ஒலிம்பிக் 2012 களைகட்டும் லண்டன்

உலகில் பலரால் எதிர்பார்க்கப்படும் முக்கிய விளையாடுக்களில் முன்னனியில் இருப்பது ஒலிம்பிக்தான்.நாளை ஜூலை 27 இல் ஒலிம்பிக் லண்டனில் ஆரம்பிக்க இருக்கின்றது.இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கோலாகலமாக தொடங்கிவிட்டன.பார்வையாளர்கள் ,விளையாட்டுவீரர்கள் என லண்டன் தற்பொழுது ரொம்ப பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.சிங்கப்பூரில் 2005 இல் நடைபெற்ற 117 ஆவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடாத்துவதற்கான நகரங்களுக்கான தேர்தலில் லண்டன் தெரிவாகியது.மொஸ்கோ, நியூயோர்க்,லண்டன்,பாரிஸ் போன்றவற்றை தோற்கடித்து லண்டன் தெரிவாகியிருந்தது.இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக இடம்பெற்றது.இறுதிக்கட்டத்தில் ஃப்ரான்ஸ்ஸை 4 வோட்டுக்களால் தோற்கடித்தது லண்டன்.
நவீனகால ஒலிம்பிக் 3 தடவை நடைபெற்ற ஒரே நாடு லண்டன்தான்.இதற்கு முன்பாக 1908,1948 களில்தான்  லண்டனில் ஒலிம்பிக் நடைபெற்றது.London's three Olympic games


1908 இல் ஒலிம்பிக்
1948 இல் ஒலிம்பிக்

லண்டனில் இம்முறை ஒலிம்பிக் நடைபெறுவதற்கு 30 வருடங்களுக்கு மேலாக லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தமை முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.
ஒலிம்பிக் நடாத்தப்படுவதற்கு 9.3 பில்லியன் பணம் பொதுத்துறையில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக்கிற்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக குவிவார்கள் என்றகாரணத்தால் சிறப்பு போக்குவரத்து எற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.போட்டி  நடைபெறும் பொழுது சாதாரணபுகையிரதங்களுடன் மேலதிகமாக 4000 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.தேம்ஸ் நதியின் குறுக்காக கேபிள் கார்கள் பயணிப்பதற்கான கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு 25 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.Graphic news: London Olympics cable carஒலிம்பிக்கிற்கு வரும் 93% ஆன போட்டியாளர்கள் 30 நிமிடத்திற்குள் தமது இட்ங்களை அடையக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
ஒலிம்பிக் வளாகத்திற்கு 10 தனித்துவமான புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன இவற்றினூடாக ஒரு மணித்தியாலத்திற்கு 240 000 பயணிகள் பிரயாணம் செய்யமுடியும்.ஒலிம்பிக் விளையாட்டுக்கான கவுண்டிங் கடிகாரம் 500 நாட்களுக்கு முன்பே இயங்க ஆராம்பித்துவிட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பொலீஸ் தலமையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.10000 அதிகாரிகள் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுகின்றார்கள்.15 000 ஆயுதம் ஏந்திய வீரர்களும் கடமையில் ஈடுபடுகின்றார்கள்.100 நேவி ஹெலிகொப்ரர்கள்,தேம்ஸ் நதியில் யுத்தக்கப்பல்கள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்காக மட்டும் 553 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.204 நாடுகள் ,10 500 வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கு பற்றுவார்கள் என அதிர்பார்க்கப்படுகின்றது.

இவ் லொகோவை உருவாகுவதற்கு மட்டும் 400 000 யூரோக்கள் செலவாகியுள்ளன.

வெங்காயத்தில் இதுவரை வெளியாகிய ஒலிம்பிக் தொடர்பான பதுவுகள்...

