallel bars
details
 Alfred Flatow
Germany (GER)
 Louis Zutter
Switzerland (SUI)
none
Pommel horse
details
 Louis Zutter
Switzerland (SUI)
 Hermann Weingärtner
Germany (GER)
none
Rings
details
 Ioannis Mitropoulos
Greece (GRE)
 Hermann Weingärtner
Germany (GER)
 Petros Persakis
Greece (GRE)
Rope climbing
details
 Nikolaos Andriakopoulos
Greece (GRE)
 Thomas Xenakis
Greece (GRE)
 Fritz Hofmann
Germany (GER)
Vault
details
 Carl Schuhmann
Germany (GER)
 Louis Zutter
Switzerland (SUI)
 Hermann Weingärtner
Germany (GER)
Team parallel bars
details
 Germany (GER)
Konrad Böcker
Alfred Flatow
Gustav Flatow
Georg Hillmar
Fritz Hofmann
Fritz Manteuffel
Karl Neukirch
Richard Röstel
Gustav Schuft
Carl Schuhmann
Hermann Weingärtner
 Greece
Nikolaos Andriakopoulos
Spyros Athanasopoulos
Petros Persakis
Thomas Xenakis
 Greece
Ioannis Chrysafis
Ioannis Mitropoulos
Dimitrios Loundras
Filippos Karvelas
Team horizontal bar
details
 Germany (GER)
Konrad Böcker
Alfred Flatow
Gustav Flatow
Georg Hillmar
Fritz Hofmann
Fritz Manteuffel
Karl Neukirch
Richard Röstel
Gustav Schuft
Carl Schuhmann
Hermann Weingärtner
nonenone
 நாடுகள்,மெடல்கள்


ஜேர்மனின் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்கள் Schuhmann, Flatow, Weingärtner
Shooting....

5 துப்பாக்கியால் சுடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதில் 2 நிகழ்ச்சிகள் ரைபிளை பயன்படுத்தியும் ஏனையவை பிஸ்ரலைப்பயன்படுத்தியும் சுடமுடியும்.ரைபிளைப்பயன்படுத்தும் போட்டியில்  Pantelis Karasevdas வெற்றிபெற்றார்.பிஸ்ரலைப்பயன்படுத்தும் போட்டியில்  John ,Sumner Paine  சகோதரர்கள் பங்குபற்றினார்கள்.இரண்டுனிகழ்ச்சிகளையும் ஒரேதடவையில் முடித்த முதலாவது சகோதரர்கள் இவர்கள்தான்.7 நாடுகளில் இருந்து 61 வீரர்கள் பங்குபற்றினார்கள்.

  •  Denmark (3), France (1), Great Britain (2), Greece (50), Italy (1), Switzerland (1), United States (3)
EventGoldSilverBronze
200 metre military rifle
details
 Pantelis Karasevdas
Greece (GRE)
 Panagiotis Pavlidis
Greece (GRE)
 Nicolaos Trikupis
Greece (GRE)
300 metre free rifle, three positions
details
 Georgios Orphanidis
Greece (GRE)
 Ioannis Frangoudis
Greece (GRE)
 Viggo Jensen
Denmark (DEN)
25 metre military pistol
details
 John Paine
United States (USA)
 Sumner Paine
United States (USA)
 Nikolaos Morakis
Greece (GRE)
25 metre rapid fire pistol
details
 Ioannis Frangoudis
Greece (GRE)
 Georgios Orphanidis
Greece (GRE)
 Holger Nielsen
Denmark (DEN)
30 metre free pistol
details
 Sumner Paine
United States (USA)
 Holger Nielsen
Denmark (DEN)
 Ioannis Frangoudis
Greece (GRE)


மெடல்,நாடுகள் Swimming...

