உலகின் மிக அதிக விலையுயர்ந்த இராணுவ தளபாடங்கள்

ஒரு நாடு தன்னை வல்லரசு என உலகின்முன் காட்ட விரும்பினால் அதற்கு நவீன இராணுவத்தளபாடங்கள் அவசியம்.இதனால்தான் அபிவிருத்தியடைந்த நாடுகள் பெரும்பகுதியை இராணுவத்தேவைகளுக்கு முதலிடுகின்றன.இராணுவ யுத்த தளபாடங்களின் விலை அது கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களிற்கேற்ப எகிறும்.உலகின் மிகப் பலமான வான் படையைக்கொண்ட நாடு அமெரிக்கா.அமெரிக்காதான் அதிக அளவில் இவ்வாறு விலைகூடிய விமானங்களை உருவாக்கி பரிசோதனை செய்கின்றன.2010 அமெரிக்கா இராணுவநடவடிக்கைகளுக்காக 680 பில்லியனை ஒதுக்க்யிருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகில் அதிகம் விலைகூடிய இராணுவத்தளபாடங்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.


USS George H.W. Bush (CVN-77)
இது அமெர்க்காவின் 41 ஆவது ஜானாதிபதியின் பெயரால் அழைக்கப்படுகின்றது.2ஆவது உலக யுத்தத்தில் கப்பலோட்டியாக கடமையாற்றியதைக்கௌரவிக்கும் விதத்தில் புஸ்ஸின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இக்கப்பல் 2 ந்யூக்கிளியர் ரியாக்ரர்களினால் இயங்குகின்றது.இதன் காரணமாக தொடர்ந்து 20 வருடங்கள் தொடர்ந்து இயங்கும்.இதன் பெறுமதி 6.2 பில்லியன்.1 100 அடி நீளத்தைக்கொண்ட விமான ஓடுதளத்தையும் தன்வசம் கொண்டது.
B-2 Spirit


இதன் பெறுமதி 2.4 பில்லியன்.இன்ஃப்ரா ரெட்,ராடர்,மக்னட்டிக் என்ற எதாலும் இதைக்கண்டுபிடிக்க முடியாது.அத்துடன் இது எந்த சத்தத்தையும் ஏற்படுத்துவதில்லை.1993 இல் இருந்து பயன்பாட்டில் இருக்கின்றது.ஆப்கானிஸ்தான்,ஈராக் யுத்தங்களில் இவை வெகுவாக பயன்படுத்தப்பட்டன.

Boeing C-17 Globemaster III

இது இராணுவ நகர்வுகளுக்காக உருவாக்கப்பட்டது.1991 இல் உருவாக்கப்பட்டது.ஒரே நேரத்தில் 100 பாரசூட் வீரர்களை யுத்தகளத்தில் இறக்கிவிடக்கூடியது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களுக்கு உதவி வழங்க வீரர்கள் இதன் மூலம் இறக்கிவிடப்பட்டார்கள்.190 மில்லியன் டாலர்கள் பெறுமதி.Grumman E-2D Advanced Hawkeye

சகல்விதமான காலனிலைகளுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய அமெரிக்காவின் விமானம்.1960 இல் வடிவமைக்கப்பட்டது.1964 இல் பாவனைக்கு விடப்பட்டது.2007 இல் இதன் 4 ஆவது தயாரிப்பு வெளிவந்தது.இதன் ரேடர்,தொடர்பாடல்களுக்காக ஸ்பெஸலாக பயன்படுத்தப்படுகின்றது.176 மில்லியன் டாலர்கள் பெறுமதி.
Lockheed Martin F-35 Lightning II 

அமெரிக்காவிற்கும் யு.கேவிற்குமிடையில் உருவாக்கப்பட்ட ப்ரோக்கிறாமின் போது இது உருவாக்கப்பட்டது.51 அடி நீளமானது.வேகம் 1,200 miles per hour.8 வகையான ஏவுகணைகளைத்தாங்கி செல்லக்கூடியது.இதன் பெறுமதி 122 மில்லியன்.
Bell-Boeing V-22 Osprey

இது பலதுறைகளில் உதவக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சாதாரண ஒரு ஹெலிகொப்ரர் கீழிருந்து நிலைக்குத்தாக மேலே எழுவது போல்தான் இது எழும்.ஆனால் இது சாதாரண ஹெலியிலும் பார்க்க அதிக வேகமுடையது.2007 இல் ஈராக்கிலும் 2011 இல்  ஆப்கானிஸ்தானிலும் பயன்படுத்தப்பட்டது.இதன் பெறுமதி 69 மில்லியன்

McDonnell Douglas F/A-18 Hornet

இது McDonnell Douglas என்பவரினால் உருவாக்கப்பட்டது.1978 இல் உருவாக்கப்பட்ட இது 1983 இலேயே உலகுக்கு அறிமிகப்படுத்தப்பட்டது.விமானப்படையின் Blue Angels என் அழைக்கப்படுகின்றது.இதன் வேகம் ஒரு மணித்தியாலத்திற்கு 1190  மைல்கள்.ஒரு நிமிடத்தில் 50000 அடிகள் உயரக்கூடியது.இது 57 மில்லியன் டொலர்கள் பெறுமதியுடையது.
Boeing EA-18G Growler

இது ஏவுகணைகளை எடுத்து செல்வதில்லை.ஏவுகணைகளின் உதவியுடன் போரிடுவதில்லை.தனது தற்பாதுகாப்புக்குமட்டுமே ஏவுகணைகளை எடுத்து செல்லும்.இவ்விமானம் எதிரி நாட்டின் ரேடர்களைக்குழப்பவல்லது.மின்னணு போமுறை உத்திகளை தன்வசம் கொண்டது.பெறுமதி 68 மில்லியன் டாலர்கள்.Joint Mine Resistant Ambush Protected Vehicleஇராணுவ வீரர்களுக்கு யுத்தகளங்களில் ஆயுதங்களை வழங்குவதற்கு உருவாக்கப்பட்டது.ஈராக் ஆப்கானிஸ்தானில் அதிகளவாகப்பயன்படுத்தப்பட்டது இதுதான்.வீதிகளில் கிளைமோர் தாக்குதல் கண்ணிவெடித்தாக்குதல் பாரிய பிரச்சனையாக அமைய அதற்கு தீர்வாக இது பயன்படுத்தப்பட்டது.இதன் விலை 1.6 மில்லியன் டாலர்கள்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}