ஜெமினிகணேசனில் இருந்து பில்லா2 வரை நாம் ஹோலிவூட்டில் சுட்டவை...

அட இப்போதெல்லாம் ஒரு தமிழ்ப்படம் வெளிவருகிறதாயின் உடனே சமூகத்தளங்களில்..இது எக்ஸ் என்ற கொலிவூட் படம் இது இத்தனையாம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று போட்டுவிடுகிறார்கள்.பழைய மாதிரி நம்ம பசங்க அட படம் நல்லா இருக்கே என்று கூறுவதற்கு முதல் முதல்வேலையாக இது எந்த திரைப்படத்தின் கொப்பி என்பதை கூகிளில் தேடிவிடுகிறார்கள்..இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.

 இயக்குனர் உஸாராக இருக்கவேண்டியதுதான்..சமுத்திரக்கனி ஒரு முறைகூறினார் சிலர் என்னிடம் படம் எடுக்கவேண்டும் என்பதைப்பற்றி கதைக்கவரும்போது அந்த கொலிவூட் படத்தில் வருவது மாதிரி எடுப்போம் என்று கூறினால் கூட பறுவாயில்லை ஆனால் நேரே ஹொலிவூட் பட சிடியை தந்துவிட்டு இதைத்தான் எடுக்கப்போகின்றொம் என்று கூட கூறுகிறார்கள்...இப்பொழுதெல்லாம் இப்படித்தான் நடக்கின்றது.

 சினிமா என்ற வியாபாரத்தில் ஹொலிவூட் படங்கள் நம்மவருக்கு அறிமுகமில்லாத காலத்தில் ஹொலிவூட் திரைப்படங்களை சுடுபவர்கள் புத்திசாலிகளாக பார்க்கப்பட்டார்கள்..ஆனால் இப்பொழுது அவர்கள் முட்டாள்கள்...நம்ம பசங்களிடம் இருந்து ஒரே ஒரு பதில்தான் "எனிமேல் இந்த பருப்பு எல்லாம் நம்மகிட்ட வேகாது"..சரி என்னென்ன படங்களை  கொப்பியடித்தார்கள் என்று கீழே வீடியோவில் இருக்கிறது.அதில் என்ன ஸ்பெஸல் என்றால் அது ஜெமினிகணேசனின் சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் இருந்து ஆரம்பிப்பதுதான்..

அண்மையில் மயக்கம் என்ன என்ற திரைப்படம் வெளிவந்தது..அது Beautiful Mind(2001) என்ற திரைப்படத்தை சார்ந்து அதன் இறுதியரைப்பாகம் எடுக்கப்பட்டுள்ளது.பில்லா-2 வுமா?.....
1983ல் வெளிவந்த அல்பாசினோ நடித்த"ஸ்கார்ஃபேஸ்" தான் பில்லா - 2 படம். கியூபாவின் மாரியல் என்னும் துறைமுகத்தை பிடில் கேஸ்ட்ரோ திறந்து 1லட்சத்தி 25,000 பேர் அகதிகளாக அமெரிக்காவுக்குள் தன் உறவினர்களுடன் சேர்ந்த போது தான் அங்கு இருக்கும் ஒரு தலை டோனி மோன்டானா. அவரும் அவர் நண்பர் மானியும் சின்ன சின்ன வேலைகள் செய்யும் போது தான் ஒமர் சுவாரேஸ் என்னும் இஸ்லாம் நண்பர் அவரை கொலம்பியன்களுக்கு கொடுக்க பணத்தை கொடுத்து அனுப்பும் அன்டர் கிரவுன்ட் வேலை. அவர்கள் இருவரும் அந்த பணத்தோட எஸ்கேப் ஆகி பிரான்க் லோபேஸ் என்னும் போதை மருந்து விற்க்கும் ஆளிடம் நட்பு ஏறபட்டு அவரின் பெண்ணின் மீதி காதல் கொள்ளும் கதை தான் இந்த பில்லா - 2 என்று கூறுகிறார்கள்..எதுக்கும் பில்லா வெளிவந்த பின்னர்தான் உண்மைதெரியும் பாஸ்....(தகவலுக்கு நன்றி Ravi Nag)


இது போஸ்ரருக்குஅட நாமதான் ஏதோ அறிவில்லாம எடுக்கிறம் எண்டுதப்பா நினைச்சுடாதீங்க...
இதோ நம்ம பொலிவூட்டு...
கொப்பி பண்ணிய போஸ்ரர்கள்...

இதுவரை கொலிவூட்டில் இருந்து சுட்ட தமிழ்ப்படங்களின் விபரம்வேண்டுமா?
இங்கே கிளிக்கவும்


7/13/2012


பில்லா 2 பார்த்தாகிவிட்டது.இலங்கையில் மனோகரா தியேட்டரில் இருக்க இடமில்லாமல் முழங்காலில் நின்றுகொண்டு பார்க்கவேண்டியிருந்தது.1983ல் வெளிவந்த அல்பாசினோ நடித்த"ஸ்கார்ஃபேஸ்" தான் பில்லா - 2 படம் என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.ஆனால் அப்படி அங்கொரு மட்டையும் இல்லை.அகதியாக வரும் டேவிட்பில்லா டோனாகும் கதைதான்.முற்பகுதி மிக அருமையாக இருந்தது பிற்பகுதியை விட.ஒரு டோன் கதையை வேறு எப்படி எடுப்பது? எனவே அதே கொலைகள் எல்லாம் சாதாரணமானவைதான்.நீங்கள் போய் தைரியமாக படத்தை பார்க்கலாம்..என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா இந்த டயலக்குக்கு அரங்கம் அதிர்ந்தது.அடுத்த அதிரல்..என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும்வேண்டாம் ....ஆனா..எதிரியா இருக்கிறதுக்கு..................................................தகுதி வேணும்.....உங்களுக்கு படம் பிடிச்சுதோ இல்லையோ...இன்றைக்கு சமூகத்தளங்கள் வலைப்பூக்கள் என அனைத்திலும் ரொப் ஸ்டொரி பில்லா.....டேவிட் பில்லா...
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}