நீச்சல் போட்டிகள்  Bay of Zea இல் நடைபெற்றன.4 நாடுகளைசேர்ந்த 13 வீரர்கள்  போட்டியில் பங்குபற்றினார்கள். நிதி பற்றாக்குறை காரணமாக ஸ்ரேடியத்தில் நீச்சல் தடாகங்கள் அமைக்கப்படவில்லை.கடலிலேயே நடத்தப்பட்டன.கடலில் நடைபெறும் இப்போட்டியை பார்வையிடுவதற்கு ஸ்ரேடியத்தில் இருந்து 20,000 பார்வையாளர்கள் கடலுக்கு சென்றார்கள்.
ஹங்கேரியை சேர்ந்த Alfréd Hajós என்றவீரர் இரண்டு நிகழ்ச்சிகளில் மாத்திரமே பங்கு பற்றினார் ஆனால் இரண்டும் அடுத்தடுத்ததாக அமைந்துவிட்டன.இதில் அவர் வெற்றிபெறுவது சாத்தியமற்றதாகவே கருதப்பட்டது.100மீட்டர்,அடுத்த போட்டி 1200 மீட்டர் ஆனால் யாரும் எதிர்பார்க்க முடியாதவகையில் இரண்டிலுமே இவர் வெற்றிபெற்றுவிட்டார்.

நிகழ்ச்சிகள்...
EventGoldSilverBronze
100 m freestyle
details
 Alfréd Hajós
Hungary (HUN)
 Otto Herschmann
Austria (AUT)
none
500 m freestyle
details
 Paul Neumann
Austria (AUT)
 Antonios Pepanos
Greece (GRE)
 Efstathios Choraphas
Greece (GRE)
1200 m freestyle
details
 Alfréd Hajós
Hungary (HUN)
 Joannis Andreou
Greece (GRE)
 Efstathios Choraphas
Greece (GRE)
Sailors 100 m freestyle
details
 Ioannis Malokinis
Greece (GRE)
 Spyridon Chazapis
Greece (GRE)
 Dimitrios Drivas
Greece (GRE)

நாடுகள்,மெடெல்கள்

Rank NationGoldSilverBronzeTotal
1 Hungary (HUN)2002
2 Greece (GRE)1337
3 Austria (AUT)1102

Weight lifting... 

1896 இல் பழுதூக்கல் அவ்வளவாக வளர்ச்சியடைந்திருக்க வில்லை.1896 இல் பழுதூக்கலில் இருந்த விதிமுறைகள் தற்பொழுதிருக்கும் விதிமுறைகளுடன் மிகவும் மாறுபட்டவை.clean and jerk ஸ்ரைலில் தான் போட்டிகள் நடைபெற்றன.இதில்  Launceston Elliot ,Viggo Jensen ஆகிய இரு வீரர்கள் இறுதியில் எஞ்சியிருந்தார்கள்.இவர்கள் சம அளவான பழுவை தூக்கியிருந்தார்கள்.இதனால் நடுவர்கள் மேலதிக சந்தர்ப்பம் வழங்கினார்கள்.ஆனால் இருவரிலுமே முன்னேற்றம் காணப்படவில்லை.
 one hand lif இல் Jensen காயமடைந்தமை  Launceston Elliot இன் வெற்றிக்கு காரணமாகியது.இபோட்டியில் 5 நாடுகளில் இருந்து 7 வீரர்கள் பங்கு பற்றினார்கள்.


EventGoldSilverBronze
One hand lift
details
 Launceston Elliot
Great Britain (GBR)
 Viggo Jensen
Denmark (DEN)
 Alexandros Nikolopoulos
Greece (GRE)
Two hand lift
details
 Viggo Jensen
Denmark (DEN)
 Launceston Elliot
Great Britain (GBR)
 Sotirios Versis
Greece (GRE)
மெடெல்கள்,நாடுகள்
 Rank NationGoldSilverBronzeTotal
1 Denmark1102
 Great Britain1102
3 Greece0022
இப்போட்டியில் குறிப்பிடும்படியான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.மாட்டியிருக்கும் எடைகளை கழற்றுமாறு பணியாளருக்கு கட்டளையிடப்பட்டிருந்தது.ஆனால் பணியாளர் சிறுது தாமதிக்கவே அரசர் ஜோர்ஜ் முன்னேசென்று எடைகளை கழற்றினார்.பார்வையாளர்களை சந்தோசப்படுத்துவதற்கு அவ் எடையை சிறிதுதூரம் அப்பால் எறிந்தார்.


Wrestling...

