ஒலிம்பிக் 1900இல்

1896 இல் எதேன்ஸில்   நவீன காலத்திற்கான  ஒலிம்பிக் நடைபெற்றது(1896 இல் ஒலிம்பிக்,ஒலிம்பிக் காட்சிகள்)).இதை அடுத்து  ஒலிம்பிக்போட்டி பாரிஸ்ஸிலே நடாத்துவதற்கு ஒலிம்பிக் கமிட்டி தீர்மானமெடுத்தது.பாரிஸ்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் முக்கிய சிறப்பம்சம் என்ன தெரியுமா? முதல் முதலில் பெண்கள் ஒலிம்பிக்கிற்கு அனுமதிக்கப்பட்டது இந்த ஒலிம்பிக்கில்தான்.ஒலிம்பிக்கை நடாத்தியவர்கள் விளையாட்டுக்களை 5 மாதங்களாக தொடர்ந்து நடத்தினார்கள்.அத்துடன்  அது தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்தாமல் வைத்திருந்தார்கள்.


இதனால் தாம்(இறுதிச்சுற்றில்) ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றோமோ என்று போட்டியாளர்களுக்கு தெரியாமல் இருந்தது.பிரான்ஸை சேர்ந்த Mrs Brohy, Miss Ohnier ஆகிய இரு பெண்மணிகள் தான் முதன் முதலில் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய பெண்களாவர்.இவர்கள் ஒலிம்பிக்கில் croquet என்ற விளையாட்டை விளையாடினார்கள்.இதில் ஃப்ரான்ஸை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்குபற்றியிருந்தார்கள்.துரதிஷர வசமாக இதற்கு மிகக்குறைந்த பார்வையாளர்களே வருகைதந்திருந்தார்கள்.
இந்த ஒலிம்பிக்கில் நடந்த படகுப்போட்டியில் டச்சு நாட்டு போட்டி வீரர்களின் சோடியொன்றில் ஒருவர் எதிர்பாராமல் நின்றுவிட அதற்காக ஒருவரை உடனடியாக தெரிவுசெய்யவேண்டியிருந்தது.இதனால் பிரஞ் நாட்டின் இளைஞன் ஒருவன் தெரிவுசெய்யப்பட்டான்.இவர்கள் வெற்றி பெற்றார்கள்.ஒலிம்பிக்கின் வெற்றிக்கொண்டாட்டத்தில் அவன் பங்குபற்றினான் ஆனால் சடுதியாக மாயமாக மறைந்துவிட்டான் அவனது பெயர் முதற்கொண்டு எந்த விபரமும் யாருக்கும் தெரியவில்லை ஆனால் அவனுக்கு 7 இல் இருந்து 12 வயதுவரை தான் இருக்கும் என கணித்தார்கள் பல வருடங்கள் தேடியும் இறுதிவரை அவன் யார் என்றேதெரியவில்லை.ஒலிம்பிக்கில் மிக குறைந்தவயதில் மெடல் வாங்கியவன் இந்த அனாமதேய சிறுவந்தான்.

அமெரிக்கா வீரரான Alvin Kraenzlein என்பவர் நீளம்பாய்தல்,60,110,100 மீட்டர் தடைதாண்டல்களில் வெற்றிபெற்றார்.Hélène de Pourtalès  என்பவர்தான் ஒலிம்பிக்கில் சாம்பியனாகிய முதலாவது பெண்.
Hélène de Pourtalès

Vélodrome Jacques Anquetil - La Cipale 1900 ஒலிம்பிக்கின் ஸ்ரேடியம்
ஒலிம்பிக் புகைப்படங்கள்


மெடல்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}