ஆரம்பகால ஒலிம்பிக் எப்படியிருந்தது?
2012 ஒலிம்பிக்கிற்கான சிறப்புவேடங்கள்...இவ்வுருவங்கள் சாகசம் செய்யும் கதாபாத்திரங்களாக சிறுவர்களிடம் அதிக வரவேற்பைப்பெற்றவை.இவர்களது பெயர்கள் Wenlock ,Mandeville

4700 தங்கப்பதக்கங்கள் தயார்நிலையில் உள்ளன.இவ்வருடத்திற்கான தங்கப்பதக்கம்
ஒலிம்பிக் தீபத்தைஏந்தியவீரர்களின் ஓட்டம் 19 மேயில் இருந்து ஜூலை 27 வரை இடம்பெறும்.இந்த ஓட்டம் 70 நாட்கள்வரை இடம்பெறும் 6 தீவுகளினூடாக 8000 வீரர்களைத்தாண்டி 12,800 Km களைத்தாண்டி ஈற்றில் லண்டனை அடையும்.


ஒலிம்பிக் தீபத்தின் பிரயாணப்பாதை


இதன் கட்டுமானப்பணிகள் மே 2008 இல் தொடங்கப்பட்டு 29 மார்ச் 2011 இல் கட்டி முடிக்கப்பட்டது 
இதன் உயரம் 60  மீட்டர் (197 அடி ) இதன் சுற்றளவு 860 மீட்டர் (2821 அடி )
இதனுள் முழுமையாக 800 000 டன் மண்ணை நிரப்பலாம் 
இதன் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 5250 
உடைமாற்றும் அறை,மலசலகூடம் என்பன உட்டபட மொத்தமாக 700 அறைகள் இதில் உள்ளன 
விளையாட்டுக்களை மேற்பார்வைசெய்ய 14 tower கள் அமைத்துள்ளார்கள்  இவைகள் ஒவ்வொன்றும் 28 மீட்டர் உயரம் உடையவை  
மின் இணைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கேபிளின் நீளம் 338 km 
இந்த ஸ்டேடியத்தில் ஒரே தடவையில் 80 000 நபர்கள் இருந்து விளையாட்டை ரசிக்க முடியும் 
2009 இல் இருந்து 2012 வரை 30 000 புதிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன ஒலிம்பிக் நடைபெறும் நேரத்தில் 70 000 இற்கு மேற்பட்ட வர்த்தக ஒப்ந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது 
ஒலிம்பிக் ஆல் மட்டுமே லண்டனுக்கு 7.86 பில்லியன் டாலர்ஸ் வருவாய் பெறப்ப்படுமென எதிர்வு கூறி உள்ளார்கள் 
26 விதமான போட்டிகள் இடம்பெறும்.31 போட்டியிடும் இடங்கள் தயார்செய்யப்பட்டுள்ளன.


20 000 மீடியாக்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாளொன்றிற்கு 500 000 பார்வையாளர்கள் வருகைதருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.ஒலிம்பிக்கிற்காக 9000 புதிய வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.
9.6 மில்லியன் டிக்கட்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.பெருமளவான திக்கட்களின் விலை 50 யூரோவிற்கும் குறைவானது.
போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கான டிக்கட்டின் விலை 15 யூரோவில் இருந்து 20 000 யூரோக்கள்.ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெறும்போது 135 000 ஹோட்டல் ரூம்கள் தயாராக இருக்கும்.ஒரு நாளுக்கான வெளிநாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 350 000. ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேவைப்படும் வேலையாட்களின் எண்ணிக்கை 200 000.
ஒலிம்பிக் ,அதன் மூலம் ஏற்படும்   வேலைவாய்ப்புகள்   வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றால் லண்டனின் பொருளாதாரம் 78 .6  பில்லியன் டாலர்களால் அதிகரிக்கும் இதனால் 2020 இல் உலகின் பொருளாதார ரீதியில் 4 பெரிய நகரமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரே பார்வையில் ஒலிம்பிக்கின் விபரமானவிடயங்கள் கீழே...
  • LONDON OLYMPICS 2012 
    STAMP COLLECTION


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}