மல்யுத்தப்போட்டிக்கு வகுப்புக்கள் எதுவும் அன் நாளில் நடைபெறவில்லை. நேரவரம்புகள் அப்பொழுது இருக்கவில்லை.அண்ணளவாக Greco-Roman wrestling ஐ ஒத்ததாகவே காணப்பட்டது.4 நாடுகளில் இருந்து 5 வீரர்கள் பங்குபற்றினார்கள்.
 பழுதூக்கும் சாம்பியன்  Launceston Elliot கிம்னாஸ்டிக் சாம்பியன் Carl Schuhmann ஐ மல்யுத்தத்தில் சந்தித்தார்.இதில்  Elliot  வெற்றிபெற்றார்.

EventGoldSilverBronze
Greco-Roman
details
 Carl Schuhmann
Germany (GER)
 Georgios Tsitas
Greece (GRE)
 Stephanos Christopoulos
Greece (GRE)
 Rank NationGoldSilverBronzeTotal
1 Germany1001
2 Greece0112

பங்குபற்றிய 14 நாடுகளில் 10 நாடுகள் அதிக மெடல்களை வாங்கின.அமெரிக்கா அதிக தங்கப்பதக்கங்களை வாங்கியது 11 பதக்கங்கள்.கிரேக்கம் ஒட்டுமொத்தமாக 46 மெடெல்களை வாங்கியது.உண்மையில் ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றவீரர்களுக்கு சில்வர்,பித்தளய் மெடல்கள்,ஒலிவ் இலை,டிப்பிளோமா போன்றவை தான் வழங்கப்பட்டன.பின்னர் ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்தவீரர்களுக்கு தங்கப்பதக்கத்தை வழங்கியது.

1896 இல் பெண்கள் போட்டியில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.ஆனால் 17 மாத குழந்தையின் தாயாகிய Stamata Revithi என்பவர் 40 கிலோமீட்டர் மரதன் போட்டியை 5 மணித்தியாலம் 30 நிமிடத்தில் ஓடிமுடித்தார்.ஆனால் போட்டியின் இறுதியில் அவர் ஸ்ரேடியத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.இதனால் தம்மை அவதானித்த பார்வையாளர்களின் கையெழுட்துடன் தான் ஓடிய நேரத்தையும் பதிவுசெய்து ஒலிம்பிக் கமிட்டியிடம் கையளித்தார்.ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

சியஸ்ஸின் உருவத்தைக்கொண்ட சில்வர் மெடல்

கொப்பர் மெடல்

ஏப்ரல் 12 ஞாயிறுதினத்தில் மன்னர் ஜோர்ஜ் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய அனைத்துவீரர்களுக்கும் பெரிய விருந்தொன்றைவைத்து கௌரவித்தார்.இதன்போது ஜோர்ஜ் நீண்டகால யோசனையின் பின் ஒலிம்பிக்கை நிரந்தரமாக எதேன்ஸிலேயே நடத்துவதற்கு தீர்மனிக்க உள்ளேன் என அறிவித்தார்.அத்துடன் அதிகாரபூர்வமான ஒலிம்பிக் நிறைவு விழா புதனன்று நடைபெற்றது செவ்வாய் நடைபெற இருந்த இன்நிகழ்வு மழைகாரணமாக புதனுக்கு ஒத்திவைக்கப்பட்டது.இன் நிகழ்வு கிரேக்க தேசியகீதத்துடன் ஆரம்பமானது.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மெடல்கள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டார்கள்.இதன் பின்னர் ஒலிம்பிக் கீதத்துடன் மரியாதையுடன் ஸ்ரேடியத்தினுள் வலம்வந்தார்கள்.ஜோர்ஜ் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக இனிதேநிறைவடைந்தது என அறிவித்து மக்களின் வாழ்த்துக்களுடன் ஸ்டேடியத்தை விட்டு நீங்கினார்.அமெரிக்கர்கள் உட்பட அனைவரும் மன்னர் கூறியதுபோல் அடுத்த ஒலிம்பிக்கையும் எதேன்ஸிலேயே நடாத்துவதற்கு தீர்மானித்தார்கள்.ஆனால் Coubertin ,ஒலிம்பிக் கொமிட்டி இதற்கு இசையவில்லை ஒலிம்பிக் சர்வதேசரீதியாக நடைபெறவேண்டும் இதனால் அடுத்த ஒலிம்பிக் பாரிஸ்ஸில் நடைபெறும் என அறிவித்தார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}