நீயா நானாவில் சாருநிவேதிதா,லெனின் கறுப்பன் About நித்தி

நீயா நானாவில் நடந்த நீயூ ஏஜ் குருவை பின்பற்றுகின்றவர்கள் vs நமக்கு நாமே குரு, என்றதலைப்பில் நீயா நானாவில் காரசாரமான கருத்து யுத்தம்  நடைபெற்றது. பொதுவாக எமக்கு நமது துறைகளிலும் சரி அல்லது நமது வாழ்க்கையிலும் சரி  நமது தந்தை தாய் முதல் பெரியவர்கள் அதைத்தாண்டி சாமியார்கள் வரை நமக்கு தேவையான குருக்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.பல வேளைகளில் அப்படியான ஒன்று தேவைப்படுகின்றது.

ஆனால் இங்கு கூறப்படும் குரு என்பவர்  உருத்திராக்கத்துடனும் காவிஉடையுடனும் காட்சிதரும் குரு அல்ல வேண்டுமானால் இவர்களை முன்னோடிகள் என்றும் தெரிவித்துக்கொள்ளலாம்.வாழ்க்கையை தீர்மனிக்கும் சரியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது கணத்தில் ஒரு சரியான பாதையை காட்டும் நண்பங்கூட ஒரு வகையில் குருதான்.ஏனோ குரு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உருவகம் எம்முள் திணிக்கப்பட்டு விட்டது.

இதனால் வீதியில் செல்பவன் எல்லாம் நம்மள  பயன்படுத்திக்கிறாங்கள்.போதாததுக்கு நதி மூலம் குரு மூலம் எல்லாம் பாக்கக்கூடாது என்கிறத வேற சொல்லி வச்சிருக்கிறார்கள்.இது இவர்களுக்கு  வசதியாக போய்விட்டது.அத்துடன் குரு என்று ஆரம்பித்தால் இறுதியில் கமராவில் போய் முடிந்துவிடுகிறது.இந்த கொடுமையால் எவனையும் நம்பி நண்பர்களிடமோ குடும்பத்திடமோ ஒரு வார்த்தைகூட விட முடியிறதில்லை.காரணம் எப்ப இவண் ஆப்பிடுவானோ என்கிற பயம்தான்.திடீர் எண்று புதிசா முளைச்ச சாமியாரை சந்திக்க நேர்ந்தால் மனதுக்குள்"உங்க வீடியோ எப்ப சாமி?" என்னுதான் கேக்கதோனுது.

நிலைமை இப்படி இருக்க குரு என்பதில் ஆரம்பிக்கும் சாமியார்கள் இறுதியில் நிறுவனங்களாகிப்போகிறார்கள்.கார்கள்,கொலிஜ்கள்,செக்குறிட்டி என பிஸியாகி விடூகின்றார்கள்.ஒன்று இரண்டு விடயங்கள் சற்று அம்மனுஸ்யமாக நடந்ததிற்காக ஒட்டு மொத்த வாழ்க்கையையும் குழந்த குட்டி குடும்பம் எல்லாவற்ரையும் உதறிவிட்டு அவரின் காலடியில் அர்ப்பணிப்பது என்பது முட்டாள்தனத்தின் உச்சம்.நித்தியானந்தா சாய்பாபா பிரேமானந்தா போன்ற பலர்  இப்படி உயர்வான நிலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு பிரபலங்கள் முக்கிய காரணம்.

அரசியல் வாதிகளின் பதவி பயம்,நடிகர்கள்,எழுத்தாளர்கள்,ஏனைய பிரபலங்களை போன்றோரை தம் கைக்குள் போட்டுக்கொள்வதுதான் இவர்களுக்கு பெரிய + .பிரபலங்கள் இவர்கள் முன் மண்டியிடுவதால் அவர்களின் விசிறிகளும் இலகுவாக மாட்டிக்கொள்கிறார்கள்.சரளமான ஆங்கில அறிவு கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் மெடிட்டேஸன் இவ்வளவும் தான் குரு ஆகுவதற்கோ சாமியார் ஆகுவதற்கோ தேவையான தற்போதைய தகுதிகள்.நீயா நானாவில் குரு எந்த வகையில் அவசியம்? என்ன மாதிரியான குரு தேவைப்படுகின்றார்?என்று  ஆராயப்பட்டது.நீயூ ஏஜ் குருவை பின்பற்றுகின்றவர்கள் என்ற பிரிவில் இருந்தோர் தமக்கு வரும் குரு எப்படி இருக்கவேண்டும் என்பதில் பல கருத்துக்களை முன்வைத்தார்கள். 

