BATMAN திரையரங்கில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு!!!

இன்று அதிகாலை டென்வர் - கொலொரோடோவில் உள்ளசெஞ்சுரி 16 தியேட்டரில் இன்று BATMAN திரையிடப்பட்டு சிறிது நேரத்திலே 20 வயதுள்ள முக மூடி அணிந்த நபர்  கண்ணீர் புகை குண்டை வீசீ திரைக்கு அருகே சென்று சுட ஆர்ம்பித்தார்.  14 பேர் பலியாயினர் மற்றும் 50 நபர்கள் காயமடைந்திருக்கிறார்கள்..  இதன் லைவ் வீடியொ


 



அமெரிக்காவின் டென்வர் நகரிலுள்ள அரோரா சுபர்ப் திரையரங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை (நள்ளிரவு) சரியாக 12.00 மணிக்கு, BATMAN –the dark knight rises திரைப்படத்தை பார்க்க சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும், பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீதுமே இந்தக் குழப்பம் செயற்படுத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி முதலில் கண்ணீர்ப்புகை குண்டுகளை தாங்கிய தகரப்பெட்டி ஒன்றை திறப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த மக்கள்மீது வீசியுள்ளார். பின்னர் சரமாரியாக சுட்டதில் 14 பேர் இறந்துளனர்.

இது ஒரு பயங்கர நிகழ்வு என பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லப்பட்டது. இந்தச் செயலை செய்தவர் என சந்தேகிக்கப்படுபவர் கைதுசெய்யப்பட்டதாகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். சம்பவத்தை அடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் மக்களை அப்புறப்படுத்தியதுடன், வேறு ஏதேனும் ஆபத்தான பொருட்கள் உள்ளதா என அவ்விடமெங்கும் தேடினர். எனினும் சந்தேகக்துக்கிடமான எதுவும் அகப்படவில்லை. பிடிக்கப்பட்ட குற்றவாளிக்கு 20 வயதிருக்கலாம் எனவும், அவரிடமிருந்து ஒரு கத்தியும், 3 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சரியாக படத்தின் முதலாவது துப்பாக்கிச்சூட்டு காட்சியின்போதே இவரும் தனது வேலையை காட்டியுள்ளார். அதனால் மக்கள் குழப்பத்தில் கத்தியபடி அங்குமிங்கும் ஓடினர். கண்ணீர்ப்புகையானது பக்கத்திலிருந்த திரையரங்குகளுக்கு உள்ளும் போனதாக மக்கள் தெரிவித்தனர்.

டென்வர் நகர் அமைந்துள்ள கொலராடோ மாகாணமானது இத்தகைய பல சம்பவங்களை சந்தித்துள்ளது. 1999இல் 2 மாணவர்கள் தமது பாடசாலை மானவர்களையும், ஆசிரியர்களையும் நோக்கி சரமாரியாக சுட்டதில் 12 பேர் மரணித்தனர்.

 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}