1904 இல் ஒலிம்பிக்

1900 இல் நவீன காலத்துக்கான 2 ஆவது ஒலிம்பிக் பாரிஸ்ஸில் நடைபெற்றது.(1900 இல் ஒலிம்பிக்).இதன் பின்னர் 3 ஆவது ஒலிம்பிக் அமெரிக்காவின் சென்.லூயிஸ்ஸில் நடைபெற்றது.ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை டேவிட் ஃப்ரான்ஸிஸ் ஆரம்பித்து வைத்தார்.இதில் பல விளையாட்டுக்கள் சர்வதேசரீதியாக நாடுகள் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டன.ஜூலை 1 தொடக்கம் நவம்பர்  23 வரை ஒலிம்பிக் நடைபெற்றது.சென் லூயிஸ்ஸின் ஃப்ரான்ஸிஸ் ஃபீல்ட் என்ற ஸ்ரேடியத்தில் நடைபெற்றது.சென் லூயிஸ்ஸில் போட்டியை ஒழுங்குசெய்தவர்கள் 1900 இல் பாரிஸ்ஸில் செய்த அதே தவறை செய்தார்கள்.போட்டிகள் நடந்த
காலகட்டத்தில் ஃபிரான்ஸ் இல் லூசியானா பிரதேசத்தில் நடந்த கேளிக்கை சந்தை கண்காட்சியில் போட்டியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியதோடு, அக் கேளிக்கை விழாவின் ஒரு பகுதியான சிறு அம்ஸன்மாக்கவே ஆகிப்போனது. அக்கெளிக்கை விழாக்களின் தலைவர் டேவிட் ஃப்ரான்சிஸ் போட்டிகளை தொடங்க யாரையும் அழைக்கவும் இல்லை, அது கொண்டாடப்படவும் இல்லை. ஆகவே, போட்டிகளே கைவிடப்படுமளவுக்கு வந்தன..

இவ் ஒலிம்பிக் மிகவும் குறைந்த எண்ணிக்கையினருடன்  நடைபெற்றது.இதனால் அண்ணளவாக ஒலிம்பிக்கின் முடிவுகாலம் நெருங்கிவிட்டதென கருதப்பட்டது.அதிகாரபூர்வமாக ஒலிம்பிக் 4 அரைமாதங்களுக்கு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.ஒலிம்பிக்கின் சிறப்புவிளையாட்டுக்களை மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன் கலந்து குழப்பினார்கள்.ஆனால் ஒலிம்பிக் கமிட்டி இங்கு நடைபெறும் 94 விளையாட்டுக்கள்தான் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என அவ்விளையாட்டுக்களை அறிவித்தது.

12 நாடுகளில் இருந்து 651 வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்குபற்றினார்கள்.இதில் 6 பெண்களும் அடங்கும்.ஆனால் திட்டமிடப்பட்டதன் அரைவாசிக்குக்குறைவான விளையாட்டுக்கள்தான் இடம்பெற்றன(42 விளையாட்டுக்கள்).

George Eyser
யூரோப்பின் டெனிஸ் விளையாட்டுவீரர் ருஸ்ஸோ யெப்பானிஸ்ஸிற்கு சென்லூயிஸ்ஸை அடைவது கடினமாக இருந்தது.பல முண்ணணி விளையாட்டுவீரர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.சில விளையாட்டுக்களுக்கு எதிப் போட்டியாளர்களே இருக்கவில்லை.இவ் ஒலிம்பிக்கில் மிகவும் குறிப்பிடக்கூடிய போட்டியாளர் அமெரிக்க ஜிம்னாஸ்ட் George Eyser இவர் 6 மெடல்களை பெற்றார் விடயம் என்னவெனில் இவரது இடதுகால் மரத்தாலானது.இந்த ஒலிம்பிக்கில்தான் முதல் முதலாக 1,2,3 ஆம் இடங்களைப்பெற்றவர்களுக்கு தங்கம்,வெள்ளி,பித்தளைப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.


