ஜேம்ஸ் பொண்ட்

தனது எதிரிகளிடம் அகப்படும் அசாதாரண நிலையிலும் தன்னை My name is Bond, James Bond..  என்றவாறு கூலாக அறிமுகப்படுத்திக்கொள்வார் James Bond.இவர் ஒரு ப்ரிட்டிஸ் சீக்கிரட் ஏஜண்ட்.M16 இல் பணிபுரிபவர்(M16 என்றால் military intelligence section 6) இவரது கோட் நேம்தான் 007.உலக மக்களின் அரைவாசிக்கு மேலானவர்கள் நிச்சயமாக ஒரு தடவையாவது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள் என்றுகணிக்கப்பட்டுள்ளது.அந்த அளவுக்கு ஜேம்ஸ்பாண்ட் பிரபலம்.காரணம் ஜேம்ஸ்பொண்ட் திரைப்படத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துவிடயங்களும் இருப்பதுதான்.சண்டைகள்,லவ்,செக்ஸ்,டெக்னோலோஜி,ரேஸ் போன்ற பலவிடயங்கள் இருக்கும்.
ஜேம்ஸ்பொண்ட் ஒன்றும் ஆர்னோல்ட் கிடையாது.ஆனால்  நவீன தொழில்நுட்பக்கருவிகள்,வெவ்வேறு தற்பாதுகாப்புக்கலைகள்,துப்பாக்கிகள்,இராணுவத்தளபாடங்கள் போன்றபலவற்றைக் கையாண்டு தனது எதிரிகளை எப்படியாவது தோற்கடித்துவிடுவார்.ஆனால் இவருக்கு இருக்கும் பவர்ஃபுல்லான ஆயுதம் இவரது கண்கள் இதைக்கொண்டு எந்த பேரழகியையும் மடக்கிவிடுவார்.இந்த மன்மதத்திறமையை வைத்துத்தான் வில்லங்களின் வில்லங்கமான விடயங்களை வில்லங்களின் பேர்சனல் பெண் செக்குரிட்டிகளிடம் இருந்து கறந்துகொள்வார் 007.1980 இல் உலகின் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை அறிய நீங்கள் விக்கிபீடியா,புத்தகங்கள் என பி.ஹ்.டி முடிக்கத்தேவையில்லை சிம்பிளாக அந்த ஆண்டுவந்த ஜேம்ஸ்பொண்ட் திரைப்படத்தை பார்த்தால் போதும்.அத்துடன் அந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்படவேண்டிய விடயங்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.
ஜேம்ஸ்பொண்ட்டிற்கு நவீன ஆயுததளபாடங்களை அறிமுகப்படுத்தி வைப்பவர் "quarter master"என அழைக்கப்படுகின்ற "Demond llewelyn".
Demond llewelyn

இவர் 17 ஜேம்ஸ்பொண்ட் சீரிஸ்களில் நடித்துள்ளார்.இவர் அனைத்து உபகரணங்களையும் எவ்வாறு பாதுகாப்பாக(ஹி...ஹி..)பயன்படுத்துவது என்று 007 ற்கு சொல்லுவார்.முடிவில் 007 எல்லாவற்றையும் அடித்து நொருக்கிவிடுவது வேறுகதை.இவர் கொடுத்த ஒன்றையும் 007 திருப்பி கொண்டுவந்ததாக சரித்திரமில்லை.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் 007 அறிமுகமாவது சுவாரஸ்யமாக இருக்கும்.ஆரம்பத்திலேயே தீவிரவாதி அல்லது வேற்று நாட்டு உளவாளியை துரத்தவேண்டியிருக்கும்.ஈற்றில் 5 நிமிடங்கள் ஜேம்ஸ்பொண்ட் உயிரைக்கொடுத்து பலமாக சண்டையிடுவார்.முக்கிய குறிப்பு-007 இன் மூக்கு வாய் என்பன உடைந்து ரத்தம்வழிய ஆடைகள் கிழிய சண்டையிட்டு அதிஸ்டவசமாக துப்பாக்கி இவருக்கு முதலில் கிடைத்துவிட எதிரியை சடுதியாக சுட்டுக்கொன்றுவிடுவார்.காரணம் 007 உடன் மோதுபவனுக்கும் 007 ற்குமிடையில் பெரிய வேறுபாடு கிடையாது அவனும் வேறு உளவுத்துறை அமைப்பை சேர்ந்தவனாக இருப்பான்.இருவருமே ப்ரொஃபஸனல் கில்லெர்ஸ்.எனவே ஒரு பாடலுடன் அறிமுகமாகி காதில் ரத்தம்வரும் பஞ்களை பேசிவிட்டு அரைமணித்தியாலம் தமது தலைமயிர்(டோப்) கூட கலையாமல் சண்டையிட்டுவிட்டு ஒரே சூட்டில் யாரையும் 007 கொல்வதில்லை.

