டீனேஜ் மில்லியனேர்ஸ்

டீனேஜ்ஜிலேயே மில்லியனர் ஆவது மிகவும் கடினமான விடயம்தான்..ஏதோ ஒரு படத்தில் தலையைக்காட்டினால் அடுத்த படத்திற்கு வந்து அள்ளிச்செல்ல மாட்டார்கள்.அத்துடன் இந்த லிஸ்டில் நடிகர்கள் நடிகைகள் மாத்திரமல்ல பாடகர்களும் அடங்கும்.இந்த லிஸ்டில் இருக்கும் பலரை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்..அடிக்கடி காதில் அகப்படும்  நபர்கள்தான் இவர்கள்.
Justin Bieber..
யு டியூப்பிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட ஓ பேபி பேபி பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர்.இவருக்கு வயது 18 தான்.இவரைப்பற்றிய முழுவிபரங்கள்...

Age: 18 Years Old
Date of Birth: March 1, 1994
Birth Place: London, Ontario, Canada
Nationality: country_3  Canada
Ethnicity: French, German
Height:5' 7" (1.70 m)

Weight: 130 lbs (59 kg)
Full Name: Justin Drew Bieber
Occupation: Singer-songwriter, Musician, Actor
இவரது தற்போதைய வருவாய் 110 மில்லியன் டொலெருக்கு உயர்ந்திருக்கிறது.இந்த ஆண்டில் 3 அல்பங்களை வெளியிட்டிருக்கிறார் 15 நாடுகளில் டொப் 10 பாடல்களுள் ஒன்றாக அவை தெரிவு செய்யப்பட்டுள்ளன.இதுவரை 15 மில்லியன் கொப்பிகள் விற்றுள்ளன.Taylor Swift

இவர் மிக பிரபலமான பாடகர்.2006 இல் அமெரிக்காவில் நட்சத்திரமாக ஜொலித்தவர்.இவர் தனது முதல் அல்பத்தை தனது து வயதில் வெளியிட்டார்.2009 இல் மிக அதிகம் வருவாயை பெறும் 69 ஆவது நபராக தெரிவானார்.2011 இல் மிக அதிகம் வருவாயை பெறும் 7ஆவது நபரானார்(45 மில்லியன்) 6 Grammy Awards,10 AMA,7CMA,6ACM,13 BMI Award என பல அவார்ட்களை வாங்கியவர்

Taylor Lautner
இவரை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்  The Twilight Saga வில் ஜேகொப் ஆக அசத்தியவர்.இவரது கட்டழகாலே கொலிவூட் மயங்கியது.2000 ஆம் ஆண்டில் செக்ஸ் சிம்பலாக தெரிவானவர். The 50 Sexiest Men of 2010 இல்  இரண்டாவதாக தெரிவானவர்.Most Amazing Bodies" இல் 4 ஆவதாக தெரிவானவர்.ஹொலிவூட்டில் அதிகம் வருவாயைப்பெறும் நடிகராக தெரிவானவர்.இவரது வருவாய் 42 மில்லியன்.Nick Jonas
இவர் பிரபல பொப்பாடகர் மற்ரும் நடிகர்.1992 இல் பிறந்தவர்.டிஸ்னியில் Camp Rock என்ற சீரிஸ்ஸை தொடக்கியவர்.இவரது வருவாய் 18 மில்லியன் டொலர்கள்.Hannah Dakota Fanning
இவர் ஒரு நடிகை. I Am Sam என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.இதற்காக பெஸ்ட் சைல்ட்  அவார்ட்டையும் பெற்றார்.குழந்தை நட்சத்திரமாக Man on FireWar of the Worlds, Charlotte's Web. போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட  The Twilight Saga திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இவரது வருவாய் 16  மில்லியன்.

Abigail Breslin

வயது 16.இவர் ஒரு நடிகை.5 வயதில் நடிப்புத்துறையுள் நுழைந்தவர்.முதலாவது படம்  Signs . Little Miss SunshineNim's IslandDefinitely, MaybeMy Sister's KeeperZombieland  போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்.இவரது வருவாய் 12 மில்லியன்.


Selena Gomez

இவர் அமெரிக்க பொப்பாடகர்,இவரது , "Naturally", "Who Says","Love You Like a Love Song" பாடல்கள் பில்போர்ட் ஹொட் டான்ஸ் கிளப் சோங்க் ஆக தெரிவானவை.எம்மி அவார்ட் வாங்கிய  Wizards of Waverly Place என்ற டிவித்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்.

இவரது வருவாய் 5 மில்லியன் டொலர்கள்.

Jaden Smith


இவரை நிச்சயம் தெரிந்திருக்கும் கராத்தேகிட் நினைவிருக்கிறதா..அதில் கதா நாயகன் இவர்தான்.அதில் தனது ரோலை நன்றாக முடித்திருந்தார்..(எனக்கு படம் முடிந்த பின்னும் ஜாக்கிதான் நினைவில் வந்து சென்றார் ஆனால் Jaden னும் நன்றாகத்தான் நடித்திருந்தார் குறிப்பாக இறுதியில் ஜாக்கி கற்றுக்கொடுகாத கலையை தன் அவதானத்தால் மட்டும் பயின்றகலையைப்பயன்படுத்தி எதிரியை வீழ்த்துவார் ஜாக்கியே அதைப்பார்த்து ஆச்சரியப்படுவார் இந்தக்காட்சி மிகவும் நன்றாக இருந்தது)வில் ஸ்மித்தின் வாரிசு. The Pursuit of Happyness என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர்.இவர் ஒரு பாடகர்,ரப்பெர்,நடிகர்.இவரது வருவாய் 5 மில்லியன்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}