 Frank Kugler இவர் வெவ்வேறு விளையாட்டுக்களில் 3 மெடல்களைப்பெற்ற ஒரே ஒரு போட்டியாளர்.இந்த ஆண்டில் நடைபெற்ற மரதன் ஓட்டம் சற்றுவிசித்திரமாக  நடைபெற்றது.
மரதன் ஓட்டம் அதிக வெப்பமான நாளில்தான் நடைபெற்றது.அத்துடன் வீதிகளும் தூசுகளுடன் காணப்பட்டன.இதனால் ஓட்டவீரர்கள் செல்லும் வழியில் குதிரைவண்டில்களில் சென்று வீதியை துப்பரவு செய்தார்கள்.இந்த மரதன் போட்டியில் முதலில் முடிவிடத்தை அடைந்தவர்  Frederick Lorz இவர் 40 மைல்களைக்கொண்ட மரதன் ஓட்டப்போட்டியில் 19 மைல்களுக்கு காரிலேயே பிரயாணம்செய்தார்.19 ஆவது மைலில் கார் பழுதடைந்துவிட எஞ்சியதூரத்தை ஓடிமுடித்தார் இவரே வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டாலும் மெடல் வழங்குவதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

மரதன் முடிந்ததும் ஹிக்ஸ் தாங்கிசெல்லப்படும் காட்சி
Thomas Hicks  என்பவர் சட்டவிரோதமாக மரதனை ஓடி முடித்தார்.இவர்  strychnine sulfate என்ற ஊக்க மருந்தை பாவித்து ஓடிமுடித்தார்.இவருக்கு இதை இவரது பயிற்சியாளர்கள் பிரான்டியில் கலந்து கொடுத்தனர்.இது ஒரு எலிக்கொல்லியாகும்.இவர் முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டார்.போட்டிமுடிந்ததும் இவரது பயிற்சியாளர்கள் இவரை சுமந்து சென்றார்கள்.இவர் ஸ்ரேடியத்திலேயே இறந்திருப்பார் அதிஸ்டவசமாக உயிர்தப்பிவிட்டார்.

கியூபாவை சேர்ந்த Felix Carbajal என்பவர் மரதனில் பங்குபற்றினார்.இவர் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் போட்டிக்கு வந்திருந்தார்.இதனால் போட்டிக்குரிய ஆடைகளை அணியவில்லை.சாதாரண ஆடையுடன் வந்திருந்தார்.எனவே ஒரு கத்தியால் தனது ஜீன்ஸை வெட்டி சோர்ஸ் ஆக்கிக்கொண்டார்.போட்டியின் இடையில் வீதியோரமாக இருந்த பழத்தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருக்கும் பழங்களைப்பறித்து உண்டார்.இவரது போதாத காலம் அவை அழுகியிருந்தன.இதனால் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.எனவே வீதியில் சிறிது நேரம் படுத்துறங்கிவிட்டு மீண்டும் ஓடி 4 வது இடத்தைப்பெற்றுக்கொண்டார்.

இவ் ஆண்டில் மரதனில் முதல் முதலாக Len Taunyane,Yamasani ஆகிய இரண்டு கறுப்பினத்தவர்கள் பங்குபற்றினார்கள்.

ஒலிம்பிக் காட்சிகள்
இந்த ஒலிம்பிக்கிற்கான மெடெல்


மெடல்கள் நாடுகள்

Rank NationGoldSilverBronzeTotal
1 United States (USA) (host nation)788279239
2 Germany (GER)44513
3 Cuba (CUB)4239
4 Canada (CAN)4116
5 Hungary (HUN)2114
6 Great Britain (GBR)1102
 Mixed team (ZZX)1102
8 Greece (GRE)1012
 Switzerland (SUI)1012
9 France (FRA)0*0*
10 Austria (AUT)0011
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}