Mi6 அமைப்புக்கு ஹெட்டாக இருப்பவர் "M"என்று அழைக்கப்படும் judi dench .இவர்தான் பொண்ட்டிற்கு மிஸன்களைவழங்குபவர்.ஜேம்ஸ்பொண்ட் செய்யும் கூத்துக்களிற்காக ஜேம்ஸ்ஸை தாளிக்கும் ஏக உரிமையைப்பெற்றவர் இவர்தான்.007 ஒரு நாட்டின் தூதரகத்திற்குள் சென்று கூட கொலைசெய்துவிடுவார் அந்த தூதரகத்திற்குரிய நாடு இதனால் கடுப்பாகிவிடும் இதனால் "M" கடுப்பகிவிடுவார்.
judi dench 

 judi dench ,Demond llewelyn இவர்கள் ஜேம்ஸ்பொண்ட் சீரிஸ்ஸில் முக்கிய கதாப்பாத்திரங்களாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பவர்கள்.இவர்கள் மாறமாட்டார்கள் ஆனால் ஜேம்ஸ்பொண்ட்,ஹேரோயின் மட்டும் மாறிக்கொண்டிருப்பார்கள்.Demond llewelyn 1999 இல் கார்விபத்தில் இறந்துவிட்டார்.ஆனால் இறக்கும்வரை தனது கதாப்பாத்திரத்தில் தொடர்ந்து  நடித்துவந்தவர்.
இதுவரை வெளிவந்த அனைத்து சீரிஸ்ஸுக்கும் செலவளித்த பணம் $1,123,000,000 ஆனால் 007 இன் போக்ஷ் ஒஃப்ஃபிஸ் $11,686,214,000.இதுவரை 50 வயதுக்கு மேல் 007 ஆக ஒரே ஒருவர் மட்டுமே நடித்துள்ளார் மற்றஹீரோக்கள் எல்லோரும் 50 வயதை விட வயது குறைந்தவர்களாகவே தெரிவு செய்யப்பட்டார்கள்.காரணம் 007 கதாப்பாத்திரம் துடிப்புடன் இருப்பது அவசியம்.

வெளிவந்த நாவல்கள்

ஜேம்ஸ்  பொண்ட் திரைப்படங்கள் நாவலை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டன.ஜேம்ஸ்பொண்ட் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை 1953 இல் உருவாக்கியவர் lanfloming.இவர் 1964 இல் இறந்ததும் 6 எழுத்தாளர்கள் இன் நாவலுக்கான உரிமையைப்பெற்றார்கள்.பின்னர் இவர்களால் 007 நாவல்கள் தொடர்ந்து வெளிவந்தன.இவை மக்களிடம் அதிக வரவேற்பைப்பெற்றபடியால் ரேடியோ டிவிக்கள் என பிரபலமடைந்தன.1954 இல் தொலைக்காட்சி நாடகமாக 007 உருவாக்கப்பட்டது.கிளைமெக்ஸ் என்ற பெயரில் இன் நாடகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.
1961 இல் broccoli என்பவர் நாவலில் இருந்து திரைப்படத்தை தயாரிப்பதற்கு உரிமையைப்பெற்றார்.ஆனால் இவருக்கு தயாரிப்பு நிறுவனங்கள் எதுவுமே பணம் கொடுக்க முன்வரவில்லை. அதிகமாக ப்ரிட்டிஸ்ஸின் புகழ்பாடுகிறது,அதிக வன்முறை,செக்ஸ் இருக்கின்றன என்றகாரணங்களை முனவைத்தன.

இதை முதல் முதலில் திரைப்படமாக எடுப்பதற்கு 1 மில்லியன் டொலர் தேவைப்பட்டது.முடிவில் 1961 இல் united artist நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு Eon productions உருவாக்கப்பட்டது.இன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதலாவது ஜேம்ஸ்பொண்ட் திரைப்படம் Dr.No இது 1961 இல் திரைப்படமாக்கப்பட்டது.இதில் ஜேம்ஸ்பொண்ட்டாக நடித்தவர் sean connery.
Sean Connery
 1 மில்லியனுக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 59.6 மில்லியங்களைக்குவித்தது.
1962 இல் இருந்து இன்றுவரை 22 ஜேம்ஸ்பொண்ட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இதுவரை வெளியான திரைப்படங்கள்.


ஜேம்ஸ்பொண்ட் என்ற கற்பனைக்கதாப்பாத்திரத்தைப்போல் உண்மையில் ஒரு அமேரிக்க உளவாளி இருந்திருக்கிறார் அவரது பெயர் Dusko popov  .இவரும் ஜேம்ஸ்பொண்ட்டைப்போல் பிளேபோய்தான்.பல சாகசங்களை செய்தவர்.இவர் பேர்ல்காபர் தாக்கப்படப்போகின்றது என்பதை  தாக்கப்படுவதற்கு முன்னதாகவே  FBI ற்குத்தெரிவித்திருந்தார்.ஆனால்  FBI அதைக்கண்டுகொள்ளவில்லை.
Dusko popov  
இப்பொழுது பொண்ட்டாக கலக்கிக்கொண்டிருப்பவர்  Daniel Craig
23 ஜேம்ஸ்பொண்ட் திரைப்படமான ஸ்கை ஃபோல் ஒக்டோபர் 26 இல் வெளிவர இருக்கின்றது.


இதுவரை ஜேம்ஸ்பொண்டை மயக்கியவர்கள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}