குருவைப்பார்த்தவுடன் தாரை தாரையாக கண்ணீர்..ஞானியாக இருக்கவேண்டும்,அற்புதங்கள் செய்ய தேவையில்லை..என பலவற்றை அடுக்கினாலும் நிகழ்ச்சி சென்றதென்னவோ நித்தியைப்பற்றித்தான்.

சாருவை கெஸ்ட்டாக அழைத்திருந்தார்கள்.... நித்தியானந்தா கமராவில் அகப்படுவதற்கு முன்னதாக சாரு நித்தியை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

சாமானியர்கள் இப்படிப்பட்ட  நியூ ஏஜ் குருக்களுக்கு பின்னால் செல்ல முடியும் ஆனால் இன்டலஜ்சுவலாக தன்னைக்காட்டிக்கொள்ளும்  சாரு என்ற பிரபல எழுத்தாளர் எப்படி இப்படியானவர்களை ஆதரிக்க முடியும்?ஆய்வுகளில் எழுத முடியும்?பரிந்துரை செய்ய முடியும்? அத்துடன் இப்படி நீங்கள் செய்வதால் உங்களுக்கென இருக்கும் ரசிகர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் இதற்கு நீங்கள் பொறுப்பேற்கின்றீர்களா? என்று கோபினாத் கேட்டார்..

சாரு இதற்கு ஒரு பதிலைக்குறிப்பிட்டிருந்தார்..அத்துடன் அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.அடுத்ததாக அழைக்கப்பட்டவர் லெனின் கறுப்பன் இவர்தான் நித்தியின் ஜல்சாக்களை அம்பலப்படுத்தியவர்.நித்தியின் படுக்கையறையில் கமராவை பொருத்தியவர்..தான் கடந்த 4 வருட காலமாக நித்தியின் ஆசிரமத்தில் இருந்ததாகவும் தாமும் மற்றயவர்களைப்போலவே நித்தியை கடவுளாக நினைத்தவந்தான் எனவும் கூறினார் பல பெண்கள் தன்னிடம் நித்தியை பற்றி முறையிட்டார்கள் ஆனாலும் நான் நம்பவில்லையெனவும் பின்னர் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோவைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன் எனவும் இதனால் இவரைப்பற்றிய உண்மைமுகத்தை வெளியில் கொண்டுவருவதற்காகவே இதை செய்ததாக தெரிவித்திருந்தார் லெனின்.

இதற்கான முழுவிளக்கத்தையும் வழங்கியிருக்கிறார் லெனின்.குறைந்தது 40 பெண்கள் வரை நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.லெனின் இதைப்பற்றி பேசும் போது நித்தியானந்த ஆசிரமத்தின் பிரமச்சரினி ஒருவரும் இன்நிகழ்ச்சியில் பங்கு பற்றினார்.நமது குருவான நித்தியின் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் ஆதாரத்தை தரும் படியும் இவர் இடையில் கருத்துக்கூறினார்.ஆனால் லெனின் பலரது போட்டோக்கள் வெளியில் தெரியவேண்டாம் என்றகாரணத்திற்காகவே தான் அவற்றை வெளியிடாமல் இருப்பதாக கூறினார்.
இடையில் நித்தி ஆசிரமத்தில் வந்திருந்தவர் இடையூறு செய்ய லெனின் உங்களுக்கு இதைப்பற்றி என்ன தெரியும் என்று கேட்க அவர்"எனக்கு ஒன்றும் தெரியாது ஆனால் நீங்கள் கூறியது உண்மையில்லை என்பது மட்டும் தெரியும் என்று ஒரு மொக்கையை போட்டார்.ஆனால் சாரு அவருக்கு சரியான விளக்கம் கொடுத்தார்.
பின்னர் பாவ.செல்வதுரையிடம் கோபினாத் "லெனின் செய்தது சரியா? " என்று கேட்டார்.படுக்கையறையில் கமரா வைத்ததை ஒரு எழுத்தாளராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.ஆனால் அவ்வாறு செய்தால்தான் இந்த உண்மையை வெளியில்  கொண்டுவந்திருக்க முடியும் என்பதை நான் நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.சாருவிடம் நித்தி பற்றி தான் ஆரம்பத்திலேயே விவாதித்ததாகவும் கூறுகிறார் பாவ.


நீயா நானாவின் இந்த எபிஸோட்டின் முழுப்பாகமும் 8 பகுதிகளாக you tube இல் உள்ளன. அதைக்காண்பதற்கு இங்கே கிலிக்

இது போதாதென்று லெனின் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் 2 பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும் வீடியோ ஆதாரங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}